முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான்