ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2007

Edinburgh Festival Cavalcade 2007 & என் புகைப்படப் பொட்டி

எடின்பரோ நகரத்தின் கோடைக்கால விழா ஆரம்ப நிகழ்சியான காவல்கேட்' 07 இன்றைய ஞாயிறு மதியம் நடந்தேறியது. கலைகளின் நாடு பாரீஸ் தான்! அங்க வருசம் 365 நாளும் விழாதான். அவிங்க ஊரை அடிச்சுக்க முடியாது. இருந்தாலும் The Festival City என அழைக்கப்படும் எடின்பரோவில் கோடைக்காலம் 3 மாதங்களும் விழா நாட்கள் தான். ஊருல தெனைக்கும் ஏதாச்சும் ஆட்டம், பாட்டம், நாடகம், கண்காட்சின்னு பல சங்கதிங்க நடந்துக்கிட்டே இருக்கும். இதுக்குன்னே 3 மாசத்துக்கு மட்டும் வெளியாளுங்க இங்கன டேரா போடுறாய்ங்க. கடைசிநாளு வாணவேடிக்கை. எடின்பரோ நகரத்து கோட்டை முழுசும் வெடிகளா வைச்சு இசைக்கற இசைக்கேற்ப அவைகளை கலர் கலரா வெடிக்க வைச்சு பட்டைய கெளப்பிருவாய்ங்க! இசைக்கேற்ப நடனமாடும் நீர்காட்சியதான் பார்த்திருந்தேன். போன வருசம் இசைக்கேற்ப நடக்கும் வாணவேடிக்கைய வாயைப் பொளந்துக்கிட்டு தான் பார்த்தேன்.

ஊருல எங்க பார்த்தாலும் கலைக்கூத்தா நடக்குது. சின்ன வயசுல எப்படியாவது பிற்காலத்துல கூத்தாடியாதான் வரணும்னு குறிக்கோளெல்லாம் இருந்தது. "ஆசை இருக்குது தாசில் செய்ய... அதிர்ஷ்டம் இருக்குது கழுத மேய்க்க.."ங்கற மாதிரி பொட்டி தட்டற வேலைதான் அமைஞ்சது. இங்க இவிங்க மேடை நாடகம், இசை நாடகம், நடன நாடகம்னு பலவாரியா பிரிச்சுக்கட்டி படம் போடறதை பார்த்தா பொகயாத்தான் இருக்கு! ம்ம்ம்.. உள்ளூருல இருந்தப்பவே கூரையேறி கோழி புடிக்காதவன், இங்கவந்தா வானம் ஏறி வைகுண்டம் போகப் போறேன்?! இருந்தாலும் சொல்லறேன்! என்னைக்காவது ஒரு நாளு கோடம்பாக்கம் என்பேரை சொல்லற வரைக்கும் ஓயமாட்டேன்! எனக்குன்னு ஒரு டைரடக்டரு ஏதாவது ஒரு நல்ல காமெடி ரோல் வைச்சுக்கிட்டு காத்துக்கிட்டு இருக்காமலா போயிறப் போறாங்க?! :)

சரி! விட்ட கதைக்கு வருவோம்! இன்னைக்கு பேரணில இனி வரப்போகிற நாட்கள்ல நடக்கப்போற நிகழ்ச்சிகளோட ட்ரூப்புன்ங்க, சோசிசல் சர்வீஸ்காரவுங்க, சைனா, கொரியா, இந்தியா, வளைகுடா, அராபியா இப்படியான பலதரப்பட்ட நாட்டுகாரவுங்க, எல்லாம் பேரணி போனாங்க. நடத்தப்போற நிகழ்ச்சிக்கு முன்னோட்டம் மாதிரி பேரணிலயெ கொஞ்ச நேரம் மீஜிக்கை போட்டு ஆட்டம் கட்டுனாய்ங்க. அடடா! என்னா ஆட்டம்! தாரை தப்பட்டைகள் பட்டைய கிளப்ப, பைப்புகள் பிளிர தூள் கெளப்பிட்டாய்ங்க! போனவங்க சும்மாவா போனாங்க? கூடவே, என் கலைத்தாகம் எனும் நெருப்புல எண்ணையுமில்ல ஊத்திப்புட்டு போனாங்க! அதன் விளைவுதான் மேறபடி புலம்பல் பத்தி.

நம்மால முடிஞ்சது இதுதான்னு எடுத்த சில படங்கள் கீழே! அண்ணன் ஜாலிஜம்பரின் வேண்டுகோளுக்கு இணங்க சில படங்கள் விசேட "கவனத்துடன்" எடுக்கப்பட்டுள்ளன! :) படம் புடிக்க தோதா இடம் புடிக்கறதுக்கே பெருமாடாகிருச்சு! மழை பெய்யுதே.. எவன் நேரங்காலமா வருவான்னு மெதுவா ஆடியசைஞ்சு போய்ச்சேர்ந்தா அங்க பேய்க்கூட்டம்! இருந்தாலும் இதுக்கெல்லாம் அசருவமா?! நம்ப மன்னன் பட ஃபார்முலாவ எடுத்துவிட்டு கெடைச்ச கேப்புல இடிச்சு, தினிஞ்சு, தள்ளி ஒரு மார்க்கமா அலப்பரைய கொடுத்து மொதவரிசைக்கு போறதுக்குள்ள சக்கையாகிட்டேன்! எல்லா படங்களும் நல்லா வரலை. இருந்தாலும் உள்ள இருக்கற மேட்டருதான் முக்கியம்னு கொஞ்சமா நகாசு வேலையெல்லாம் செஞ்சு போட்டிருக்கேன். கண்டுக்காதிக!எடின்பரோ விழா தொடக்கநாள் பேரணி பற்றிய தகவல்களுக்கு

எடின்பரோ விழா பற்றிய விக்கிபீடியா

கோடைக்கால விழா பற்றிய முழுமையான மேலதிக தகவல்களுக்கு