முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்

Bannerghatta National Park, Karnataka - - 0 0 O O = O O 0 0 - - நல்லாத்தான் படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்தேன். இப்ப என்பேர்லயும் நாலஞ்சு போலியாம்! ஹிம்... சொந்தப் பேருலயே வெளிய தலகாட்ட முடியலை :( - - 0 0 O O = O O 0 0 - - சொன்னாக் கேளுங்கப்பு... வலைப்பதிவு விவாதம்னா இப்படி ஆளுக்கு ஒரு திசையா முதுகைத் திருப்பிக்கிட்டுத்தான் பேசனும்னு இல்ல! - - 0 0 O O = O O 0 0 - - இன்னைக்கு யாரு எங்க "பொதுமாத்து" வாங்கறாங்கன்னு இன்னும் கண்டுபுடிக்க முடியலையே! எப்படித்தான் ஆபீசுல பொழுத ஓட்டப் போறமோ?! - - 0 0 O O = O O 0 0 - - ஏனுங்க.. நான் சொல்லலை? அந்த 47.89% பின்னுட்டக் கயமைத்தனம் செய்யறவன்னு... அங்க நிக்கறாம் பாருங்க... கொஞ்சம் நல்லா "கண்"காணியுங்க... - - 0 0 O O = O O 0 0 - - சொன்னா நம்புங்கய்யா! எனக்கு இயற்கையாவே இப்படித்தான். வலைப்பதிவு வெவாதத்துல கெடைச்ச சூடெல்லாம் இல்லை... - - 0 0 O O = O O 0 0 - - ஹிம்.. எட்டிப்பார்த்தவன் ஏழு வருசம் உள்ள போன கதையா போயிடிச்சே! (நன்றி: வரவணையார் ) வலைல துணுக்குமூட்டை படிக்கறதோட நிறுத்தியிருந்திருக்கனுமோ?! - - 0 0 O O = O O 0 0 - - வலைப்பதிவு

மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06

'மரணம்' னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சப்ப நம்ப மக்கா கிட்ட எனக்கு நல்ல மண்டகப்படி உண்டுன்னு நினைச்சேன். ஆனா நீங்க மானாவாரியா பதிவுகளப் போட்டு புல்லரிக்க வைச்சிட்டீங்க! வாங்கய்யா வாங்க! வந்து புடிச்ச படைப்புகளுக்கு உங்க பொன்னான ஓட்டுக்களை அள்ளி விடுங்க! வாக்குப்பதிவுக்கு முன்னாடி போஸ்டரு, கொடி கட்டுன ஜீப்புல மின்னல் வேக ரவுண்டப்பு போறாப்புலையும், பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க 80 பதிவுக... ஒவ்வொன்னுலையும் மிகச்சிறந்த, கதைக்கு அழுத்தம் கொடுக்கற, ஒரு திருப்பம் வைச்சிருக்கற, சொல்ல வந்த உணர்வுகளை அழுத்தமாச் சொன்ன, கண்ணுல தண்ணி வரவைச்ச, வாய்விட்டு சிரிக்க வைச்ச, கொஞ்ச நேரம் "ங்கே" ன்னு விட்டேத்தியா யோசிக்க வைச்ச, எனக்குப் பிடிச்ச வரிகளை மட்டும் இங்க கொடுத்திருக்கறேன்! எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு பிடிச்ச அத்தனை ஆக்கங்களுக்கும் குத்தித் தள்ளிருங்க! படைப்பாளிகளுக்கு, வாக்களிக்கற இடத்துல மறக்காம உங

இதெல்லாம் ஆவறதில்லைங்க...

தேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க! அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை! ஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்

பெங்களூர் வலைப்பதிவாளர்கள்/எழுத்தாளர்கள் சந்திப்பு!!!

வலைப்பதிவர் சமுதாயமே! வலைத்தமிழின் வாழ்விடங்களே!! அலைகடலென திரண்டு வாரீர்!! நேரங்காலம் : தேதி 9 ஜூலை ஞாயிறு காலை நேரம் 10 மணிக்கு சந்திக்கும் இடம்: லால்பார்க்கில் மெயின்கேட்டைத் தாண்டி உள்ள மொட்டைப்பாறைக்கு முன்னால் (சொன்னமாதிரியே சூட்கேசுடன் வந்துடுங்க! கோட்வேர்டு: தீப்பெட்டி-கருப்பட்டி-வெறும்பொட்டி ) நிகழ்ச்சி நிரல் வரவேற்பு உரை : ஷக்திப்ரபா தமிழ் வணக்கம் பாடல் : ஷைலஜா வந்தவர்களைப் பற்றிய அறிமுகம் : அவரவர்களே! விருந்தினர் அறிமுகம் : ஐய்யப்பன் (Jeeves) விருந்தினர் உரை : திலகபாமா வலைப்பதிவாளர்கள் உரை : அனைவரும் தங்கள் வலை அனுபவங்களைப் பற்றி பேசுதல் உருப்படியான ஒரு செயல் திட்டம் : தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் 3 நிமிடக் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து விருப்பமுள்ளோர் வாசிக்கலாம் மதிய உணவு : ( ஷைலஜாவின் கைவண்ணத்தில் ) 1 மணிக்கு (கண்டிப்பாக 1 மணிக்கு மட்டுமே! அதுவும் கோட்வேர்டு சரியாச் சொன்னவங்களுக்கு மட்டுமே! :) ) அப்பறம்?! : அரட்டை அல்லது விளையாட்டு (தூங்கப்படாது ஆமா!!) நன்றிஉரை: நண்பர்களில் யாராவது நடுநடுவுல கொறிக்கறதுக்கு அவங்கவங்க ஏதாவது வாங்கிக