முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்மண வைரஸ் ஆவது எப்படி?!




நீங்கள் ஓராண்டுக்கு மேலாக வலைப்பதிபவரா?

ஆமாம்.

100 பதிவுகளைக் கடந்தவரா?

ஆமாம்.

சமீபத்தில் 2007ல் வேறு வழியில்லாமல் புதுபிளாகருக்கு மாற்றப்பட்டவரா?

ஆமாய்யா ஆமாம்!

அப்படிங்கறீங்களா?! அப்ப சரி!

உங்க ப்ளாகருக்குள் லாகின் செய்யுங்கள்! Edit Post பகுதிக்குள் செல்லுங்கள். அனைத்து பதிவுகளையும் தேர்வு செய்யுங்கள். அனைத்திற்கும் சேர்த்து "New Label..."லை தட்டி ஏதேனும் ஒரு புது குறிச்சொல்லை சேருங்கள்( என்னது "உப்புமா" வா?! ). முடிந்தவுடன் அதே போல "Remove label.."லை தட்டி குறிச்சொல்லை நீக்கிவிடுங்கள்.

அவ்வளவுதான். நேராக தமிழ்மணத்திற்கு வாருங்கள். "இடுகைகளைப் புதுப்பிக்க " பகுதிக்குச் சென்று உங்க பக்கத்தின் சுட்டியை கொடுங்கள். அவ்வளவுதான் மேட்டர்... புதுபிளாகருக்கு மாறின பிறகு விடுபட்டிருந்த அத்தனை பதிவுகளும் புதிதாக தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு விடும்! தமிழ்மணம் "இடுகைகள்" பகுதி முழுக்க உங்க பதிவுகளாக நிரப்பி ஒருநாள் வைரஸாக மாறிடலாம்.

இப்படிச் செய்வதால் இரண்டு வசதிகள்! ஒன்று, நமது பழைய பன்னாட்டுகளையெல்லாம் கிளறி மேலே கொண்டு வரலாம். இன்னொன்று இனிமேல் அந்த பதிவுகளுக்கு யாரேனும் பின்னூட்டங்கள் இட்டால் அது தமிழ்மணத்தில் வரும்.

பாதகம் என்று பார்த்தால், "இவனெல்லாம் அந்தக் காலத்துல இவ்வளவு கேவலமாகவா எழுதிக்கிட்டு இருந்தான்?!" அப்படின்னு புதிதாக நான்குபேர் துப்ப வாய்ப்புகள் உண்டு! :)

முக்கியக்குறிப்பு: தமிழ்மணத்தால் ஏற்கனவே நீக்கப்பட்ட பழைய பதிவுகளின் சுட்டிகளை அனைத்து பதிவுகளுக்கும் குறிச்சொல் சேர்க்கும் பொழுது தேர்வு செய்யாதீர்கள். அவைகள் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புகள் உண்டு.

இதனால் வரும் தீமை: தமிழ்மணம் மீண்டும் அதனை கவனித்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும். வீணாக அவர்களுக்கு மீண்டும் தொந்தரவு கொடுப்பானேன்?
நன்மை: திரும்பவும் அதே பதிவுகளை வைத்து சில நாட்கள் அலப்பரை செய்ய வாய்ப்புகள் கிடைக்கும்! :)

இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னு கேக்கறீங்களா? எந்த புண்ணியவானோ புதுபிளாகருக்கு மாறிவிட்டதால் இணைக்கப்படாமல் விட்ட என் பதிவினை வகைப்படுத்தி இணைக்க, அதை ஏன் நாமளே செய்யக்கூடாதுங்கற ஆராய்ச்சியில் விளைந்ததுதான் நேற்றைய என் பழைய பதிவுகளின் வைரஸ் அட்டாக்கு! :)

அதெல்லாம் சரியப்பு! இது ஏன் இந்தமாதிரி நடக்குது? இந்த மாதிரி செய்தால் RSS Feeder என்ன மாற்றங்கள் நடக்குது? அதை எப்படி தமிழ்மணம் கண்டறிகின்றது என்று யாராவது கேட்டீர்கள் என்றால்..


ஹிஹி... நம்மூருல மழைங்களா?!



(ஒத்துக்கறேன். இது ஒரு மொக்கைப் பதிவுதான். அதுக்காக மொக்கையவே இப்படி மொக்கையாக போட்டு மொக்கைப் பதிவுகளின் மானத்தை வாங்கிட்டதா சிபியாரும், செந்தழலாரும் சண்டைக்கு வர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நல்ல மொக்கையாக இருக்க ஒரு படத்தை சேர்த்துக்கறேன்! :) Edinburgh Panaromic view. படம் கொஞ்சம் பெரியது. 2MB. மெதுவா இறக்கிப்பாருங்க... )

கருத்துகள்

  1. நல்லா வருது.... கோவம். இருந்தாலும் அந்த லேபில் மேட்டரை கவனிச்சுட்டு வந்து சொல்றேன்

    பதிலளிநீக்கு
  2. //புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

    சன்னலை மூடு //

    இப்படி நான் திட்டு வாங்கனுமா? ஆசானே நல்லா இரும்யா..

    பதிலளிநீக்கு
  3. //(ஒத்துக்கறேன். இது ஒரு மொக்கைப் பதிவுதான். அதுக்காக மொக்கையவே இப்படி மொக்கையாக போட்டு மொக்கைப் பதிவுகளின் மானத்தை வாங்கிட்டதா சிபியாரும், செந்தழலாரும் சண்டைக்கு வர வாய்ப்புள்ளதால் கொஞ்சம் நல்ல மொக்கையாக இருக்க ஒரு படத்தை சேர்த்துக்கறேன்! :) )//

    :)

    Adhu Sari!

