முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கோவை to ஈரோடு & என் புகைப்படப் பெட்டி

எருக்கம்பால் மருந்து முட்டி சிராய்ப்புக்கு போட்டதுண்டா? அய்யனாரு வெட்டுக்கத்தி... ஆடுங்கடா என்னச்சுத்தி... த்த... ஒயுங்க்க சாப்புடலன்னா அந்த மொட்ட மாமாக்கிட்ட புடிச்சு குடுத்துருவேன்! சொர்க்கமே என்றாலும் புல்லட்டு போல வருமா?... பெருசு... வண்டி கொடகொடங்கு... ஓவராயிலிங் விடுங்கப்பு... தாஸு... ஜல்லி அடிக்கலாம்... இந்த மாதிரி லோடுலோடா கொட்டப்பிடாது... வளைகரங்களுக்கு காத்திருக்கும் வளைத்தெடுத்த வண்ணங்கள்... பெருந்துறை நாட்டின் குதுரப்பட... நிழலைத்தேடும் நிழல்... சொன்னா நம்புங்கப்பு... IP வைச்செல்லாம் யாரு பதிவுக்கு வந்தாகன்னு கண்டுபுடிக்க முடியாது... செம ஹாட்டு மச்சி... இளநீர்க்கடை 'சுந்தர' ராமசாமி ஒர்ரூவாய்க்கு STD போடலாம்... பிரஸன்னம் பார்க்க முடியுமா?! TVS 50... ஒரு கனரக வண்டி..." பச்சை வயல் மனசு... தின்னுக்கிட்டே இருக்காதடா எரும! நேத்தைக்கு என்னா நடந்துச்சுன்னு சொல்லறேன் கேளுடா... ஆம்பளைங்க துணி வெளம்பரமாம்! என்னே ஒரு கவர்ச்சி?! ஜெசிலாக்கா... இத்த பார்க்கலையா?! என்ன கொடும சரத்குமார் இது?!

Edinburgh Festival Cavalcade 2007 & என் புகைப்படப் பொட்டி

எடின்பரோ நகரத்தின் கோடைக்கால விழா ஆரம்ப நிகழ்சியான காவல்கேட்' 07 இன்றைய ஞாயிறு மதியம் நடந்தேறியது. கலைகளின் நாடு பாரீஸ் தான்! அங்க வருசம் 365 நாளும் விழாதான். அவிங்க ஊரை அடிச்சுக்க முடியாது. இருந்தாலும் The Festival City என அழைக்கப்படும் எடின்பரோவில் கோடைக்காலம் 3 மாதங்களும் விழா நாட்கள் தான். ஊருல தெனைக்கும் ஏதாச்சும் ஆட்டம், பாட்டம், நாடகம், கண்காட்சின்னு பல சங்கதிங்க நடந்துக்கிட்டே இருக்கும். இதுக்குன்னே 3 மாசத்துக்கு மட்டும் வெளியாளுங்க இங்கன டேரா போடுறாய்ங்க. கடைசிநாளு வாணவேடிக்கை. எடின்பரோ நகரத்து கோட்டை முழுசும் வெடிகளா வைச்சு இசைக்கற இசைக்கேற்ப அவைகளை கலர் கலரா வெடிக்க வைச்சு பட்டைய கெளப்பிருவாய்ங்க! இசைக்கேற்ப நடனமாடும் நீர்காட்சியதான் பார்த்திருந்தேன். போன வருசம் இசைக்கேற்ப நடக்கும் வாணவேடிக்கைய வாயைப் பொளந்துக்கிட்டு தான் பார்த்தேன். ஊருல எங்க பார்த்தாலும் கலைக்கூத்தா நடக்குது. சின்ன வயசுல எப்படியாவது பிற்காலத்துல கூத்தாடியாதான் வரணும்னு குறிக்கோளெல்லாம் இருந்தது. "ஆசை இருக்குது தாசில் செய்ய... அதிர்ஷ்டம் இருக்குது கழுத மேய்க்க.."ங்கற மாதிரி பொட்டி தட்டற வேலைதா

