முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

.

கருத்துகள்

 1. ஏன் இப்படி? எதை நிறுத்தனும்? ஏன் நிறுத்தனும்? எதுக்காக நிறுத்தனும்?

  பதிலளிநீக்கு
 2. ஏன் இந்த கொலைவேறி. எதற்காக இந்த முற்றுப்புள்ளி!

  பதிலளிநீக்கு
 3. இளவளே இளா!

  ஏன் இப்படி?

  A Rose is a rose is a rose!
  A fullstop is a fullstop is a fullstop!

  மாற்ற இயலுமா
  முற்றுப்புள்ளியின்
  உருவத்தை
  நாம்?

  கடக்கத்தான் முடியுமா
  முற்றுப்புள்ளியினை
  நாம்?

  எதற்கு
  முற்றுப்புள்ளி யாதென
  அறிந்தவர் எவர்?

  அதனால் தான் இப்படி!

  எதை நிறுத்தனும்?

  கண்ணுக்குத்தெரியும்
  கமாவுக்குப் பின்னே
  எண்ணிலடங்கா கமாக்கள்

  அடைந்த கமாக்கள்
  அடைந்த திருப்தியை
  தருவதில்லை
  எப்பொழுதும்

  ஆச்சரியக் குறிகள்
  வருவது போவதும்
  ஆச்சரியத்திற்காகவே!

  கேள்விக் குறிகளாகவே
  இருக்கின்றன
  கேள்விக் குறிகளுக்கான
  பதில்களும்

  நிற்பதற்காகவே
  நாம் ஓட
  எதையெதை நிறுத்தவென
  யாரெமக்குச் சொல்ல?

  ஏன் நிறுத்தனும்?

  ஓடுபவனுக்கே
  உருவாக்கப்பட்ட
  கேள்வி
  ஏன்?
  நிறுத்த விரும்புவனுக்கு
  தேவை ஓம்!

  எதுக்காக நிறுத்தனும்?

  நின்னுதான் ஆகனும்
  ஒருநாள்
  ஓடறது எல்லாம்!

  நிற்க மறுத்ததெல்லாம்
  நிறுத்தப்பட்டதே
  உலக நியதி!

  பதிலளிநீக்கு
 4. /இளவஞ்சி said...

  இளவளே இளா!

  ஏன் இப்படி?

  A Rose is a rose is a rose!
  A fullstop is a fullstop is a fullstop!

  மாற்ற இயலுமா
  முற்றுப்புள்ளியின்
  உருவத்தை
  நாம்?

  கடக்கத்தான் முடியுமா
  முற்றுப்புள்ளியினை
  நாம்?

  எதற்கு
  முற்றுப்புள்ளி யாதென
  அறிந்தவர் எவர்?

  அதனால் தான் இப்படி!

  எதை நிறுத்தனும்?

  கண்ணுக்குத்தெரியும்
  கமாவுக்குப் பின்னே
  எண்ணிலடங்கா கமாக்கள்

  அடைந்த கமாக்கள்
  அடைந்த திருப்தியை
  தருவதில்லை
  எப்பொழுதும்

  ஆச்சரியக் குறிகள்
  வருவது போவதும்
  ஆச்சரியத்திற்காகவே!

  கேள்விக் குறிகளாகவே
  இருக்கின்றன
  கேள்விக் குறிகளுக்கான
  பதில்களும்

  நிற்பதற்காகவே
  நாம் ஓட
  எதையெதை நிறுத்தவென
  யாரெமக்குச் சொல்ல?

  ஏன் நிறுத்தனும்?

  ஓடுபவனுக்கே
  உருவாக்கப்பட்ட
  கேள்வி
  ஏன்?
  நிறுத்த விரும்புவனுக்கு
  தேவை ஓம்!

  எதுக்காக நிறுத்தனும்?

  நின்னுதான் ஆகனும்
  ஒருநாள்
  ஓடறது எல்லாம்!

  நிற்க மறுத்ததெல்லாம்
  நிறுத்தப்பட்டதே
  உலக நியதி!///


  வாத்தி தெளிவா புரிஞ்சிருச்சு... :)

  பதிலளிநீக்கு
 5. தாஸு,

  ஏன் இந்த கொலைவேறி

  ஆணீயம் ஒரு கிலோவும்
  பெண்ணீயம் ஒரு கிலோவும்
  சரிக்கு சரி நிகராவென
  இடக்கையில் தராசும்
  வலக்கையில் எடைக்கல்லுமாய்
  அளந்து அளந்தே
  ஆற்றில் அள்ளிவிட்டதாய்
  தொலைந்து போகுமது
  வாழ்க்கை!

  தொலைந்ததை உணர்ந்தபின்
  மூளையில் மிச்சமிருப்பதே
  கொலைவெறி!

  ஈயங்கள் என்றும்
  ஈயங்களாகவே
  வாழ்தோருக்கும்
  தொலைத்தோருக்கும்!

  எதற்காக இந்த முற்றுப்புள்ளி!

  முற்றுப்புள்ளிகளுக்கு
  அப்பால்
  ஆச்சரியக்குறிகளுக்கு
  அர்த்தமேதுமில்லை

  தாஸு,
  முற்றுப்புள்ளிக்கு
  இல்லை ஒரு
  பாஸு

  பதிலளிநீக்கு
 6. வருத்தப்படாத வாலிபரே இராம்,

  // வாத்தி தெளிவா புரிஞ்சிருச்சு... :) //

  தெளிவதே புரிதல்
  புரிதலே தெளிவு

  தீதும் நன்றும்
  பிறர்தர
  வாரா!
  தெளிவும் புரிதலும்
  பிறர்தர
  வருவதே!

  புரிந்தலுக்குப் பின்னே
  முற்றுப்புள்ளியே
  சாசுவதம்.
  அதற்கும் பின்னே
  :) :(
  இரண்டுமே
  ஒன்றுதான்!

  ...

  புள்ளிக்குப்பின்
  புள்ளிக்குப்பின்
  புள்ளி!

  இதில்
  எது
  சிறிய புள்ளி?
  எது
  பெரிய புள்ளி?
  முற்றுப் புள்ளிகளிடையே
  இருப்பதில்லை
  ஏற்றத்தாழ்வு

  பதிலளிநீக்கு
 7. எனக்குத் தெளிவா தெரிஞ்சிருச்சு!

  நீயெல்லாம் ஒரு பொம்பளையான்னு தானே கேக்க வந்தீங்க?

  அப்பால, நம்ம பக்கம் வரணும். முன்னால் நீங்க ஒரு சீரீஸ் போட்டீங்க இல்ல, அதை இப்ப வகுப்பா டெவலப் பண்ணியாச்சு.

  http://penathal.blogspot.com/2007/10/1.html

  உங்களை ஒரு ப்ரொபஸரா அப்பாயிண்டும் பண்ணியாச்சு.

  பதிலளிநீக்கு
 8. கவுஜமட முதன்மை சிஷ்யரே பினாத்தல்ஸ்,

  நீயெல்லாம் ஒரு பொம்பளையான்னு தானே கேக்க வந்தீங்க?

  முற்றுப்புள்ளிக்கு
  பின்னே
  மூச்சிரைக்க
  ஓடும்
  முக்காத்துட்டுக்கு
  ஆகாத வாழ்வில்
  இது மட்டுமா கேள்வி?

  கடிக்க பயந்து
  குலைக்கும் நாயிடம்
  நாமும் கேட்கலாம்
  "நீயெல்லாம் ஒரு நாயா?"

  சொந்த பெயரில்
  பதிவுகள் போட்டு
  ஆப்பசைத்த குரங்காய்
  விழிபிதுங்கும் பதிவரிடம்
  நாமும் கேட்கலாம்
  "நீயெல்லாம் ஒரு பதிவரா?"

  பிடிங்குவது எல்லாமே
  தேவையான ஆணிதான்
  எனும்
  ஆணியே பார்த்திராத
  டேமேஜரிடம்
  நானும் கேட்கலாம்
  "நீயெல்லாம் ஒரு மேனேஜரா?"

  முக்காட்டம்பளரு டீயுல்
  முக்காலளவு நுரைகட்டும்
  மாஸ்டரிடம் கேட்கலாம்
  "நீயெல்லாம் இரு டீ மாஸ்டரா?"

  ஏன்?

  நாளைக்கு நாளுமுறை
  யாருமில்லா வேளையில்
  நம்மை நாமே கேட்கலாம்
  "நீயெல்லாம் ஒரு மனுசனா?"

  அப்பால, நம்ம பக்கம் வரணும்

  இடப்பக்கம் நின்றால் குஞ்சென்பார்
  வலப்பக்கம் வந்தால் ஆரியமென்பார்
  நடுப்பக்கம் நழுவினால் பச்சோந்தியென்பார்
  வெளிப்பக்கம் போனால் அனானியென்பார்
  உள்பக்கம் வந்தால் முதுகு சொறிதலென்பார்

  நான் எப்பக்கம் கிடந்துழழ்வேன் பரமசிவனே?!

  அடியேன்
  திருமணத்தில் விட்டதை
  அடிகளார்
  வாழ்வு பழக அழைக்கிறீர்
  வந்துணர்கிறேன் அய்யா!
  மனமுவந்து சொல்லியெமக்கு
  அருளும்!

  பதிலளிநீக்கு
 9. அடடா! ஏனிப்படி? ஏணிப்படி போல தமிழ்மணத்துல முன்னேறிய தாங்களா இப்படி? ஏன் ஏன் ஏன் நண்பனே.... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...நண்பனே நண்பனே நண்பனே.

  பதிலளிநீக்கு
 10. நான் இந்த பதிவையும் பார்க்கல பின்னூட்டத்தையும் பார்க்கல :)

  பதிலளிநீக்கு
 11. அய்யோ சாமி, நான் இல்ல. நான் இங்க வரவே இல்ல, இந்த பதிவ படிக்கல, பின்னூட்டங்களையும் படிக்கல

  பதிலளிநீக்கு
 12. தனித்துவமான பதிவு இளவஞ்சி
  நல்லா இருங்க‌:-)

  பதிலளிநீக்கு
 13. எப்போ இள‌வ‌ஞ்சியான‌ந்தா ஆனீங்க‌:-)

  பதிலளிநீக்கு
 14. ///ஏன் இப்படி?

  A Rose is a rose is a rose!
  A fullstop is a fullstop is a fullstop!

  மாற்ற இயலுமா
  முற்றுப்புள்ளியின்
  உருவத்தை
  நாம்?

  கடக்கத்தான் முடியுமா
  முற்றுப்புள்ளியினை
  நாம்?

  எதற்கு
  முற்றுப்புள்ளி யாதென
  அறிந்தவர் எவர்?

  அதனால் தான் இப்படி!///

  ஏன் இப்படி?

  A Rose is a rose is a rose!
  A fullstop is a fullstop is a fullstop!

  மாற்ற இயலுமோ
  முற்றுப்புள்ளியின்
  உருவத்தை
  நாம்?

  கடக்கத்தான் முடியுமோ
  முற்றுப்புள்ளியினை
  நாம்?

  எதற்கு
  முற்றுப்புள்ளி யாதென
  அறிந்தவர் எவருமில்லை

  அதனால் இப்படியா!

  பதிலளிநீக்கு
 15. ///G.Ragavan said...
  அடடா! ஏனிப்படி? ஏணிப்படி போல தமிழ்மணத்துல முன்னேறிய தாங்களா இப்படி? ஏன் ஏன் ஏன் நண்பனே.... அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...நண்பனே நண்பனே நண்பனே///

  இந்தநாள் அன்றுபோல்
  இன்பமாயில்லையே
  அது ஏன் ஏன் நண்பனே!

  'மழை' ஞாபகம்:-)

  பதிலளிநீக்கு
 16. இளவஞ்சி நண்பரே,

  இது தகுமா, முறையா, தர்மம் தானா ? ;))

  தலைய வேறு சுத்துது, இங்கிட்டு வந்தவுடனே :)

  //இடப்பக்கம் நின்றால் குஞ்சென்பார்
  வலப்பக்கம் வந்தால் ஆரியமென்பார்
  நடுப்பக்கம் நழுவினால் பச்சோந்தியென்பார்
  வெளிப்பக்கம் போனால் அனானியென்பார்
  உள்பக்கம் வந்தால் முதுகு சொறிதலென்பார்
  //

  இது சூப்பர் :)

  எ.அ.பாலா

  பதிலளிநீக்கு
 17. கரூர் வளர்த்தெடுத்த கலைமகனே ஜீரா,

  // ஏனிப்படி? ஏணிப்படி போல தமிழ்மணத்துல முன்னேறிய தாங்களா இப்படி? //

  ஏறுவது எல்லாம்
  முன்னேற்றமா?
  இறங்குவது எல்லாம்
  பின்னேற்றமா?

