முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆகக்கூடி மேட்டரு என்னன்னா...

எ ன்ன்ன்னக் கொடுமைங்க இது? கலிஞரு, சன்னு, ராஜு, கேடிவின்னு எப்ப எந்த சேனலை திருப்புனாலும் ஆடறாய்ங்க ஆடறாய்ங்க... ஆடிக்கினேக்கீறாங்க... லிட்டில் ஜீப்பரு கண்ணீரு விட்டப்பக்கூட இத்தெல்லாம் ஒரு ட்ரெண்டு.. கொஞ்ச நாளைக்குள்ள காணாமப்பூடும்னு மன்சத் தேத்திக்கினுதான் இருந்தேன். ஆனா நாளாக நாளாக யாரும் அடங்கறமாதிரி தெரியலை! ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை! சின்னத்திரை பெரபலங்க எல்லாம் காசுக்கு காசாச்சு ஒடம்பும் எளைச்சாச்சுங்கற கணக்கா ஆடற குத்தாட்டாம் அவிங்களுக்கு நல்லதுதான். ஆனா அதைச்சுத்தி தோத்தா அழுகை, கெளிச்சா அலம்பல்னு ரியாலிட்டி ஷோன்னு எப்பப்பாரு அடிக்கற கூத்தைப் பார்த்தா தமிழனுங்க அத்தனைப்பேரு வீட்டுலயும் நாலு விஜய், மூனு ரம்பாக்களை உருவாக்காம விடமாட்டானுவ போல! நாமெல்லாம் வீட்டுல திங்கறது, தூங்கறது, பேசறது, சமைக்கறதுன்னு எல்லாத்தையும் டான்சுலயே செய்யறதுன்னு ஆகற வரைக்கும் இது ஓயாது போல! தமிழருங்களே! நெலமை அந்த அளவுக்கு ஆயிடுச்சுன்னாலும் பார்த்துங்கப்பு... ”ஆய்” போறாப்பயாவது டான்சு