செவ்வாய், மே 13, 2008

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) )

தருமபுரிங்க...

அது மாவட்டம்ப்பா! தருமபுரில எங்க?

அங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு!

பாலக்காடா? கோடா? சரி...பாலக்கோட்டுல?!

பக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி...

அடப்பாவி! அங்க இருந்து?!

வடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்!

எங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன்! :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்கறதில்லை! ) ஈரல் ரத்த வருவலும் தலைக்கறி சோறும் சாமிக்கு படையலு. ஆட்டு பிரியாணி, கோழி வருவலு, ஜவ்வரிசி பாயாசம்.. இதான் விருந்து!

எங்கூட்டு விசேசத்தை லைட்டா உங்ககிட்ட பீத்திக்கறதுக்காக எடுத்த படங்களில் சில இங்கே..
முனியப்பன் & ப்ரண்ட்ஸ்...ஆதி தமிழன் ஆண்டவனான்... மீதி தமிழன் அடிமைகளானான்...விருந்துக்கு வருகை புரிந்த வாழையிலைக...சிறப்பாவது? பொருளாதார மண்டலமாவது? Outsourcing strictly not Allowed!ச்ச்சும்மா! எங்க முனியப்பனுக்கு ஒரு பில்ட்டப்பு படம்!ரா. பார்த்திபனின் அடுத்த 'படம்'!என்ன! லுக்கா?! 'மேல' வர்றாமையா போயிருவீங்க? அங்கன வைச்சுக்கலாம் பஞ்சாயத்த...
மொட்டைக்கு முன்னான பூவிழியின் போஸு...கெடாய சாச்சுட்டம்ல..விடு பாப்பா! தொடைக்கறி கடிக்கயில ஆட்டோட வலியெல்லாம் மறந்துரும்!முனியப்பனின் ஆதிகால பூசாரி ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகத்குரு மாதப்பன் ஸ்வாமிகள்! (பின்ன? எங்கூரு சாமியாருன்னா மட்டும் ஒரு கெத்து வேணாமா?! )கதிரெழிலன் S/O இளவஞ்சி: இவனுங்களை நம்பி தலைய கொடுக்கலாமா? இல்ல.. எங்கப்பன் அவந்தலைமாதிரியே மாத்தறதுக்கு ஏதாச்சும் சதித்திட்டம் தீட்டுதானா?!பாரதிநாதனின் மொட்டைக்கு முன்னான மருண்ட பார்வை!இன்னாள் மொட்டையை அவதானிக்கும் முன்னாள் மொட்டை!காட்டுப்பயக.. வர்றானுக... ஈரல்கறியும் தலைக்கறிசோறும் படையல் வைக்கறானுவ... ஆனா பல்லு வெளக்க ஒரு கோபால் பல்பொடி வெக்கமாட்றானுவ...ஓஹோ.. காதுகுத்தயில இப்பிடித்தேன் அழனுமா?!குத்தும் காது குழந்தைப்பயலுதுன்னாலும் வலி என்னவோ தாய்மாமனுக்கும் சேத்துத்தான்..அப்பறம்?! கடைசியா என்ன நடந்ததா? மாரண்டஹள்ளி பாய் பிரியாணி விருந்துதான்...மாமன் மச்சானுங்க எல்லாம் வந்து பிரியாணிய பட்டைய கெளப்புங்க... அப்படியே அஞ்சோ பத்தோ மொய்யெழுதாமயா போயிருவீக? :)