முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதன்முதலாய் முதல் பரிசு! :)

Photobucket - Video and Image Hostingக்களே!

ரெண்டரைக்கழுத வயசுல என்னைக்கும் எதுலயும் எனக்கு முதலிடம் கெடைச்சதே கிடையாது! ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் சசிகலாவும், சுமதியும் மொத ரெண்டு ரேங்க்கு எடுத்ததால எனக்கு எப்பவும் மூணாவது இடம்தான்! ( அன்னைக்கும் பொம்பளையாளுங்க தான் நமக்குப் போட்டி! :) )அதுக்கப்பறம் வாழ்க்கைல கொஞ்சம் வெவரமாயிட்டதால கடைசி மூணு ரேங்க்குக்கு போட்டிக்குப் போயிட்டேன்! வெளையாட்டுலக்கூட மொதலிடத்துக்கு என்னைக்கும் முயற்சி செஞ்சது கிடையாது. கிரிக்கெட்டுன்னா பேட்ஸ்மேன் மூஞ்சிக்கு நேரா ரெண்டு பவுண்சரு போட்டுட்டா திருப்தியாகிருவேன். டிடி, ஷட்டில்ல கூட பளிச்சுன்னு ஒரு ஸ்மேஷ் அடிச்சிட்டா கோப்பை வாங்குன திருப்த்தி வந்துரும். கல்லூரி கூத்துக் கட்டறதுலக்கூட நமக்கு நடுவுல கலாய்க்கற போஸ்ட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும்! ஸ்டேஜ் ஏறி வாங்குன துப்புக்களை விட கீழ நின்னு விட்ட சலம்பல்களுக்கு கிடைச்ச விழுப்புண்கள்தான் அதிகம்! :) இதைவிட மகிழ்ச்சி மொத ஆளாய் நிக்கறப்ப கெடைக்குங்கறது இன்னைக்கு தெரியுது. நான் ஒரு Short term heppiness disorder person :)

ப்ரகாஷ் பதிவுல மதி நான்கூட எழுதலாம்னு சொன்னப்ப அக்கா வெளையாட்டுக்குச் சொல்லறாங்கன்னு சீரியசா எடுத்துக்கலை! கடந்த வார நட்சத்திரமான $ல்வன் பதிவுல எங்க கல்லூரி பக்கத்துல இருந்த காவல்நிலையத்தைப் பத்தி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு, உஷாவோட பதிவுல நிலா போட்டிக்கான பெனாத்தலாரின் வரையறை எனச்சொன்ன

இத்தருணம் வலியால் ஏற்பட்டிருக்கலாம், சந்தர்ப்பங்களால் ஏற்பட்டிருக்கலாம், கலவரங்களால் ஏற்பட்டிருக்கலாம், அறிவுரைகளால் ஏற்பட்டிருக்கலாம், காதலால் ஏற்பட்டிருக்கலாம் - இது ஒரு Personal நிகழ்வு
என்பதைப்படித்த போது தோன்றியதுதான் விட்டில் பூச்சிகள்!

உங்க புண்ணியத்துல இன்னைக்கு தேன்கூடு + தமிழோவியம் (ஜூன் 2006 - வளர் சிதை மாற்றம்) போட்டிக்காக எழுதப்பட்ட "விட்டில் பூச்சிகள்" சிறுகதைக்கு மொதல் பரிசு!

June 06 Thenkoodu TamilOviam Contest First Prize Winnerபோட்டி முடிவுகள் இங்கே!

இன்றைய வலைப்பதிவராக தேன்கூட்டில் இன்றைக்கு நான்! இதுவும் சந்தோசமா இருக்குங்க! ( அண்ணாத்த சுஜாதா சொன்ன 15 நிமிச லைம்லைட்டு இதுதானா!? ;) )

இன்றைய வலைப்பதிவர்

இலக்கியம், கட்டுரைகள், கதைகள், நையாண்டி, மலரும் நினைவுகள் என்று பலவாறாக எழுதி கலக்கி வரும் இளவஞ்சி், கோவையைச் சேர்ந்தவர். பெங்களூரிலிருந்து வலை பதிந்து வருகிறார். நீளமான வாக்கியங்களுக்குப் பிரபலமானவர்! :-)


