முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Edinburgh Festival Cavalcade 2007 & என் புகைப்படப் பொட்டி

எடின்பரோ நகரத்தின் கோடைக்கால விழா ஆரம்ப நிகழ்சியான காவல்கேட்' 07 இன்றைய ஞாயிறு மதியம் நடந்தேறியது. கலைகளின் நாடு பாரீஸ் தான்! அங்க வருசம் 365 நாளும் விழாதான். அவிங்க ஊரை அடிச்சுக்க முடியாது. இருந்தாலும் The Festival City என அழைக்கப்படும் எடின்பரோவில் கோடைக்காலம் 3 மாதங்களும் விழா நாட்கள் தான். ஊருல தெனைக்கும் ஏதாச்சும் ஆட்டம், பாட்டம், நாடகம், கண்காட்சின்னு பல சங்கதிங்க நடந்துக்கிட்டே இருக்கும். இதுக்குன்னே 3 மாசத்துக்கு மட்டும் வெளியாளுங்க இங்கன டேரா போடுறாய்ங்க. கடைசிநாளு வாணவேடிக்கை. எடின்பரோ நகரத்து கோட்டை முழுசும் வெடிகளா வைச்சு இசைக்கற இசைக்கேற்ப அவைகளை கலர் கலரா வெடிக்க வைச்சு பட்டைய கெளப்பிருவாய்ங்க! இசைக்கேற்ப நடனமாடும் நீர்காட்சியதான் பார்த்திருந்தேன். போன வருசம் இசைக்கேற்ப நடக்கும் வாணவேடிக்கைய வாயைப் பொளந்துக்கிட்டு தான் பார்த்தேன்.

ஊருல எங்க பார்த்தாலும் கலைக்கூத்தா நடக்குது. சின்ன வயசுல எப்படியாவது பிற்காலத்துல கூத்தாடியாதான் வரணும்னு குறிக்கோளெல்லாம் இருந்தது. "ஆசை இருக்குது தாசில் செய்ய... அதிர்ஷ்டம் இருக்குது கழுத மேய்க்க.."ங்கற மாதிரி பொட்டி தட்டற வேலைதான் அமைஞ்சது. இங்க இவிங்க மேடை நாடகம், இசை நாடகம், நடன நாடகம்னு பலவாரியா பிரிச்சுக்கட்டி படம் போடறதை பார்த்தா பொகயாத்தான் இருக்கு! ம்ம்ம்.. உள்ளூருல இருந்தப்பவே கூரையேறி கோழி புடிக்காதவன், இங்கவந்தா வானம் ஏறி வைகுண்டம் போகப் போறேன்?! இருந்தாலும் சொல்லறேன்! என்னைக்காவது ஒரு நாளு கோடம்பாக்கம் என்பேரை சொல்லற வரைக்கும் ஓயமாட்டேன்! எனக்குன்னு ஒரு டைரடக்டரு ஏதாவது ஒரு நல்ல காமெடி ரோல் வைச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காமலா போயிறப் போறாங்க?! :)

சரி! விட்ட கதைக்கு வருவோம்! இன்னைக்கு பேரணில இனி வரப்போகிற நாட்கள்ல நடக்கப்போற நிகழ்ச்சிகளோட ட்ரூப்புன்ங்க, சோசிசல் சர்வீஸ்காரவுங்க, சைனா, கொரியா, இந்தியா, வளைகுடா, அராபியா இப்படியான பலதரப்பட்ட நாட்டுகாரவுங்க, எல்லாம் பேரணி போனாங்க. நடத்தப்போற நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் மாதிரி பேரணிலயெ கொஞ்ச நேரம் மீஜிக்கை போட்டு ஆட்டம் கட்டுனாய்ங்க. அடடா! என்னா ஆட்டம்! தாரை தப்பட்டைகள் பட்டைய கிளப்ப, பைப்புகள் பிளிர தூள் கெளப்பிட்டாய்ங்க! போனவங்க சும்மாவா போனாங்க? கூடவே, என் கலைத்தாகம் எனும் நெருப்புல எண்ணையுமில்ல ஊத்திப்புட்டு போனாங்க! அதன் விளைவுதான் மேறபடி புலம்பல் பத்தி.

