முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருடன் போலீஸ்

வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல! கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு! அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம

நிம்போமேனியாக் ( Nymphomaniac )

நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை. ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கரு

Aftershock - 2010

(  http://m.imdb.com/title/tt1393746/  ) "மாஸ்டர் டீச்மி குங்க்பூ" "நோ மை சன்!" "மாஸ்டர், ப்ளீஸ் டீச்மீ குங்பூ!! "நோமைசன்... நோ..." "வை மாஸ்டர் வை???" "பிகாஸ் ஐ டோண்ட் நோ குங்பூ!!" இந்தக்காமெடிக்கு தலைகீழா டைவடிச்சு சிரிக்கற அளவுக்குத்தான் எனக்கெல்லாம் சீனப்படங்களை பத்தி தெரியும். ஏன்னா பார்த்துவைச்ச படங்க எல்லாம் எண்டர்த டிராகன்ல இருந்து க்ரோச்சிங் டைகர் ஜெட்லி ஒன் தானே! ஜாக்கிபடங்கள் ஒருவகைன்னா இந்த பழங்கால அரசர் துரோகம் வெண்தாடி குரு மொட்டைல புள்ளிவைச்ச சிஷ்யனுங்க அப்பறம் பறந்துபறந்து அடிச்சும் வேலைக்காவாம கடைசில துணிய கத்தியாக்கி ஏமாந்த ஒருநொடில சொருவி வில்லனைக்கொல்லும் யாஹூசூ படங்கதானே. அதனாலதான் ஆரம்பத்துல இது சீனப்படம்னு தெரிஞ்சதும் ஒரு அசூயையா பார்க்க ஆரம்பிச்சோம். ச்சோம்னா வீட்டுல பொண்டுபுள்ளைங்க எல்லாமும். பார்த்துமுடிக்கையில் எவ்வளவு மனக்கிளர்ச்சி மற்றும் மனஅமைதி ஆனோம்னு சுருக்க சொல்லிமுடியாது! சீனப்படங்கள் பற்றிய தவறான மாயையை சுத்தமா தொடைச்செடுத்தது நிச்சயம் பலன் தான். கதை

டயட்டு அட்ராசிடிஸ்!

அடல்ட் வாழ்வில் உடம்புக்கு திருப்தியா செய்யவேண்டியது உணவும் உடலுறவும். இதில் இரண்டாவது ஏற்கனவே நம்ப நாட்டுல கடும் வறட்சில ஓடிக்கிட்டு இருக்கு. கிடைச்சதையெல்லாம் இல்வாழ்க்கை சமூகசூழல் ஒழுக்கவிதி பொருளாதாரம் சாதிமத கட்டுப்பாடுகள்னு ஆயிரத்தெட்டு கொடைச்சல்ல கிடைச்சும் கிடைக்காத குற்றவுணர்வுல பொதுப்புத்தி ( அதாங்... பெரும்பான்மை )வாழ்க்கைய ஏற்கனவே மருகலில் ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல முதலாவது உணவையும் குற்றவுணர்ச்சி தூண்டப்பட்டேதான் செஞ்சு அழியனுமா? சாப்பாட்டை சந்தோசமா அனுபவிச்சு சாப்பிடறதுல அப்படி என்னய்யா குற்றம்? வீகன் பேலியோ ஆர்கானிக்குன்னு விதவிதமா கெளப்பிக்கெளப்பி சும்மா இருக்கறவங்களை மருகிமருகி சாப்பிடவைச்சு அய்யோ முடியலயே தப்புசெய்யறோமோன்னு குற்றவுணர்ச்சிக்கு ஆட்பட்டு தவிக்கனுமாங்கறேன்? நம்முடைய மனோபாவத்துக்கு ( Attitude ) பொருந்தாத தேவையில்லாத அவசியமில்லாத செயல்களை எல்லோரும் செய்யறாங்களேன்னு கடமையாய் செய்வது பின்பு செய்ய இயலாமல் போவது குற்றவுணர்வை மட்டுமே கொடுக்கும். ஸ்போர்ட்ஸ்மேனாக இருப்பதும் குறிப்பிட்ட டயட்டை கட்டுக்கோப்பாய் செய்வதும் அவரவர் தேர்வு. சுயதேர்வா