கவிதைகள் புனைபவர். கவிதைகளாகட்டும் கதைகள் கட்டுரைகளாகட்டும் ரசனையுடன் படைப்பவர். நெஞ்சில் ஆழமாகத் தைக்கும் வண்ணம், ஆத்மார்த்தமாக எழுதுவதோடு, ஒவ்வொரு இடுகையுடன் தொடர்புடைய புகைப்படங்களையோ ஓவியங்களையோ இணைப்பது இவரது சிறப்பு.


கல்யாணம் ஆகப்போகிற ஆண்களுக்கு என்ற இவரது தொடர் மிகவும் ரசிக்கப்பட்ட ஒன்று. இந்தத் தொடரில் இதுவரை ஆறு பதிவுகள் வந்திருக்கின்றன. கல்யாணம் ஆனவர்களும் படித்துத் தெரிந்து கொள்ள விடயங்கள் நிறைய.


இளவஞ்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள.. இந்த இடுகை கட்டாயம் உதவும்!


தேன்கூடு தமிழோவியம் ஜூன் மாத வலைப்பதிவுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ள இளவஞ்சி, ஒராண்டுக்கும் மேலாகத் தமிழ்ப் பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வருபவர். வலைப்பதிவர்களிடையே பிரபலமானவர். தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. படிக்க:
தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :)


நன்றி: #வாசகர் பரிந்துரை (26/06/06)வெற்றி பெற்ற உஷாவுக்கும் , நிலாவுக்கும் , ராசாவுக்கும் மற்றும் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

போட்டிக்கான விமர்சனங்களை முன்வைத்த பெனாத்தலாருக்கும் , மூண்றாவதுகண் நண்பர்களுக்கும் உங்கள் அனைவரின் சார்பில் பாராட்டுகள் உரித்தாகுக!

நிறை குறைகளை எடுத்துச்சொல்லியும், வாக்களித்தும் ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும், என் நன்றிகள்!

(மேலே உள்ள படம்: மணப்பாறை - குரும்பட்டி சிறார்கள் :) )

கருத்துகள்

 1. மேலும் மேலும் பரிசுகளை குவிக்க வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள் இளவஞ்சி... இனி எப்போதும் வெற்றிமுகம் தான் உங்களுக்கு....

  பதிலளிநீக்கு
 3. வாத்தியார், மறுபடி மறுபடி வாழ்த்துக்கள் :)

  ஏதோ ட்ரீட் அது இதுன்னு பேசிகிட்டு இருக்காங்க.. அவசரப்படாதீங்க.. நானும் வந்துர்றேன் அப்புறம் போவோம் :)

  பதிலளிநீக்கு
 4. இளவஞ்சி, குலதெய்வத்த கும்பிட்டு வந்தீங்களா, முதல், இரண்டு இடத்தைப்பிடிச்சிக்கிட்ட்டிருந்த பொம்பளை பிள்ளைங்களை இரண்டு மூணுக்கு ஆத்தா தள்ளிடுச்சு :-)
  இளவஞ்சி, வாழ்த்துக்கள். எனக்கு அதே நாலரை கழுதை வயதில் கிடைத்த முதலாவதாய் கிடைத்த பரிசு, இரண்டாவது பரிசு இது :-)
  .

  பதிலளிநீக்கு
 5. தேன்கூடு சொன்னதுல :
  //நீளமான வாக்கியங்களுக்குப் பிரபலமானவர்! :-) //
  :))))))))) இப்படி சின்ன வாக்கியத்துல சொல்லிட்டாங்க!!!

  //ஒவ்வொரு இடுகையுடன் தொடர்புடைய புகைப்படங்களையோ ஓவியங்களையோ இணைப்பது இவரது சிறப்பு.
  //
  கரெக்டு கரெக்டு :)

  அதுக்கு ஒரு முறை தனியா வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கள் தலை.சிறப்பாசிரியராகவும் கலக்குங்கள்

  பதிலளிநீக்கு
 7. முதல் பரிசிற்குறிய உங்கள் ஆக்கம் அந்த அங்கீகாரம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்! இனி தமிழோவியத்திலும் கலக்குங்க!

  பதிலளிநீக்கு
 8. ம்ம்.. நல்லாயிருங்க..

  (புகை இல்லைன்னு சொன்னா நம்பனும்) :)

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துகள் இளவஞ்சி. டிரீட்டேஏஏஏஏஏஏஏஏஏஏய்.

  நான் நெனைக்கிறேன். நீங்க ஒங்க பேர்ல எழுதாம இளவஞ்சீன்னு பொம்பளப் புள்ள பேர்ல எழுதுனதாலதான் பரிசு கிடைச்சிருக்குன்னு ஹி ஹி

  பதிலளிநீக்கு
 10. வெற்றிமீது வெற்றி வந்து உன்னைச்சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் 'என்னை' சேரும்.

  ட்ரீட், நான் பெங்களுர் வரும்போது கொடுத்தாப் போதும்:-)))

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்துக்கள் இளவஞ்சி........
  முதல் முறையாக பெற்ற முதல் பரிசு இனி தொடர்ந்து கிடைக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. அடிச்சி ஆடுங்க தல...மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்!!!

  பதிலளிநீக்கு
 14. தல வாழ்த்துக்கள்.. உங்க இயல்பான எழுத்துக்கு இன்னொரு அங்கீகாரம்.... :-)

  பதிலளிநீக்கு
 15. எத்தனை தடவை சொல்றது...ரொம்பவே நல்லா எழுதிறீங்கன்னு...prove ஆயிடுச்சில்ல..

  ஆனா அதனால நிறைய எழுதுங்கன்னு சொன்னா மட்டும் கேக்கிறதேயில்ல...

  குடத்துக்குள்ளேயே இருக்கவும் வேணாமே...எப்போ மல உச்சிக்கு போகப் போறீங்க?

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள் இளவஞ்சி!
  (2 இடத்துல வாழ்த்து சொல்லியாச்சுங்க.. ட்ரீட் அப்போ மறந்துடாதீங்க:))

  பதிலளிநீக்கு
 17. வாத்தி. வாழ்த்துகள்..

  உங்களின் கதையும், கொங்குராசாவின் அனுபபகிர்வும்தான் என் முன்னால் இருந்தது. ஆனா முதலிலே கொங்குவின் பதிவை மிகவும் ரசித்து படித்ததால் அவருக்கு போட்டேன் ஓட்டு. **(நாம போடாம போற ஒரு ஓட்டுனால முதல் இடம் குறையாதுங்கிற ஒரு அசட்டு நம்பிக்கையிலதான் :-) )**

  தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள் இளவஞ்சி.

  உங்க கதையைப் படிச்சதும் notepadல எழுதி வச்ச கமெண்ட் கீழே. சில தவிர்க்க முடியாத காரணங்களால்(Boss வச்ச ஆப்பினால்னு படிங்க) அப்போ உங்க பதிவுல சொல்ல முடியலை...இப்பவாச்சும் சொல்லிக்கிறேன்.

  இளவஞ்சி,
  அருமைங்க. கடைசியா ஒரு மெசேஜ் சொல்லியிருக்கீங்க பாருங்க...அங்கே தான் நிக்கிறீங்க. கதையோட முதல் பாதியில், என்னடா இவ்வளவு abusesஐ ஓப்பனா எழுதியிருக்காரேன்னு யோசிச்சேன். ஆனா கதையின் output எல்லாத்தயும் தூக்கி சாப்பிட்டிருச்சு.

  பதிலளிநீக்கு
 19. மீண்டும் என் வாழ்த்துகள்!
  தகுதிக்குக் கிடைத்த பரிசு!

  இப்போதாவது இரு பெண்டிர் பின்னால் வராமல், முன்னுக்கு வந்தீர்களே!
  :))
  ஜோக்குங்க!
  கரண்டியைத் தூக்கிக்கிட்டு யாரும் வந்துராதீங்க!