நம்மால முடிஞ்சது இதுதான்னு எடுத்த சில படங்கள் கீழே! அண்ணன் ஜாலிஜம்பரின் வேண்டுகோளுக்கு இணங்க சில படங்கள் விசேட "கவனத்துடன்" எடுக்கப்பட்டுள்ளன! :) படம் புடிக்க தோதா இடம் புடிக்கறதுக்கே பெருமாடாகிருச்சு! மழை பெய்யுதே.. எவன் நேரங்காலமா வருவான்னு மெதுவா ஆடியசைஞ்சு போய்ச்சேர்ந்தா அங்க பேய்க்கூட்டம்! இருந்தாலும் இதுக்கெல்லாம் அசருவமா?! நம்ப மன்னன் பட ஃபார்முலாவ எடுத்துவிட்டு கெடைச்ச கேப்புல இடிச்சு, தினிஞ்சு, தள்ளி ஒரு மார்க்கமா அலப்பரைய கொடுத்து மொதவரிசைக்கு போறதுக்குள்ள சக்கையாகிட்டேன்! எல்லா படங்களும் நல்லா வரலை. இருந்தாலும் உள்ள இருக்கற மேட்டருதான் முக்கியம்னு கொஞ்சமா நகாசு வேலையெல்லாம் செஞ்சு போட்டிருக்கேன். கண்டுக்காதிக!எடின்பரோ விழா தொடக்கநாள் பேரணி பற்றிய தகவல்களுக்கு

எடின்பரோ விழா பற்றிய விக்கிபீடியா

கோடைக்கால விழா பற்றிய முழுமையான மேலதிக தகவல்களுக்கு

கருத்துகள்

 1. படங்களும் பட்டையைக் கிளப்புது.

  எங்கூருலே கோடைகாலத் திருவிழாவும் ,கிறிஸ்மஸ் விழாவும்
  சேர்ந்தே வந்து 3 மாசம் ஆட்டமோ ஆட்டம்தான்.


  இப்ப நடக்கறது எங்க குளிர் காலம். எங்கே மக்கள் குளிரை
  அனுபவிக்காம முடங்கிருவமொன்னு குளிர்காலக் கலைவிழா
  நடந்துறாங்கப்பா விவரம்கெட்ட சிட்டிக்கவுன்ஸில்:-))))

  பதிலளிநீக்கு
 2. வாவ்..

  கடைசி படம் நச். அதில் ஒரு சீன பெண்ணின் (ரோசாவோட) போர்ட்ரெய்ட் நல்ல இருக்கு..

  பதிலளிநீக்கு
 3. விழாவை நேரில் பார்த்ததைப் போன்று உணர்ந்தேன்.
  நம் கோரிக்கைக்கும் இடமளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி.:)))))

  பதிலளிநீக்கு
 4. துளசியக்கா, ஜெயகாந்தன், ஜாலிஜம்பர், சிவிஆர்...

  ஊக்கங்களுக்கு நன்றி :)

  பதிலளிநீக்கு
 5. வாவ்..ரொம்ப நல்லாஇருக்குதுங்ணா நீங்க எழுதறது...எங்க வூட்டுல உங்களுக்கு நெறய ரசிகருங்க இருக்காங்க...படமெல்லாம் பி.சி.ஸ்ரீராம் லெவலுக்கு இருக்குங்ணா...மேல தூக்கி வைங்க..(I mean..."keep it up" )

  பதிலளிநீக்கு
 6. வே ஓமர பாத்தாளே நமக்கு அச்சலாத்தியால்லா இருக்கு... எழவு எத செஞ்சாலும் நல்லா செய்றீகளடே...

  பதிலளிநீக்கு
 7. இளவஞ்சியைவிடவும் ஜாலிஜாம்பருக்குத்தான் ரொம்ப தேங்க்ஸ் சொல்லணுமாக்கும்.. அதான் ஒரு மார்க்கமாத்தான் போட்டோ எடுத்திருக்கீரு.. அந்த கிளைமேட்டும், மனிதர்களின் அழகும் போட்டோஜெனிக்.. இளவஞ்சி வாழ்க..

  பதிலளிநீக்கு
 8. Gopinath,

  // எங்க வூட்டுல உங்களுக்கு நெறய ரசிகருங்க இருக்காங்க //

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!! :)

  செல்வு,

  // எழவு எத செஞ்சாலும் நல்லா செய்றீகளடே...//

  நாங்க அந்தக்காலத்துல்ல இருந்தே "வெட்டியா" எதைச்செஞ்சாலும் இப்படித்தான்.. ஹிஹி..

  உண்மைத்தமிழன்,

  // ஜாலிஜாம்பருக்குத்தான் ரொம்ப தேங்க்ஸ் சொல்லணுமாக்கும். // சொல்லிட்டாப்போச்சு! அண்ணன் மதுரக்காரரு... அதனால விழாவே எடுத்துருவோம் :)

  மக்கள்ஸ், வருகைக்கும் ஊக்கக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. WOW..... கலக்கல்.....

  வாத்தின்னா வாத்தி தான்.... :)

  பதிலளிநீக்கு
 10. நல்லா இருக்கு தல!!

  (படங்கள், படங்களாக இருப்பவர்கள்/வைகள் எல்லாமே!) :))

  பதிலளிநீக்கு
 11. ராயல், தீபா, இகொ,

  ஊக்கங்களுக்கு நன்றி. கேமெரா சோனி DSC H1.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர