முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நொந்தகுமாரன் வீடு திரும்புதல் (அ) நாற்பதின் நாய் குணங்கள் (அ) சீச்சீ இப்பழம் (அ) சூரமொக்கை (அ)...

உயிப்புடன் இருப்பதற்கும் உழைத்துக்கொண்டே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குங்கப்பு. உழைப்பது பிழைப்பை ஓட்டவே என்றாலும் அதுவே 24 மணிநேரங்களை திண்ணும் போது உயிர்ப்புடன் இருப்பது என்பது பெருங்கனவு. கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கொரு குழப்பம் வந்தது. நம்ப பீல்டுல எல்லாரும் இந்த ஓட்டம் ஓடறாங்களே. யாராச்சும் யாரையாச்சும் ஏறி மிதிச்சு முந்திக்கிட்டே இருக்காங்களே.. நான் அந்த இயக்கத்துல தான் இருக்கனா? இல்ல தன்முனைப்பே இல்லாம இருப்பதைக் கொண்டு மகிழ்ந்து அரைவேக்காடாக பொங்கித் தின்று வாழ்க்கையை ஓட்டறனான்னு. சரி இந்த எலி ரேஸ்ல நாமும் ஒரு தடவை ஓடித்தான் பார்ப்போம். பிடித்தால் அது இயல்பு. இல்லைன்னா முயற்சி செய்யலைங்கற குற்ற உணர்வாவது இல்லாம இருக்குமேன்னு முடிவு செஞ்சு தலை தெறிக்க ஓடுனேன் பாருங்க ஒரு ஓட்டம். சுத்தி என்ன நடக்குதுன்னு தெளியறதுக்குள்ள மூணு வருசம் முடிஞ்சுருச்சு! இப்ப கண்ணை முழிச்சு பார்த்தா பொருளா பதவியா சிலது கெடைச்சிருக்கு. ஆனா அதுல ஓடுனத்துக்கான அர்த்தம்னு சொல்லிக்கிட பர்சனலா ஒன்னுமே இல்லை. இருக்கும் திறமைக்கும் தண்டிக்கும் ஆன்மாவை கலந்தடிக்கற மாதிரி ஒன்னு செஞ்சுட்டோம்னு சொல