ஸ்காட்ச்சுலாந்து "பெர்த்" ம் என் புகைப்படப் பொட்டியும்

போனவாரம் வீக்கெண்டுக்கு இங்க பக்கத்துல இருக்கற பெர்த் அப்படிங்கற ஊருக்கு சுற்றுப்பயணம். சுற்றுப்பயணம்னு தோள்ல ஒரு மஞ்சப்பைய மாட்டிக்கிட்டு கெளம்பறம்னா அங்க போய்ச் சேர்ற எடத்துல ஆட்டையப் போட்டு அனுபவிக்க ஒரு ஆளு மாட்ட வேணாமா?! அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால் ! ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம்! எனக்கு கேக்கவே இல்லை!! ), கடைசியா பஸ் ஏத்திவிடற வரைக்கும் கூடவே இருந்து விருந்தோம்பல் தான் தங்கத் தமிழனின் உயர்ந்த குணம்னு நிரூபிச்ச அன்புத்தம்பிக்கு என் வணக்கங்கள்! ஆனால், என் பஸ் கெளம்புனது தெரிஞ்சதும் ஒரு துள்ளலா சந்தோசக் குதியலா அவரு வீட்டைப் பார்த்து ஓடுனதுதான் ஏன்னு புரியல... ரெண்டு நாளா பேசுனோம்! பேசுனோம்!! அப்படி பேசுனோம்!!! இங்கன தனியா பேசக்கூட ஆளில்லாம தனிமையின் அமைதியில் குண்டலினி யோகம் பயின்று கொண்டிருக்கும் எனக்கு (நம்பீட

முட்டை பிச்சு பரோட்டா

அம்மா வாங்க! அய்யா வாங்க! அண்ணே வாங்க! அக்கா வாங்க! தங்கச்சி வாங்க! எங்க போனவாரம் சமையற்குறிப்பு வரலைன்னு ஆழந்த வருத்தத்துல இருந்திருப்பீங்களே! ( டேய்........) அந்த வருத்தத்துல எதையும் சமைக்கப் பிடிக்காம பட்டினி கெடந்திருப்பீங்களே!! ( அடேய்......... ) அந்த பசி கெளப்புன கோவத்துல "இவன் சமைக்கறதே இல்லை! பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே!!! (யேயய்யா! பேச்சை மட்ட்ட்ட்ட்ட்டும் கொறைடா! ) சரி விடுங்க! உங்க கஷ்டம் புரிஞ்சனால தான் இன்னைக்கு ஒரு சூப்பர் ஐட்டத்தோட வந்திருக்கேன்! முட்டை கொத்து பரோட்டா! அதுக்கு ஏண்டா தலைப்பு இப்படி வைச்சிருக்கேன்னு சண்டைக்கு வரப்படாது! இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடியும்? கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு! மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு "My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol!"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடிய

(புகைப்படப்) போட்டியும் என் பொட்டியும்

கமகம புதினா சாதம்

"புதினா சாதம் செய்யப்போற! சரி... அதென்ன கூட கமகம? எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்!"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா? சரி OK! வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க! தேவையான பொருட்கள்: போனவாரம் சொன்னதெல்லாம் தான்! ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்! புதினா - ஒரு கட்டு கொத்தமல்லி தழை - ஒரு கட்டு பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 5 பற்கள் இஞ்சி - ஒரு துண்டு பச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய்! அதனால 2 போதும்! அதுக்குமேல உங்க பாடு!) பட்டை லவங்கம் பிரியாணி இலை நல்லெண்ணை - 2 குழிக்கரண்டி வெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி பாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது? நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா? எதுக்கு வம்பு? நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு! ) உப்பு - போதுமான அளவு செய்முறை: மொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க. சம அளவு ஆய்

