முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திமிரு...

"ஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!" "டேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!" "ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!" "டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!" "அப்ப.... நானாத்தான் நாறிட்டனா?!" "ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!" "டேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!" "பொம்பள பொம்பளயா இருக்கனும்! ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிரு இருக்கக்கூடாது!" "ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!" "டேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! உன்ன கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேன்டா" "ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!!" "டேடேடேடேடேடேடேடேடேடேடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!!" திமிரு - வெற்றிப்படிகளில் விஷால்!

எம்மூஞ்சியும் ஒலக மொகரைகளும்...

ஒ லகத்துல நம்மளை மாதிரியே ஏழுபேரு இருப்பாங்கன்னு எங்க தாத்தா சொல்லுவாரு! அது மட்டும் உண்மையா இருந்தா இந்த ஒலகம் தாங்குமான்னு நானும் யோசிச்சதுண்டு. நம்பள மாதிரி யாரு இருக்கறாங்கன்னு தெரிஞ்சுக்கறதும் கொஞ்சம் சுவாரசியமான விசயமில்லையா? இந்த சைட்டுக்கு போய் நம்ப போட்டோவைக் கொடுத்தா நம்பள மாதிரியே இருக்கற ஒலக பெரபலங்கள காட்டுறாங்க! மொகத்தை பாகம்பாகமா பிரிச்சு பொருத்தமானதுகளை அவங்க டேடாபேசுல தேடிக்கொடுக்கறாங்க போல. பதிவுன்னு போட்டா ஒரு தகவல் இருக்கனுங்கறதுக்காக எம்மொகத்தைப்போட்டு தேடுதனுல கிடைச்சவங்களைப் பத்தின குறிப்பையும் அங்கயே இருந்து காப்பியடிச்சு போட்டுட்டேன். (தகவல் சொல்லறாராமாம்!! ) "நல்லவேளை ஆம்பளையா பொறந்தேன்! இந்த அழகோட பொம்பளையா பொறந்திருந்தா என் கதியெல்லாம் என்ன ஆவறது?"ன்னு ஆழ்ந்து சிந்திச்சிருந்த காலமெல்லாம் உண்டு! இப்ப இவங்க கொடுக்கற ரிசல்ட்டுல இருக்கற பொம்பளையாளுங்களை எல்லாம் பார்த்தா அதிர்ச்சி தாங்கலை! நீங்களும் உங்க போட்டோ இருந்தா போட்டுப்பார்த்து உங்களை மாதிரியே இருக்கற (!?) பெரபலங்களை அடையாளம் கண்டுக்கிட்டு கொஞ்சம் "Self வண்டி" ஏறிக்கங்கப்பு! :) Coolio

பன்னேர்கட்டாவும் என் புகைப்படப் பொட்டியும்

Bannerghatta National Park, Karnataka - - 0 0 O O = O O 0 0 - - நல்லாத்தான் படமெடுத்து ஆடிக்கிட்டு இருந்தேன். இப்ப என்பேர்லயும் நாலஞ்சு போலியாம்! ஹிம்... சொந்தப் பேருலயே வெளிய தலகாட்ட முடியலை :( - - 0 0 O O = O O 0 0 - - சொன்னாக் கேளுங்கப்பு... வலைப்பதிவு விவாதம்னா இப்படி ஆளுக்கு ஒரு திசையா முதுகைத் திருப்பிக்கிட்டுத்தான் பேசனும்னு இல்ல! - - 0 0 O O = O O 0 0 - - இன்னைக்கு யாரு எங்க "பொதுமாத்து" வாங்கறாங்கன்னு இன்னும் கண்டுபுடிக்க முடியலையே! எப்படித்தான் ஆபீசுல பொழுத ஓட்டப் போறமோ?! - - 0 0 O O = O O 0 0 - - ஏனுங்க.. நான் சொல்லலை? அந்த 47.89% பின்னுட்டக் கயமைத்தனம் செய்யறவன்னு... அங்க நிக்கறாம் பாருங்க... கொஞ்சம் நல்லா "கண்"காணியுங்க... - - 0 0 O O = O O 0 0 - - சொன்னா நம்புங்கய்யா! எனக்கு இயற்கையாவே இப்படித்தான். வலைப்பதிவு வெவாதத்துல கெடைச்ச சூடெல்லாம் இல்லை... - - 0 0 O O = O O 0 0 - - ஹிம்.. எட்டிப்பார்த்தவன் ஏழு வருசம் உள்ள போன கதையா போயிடிச்சே! (நன்றி: வரவணையார் ) வலைல துணுக்குமூட்டை படிக்கறதோட நிறுத்தியிருந்திருக்கனுமோ?! - - 0 0 O O = O O 0 0 - - வலைப்பதிவு

மரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06

'மரணம்' னு தலைப்பு கொடுக்கலாம்னு நினைச்சப்ப நம்ப மக்கா கிட்ட எனக்கு நல்ல மண்டகப்படி உண்டுன்னு நினைச்சேன். ஆனா நீங்க மானாவாரியா பதிவுகளப் போட்டு புல்லரிக்க வைச்சிட்டீங்க! வாங்கய்யா வாங்க! வந்து புடிச்ச படைப்புகளுக்கு உங்க பொன்னான ஓட்டுக்களை அள்ளி விடுங்க! வாக்குப்பதிவுக்கு முன்னாடி போஸ்டரு, கொடி கட்டுன ஜீப்புல மின்னல் வேக ரவுண்டப்பு போறாப்புலையும், பரிச்சைக்கு முன்னாடி ஒடம்புல எந்தெந்த பிட்டுக எங்கெங்க வைச்சிருகோம்னு போட்டு வைச்ச மாஸ்டரு லிஸ்டை ஒரு லுக்கு விட்டுக்கற மாதிரியும் இருக்கட்டும்னுதான் இத ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க 80 பதிவுக... ஒவ்வொன்னுலையும் மிகச்சிறந்த, கதைக்கு அழுத்தம் கொடுக்கற, ஒரு திருப்பம் வைச்சிருக்கற, சொல்ல வந்த உணர்வுகளை அழுத்தமாச் சொன்ன, கண்ணுல தண்ணி வரவைச்ச, வாய்விட்டு சிரிக்க வைச்ச, கொஞ்ச நேரம் "ங்கே" ன்னு விட்டேத்தியா யோசிக்க வைச்ச, எனக்குப் பிடிச்ச வரிகளை மட்டும் இங்க கொடுத்திருக்கறேன்! எல்லாத்தையும் ஒரு எட்டு பார்த்துட்டு பிடிச்ச அத்தனை ஆக்கங்களுக்கும் குத்தித் தள்ளிருங்க! படைப்பாளிகளுக்கு, வாக்களிக்கற இடத்துல மறக்காம உங

இதெல்லாம் ஆவறதில்லைங்க...

தேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க! அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன்! அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை! ஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்

பெங்களூர் வலைப்பதிவாளர்கள்/எழுத்தாளர்கள் சந்திப்பு!!!

வலைப்பதிவர் சமுதாயமே! வலைத்தமிழின் வாழ்விடங்களே!! அலைகடலென திரண்டு வாரீர்!! நேரங்காலம் : தேதி 9 ஜூலை ஞாயிறு காலை நேரம் 10 மணிக்கு சந்திக்கும் இடம்: லால்பார்க்கில் மெயின்கேட்டைத் தாண்டி உள்ள மொட்டைப்பாறைக்கு முன்னால் (சொன்னமாதிரியே சூட்கேசுடன் வந்துடுங்க! கோட்வேர்டு: தீப்பெட்டி-கருப்பட்டி-வெறும்பொட்டி ) நிகழ்ச்சி நிரல் வரவேற்பு உரை : ஷக்திப்ரபா தமிழ் வணக்கம் பாடல் : ஷைலஜா வந்தவர்களைப் பற்றிய அறிமுகம் : அவரவர்களே! விருந்தினர் அறிமுகம் : ஐய்யப்பன் (Jeeves) விருந்தினர் உரை : திலகபாமா வலைப்பதிவாளர்கள் உரை : அனைவரும் தங்கள் வலை அனுபவங்களைப் பற்றி பேசுதல் உருப்படியான ஒரு செயல் திட்டம் : தேடல் எனும் தலைப்பிலும் பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றினைப் பற்றியும் 3 நிமிடக் கவிதைகள் எழுதிக் கொண்டுவந்து விருப்பமுள்ளோர் வாசிக்கலாம் மதிய உணவு : ( ஷைலஜாவின் கைவண்ணத்தில் ) 1 மணிக்கு (கண்டிப்பாக 1 மணிக்கு மட்டுமே! அதுவும் கோட்வேர்டு சரியாச் சொன்னவங்களுக்கு மட்டுமே! :) ) அப்பறம்?! : அரட்டை அல்லது விளையாட்டு (தூங்கப்படாது ஆமா!!) நன்றிஉரை: நண்பர்களில் யாராவது நடுநடுவுல கொறிக்கறதுக்கு அவங்கவங்க ஏதாவது வாங்கிக