  பதிலளிநீக்கு
 20. கோவி.கண்ணன், லக்கிலுக், நன்மனம், செல்வன், மணியன், நாகை சிவா, குமரன் எண்ணம், முத்து, சுதர்சன் கோபால், தேவ், யாத்ரிகன், சிபியார், டுபுக்கு, அருள்குமார், இகோ, முத்துகுமரன், பாலா, கைப்புள்ள... ( அடடா! சீக்கிரம் அரசியல்வாதி ஆகிருவேன் போல! :) )

  வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்!!!

  ****

  பொன்ஸ்,

  // நானும் வந்துர்றேன் அப்புறம் போவோம் :) /

  உங்க யானை ஓடற ஸ்பீடுக்கு நீங்க நாளைக்கே வந்துறலாம்! :) சீக்கிரம் வாங்க!

  ****
  உஷா,

  // எனக்கு அதே நாலரை கழுதை வயதில் கிடைத்த முதலாவதாய் கிடைத்த பரிசு, இரண்டாவது பரிசு இது :-) // :)))

  ****
  ராசா, நமக்குள்ள என்ன?! :))) நம்பிட்டேன்!

  ****
  ராகவன்,

  // இளவஞ்சீன்னு பொம்பளப் புள்ள பேர்ல // இளவஞ்சி ஆம்பளைப்பேருங்க! நான் ஆம்பளைன்னு நீங்க நம்புனா! :)))

  பதிலளிநீக்கு
 21. கலக்கீட்டீங்க!
  வாழ்த்துக்கள்!
  யோகன் பாரிஸ்

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துகள் + வாழ்த்துகள் இளவஞ்சி.

  பதிலளிநீக்கு
 23. வாழ்த்துக்கள் இளவஞ்சி

  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 24. இளவஞ்சி,

  உங்களுக்குப் பரிசு கிடைத்ததைப் படித்த பிறகுதான் கதையையே படித்தேன். நன்றாக இருந்தது. கடைசியில் இவ்வளவு அறிவுரை சொல்கிறீர்களே, அப்பாவிடமிருந்து ஏதாவது பஞ்ச் செயல் வரும் என்று எதிர்பார்த்தேன். வாழ்த்துக்கள்.

  அன்புடன்,

  மா சிவகுமார்

  பதிலளிநீக்கு
 25. வாழ்த்துக்கள்... விரைவில் தமிழோவியத்தில் பார்க்கலாம்...

  பதிலளிநீக்கு
 26. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மன்மார்ந்த வாழ்த்துக்கள் இளவஞ்சி!
  -Boo.

  பதிலளிநீக்கு
 27. இரட்டை வாழ்த்துக்கள், டிரீட் எங்க வழக்கம் போல சென்னியான்டவர் கோவில் உடை தேங்காய் தான :-)

  பதிலளிநீக்கு
 28. வாழ்த்துகள் இளவஞ்சி! இன்னும் பல வெற்றிகள் அடைவீர்கள்.

  பதிலளிநீக்கு
 29. வாழ்த்துக்கள் இளவஞ்சி!

  இப்பத்தான் கதையைப் படித்தேன். நெஞ்சில் நிற்கும் அருமையான கதை.

  பி.கு:

  உங்களின் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். இதுதான் நான் போடும் முதல் கமெண்ட். இனி அடிக்கடி உங்கள் வீட்டுப் பக்கம் வருகிறேன்.

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  பதிலளிநீக்கு
 30. அன்பின் இளவஞ்சி.. பாராட்டுக்கள்.. நீங்க வாங்கின பாராட்டையெல்லாம்.. என்னமோ நானே வாங்கின மாதிரி படிச்சிக்கிட்டிருந்தேன்.. எனக்கே சந்தோஷமா இருந்திச்சின்னா.. உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...

  வாழ்த்துகள்.. இப்படியெல்லாம் நல்லா எழுத உங்களால் முடியுமென்னும்ப் போது.. இப்படியே நல்லபடியாவே எழுதலாமே.. யப்பா.. எவ்வளவு பாராட்டுக்கள்... சந்தோஷமா இருக்கில்லே..

  என்றென்றும் அன்புடன்,
  சீமாச்சு...