  ஊருக்கே வெளிச்சம்போட்டாலும்
  இறங்கி வந்துதான் ஆகனும்
  கரண்டுகம்பம் ஏறின
  ஃபோர்மேன்

  லைட்டவுசு உச்சியில
  வெளக்கு பிடிக்கறவன்
  முன்னேறியவனுமில்லை!
  அண்டர் க்ரவுண்டு தாதா
  பின்னேறியவனுமில்லை!

  ஏணியின் உச்சிநுணி
  என்னைக்கும் நிரந்தரமில்லை
  பூமியிலே அழுந்திருக்கும்
  ஏணியின் அடிநுணியே
  என்றைக்கும் சாசுவதம்!

  நிக்கற வரைக்குமே
  ஏணிக்கு மதிப்பு!
  படுக்க வைச்சா
  நெடுநெடு ஏணியும்
  ஒன்னுதேன்
  பொத்தல் கோணியும்
  ஒன்னுதேன்

  // அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே //

  நண்ப,

  அடுக்கி வைச்சிருக்கும்
  பழைய புத்தகங்களுக்கும்
  நிரப்பி வைச்சிருக்கும்
  ஞாபக அடுக்குகளுக்கும்
  என்னத்த வித்தியாசம்?
  என்னாத்த உபயோகம்?

  அப்பப்போ கலைச்சு
  பிடிச்சதை ப(பு)டிச்சு
  கிளுகிளுப்பது தவிர?

  ம்...

  நல்லவனாய் இருந்ததால
  இப்பவாச்சும் நெஞ்சில்
  வந்தேன்!
  பத்தாயிரம் கடன்வாங்கி
  காணாம போயிருந்தா
  நெஞ்சுல மட்டுமல்ல...
  மண்டைக்குள்ளும்
  தெனம்வந்து
  கொடகொடன்னு
  கொடாஞ்சிருப்பேன்!

  பதிலளிநீக்கு
 18. போதும் இளவஞ்சி
  வேதாளம் மறுபடி மரத்தில ஏறினமாதிரி

  வேப்பிலை அடிக்க வேண்டிய தேவையில்லையே
  மெதுவா இறங்குங்க‌ய்யா


  ஞாபக அடுக்குகள்
  உயிர்ப்பிப்பவை

  வாழும் கால‌த்தின்
  சகல வேத‌னைக‌ளுக்கிடையிலும்
  மீண்டெழ‌ச் செய்ப‌வை

  பதிலளிநீக்கு
 19. கும்மியினத்தின் குலக்கொழுந்தே கோபி / பீட்டர் பதிவுகளின் பிதாமகனே பிரகாசு,

  // நான் இந்த பதிவையும் பார்க்கல பின்னூட்டத்தையும் பார்க்கல :) //

  பார்க்காம போவதெல்லாம்
  தெரியாம போவதில்லை
  உணர்ந்து தெளிஞ்ததெல்லாம்
  உண்மையில்லை
  பொய்யுமைல்லை!

  போஸ்ட்பாக்ஸு டவுஜருல
  நாலணா இல்லாம
  கண்ணுல வறுமையுமாய்
  வாயில சல்லையுமாய்
  கண்டு தவித்த
  கலர்வாட்ச்சு ஜவ்வுமிட்டாய்
  கனவுலதான் இனிக்காதா?

  பரங்கிமலை ஜோதியிலே
  படம் பார்த்தவனுக்கு
  ஒக்கே ஒக்க பிட்டு!
  டிக்கெட்டு கெடைக்காம
  நொந்தவன் மனசினிலோ
  அஞ்சரைக்குள்ள வண்டி
  அஞ்சுகாட்சி வெட்டாம!

  வந்ததுமே குத்தமில்ல
  படிக்காம
  போனதுமே குத்தமில்ல
  இதுக்காக
  வருந்தும் அளவுக்கு
  எம்பிளாகு சுத்தமில்ல!

  பதிலளிநீக்கு
 20. கோவை 29ஆம் வட்டத்தின் சார்பாக 'ஆசுகவியார்' இளவஞ்சி என்ற பட்டம் அளிக்கப்படுகிறது:-)

  பதிலளிநீக்கு
 21. மப்பு இறங்கிச்சா இல்லையா? இன்னும் உளறல் நின்ன பாடா இல்லையே...

  என்னது... அது கவுஜ உளறல் இல்லையா.. என்ன வித்தியாசம் எல்லாம் ஒண்ணுதானே...

