முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுய மதிப்பீடுகள்...

நீ ங்க என்னைக்காவது, பிடிக்காத ஒரு இடத்திற்கு கூப்பிட்டுட்டாங்களேன்னு தவிர்க்க முடியாம வேண்டா வெறுப்பா போயிட்டு, வந்துட்டமேன்னு மூஞ்சை தூக்கி வைச்சுக்கிட்டு மத்தவங்களையும் உங்களையும் ஒரே நேரத்துல படுத்திக்கிட்டது உண்டா? இல்லைன்னா உங்க மனைவி நீங்க செய்யற ஒரு காரியத்தை தப்பா செய்யறதை கண்டுபிடிச்சிட்டாலோ இல்லை இதைவிட இன்னும் நல்லா இப்படி செய்யலாமேன்னு ஏதாவது அலோசனை தந்தாலோ உடனே குபுக்குன்னு ஒரு எரிச்சல் கிளம்பி வார்த்தைகளாக வெளிப்படுகிறாதா? இதுவும் இல்லைன்னா அலுவலத்திலோ இல்லை வெளியிலோ நீங்கள் அவசரத்தில் இருக்கும் பொழுது காவலாளி உங்கள் பையினை சோதனை செய்தாலோ அல்லது வண்டியினை சரியான இடத்தில் நிறுத்தும்படி கேட்டுக்கொண்டாலோ, "இவன் என்ன என்னை கேக்கறது" என கோவம் வந்ததுண்டா? அட இதுகூட வேண்டாங்க... நண்பன் சொன்னான் மாமா சொன்னாங்கன்னு வீடு வாங்கறதோ இல்லை பாண்டு வாங்கறதோ செஞ்சுட்டு பாதில ஏதாவது பிரச்சனை வந்தா நாளைக்கு நாலு முறை சொன்னவங்களை மனசுக்குள்ள திட்டு திட்டுன்னு திட்டி அவங்களுக்கு அடிக்கடி விக்கல் வரவைக்கற டைப்பா நீங்க? இதுவும் இல்லையா? அப்படின்னா அலுவலகத்தில் ஒரு சரியான வாய்ப்பு

காற்றினிலே வரும் கீதம்

"இதுக்கு முன்னால நீ இங்க வந்திருக்கியா?" "ம்ஹீம்.. இல்லப்பா.. ஊட்டி, ஏற்காடு தான் போயிருக்கேன்! இதுதான் மொதல் தடவை! ஊட்டிய விட இங்க நல்லா இருக்கு... இல்ல... நீ?" "ஒரே தடவை. பதிணொன்னாவது ஸ்கூல் டூரு போது வந்தது. ஏழெட்டு வருசத்துக்கு முன்னால. மூணு நாளு செம ஆட்டம் அந்த டூருல.. மொத நாளு மதுரை போயிட்டு ரெண்டாநாளு இங்க வந்தோம். செம குளிரு அப்ப... மொத மொதலா தம்மு அடிக்க டிரை செஞ்சு கண்ணுலையும் மூக்குலயும் தண்ணி வர இரும்புனது இங்கதான்... கணேசெல்லாம் வாத்தியாருக்கு தெரியாம பீரெல்லாம் அடிச்சானுங்க.. நான் தம்மோட நிறுத்திக்கிட்டேன்! அப்பவே இந்த கம்பி மேல ஏறி நின்னு அந்தப்பக்கம் போகப்பார்க்க வாத்தியாருகிட்ட செம மாத்து வாங்குனேன்! விழுந்து தொலைச்சு ஏதாவது ஆனா எவன்டா உங்கப்பனுக்கு பதில் சொல்லறதுன்னு போட்டு பின்னிட்டாப்புல. அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை!" "நீ அந்த வயசுலயே கொரங்கு வேலையெல்லாம் செய்வியா? அதான் இப்பவும் இப்படி இருக்க!! ம்ம்ம்.. மொத மொதல்ல உன்னைப் பார்க்கறப்ப இந்த பூனையும்