    பதிலளிநீக்கு
  4. எனக்கு நேத்தே புரிஞ்சி போச்சு... இதான் விசயம்னு.. :)

    பதிலளிநீக்கு
  5. இளா,

    புதுபிளாகருக்கு மாறினபிறகு சேர்க்காமல் விடுபட்ட பதிவுகள் மட்டுமே திரும்ப சேரும். நீங்க என்ன இதுவரை போட்ட அனைத்து பதிவுகளும் சேரும்னு நினைச்சிங்களா?! ம்ம்ம்ம்.. அதுக்கு கிஸ்க்கு! :)))

    சிபி, திட்டுவீங்களோன்னு பார்த்தேன். நகைக்குறிக்கு நன்றி! :)

    பொன்ஸ், உங்களுக்கு புரியாமையா? பதிவர் உதவிக்குழு ஆளாச்சே! :)))

    பதிலளிநீக்கு
  6. டோண்டு ராகவன் உங்களுக்கே குரு. இத்தினி நாளும் அப்படித்தான் நடக்குது அங்கே!

    பதிலளிநீக்கு
  7. //சிபி, திட்டுவீங்களோன்னு பார்த்தேன். நகைக்குறிக்கு நன்றி! :)//

    அட! நான் எதுக்குங்க திட்டுறேன்!

    நீங்கதான் எனக்கு சீனியர். அதுவுமில்லாம வலையுலக வாத்தியார் வேற! மொக்கை போடுறதுல.

    பதிலளிநீக்கு
  8. //டோண்டு ராகவன் உங்களுக்கே குரு. இத்தினி நாளும் அப்படித்தான் நடக்குது அங்கே!
    //

    :))

    அதுவும் வாஸ்தவம்தான்னு நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. முயற்சிர வேண்டியதுதான் !

    'முயற்சிர' - எப்படி இருக்கு இந்த புதுச் சொல். குமரன், ஜிரா- கிட்ட சொல்லிராதீங்க. அடிக்க வந்திரப் போறாங்க.

    பதிலளிநீக்கு
  10. // தருமி said...
    முயற்சிர வேண்டியதுதான் !

    'முயற்சிர' - எப்படி இருக்கு இந்த புதுச் சொல். குமரன், ஜிரா- கிட்ட சொல்லிராதீங்க. அடிக்க வந்திரப் போறாங்க. //

    வந்துட்டோம்ல....தப்பிக்க முடியுமா...எப்படியாவது மயிலாருக்கு அலகு வேர்த்துரும்.

    என்னங்க இளவஞ்சி இப்பிடி இலக்கணப் பிழையோட எழுதுறீங்க. தமிழ்ச்சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சனையைத் தனியொரு புலவராக இருந்து தீர்த்து வைத்த தருமி சொல்லீட்டாரு. அதுக்கு மேல என்ன சொல்றது. இப்ப என்ன செய்யப் போறீங்க?

    பதிலளிநீக்கு
  11. விடாதுகருப்பு,

    சரி விடுங்க.. நமக்கு எந்த டெக்குனிக்குத்தான் காலாகாலத்துல தெரிஞ்சிருக்கு! :)

    சிபியாரே,

    // வலையுலக வாத்தியார் வேற! மொக்கை போடுறதுல. // இதைத்தான் எங்கூருல காசைக்கொடுத்து... .... புண்ணாக்கிக்கறதுன்னு சொல்லுவாய்ங்க :)

    புதியவர்,

    என்னய்யா சொல்லுதீங்க?!

    தருமிசார்,

    நடத்துங்க.. // முயற்சிர வேண்டியதுதான் // புதுவார்த்தை நல்லாத்தான் இருக்கு.. முயற்சிற அப்படின்னு பெரிய ற வரணுமோ?!

    ஜீரா,

    எங்கய்யா புடிச்சீரு.. இந்த புதுப்போட்டோ?! துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல?! :)))

    பதிலளிநீக்கு
  12. // ஜீரா,

    எங்கய்யா புடிச்சீரு.. இந்த புதுப்போட்டோ?! துண்டு கலரெல்லாம் பார்த்தா சீக்கிரமே கட்சி ஆரம்பிச்சிருவீரு போல?! :))) //

    வஞ்சிக்கோட்டை வாலிபரே, இதெல்லாம் டூ மச்சு. :-)))))))) அது துண்டில்லை. துண்டில்லை. சாக்கெட். ஆல்ந்தூர்ல அடிக்கடி குளிருதுல்ல..அதுக்கெதமா...அந்த சாக்கெட். அந்தப் படத்தப் படகுல வெச்சி எடுத்தது. ஆலந்தூரு கால்வாயெல்லாம் சுத்திக்காடுற படகுல வெச்சி எடுத்தது.

    கட்சியா..நீங்க வேற...எனக்கு அரசியலோஃபோபியா வந்துருச்சோன்னு தோணுது!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  13. வாத்தி, வைரஸானதுமில்லமல் அதுக்கு எப்படிச் செய்யன்னு ஒரு உப்புமா வேறயா? நல்லா இருங்கடே!!

    பதிலளிநீக்கு
  14. முட்டி மோதிப் பார்த்தேன்; பப்பு வேகலை :(

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர