முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காரைக்குடியில் இருந்து சில படங்கள்

போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு... சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை. ”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர் இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி

தீபாவளியின் பின்னிரவில் ’பொங்கல்’

தெ ருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு! தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்! நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக

குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி

மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன் , ராம்கோ வினோத் , பிரமிட் வினோத் , கோகுல், கவுஜர் லக்குவனார் , நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போ

நீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்

போனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்!”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது! ட்ரிப்பு செம ட்ரில்லு :) நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :) படை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு! நகரமும் ( ம