என்ஃபீல்ட் புல்லட்

வாழ்க்கைல நீங்க என்னைக்காவது சொர்க்க ரதத்துல போயிருக்கீங்களா? அட, கடைசியா போறப்ப போகப்போற அந்த ரதம் இல்லைங்க! வாழறப்பவே போய் வந்து அனுபவிக்கற சொர்க்கம். சிலருக்கு பென்ஸ் காராக இருக்கலாம். சிலருக்கு கான்கார்ட் பயணம் வாய்ச்சிருக்கலாம். நம்மூரு கோவை-பெங்களூர் KPN ஸ்லீப்பர் கோச்சாகக்கூட இருக்கலாம். என்னைக் கேட்டீங்கன்னா அதை நான் புல்லட் ஓட்டிய காலங்களாகத்தான் சொல்லுவேன். புல்லட்டை ஓட்டக்கூட வேண்டாம்! சும்மா பின்னாடி உட்கார்ந்து போகயிலயே கூட அந்த சொகுசை உணரமுடியும். ஆமாங்க! ரொம்பப் பழசான டிசைன் தான். யானை கட்டி தீனிபோடற வேலைதான். பார்க்க சின்னதா அழகா துறுதுறுன்னு இல்லாம தாட்டியா அங்கங்க புடைப்புகளுடன் ஒரு மாதிரியான தட்டையான டிசைன் கொண்ட வண்டிதான். ஒத்துக்கறேன்! ஆனால் இதையெல்லாம் ஒத்துக்கிட்ட பிறகும் எனக்கு என்னவோ அந்த வண்டி அலாவுதீன் ஒருவித அதீத விருப்பத்துக்கு ஆட்பட்டு ஒரு நாள் பொழுதுபோகாம குறுந்தாடியை சிக்கெடுத்துக்கிட்டு இருந்த பூதத்தை கெளப்பிவிட்டு மாங்குமாங்குன்னு வேலை வாங்கி அவனே அவனுக்குன்னு உருவாக்கிக்கிட்ட ஒரு வாகனம்னும், லைலாவோட ரொமாண்டிக்கா இருக்கற காலங்களில் எல்லாம் பறக்

எடின்பரோ கோழி வறுவல்

இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு ! இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! ) தேவையான பொருள்கள்: அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர் வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு நிஜமாகவே தேவையான பொருள்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது ) பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு ) தக்காளி - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பற்கள் பட்டை, கிராம்பு -சிறிதளவு சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி தழை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)

நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி படங்களை ரசிக்கறேன்னும் ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருக்கறேன். அதனால இந்த பதிவை இவனும் மண்சோறு திங்கற கும்பல்ல இருப்பானோங்கற சந்தேகக் கண்ணோட பார்க்காம இதுவும் இன்னொரு சாதாரண ரசிகக் கண்மணியோடதே அப்படின்னாச்சும் நினைச்சுக்கிட்டு சும்மா ஜாலியா படிங்க! :) படம் சும்மா சொல்லக் கூடாதுங்க! அடி! அதிரடி!! கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ரெண்டாம் வரிசை நாயகர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு அடிச்சுக்கிட்டது நினைவுல இருக்குங்களா?! அவங்களுக்கு எல்லாம் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான சேதி என்னன்னா... இன்னும் அடுத்த 10 வருசங்களுக்கு சூப்பர்ஸ்டாராக கனவுலகூட நெனைக்காதீங்கப்பேய்! :) அஞ்சுக்கப்பறம் ஆறு! சிவாஜிக்கப்பறம் யாரு?! உண்மைதானுங்... ரஜினி மொத சீன்ல "மக்களுக்கு நல்லது செஞ்சேன்!"ங்கறதால ஜெயிலுக்கு உள்ளே வந்தேங்கறதுல இருந்து கடைசிசீன்ல மொட்டைத்தலைல தபேலா வாசிக்கறது வரைக்கும் நான்ஸ்டாப் அசத்தலுங்க. மனுசன் மனசை சும்மா அள்ளிக்கிட்டு போறாரு! அந்த துறுதுறு

வென்றுவாடி என் மகளே!

இ ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல... இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்! போய்வாடி என் மகளே! நம்வாழ்வை மொக்கையாக்க மெக்காலே வடிவமைத்த போர்க்களம் வென்றுவாடி என் மகளே! கூட இருக்கத்தான் ஆசப்பட்டோ