  அண்ணாச்சி, மொத ஸ்டேட்மெண்டில் உளறலை கட் பண்ணிட்டு கவுஜன்னு பேஸ்ட் பண்ணிக்கப்பா. :))

  பதிலளிநீக்கு
 22. மதுமிதா,

  // தனித்துவமான பதிவு //

  கம்பங் கொல்லையிலே
  பறக்கும் தும்பிகளில்
  எப்படி கண்டுணர்வேன்
  நான் பறக்கவிட்ட
  தட்டாரப்பூச்சியினை?

  ரோஜாத் தோட்டத்தில்
  என் காதலியின்
  கூந்தலேரும் தகுதி
  ஒரு பூவுக்கா?
  ஒரு லட்சம் பூவுக்கா?

  உண்ணத படைப்புகள்
  பத்தில்
  உண்ணதமானது எது?

  தனித்து நிற்கையிலே
  எதுவும் தனித்துவந்தான்!
  இனங்கண்டு சேர்கையிலே
  இனமும் தனித்துவந்தான்!

  // வேப்பிலை அடிக்க வேண்டிய தேவையில்லையே
  மெதுவா இறங்குங்க‌ய்யா //

  எப்படி இறங்க?
  என்ன சொல்லி
  இறங்க?

  என்னையும் நம்பித்தான்
  இன்னும் பத்தாளு
  பின்னூட்டம் போட்டிருக்க
  கடமையைச் செய்யாம
  கட்டையை சாய்ப்பேனோ?
  முழுசாய் முடிக்காம
  முச்சை இழப்பேனோ?

  நீங்க
  தலைதெறித்து ஓடும்வரை
  தட்டச்சை முடிப்பேனோ?

  பதிலளிநீக்கு
 23. பன்மையின் கிளைத்த வெளிகள்,
  பற்றிப்பரவுகின்றன சூன்யமென..!

  இருண்மையின் நாவுகள் சருமத்தை
  தீண்டிச்சுவைக்கின்றன சர்ப்பமென..!

  நீரற்ற பெருங்குளத்தின் மேலே
  திவலைகள் அலைகின்றன ஆவியென..!

  ஒத்தப்புள்ளிக்கு இத்தனை எழுத்துப்பதில் தேவையாவென புட்டத்தில் அடித்து திடுக்கிட வைக்கிறாள் கிளியோபாட்ரா.

  பதிலளிநீக்கு
 24. I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

  பதிலளிநீக்கு
 25. எழுத்தாளினி உஷாஜி,

  // இப்படி கொட்டுது :-) //

  ஏன் இந்த கேள்வி
  என்னை பார்த்து
  அதுவும்?

  செருப்பு கடிக்குதே
  பல்லிருக்கான்னு கேக்கலை!
  மழை கொட்டுதே
  கொடுக்கிருக்கான்னு கேக்கலை!
  நேரம் ஓடுதே
  காலிருக்கான்னு கேக்கலை!
  நகைக்குறியுடன் கேள்வி
  நான் ஏன் கொட்டுகிறேன்னு!

  ஏனிந்த பெண்ணீயம்?
  எதற்கிந்த நுண்ணரசியல்?

  ****

  பத்மா / சுட்ஜீ,

  // ? //

  ஹிஹி...

  ****

  செல்வு / முரளி,

  வந்தும்
  பிழைத்தமைக்கு
  நன்றி!

  ****

  ஆழ்ஸ்,

  புட்டம் தட்டிய
  கிளியின் கை முறித்து
  வின்னதிர விடப்பட்ட
  கேத்தரீனின் அறைகூவல்
  "யாருக்கு யாருடி சக்காளத்தி?!"

  ****

  காசியண்ணே,

  // ஆசுகவி // ஆஹா! கடைசியில் கிட்டியது பலன்!

  இகொ ஜீ,

  தெளிஞ்சிருச்சி!
  அப்போ
  இப்போ
  சொல்லறதெல்லாம்
  கவுஜையா?

  ****
  ஞானி தேவு,

  // ஃ //

  . + ஃ = .
  . - ஃ = .
  . / ஃ = .
  . * ஃ = .


  மேட்டர் ஓவர்!!!!!!!!

  "உலகின் மிகச்சிறிய பதிவு" எனும் சாதனைப்பதிவினை வெற்றிப்பதிவாக்கிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி! ஹிஹி...

