முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெரீயம்மா

பெரீயம்மா என்னை முதன்முதலில் கிணத்துக்குள் தூக்கிப்போட்டபோது  எனக்கு பதினோரு வயது. திரும்பி நில்லுடா சுரபுட்டையை முதுகுல கட்டிவிடறேன்னு சொன்னதை நம்பி வாயெல்லாம் பல்லாக தண்ணீரில் இருந்து பத்தடிக்கு மேலிருக்கும் பம்ப்பு செட்டு மேடையில் நின்றிருந்தேன். எல்லா பயகளும் ஏற்கனவே உள்ளே குதித்து கும்மாளமிட ஆரம்பிச்சிருந்ததும் முந்தின நாள் இதே சுரபுட்டையை கட்டிக்கொண்டு நாளெல்லாம் கடைசிப்படியை இறுகப் பிடித்துக்கொண்டு காலை உதைத்து பழகிக்கொண்டிருந்ததும் சேர்த்து உடம்பில் ஒரு கிளுகிளுப்பு கூடிய விரைப்பு ஏறி எப்படா தண்ணியை தொடுவோம்னு எனக்கும் உந்திக்கொண்டே இருந்தது. அப்படியே கிணற்றின் கடைசி படிவரைக்கும் போய் தண்ணில கால் விட்டாப்ல ஒக்காந்துக்கிடலாங்கற நினைப்பில் தான் இருந்தேன். ஆனால் ஒரே ஒரு நொடி காற்றில் கைகால்களை துளாவியது நினைவிருக்கிறது. அப்பறம் யம்மேன்னு தொண்டை கமற கத்தியது. கத்தி முடிக்குமுன்னே பப்பரப்பேனு விழுந்தது, வெயிலின் கதிர்கள் பாய்ச்சிய கிணற்றின் அடர்பாசி கொடுத்த கரும்பச்சை வெளுப்பு வெளிச்சத்தில் மூக்கில் வாயில் தண்ணீரேற உள்ளாக்க அஞ்சடி போய் மேல வந்தது, கண்களுக்கு முன் கலங்கிய உருவமாய்

உயிர்த்தலம் - வாசிப்பனுபவம்

இந்தியாவுக்கு வந்து திரும்பிய இரண்டு பயணங்களில் என் ஒரு 23 கிலோ பெட்டியானது தமிழ் புத்தகங்கள் கட்டிய அட்டைப்பெட்டியாக இருந்தது. அறுக்கமாட்டாதவன் பொச்சுல அம்பத்தெட்டு அருவா மாதிரி தடித்தடி புத்தகங்கள் எல்லாம் வாங்கியாந்து அடுக்கி வைச்சுக்கும் ஆசைக்குப்பின்னால் ஊரோடு உறவாடும் ஒரு உள் நோக்கம் உண்டு. பின்ன நீங்களும் வருசத்துக்கு ஒருக்கா டிசம்பர்ல அதானே செய்யறீங்க? :) இந்த அருவாள்களில் கொற்றவை, கொற்கை எல்லாம் கூட உண்டு. அதுக்கெல்லாம் யாராச்சும் பத்தாயிரம் பக்கத்தில் விளக்கவுரை எழுதுவாங்கன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்ததும் அதையும் வாங்கிப் பக்கத்தில் அடுக்கிறனும். என் வாசிப்பு தண்டி அவ்வளவுதான் :)  இந்த முறை உறவினர் ஒருவர் சென்னையில் இருந்து வந்தாப்ல. 23 கிலோ கேட்டால் துப்புவாங்க வேண்டியிருக்கும் என்பதால் ரெண்டே ரெண்டு புத்தகம் மட்டும் கேட்டேன். தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகளும், உயிர்த்தலமும். இரண்டாவது வந்தது. முதலாவது வழக்கமாய் வாங்கும் புக்லேண்டில் இல்லை. ( அந்தக் கடை மேனேஜர் ( அ ஓனர்? ) மிக நல்லவர். கூடவே வந்து எல்லாப் புத்தகங்கள் பற்றிய அபிப்ராயங்களையும் சொல்லி வாங்க வைச்சிரு