முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :) அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

ம க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதி க்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ் , ஜெய்சிங் , நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு , வினோத்து , கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல் . இவ