வண்ணத்திரை - வாசிப்பனுபவம்

ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு நோக்கம் இருக்கும். தன் வாசகர்கள் யார்? அவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும்? அவர்கள் எதிர்பார்ப்பு என்ன? என்கிற தெளிவு. இதில் தெளிவாக இல்லையெனில் பத்திரிக்கை அதுவாகவே பொல்லையாகிரும். சிறுபத்திரிக்கையாக இருந்தாலும். இலக்கியப்பத்திரிக்கையில் நடுப்பக்க கவர்ச்சிப்படம் போடுவதோ அல்லது சினிமா எக்ஸ்ப்ரெசில் சமூக அவலங்களை சாடுவதோ நேர்மையான செயலாக கருதலாம்தான். ஆனால் வாங்கிப்படிக்கும் வாசகனுக்கு அது நேர்மையாக விற்கப்பட்ட பொருளல்ல. இந்த தெளிவு குழப்பதின் உச்சியில்தான் பெரிய பெரிய பத்திரிக்கைகளே இன்றைக்கு திணறிக்கொண்டு இருக்கின்றன. விகடனைப்படித்தால் சினிமா எக்ஸ்பிரஸ் படித்த கடுப்பு. குமுதத்தை புரட்டி முடிக்கையில் விளம்பர கேட்டலாக் படிக்கும் வெறுமை. இவையிரண்டுக்கும் நடுவில் இருக்கும் கேப்புல கல்லா கட்டிறமுடியுமான்னு ரெண்டுசைடு கண்டெட்டுகளை ஒப்பேத்தி இரண்டுங்கெட்டான் நகலாக நிற்கும் குங்குமம். பெரிய பத்திரிக்கைகளே இப்படி தனக்கென இருந்த அடையாளங்களை இழந்து தமக்கும் வாசகர்களுக்கும் இருந்த பிணைப்பை அலட்சியப்படுத்தி எப்படியாவது விற்பனை ஏத்தறதுக்கு சினிமா விட்டா கதியில்லைன

அப்துல்கலாம் எனும் மாபெரும் நடிகர்

இன்று மணப்பாறையில் ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நடத்திய அமைதி ஊர்வலம் நடைபெற்றது. நேற்றைக்கு கல்லூரி விடுமுறை. இன்று கல்லூரி பேருந்துகள் காலை ஒன்பதுமணிக்கு வந்துசேரும்வரை மாணவர்களுக்கு இந்த தகவல் தெரியாது. காலாமுக்கு கண்ணீர் அஞ்சலி எனும் ஏழெட்டு பதாகைகள் மட்டுமே. காவல்துறை ஒரு கிலோமீட்டருக்கு மட்டுமே அனுமதி அளித்ததால் எண்ணூறு மாணவர்களும் பேருந்துநிலையம் அருகில் இறக்கிவிடப்பட்டு ஒரு மணிநேரத்தில் திரும்ப ஏற்பாடு. கோஷமோ மாணாக்கரின் விளையாட்டுத்தனமோ அதிசோக பம்மாத்தோ எதுவும் காணோம். மாணவர்களும் ஆசிரியர்களும் அமைதியாக பதாகையை ஏந்தியபடி நடக்க மற்ற மாணவர்கள் அமைதியாக ஒரேவரிசையில் தொடர்ந்தனர். ஒழுக்குசெய்யவோ கண்காணிக்கவோ யாரும் இல்லை. எல்லாம் அவர்களுக்குள்ளாகவே உணர்ந்தபடிக்கு. என் ஆச்சரியம் அதுவல்ல. ஊரின் நெரிசலாக வழியில் செல்லச்செல்ல இருமருகிலும் உள்ள கடைகளில் இருப்போரும் பேருந்துக்கு காத்திருப்போரும் கடைக்குள் வியாபாரம் செய்வோரும் யாரும் சொல்லாமலேயே எழுந்துவந்து இரண்டு பக்கமும் அமைதியாக வரிசையில் நின்றார்கள். எண்ணுறு மாணவர்களின் ஊர்வலம் அவர்களை தாண்டிச்சென்றவரை தன்னிச்சையாக அம

சவுண்டு சிஸ்டம்

அது ஒரு காலம். வீட்டில் ரேடியோ இருந்தாலே வசதிக்காரவுக என இருந்தகாலம். ரெண்டாப்பு மூனாப்பு படிக்கையில எங்க லைன்வீட்டு ஓனரு ஒரு பெரிய மஞ்சாக்கலர் பொட்டிய பங்களா வீட்டு திண்ணைல வைச்சு கேட்டுக்கிட்டு இருப்பாரு. அப்பவே கேட்டுப்போட்ட வீடு. அவரு லாரிபில்டிங் பட்டறையும் வைச்சிருந்ததால அவருபேரு ரேடியோக்காரரா லாரிக்காரரான்னு காலனிமக்கா மாத்திமாத்தி குழப்பி சொல்லிக்குவாங்க. அது ரேடியோவா இல்ல ரிக்கார்டுதட்டு பெட்டியான்னுகூட சரியா தெரியல. வீட்டுகேட்டுக்கு வெளில நின்னு தூரத்துல இருந்து பார்த்தது மஞ்சாபொட்டியாத்தான் தெரிஞ்சது. ஏதாச்சும் பாடிக்கிட்டே இருக்கும். ஆனா அவருக்கு ரெண்டு சம்சாரம்னு மட்டும் இன்னும் நினைவிருக்கு. அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாலும் பொழுதுபோக்கு எல்லாம் எங்க வீட்டுல எப்பவும் புத்தகங்க மட்டும்தான். வாசிக்கறதுக்குன்னு கோகுலம், பூந்தளிர், தமிழ் மொழிபெயர்ப்பு ரஸ்ய பத்தகங்கள்னு ஏதாச்சும் வீட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கும். அதுவரைக்கும் கோயில் கல்யாண கூம்பு ஸ்பீக்கரு பாட்டுக மற்றும் திருவிளையாடல் விதி கதைவசனம் சும்மா காது கிழிய கேட்ட நியாபகம் உண்டு. படம்பார்க்க அம்புட

பொங்கலைப்பற்றி ஒரு பொங்கல்!

பொங்கச்சொல்லி பிரகாசரும் சோழன் எம்.எல்.ஏவும் கேட்டுக்கொண்டதாலும் மேட்டரு கொசுவத்திதுறையின்கீழ் வருவதால் என்னால் வாயை அடக்கமுடியாதென்பதாலும் இங்கே! அப்பாவின் காவல்துறை வேலையாக தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு வருடாவருடம் பெட்டிதூக்கி கடைசியாக கோவையில் கூடாரம் அடித்திருந்தாலும் என் சொந்த ஊர் தருமபுரி மாரண்டாஹள்ளியை சுற்றியிருக்கும் பலகிராமங்கள். அதெப்படி பலகிராமங்கள் சொந்த ஊராக இருக்கமுடியும்? எங்க தாத்தாபாட்டி பெற்ற 13ல் 2 தவற தக்குன மீதி 11ல் ஒரே ஒரு பெண் எங்க அத்தை! 10 பயகள்ல எங்கப்பாருதான் கடைக்குட்டி. இந்த ஆலமரத்துல பலவிழுதுகள் பலதிசைகளில் வேர்பரப்பினால் நான் எந்த ஊரை சொந்த ஊருன்னு சொல்லிக்க? கடைக்குட்டிங்கற ஒரே தகுதியால் வயக்காட்டுக்கு களிதூக்கிக்கொண்டு வேலைக்கு போகாமல் கவருமெண்டு ஸ்கூலுக்கு அரிசிச்சோறு கட்டிக்கொண்டு படிக்கப்போய் வேலையாகி டவுனுக்கு வந்துவிட்டவர் அப்பா. அப்போதெல்லாம் தீவாளி ஃபேமசாகாமல் பொங்கபண்டிகை முன்நின்ற காலகட்டம். சிறுவயதில் பொங்கல் பண்டிகை எனக்கு எங்கள் கிராமங்களில் வாய்த்திருக்கிறது. பண்டிகை 3 நாட்கள் எப்படியும் நடக்கும். 7நாள், 10நாள் வகை பண்டிகையெல்லாம்