  பதிலளிநீக்கு
 26. அதுக்குள்ள என்ன மேட்டர் ஓவரு
  வெற்றிப்பதிவுன்னா 100 வாங்கணும்

  பதிலளிநீக்கு
 27. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் வந்து 5 கமெண்ட் போட்டுட்டு போறேன்:-)

  சரியா இளவஞ்சி!

  *&^%$#@!
  *&^%$#@!
  *&^%$#@!
  *&^%$#@!
  *&^%$#@!

  பதிலளிநீக்கு
 28. என்ன ஹி ஹி?????

  ஏன் இப்படி?
  ஏன் நிறுத்தனும்?
  எதுக்காக நிறுத்தனும்?

  100 வரும் வரையில்
  ஏன் நிறுத்தனும்?
  எதுக்காக நிறுத்தனும்?

  பதிலளிநீக்கு
 29. *()_+-|\{[}}];;"',<>/?

  எழுத இயலா வார்த்தைகளை
  பதிய இயலா உணர்வுகளை
  வரையும் குறிகள் சொல்லாதோ!!!

  பதிலளிநீக்கு
 30. $$$$$
  கோடி கோடி வார்த்தையினும்
  ஒரு மௌனத்திற்கான மதிப்பை
  உணர்வீர் இனியேனும்.....
  $$$$$

  பதிலளிநீக்கு
 31. மதுமிதா,

  //ஏன் இப்படி?
  ஏன் நிறுத்தனும்?
  எதுக்காக நிறுத்தனும்? //

  ஆ!!!!!!!!!!!

  மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா?!

  என்னை பார்த்தா பாவமா இல்லையா? நானும் எவ்வளவு நாளைக்குத்தான் கவுஜரு மாதிரியே நடிக்கறது??

  பதிலளிநீக்கு
 32. ஒரு . க்கே இவ்ளோ பின்னூட்டமுன்னா , இன்னும் நீங்க ஒரு பாரா எழுதி இருந்தீங்கனா...அடங்கப்பா..

  பதிலளிநீக்கு
 33. அப்ப இன்னும் தூங்கலியா இளவஞ்சி
  இன்னும் ஒரு பதில் போடுங்க‌

  தமிழ்மணத்தில் 40க்குமேல கமெண்ட் வந்தா தனியா 40+க்கு வருமாமே
  இப்போதான் எனக்கு தெரியும்

  அங்கே அனுப்பிடுங்க இந்த வெற்றிப்பதிவை.

  நம்ம கொத்ஸ் - டயும் சொன்னா 100 போட்டுடுவாரு.

  *****

  உயிர் ஆரம்பித்த நாளிலிருந்து
  உலக மேடையில் உலவும்
  அனைவரும் நடிகர்களே

  பாவ‌ம் பார்த்தா
  ந‌ட‌க்கின்ற‌ன‌ நிக‌ழ்வுக‌ள்
  தானாக‌த் தோன்றும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில்
  தானாகவே நிக‌ழ்கின்ற‌ன‌

  தொட‌ருங்க‌ள் த‌ங்க‌ள் பாத்திர‌த்தை!

  பதிலளிநீக்கு
 34. ///ஆ!!!!!!!!!!!///

  இ!
  ஈ!!
  உ!!!
  ஊ!!!!

  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!!!!!

  பதிலளிநீக்கு
 35. ஆரம்பம் இல்லாது எதுவுமில்லை

  ஆரம்பித்தால்தான் வெற்றியின் எல்லைக்கோட்டினைத் தொடவியலும்

  ஆர‌ம்ப‌ம் என்ப‌து முடிவுக்கு வ‌ர
  மறுப‌டியும் ஆர‌ம்ப‌ம் தொடுவ‌து
  ப‌ரிதியாகும் o

  அதுவே ஞான‌த்திகிரியாகும்.

  பதிலளிநீக்கு
 36. ஆரம்பம் மட்டுமே நம் வசம்
  ஆர‌ம்ப‌ம் ஆர‌ம்பித்துவிட்டால்
  ஆர‌ம்பிப்ப‌து ம‌ட்டுமே ந‌ம்க‌ட‌மை
  ஆர‌ம்ப‌த்தின் முடிவு நம் வசமில்லை

  பதிலளிநீக்கு
 37. ஆரம்பம் முடிய‌
  மறுபடியும் ஆரம்பம்
  மறுபடியும் முடிய‌
  மறுபடியும் ஆரம்பம்

