
இந்த வார விகடனில் (அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) சில எரிச்சலூட்டும் பகுதிகள்.
கவர்ஸ்டோரில ஆரம்பிக்குது உப்புக்காகிதம் வைச்சு மூஞ்சுல தேக்கற மாதிரியான எரிச்சல்! திமுக மகளீர் மாநாடு மூலம் போட்டி கனிமொழிக்கும் கயல்விழிக்குமாம்! ஊருல யாருக்குமே தோணாத பத்தவைக்கற நேக்குல இப்படி ஒரு கட்டுரை. இதை இப்படி எழுத விகடன் எதுக்கய்யா?
பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? என்ன விமர்சனமோ! என்ன அளவுகோலோ!!
அடுத்தது, வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களின் தரத்தில் 25% கூட இல்லாமல் பக்கா சப்பையான ஒரு விமர்சனம் தசாவதாரத்துக்கு. கமல் மட்டும் சூப்பர். மத்தபடி இது நொட்டை.. இது நொள்ளைன்னு... திரைக்கதைல மேஜிக்கும் கதைல லாஜிக்கும் இல்லைன்னு ஒரு குத்தம் கண்டுபுடிச்சிருக்காங்க! இதுபோக கதை பல தளங்களில் பயணிப்பதால் சாதாரண ரசிகன் குழம்பிருவானாம்! ஆமாமாம்! நம்ப ரசிகருங்க இரட்டைவேடத்தில் குழம்பாமல் இருக்க இளையதளபதி மாதிரி ஒரு கொடுமை மூனு நாள் தாடியோடவும், இன்னொரு கொடுமை ரெண்டேமுக்கா நாள் தாடியோடவும்(நன்றி: பெயர் மறந்த சகபதிவர்) வந்தா சரியா இருக்குமா? இதெல்லாம் விட கொடுமை இப்படத்துக்கும் 43 மார்க்காம்! இது எந்த மார்க்கு? குருவிக்கும், பழனிக்கும் போடற அதே மார்க்கு! இந்தப்படத்துக்கும் 43ன்னா வேற எந்தப்படத்துக்குயா நீரு 80 மார்க்கு போடுவீரு? 100க்கு 100 வாங்கற அப்படியாப்பட்ட ஒரு கதையும் திரைக்கதையும் உம்மகிட்ட இருந்தா கோடம்பாக்க மக்களுக்கு கொடுத்து ஒதவறது தானேயா! புண்ணியமாப்போகும்.
இத்தனை நொட்டை சொல்லற? அப்பறம் என்ன மயித்துக்குளே விகடனை வாங்கறன்னா கேக்கறீங்க?! அதுவும் சரிதான். இனிமே அடுத்த வெள்ளிக்கெழமை வரை வாங்கவே மாட்டேன்! :(
P.S: என்னய்யா இது பின்னூட்ட சைசுல பதிவுன்னு திட்டாதிங்க... இன்னைக்கு கோட்டா அவ்ளவ்தான். படம் எதுக்கா? விகடன் மாதிரியே இந்தபதிவும் மொத்தமா மொக்கையாகாம இருக்க! )