  பதிலளிநீக்கு
 31. தருமிசார்,

  // அதனால நிறைய எழுதுங்கன்னு சொன்னா மட்டும் // முடிஞ்சா எழுதமாட்டனா?! ஒரு பதிவுக்கு சரக்கு புடிக்கறதுக்கே தாவு தீர்ந்துடுது! :)

  ****
  SK,

  // இப்போதாவது இரு பெண்டிர் பின்னால் வராமல், முன்னுக்கு வந்தீர்களே!
  :)) //

  இது அறியாமல் நிகழ்ந்த தவறு! இல்லைன்னா அவங்களாவது விட்டுக்குடுக்கறதாவது! :)))

  உங்கள் வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்!

  ****
  கைப்புள்ள,

  // என்னடா இவ்வளவு abusesஐ ஓப்பனா எழுதியிருக்காரேன்னு //

  ஹிஹி...

  ****
  ஸ்யாம்,

  சென்னியாண்டவருக்கு அடுத்தமுறை போனா நிச்சயம் தேங்காதான்! அத்தனை அட்டூழியங்களையும் இவ்வளவு காலம் பொருத்துக்கிட்டதுக்காவது! :)))

  ****
  ரவிச்சந்திரன்,

  வாழ்த்துக்களுக்கு நன்றி! அடிக்கடி வாங்க! :)

  ****
  சீமாச்சு,

  பாராட்டுகளுக்கு நன்றி!

  // இப்படியே நல்லபடியாவே எழுதலாமே.. // ஹிஹி..

  கண்டிப்பா முயற்சி செய்யறேன்! :)))

  ****
  யோகன், நிலா, சிவகுமார், குமரன், சிரில், கலாநிதி, Boo, வவ்வால், தேன் துளி பத்மா,

  உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

  பதிலளிநீக்கு
 32. உங்களோட அந்த நாலு போஸ்ட்டும் படித்தேன், சில இடங்கள் கண்ணீரை வரவழைத்தன, சில இடங்கள் இங்லீஸ்ல சொல்வாங்களே ரோஃபடல் (அது தாங்க ROFTL) :-)

  பதிலளிநீக்கு
 33. இளவஞ்சி

  வாத்தியார் ஆகிட்டீங்க.கலக்குங்க.வாழ்த்துக்கள்.

  அடுத்த வருஷம்தாங்க வர முடியும்., அதுவரைக்கும் மணீஸ் தியேட்டர் இருந்தா அங்கயே
  வெச்சுக்கலாம் ட்ரீட்ட.

  பதிலளிநீக்கு
 34. இப்பத்தான் படிச்சேன். வாழ்த்துக்கள் இளவஞ்சி!

  பதிலளிநீக்கு
 35. இளவஞ்சி,
  தங்களின் எழுத்துக்களை ஓரளவு வாசித்தவன் என்ற வகையில், உங்களின் இந்த வெற்றி எனக்கு ஆச்சரியத்தை தரவில்லை !!!! என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !
  என்றென்றும் அன்புடன்
  பாலா

  பதிலளிநீக்கு
 36. வாழ்த்துக்கள் வாத்தி !! இதுக்கு மேல என்ன சொல்றதுங்(க) போங்(க)

  பதிலளிநீக்கு
 37. மணீஷ் தியேட்டர இடுச்சிடாங்கன்னு கேள்வி பட்டேன்...எத்தன educational movies பார்த்து இருப்போம் :-)

  பதிலளிநீக்கு
 38. ஷ்யாம்,

  /அது தாங்க ROFTL) :-) //

  ஏனுங்ண்ணா.. அப்படின்ன என்னதுங்?!

  ****
  பெருசு,

  // அதுவரைக்கும் மணீஸ் தியேட்டர் இருந்தா அங்கயே
  வெச்சுக்கலாம் ட்ரீட்ட// அடடா! இதுவல்லவா ட்ரீட்டு! :) திரும்ப சிராக்கோ என்னைக்கு போடறான்னு கேட்டுவையுங்க! :)

  ****
  இராதாகிருஷ்ணன், ப்ரேமலதா,

  வாழ்த்துக்களுக்கு நன்றி!