The Science of Stock Market Investment - செல்லமுத்து குப்புசாமி

நீங்கள் அந்தக்கால பதிவராக இருந்திருந்தால் செல்லமுத்து குப்புசாமியை ஷேர்மார்க்கெட் பற்றி புத்தகம் எழுதும் எழுத்தாளராக முதன்முதலில் அறிந்திருக்கமாட்டீர்கள். ( வரலாற்றை தேடினால் அவரின் கும்மாச்சுகதை ஒன்று மாட்டலாம்! ) இப்பொழுதும் ஒன்றும் தகவல்குறையில்லை. இரவல் காதலியின் எழுத்தாளர்தான் இழக்காதே எழுதியவரும்கூட. இதற்கு நடுவில் பிரபாகரன் மற்றும் எல்டிடிஈ பற்றியும் இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்! அவரது எழுத்தின் வீச்சு அப்படி. ஆனால் பாருங்கள் எனக்கு அவரை இன்னமும் வலைப்பதிவர் குப்ஸ்சாகத்தான் நெருக்கமாய் அறிவேன். அதை என் பெருமைன்னும் அவர் கெரகம்னும் வைத்துக்கொண்டாலும் எனக்கும் அவருக்கும் பாதகமில்லை. ஒன்று கவனித்திருக்கின்றீர்களா? எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள். ஆனால் வலைப்பதிவர்கள் நல்ல வாசகர்களை பொறுக்கியெடுத்துவிடலாம். தமிழில் நாலுவரி டைப்படித்தால் அதைப்படிக்க நாலேபேர் இருப்பதை அறிகையில் புத்தி பத்திபத்தியாய் எழுதப்போய்விடுகிறது. கொஞ்சநாளில் அடேடே.. இப்பவர்ற புத்தகங்களுக்கு நம் நூறுபதிவுகளை எடுத்து புத்தகமாய்ப்போட்டால் எழுத்தாளர

மாதொருபாகனும் இணைய இந்துத்துவ எதிர்ப்பும்

சென்னையில் வேலை பார்த்த காலத்தில் எனக்கொரு அலுவலக நண்பர் இருந்தார். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். பள்ளி கல்லூரி சுற்றுலாவுக்கு சிலவெளியூர்கள் சென்றுவந்ததோடு சரி. சொத்தங்களும் வேலூர். கல்லூரியும் சென்னையை ஒட்டி. பேசுவதெல்லாம் சென்னை மற்றும் அதன் உயர்வுகள் பற்றியே இருக்கும். அவர் பார்வையில் கோவை மதுரையில் இருந்து வேலைக்கு சென்னை வந்த நாங்களெல்லாம் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்றே எண்ணம். எங்கள் வாழ்க்கைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை. பொள்ளாச்சி எனில் மசக்கவுண்டனுங்க வேட்டியும் பெண்கள் கண்டாங்கியும் கட்டிக்கொண்டு வாழ்பவர்கள் என்கிற சினிமா கொடுத்த சித்திரம் தவிர வேறு அறியாதவர். கூட வேலைபார்த்த நண்பரின் திருமணத்திற்கு என அனைவரும் ஈரோட்டுக்கு கிளம்பினோம். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்று சேரும்வரை அவருக்கு புது ஊரைப்பார்க்கும் ஆர்வம் தாளவில்லை. எங்கேயோ கேள்விப்பட்ட ஈரோடுபோய் திருச்சிவரு ஜோக்கையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ரயில் நிலையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டு ஒட்டிய லாட்ஜில் அறையெடுத்து செட்டிலாகி மண்டபத்துக்கு போக ரெடியாகிக்கொண்டிருக்கும் ப