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்பு

ஜீலை' 06 மாத போட்டிக்கான தலைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய தேன்கூடு - தமிழோவியத்திற்கு என் நன்றிகள். போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூலை 20, 2006 ஜூலை 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஜூலை 26 அறிவிக்கப்படும். - - = = 0 0 O 0 0 = = - - தேன்கூடு - தமிழோவியம் July 2006 போட்டியின் தலைப்பு மரணம்! இந்த உலகத்தில் இருப்பவருக்கு இதுதான் முற்றுப்புள்ளி. அடுத்து என்னவென்று எவரும் அறிந்ததில்லை. அறிந்தவர் இருப்பதில்லை. மரணம் ஏற்படுத்தும் விளைவுகள் அலாதியானவை. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் செய்கிறது. எவ்வளவு கெட்டவனாக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவன் இறப்பில் சில நல்லவைகளை பேசத்தான் செய்கிறோம். அருகாமை மரணங்கள் சில மணித்துளிகளுக்காவது நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவத்தான் செய்கின்றன. சுயநலக் கணக்குகள் அழுத முகங்களின் ஊடே அவரவர் அடிமனதில் ஓடத்தான் செய்கிறது. சற்றே துணிந்த மனமிருப்பின்

முதன்முதலாய் முதல் பரிசு! :)

ம க்களே! ரெண்டரைக்கழுத வயசுல என்னைக்கும் எதுலயும் எனக்கு முதலிடம் கெடைச்சதே கிடையாது! ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் சசிகலாவும், சுமதியும் மொத ரெண்டு ரேங்க்கு எடுத்ததால எனக்கு எப்பவும் மூணாவது இடம்தான்! ( அன்னைக்கும் பொம்பளையாளுங்க தான் நமக்குப் போட்டி! :) )அதுக்கப்பறம் வாழ்க்கைல கொஞ்சம் வெவரமாயிட்டதால கடைசி மூணு ரேங்க்குக்கு போட்டிக்குப் போயிட்டேன்! வெளையாட்டுலக்கூட மொதலிடத்துக்கு என்னைக்கும் முயற்சி செஞ்சது கிடையாது. கிரிக்கெட்டுன்னா பேட்ஸ்மேன் மூஞ்சிக்கு நேரா ரெண்டு பவுண்சரு போட்டுட்டா திருப்தியாகிருவேன். டிடி, ஷட்டில்ல கூட பளிச்சுன்னு ஒரு ஸ்மேஷ் அடிச்சிட்டா கோப்பை வாங்குன திருப்த்தி வந்துரும். கல்லூரி கூத்துக் கட்டறதுலக்கூட நமக்கு நடுவுல கலாய்க்கற போஸ்ட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும்! ஸ்டேஜ் ஏறி வாங்குன துப்புக்களை விட கீழ நின்னு விட்ட சலம்பல்களுக்கு கிடைச்ச விழுப்புண்கள்தான் அதிகம்! :) இதைவிட மகிழ்ச்சி மொத ஆளாய் நிக்கறப்ப கெடைக்குங்கறது இன்னைக்கு தெரியுது. நான் ஒரு Short term heppiness disorder person :) ப்ரகாஷ் பதிவுல மதி நான்கூட எழுதலாம்னு சொன்னப்ப அக்கா வெளையாட்டுக்குச் சொ

மணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்

போ ன வாரம் எங்கூட்டம்மாவோட தாத்தா ஊரான மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில விசேசங்க! 27 வருசம் கழிச்சு ஊர்ப்பண்டிகை கொண்டாடுனாங்க. இத்தனை வருசமா ஊருக்குள்ள யாராச்சும் டிக்கெட்டு வாங்கிட்டா அந்த வருசம் பண்டிகை கேன்சல் ஆகிருமாம்! இப்படியே போனா பண்டிகையே நடத்தமுடியாதுன்னு வருத்தமாகி பெருசுங்க எல்லாம் குறிகேட்டதுல "இந்த வருசம் நடத்துங்கப்பு"ன்னு சாமி வாக்கு கொடுத்தாப்புல. இதுக்குத்தான் என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தாங்க. யாருங்க அங்க புர்ர்ருன்னு சிரிக்கறது? சும்மா மாப்ளை கெத்து காட்டலாம்னா நம்பமாட்டீங்களே?! மக்கா பண்டிகைய 5 நாளு கோலாகலமா நடத்தி கலக்கிட்டாங்க. தெனம் நைட்டு சினிமா, கூத்து, ஆடல் பாடல்னு அசத்தல்தான். அங்க நான் எடுத்த படங்கள்ல நல்லதா நாலு இங்க போடலாம்னு எண்ணம். கடைசி வரைக்கும் போராடியும் ப்ளாகருசாமி படங்களை ஏத்த அருள் பாலிக்கலை! எனவே, பிடிச்ச படங்களை லோக்கலா சேமிச்சி இன்னும் தெளிவா பெருசா பாருங்கப்பு!! கேமரா Sony DSC-H1. மத்தபடி ஏதாவது அதிகப்படி தகவலா ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? ஃபில்டரு போட்டயான்னு யாராவது கேட்டிங்கன்னா... ஹிஹி... 1.