  மறுபடியும் தொடர‌
  மறுபடியும் தொடரும்
  மறுபடியும் தொடரும்
  மறுபடியும் ஆரம்பம்

  பதிலளிநீக்கு
 38. இனியவன்,

  // ஒரு . க்கே இவ்ளோ பின்னூட்டமுன்னா //

  நல்லா பாருங்கப்பேய்! பாதி நான் போட்டது. மீதி பெரிய மனசு வைச்சு மதுமிதா நான் பொழச்சுப்போகட்டுன்னு போட்டிருக்கறது! என்ன நீங்க? பின்னூட்டக்கலையைக்கூட கத்துக்காம... :)

  மதுமிதா,

  இப்பதிவின் இன்னுமொரு சாதனை!

  ஒரு நல்ல கவிஞரை கவுஜராக்கியது! :) உங்க வாசக ரசிகருங்க எல்லாம் என்னை மெதிக்கப்போறாங்க!

  பதிலளிநீக்கு
 39. முத்துகுமரரே!

  // "," //

  இதுபற்றி நான் ஏற்கவனே பாடிய 'கவிதை'யை பிழைதிருத்தி பொருட்குற்றம் பொறுத்து மிச்ச மீதி ஏதாச்சும் இருந்தா போட்டுக்கொடுங்கப்பு! அடைப்புக்குறிக்கு தனியா பாடலை! தொண்டை அடைக்குது...

  கண்ணுக்குத்தெரியும்
  கமாவுக்குப் பின்னே
  எண்ணிலடங்கா கமாக்கள்

  அடைந்த கமாக்கள்
  அடைந்த திருப்தியை
  தருவதில்லை
  எப்பொழுதும்


  ****

  அய்யனார்,

  // A rOSE Is A Rose is a Rose ... //

  ஒரு நிமிசம் ஏதாச்சும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டு வழக்கம்போல மானம்போச்சோன்னு பயந்துட்டேன்!
  உங்க பின்னூட்டத்தில் ஏதாச்சும் பின்னவீனத்துவ உள்குத்து உளதா? ஆமெனில் அடுத்த கவியோfடு வர்றேன் :)

  பதிலளிநீக்கு
 40. //அடைந்த கமாக்கள்
  அடைந்த திருப்தியை
  தருவதில்லை
  எப்பொழுதும்//


  பயணங்கள்
  முடிவதில்லை
  முற்றுப்பெறா
  காற்புள்ளிகளைப் போல

  பதிலளிநீக்கு
 41. கவிதையே உயிராம்
  கவிஞர் பெருமானுக்கு
  கவிதை பாட
  தொடர் கவிதை பாட‌
  தொண்டையும் அடைக்குமோ

  தொட‌ர்ந்து பாடும்
  தொட‌ர‌ட்டும் உம‌து புக‌ழ்

  பதிலளிநீக்கு
 42. பயமா
  பயமில்லை பெருமக்களே

  வருகிறார் இளவஞ்சி
  வாடா மலரின்
  வாசம் வீசும்
  கவிதைப்படையோடு

  பதிலளிநீக்கு
 43. கண்ணுக்குத் தெரியா
  கமாக்கள் கூட‌
  கண்ணுக்குத் தெரியும்
  வல்லமை கொண்ட
  கவிபெருமான்

  படைத்த கவிதை
  படைப்பு திருப்தியைத்
  தரவில்லையெனில்

  இவனல்லவோ
  பெருங்கவிஞன்

  பதிலளிநீக்கு
 44. மன்னிக்கவும்

  இவர‌ல்லவோ
  பெருங்கவிஞர்

  என வாசிக்கவும்

  பதிலளிநீக்கு
 45. பின்நவீனத்துவம்
  உள்குத்து அறியா
  பெருமகனார்

  வாருங்கள்
  பொங்கும்
  கவிதைப் பெருக்கோடு

  பதிலளிநீக்கு
 46. ///முத்துகுமரன் said...
  //அடைந்த கமாக்கள்
  அடைந்த திருப்தியை
  தருவதில்லை
  எப்பொழுதும்//


  பயணங்கள்
  முடிவதில்லை
  முற்றுப்பெறா
  காற்புள்ளிகளைப் போல///


  அருமை முத்துகுமரன்
  தொடருங்கள்.


  பயணங்கள்
  முடிவதில்லை
  முற்றுப்பெறா
  காற்புள்ளிகளைப் போல.

  பதிலளிநீக்கு
 47. 40+ போனவுடனே 5 பின்னூட்டம் போடறேன்னு சொன்னது மறந்துபோச்சுது
  இளவஞ்சி:-)


  கொத்ஸ் இன்னும் வரலியா இந்தப் பக்கம்:-)

  பதிலளிநீக்கு
 48. முத்துகுமரனாரே!

  // பயணங்கள்
  முடிவதில்லை
  முற்றுப்பெறா
  காற்புள்ளிகளைப் போல //

  அசத்தறீங்களே! அப்ப உம்மகிட்ட இருந்தே உருவிற வேண்டியதுதான்!

  காற்புள்ளிகள்
  முற்றுப்பெறுவதில்லை

  கட்டைவண்டிகள்
  பஞ்சராவதில்லை

  பட்டாம்பட்டி டவுஜர்களில்
  எலாஸ்டிக் இருப்பதில்லை

  கருப்பட்டிக் காபித்தண்ணி
  காஃபிடேயில் கிடைப்பதில்லை

  தாவணிப் பெண்களுக்கேது
  துப்பட்டா?

  இங்கிலாந்தில் இருப்பதில்லை
  சில்வியா குண்டலகேசிகள்

  அதனாலென்ன?
  அவையவைகள்
  அவையவைகளாகவே!

  பட்டங்களாய்
  காற்புள்ளிகள்
  நூலருந்தவுடன்
  முற்றுப்புள்ளிகள்!

  பதிலளிநீக்கு
 49. மதுமிதா,

  // தொடர் கவிதை பாட‌
  தொண்டையும் அடைக்குமோ //

  அடைக்காதோ தொண்டை?

  காஞ்ச இட்டிலி நாலும்
  புளிச்ச தேங்காசட்னியும்!

  // கொத்ஸ் இன்னும் வரலியா இந்தப் பக்கம்:-)//

  இகொஜி லெவலே வேற! அவர் ஒரு பின்னூட்டம் போட்டா 100 பின்னூட்டம் போட்டா மாதிரி :)

  பதிலளிநீக்கு
 50. //அதனாலென்ன?
  அவையவைகள்
  அவையவைகளாகவே//

  நூலறுந்த
  முற்றுப்புள்ளியாகினும்
  அவையவைகளாகவே
  இருந்திட
  நாமிருவருவரும்
  அனுமதித்த கணத்திலேதான்
  முழுமையானது
  காதல்

  பதிலளிநீக்கு
 51. ///இளவஞ்சி said...
  மதுமிதா,

  // தொடர் கவிதை பாட‌
  தொண்டையும் அடைக்குமோ //

  அடைக்காதோ தொண்டை?

  காஞ்ச இட்டிலி நாலும்
  புளிச்ச தேங்காசட்னியும்!

  // கொத்ஸ் இன்னும் வரலியா இந்தப் பக்கம்:-)//

  இகொஜி லெவலே வேற! அவர் ஒரு பின்னூட்டம் போட்டா 100 பின்னூட்டம் போட்டா மாதிரி ///


  சத்தா நல்லா சாப்பிட்டு
  சத்தான கவிதை பாடுங்க‌ இளவஞ்சி

  100 ஆர‌ம்பிச்ச வச்ச‌ மாகானுபாவ‌ன் கொத்ஸ்:-)

  அவ‌ருக்கு 100 போட அங்க போய் வ‌ந்த‌வ‌ங்க‌ நாங்க‌:-)

  பதிலளிநீக்கு
 52. ///முத்துகுமரன் said...
  //அதனாலென்ன?
  அவையவைகள்
  அவையவைகளாகவே//

  நூலறுந்த
  முற்றுப்புள்ளியாகினும்
  அவையவைகளாகவே
  இருந்திட
  நாமிருவருவரும்
  அனுமதித்த கணத்திலேதான்
  முழுமையானது
  காதல் ///


  அசத்தறீங்க முத்துகுமரன்!


  அனும‌திக்காத‌ போதும்
  தானாக‌ உதிக்கும் காத‌ல்
  அவ‌ர‌வ‌ர் மனோர‌த‌ப்ப‌டி

  பதிலளிநீக்கு
 53. ஓ.. சரி!சரி!.. அதான் மேட்டரா.. ரைட்டு!!

  பதிலளிநீக்கு
 54. ராசா,

  அப்பாடா! கடைசியா உங்களுக்காவது பிரிஞ்ததே.. :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு