முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என் பேச்சுமொழியும் பிழைப்புமொ(வ)ழியும்

என் தாய்மொழி தமிழ். அதாவது என் நினைவுதெரிந்த நாளில் இருந்து எங்கள் வீட்டில் அனைவரும் பேசும் மொழி.  பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் தமிழ்வழிக்கல்வி. அதிலும் ஒன்பதாம் வகுப்புவரைக்கும் அரசுப்பள்ளிதான். ஆங்கிலம் கல்லூரி முடியும் வரைக்குமே கோர்வையாக பேசவராது. தக்கிமுக்கி முதல் ஆண்டு எழுதிப்பழகினாலும் கடைசிவருடம் முடிக்கையில் 35 மதிப்பெண்கள் வாங்கி தேறும் அளவுக்காவது கோர்வையாக வந்திருந்தது.  முதல்வகுப்பில் தேறினாலும் முதலில் கிடைத்தது விற்பனை பிரதிநிதியாக மருத்துவ உபகரணங்கள் விற்கும் வேலைதான். கூச்சமும் பிரத்தியாரிடம் பழகுவதற்கும் கூச்சம் சிறிதளவுக்கேனும் நீக்கியது இந்த வேலைதான்.  இந்த வேலையில் நான்கு மாநிலங்களுக்குள் இரண்டுவருடங்கள் இரவுபகலாக அலைந்திருக்கிறேன். நெல்லூர் மங்களூர் திருநெல்வேலி கொச்சின் நகரங்களில் நான் தமிழும் உடைந்த ஆங்கிலமும் கொண்டுதான் நிறைய உபகரணங்களை பலமாநில மருத்துவர்களிடம் விற்றிருக்கிறேன். எந்த இடத்திலும் மொழிப்பிரச்சனையால் பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டதில்லை. சில வேடிக்கையான குழப்பங்கள் மட்டுமே நடந்ததுண்டு ( கேரளாவில் எடப்பால் செல்வதற்கு பதிலாக எடப்