  ****
  பாலா,

  உங்கள் நம்பிக்கைக்கு என் நன்றிகள்! :)

  ****
  கு.செ,

  // என்ன சொல்றதுங்(க) போங்(க) // காதுல தேன் பாயுதுங்கப்பு! :)))

  ****
  ஷ்யாம்,

  // மணீஷ் தியேட்டர இடுச்சிடாங்கன்னு கேள்வி பட்டேன்... //

  ( அதிர்ச்சி தாக்கிய முகத்துடன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நான்... ) என்னது?! மனீஸ் தியேட்டரை இடிச்சுட்டாங்களா?!

  ( விவேக்: டேய்! டேய்!! வேணான்டா! இதெல்லாம் தேவையில்லாத எமோஷன்.... )

  பதிலளிநீக்கு
 39. Kamal said,

  வாழ்த்துகள் இளவஞ்சி.

  "எத்தனை தடவை சொல்றது...ரொம்பவே நல்லா எழுதிறீங்கன்னு...prove ஆயிடுச்சில்ல..
  ஆனா அதனால நிறைய எழுதுங்கன்னு சொன்னா மட்டும் கேக்கிறதேயில்ல..."

  continue your good work. I know something has to touch your heart to write immpressive stories or article, so as a fan of your articles i don't mind waiting but keep writing.
  K.K:6 is good but something is missing (sarakku kamminnu naneikkuraen).

  பதிலளிநீக்கு
 40. இளவஞ்சி,
  இப்போது தான் உங்களின் பதிவு கண்ணில்பட்டது.
  முதல்பரிசை முதல்முறையாக வெற்றியீட்டியதற்கு என் வாழ்த்துக்கள்.
  First one is always great!

  நன்றி.

  பதிலளிநீக்கு
 41. rolling on the floor laughing

  நானும் நாலெழுத்து படிச்சவங்க கிட்ட கேட்டு தெறிஞ்சுக்கிட்டேன் :-)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

சுடரும் ஒரு தீவட்டி தடியனும்...

வ ணக்கமுங்க! இத்தனை நாள் சுடர் பிடிச்சவங்களை எல்லாம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்ததுல ஒன்னு மட்டும் புரிஞ்சது. அவிங்க எல்லாம் சுடருக்கு நல்லா எண்ணை விட்டு பிரகாசமா ஊருக்கு வெளிச்சம் போட்டுட்டு போயிருக்காங்க. தருமி சார் அடுத்து என் கைல கொடுத்ததுல நான் இப்போதைக்கு இருக்கற நெலமைல... அதாவது மூளையும் அதில் முனைப்பும் இல்லாம ஒரு விட்டேத்தியான வாழ்க்கைல இருக்கற... சரிங்க... நேராவே சொல்லிடறேன்... திங்கறதும் தூங்கறதுமா போட்டோல இருக்கற என் மூதாதையர் மாதிரி (விளக்கம் கீழே! ) வாழ்ந்துக்கிட்டு இருக்கறவன் கிட்ட கொடுத்ததால அதை திடீர்னு கிடைச்ச லைம்லைட்டா நினைச்சுக்கிட்டு சுடரை கொஞ்சம் கீழால இறக்கி என் மூஞ்சுக்கு மேல வெளிச்சம் படறமாதிரி கொஞ்ச நேரம் பிடிச்சிக்கலாம்னு... ஹி...ஹி... ஏற்கனவே பிரேமலாதாவோட தொடர் பதிவுக்கான அழைப்பு இன்னும் பாக்கி இருக்கு! சரி விடுங்க...அதை எத்தனை தடவை வேணா வாய்தா வாங்கி எழுதிக்கலாம்! அதுக்காக அவங்க திட்டுனாலும் பிரச்சனையில்லை ( நமக்கெல்லாம் Buffalo Skin! ). ஆனா சுடருக்கு வாய்தா வாங்கப்போய் பொசுக்குன்னு அணைச்சுட்டா நீங்க எல்லாம் என்னை வகுந்துருவீங்கன்ற ஒரு பயம

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு