முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கமகம புதினா சாதம்

"புதினா சாதம் செய்யப்போற! சரி... அதென்ன கூட கமகம? எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்!"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா? சரி OK! வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

போனவாரம் சொன்னதெல்லாம் தான்! ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்!

புதினா - ஒரு கட்டு

கொத்தமல்லி தழை - ஒரு கட்டு

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - ஒரு துண்டு

பச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய்! அதனால 2 போதும்! அதுக்குமேல உங்க பாடு!)

பட்டை லவங்கம்

பிரியாணி இலை

நல்லெண்ணை - 2 குழிக்கரண்டி

வெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

பாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது? நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா? எதுக்கு வம்பு? நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு! )

உப்பு - போதுமான அளவு

செய்முறை:

மொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க.

சம அளவு ஆய்ந்து எடுத்த புதினா கொத்தமல்லி தழைகளுடன் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து மிச்சில கொஞ்சமா தண்ணி விட்டு மைய்ய அரைச்சுக்கங்க.

அடுப்பை பததவைச்சு குக்கரை மேல வையுங்க. (என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா?! )

குக்கர்ல கொஞ்சம் நல்லெண்ணை விட்டு காய்ந்தவுடன் நசுக்கிய பட்டை, இலவங்கம், பிரியாணி இலை எல்லாம் சேர்த்து அதனுடம் சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாகற வரைக்கும் வதக்குங்க.

அரைச்சு வைச்சிருக்கற ஐட்டத்தை எடுத்து குக்கருல ஊத்தி கலக்கி பச்சை வாசம் போகும்வரை கிளருங்க. நல்லா கவனிங்க. பச்சை வாசம்! கலரல்ல! என்னதான் வதக்குனாலும் பொதினாவின் பச்சைகலரு போகாது! ஹிஹி...

ஓரமாய் எடுத்து வைத்துள்ள அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் இட்டு கிளருங்க.

அரிசி ஏற்கனவே ஊறியிருக்கறதுனால ஒன்ணரை மடங்கு தண்ணி விட்டா போதும். நான் வைத்த ரெண்டு டம்ளரு அரிசிக்கு மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன்! சாதம் கொஞ்சம் ரிச்சா வரணும்னா கொஞ்சம் முத்திரிப்பருப்பை சேர்த்துக்கங்க. கூடவே மறக்காம உப்பு சேர்த்துக்கங்க.

அரிசியை நல்லா கிளரிவிட்டு குக்கரை மூடி சரியா ஒரு விசிலு.. ஒரே ஒரு விசிலுக்கு மட்டும் விடுங்க. அப்பறமா அடுப்பை அணைச்சு குக்கரை எடுத்து ஓரமா வைச்சிருங்க.

10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு குக்கரை திறந்து மேலாக்க ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு சாதம் ஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க!


அம்புட்டுத்தேன்! பக்குவமா அடுக்கி எவிடெண்சுக்கு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு வெட்ட ஆரம்பிங்க. இதுக்கு தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி அருமையா இருக்கும் என்பது ஐதீகம்!



தட்டுல உள்ளது எனக்கு. கண்ணாடி குண்டானில் உள்ளது அண்ணன் "ஏழையில் சிரிப்பில்" அவர்களுக்கு. தொட்டுக்க தயிர்வெங்காயம், பேக்டு சிப்ஸ். அப்பறம் ஆளுக்கு ஒரு ஓஞ்ச வாழைப்பழம். மேட்டர் ஓவர்!

(வாசம் புடிச்சு வழக்கம்போல லிண்டா வருவான்னு பார்த்து கதவை திறந்தா கிருஸ்துமஸ் தாத்தா நிக்கறாக! வந்தவரு சும்மாவா வந்தாரு? போன கிருஸ்துமஸ்சுக்கு விநியோகம் செஞ்ச ஸ்வீட்டு பாத்திரங்களையெல்லாம் முதுகுல மூட்டை கட்டிக்கிட்டு! அதனையும் நாந்தேன் கழுவுனேன்! )

கருத்துகள்

  1. I am definitely going to try this recipe tomorrow.This item looks so good. Keep posting more recipes.

    Thanks.

    Rumya

    பதிலளிநீக்கு
  2. செய்து பார்க்கிறேன்!! கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,

    என்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...?!

    பதிலளிநீக்கு
  4. ரைட்டு!!.. ரைட்டுன்னேன்..!!

    ரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் :)

    பதிலளிநீக்கு
  5. அடடா,நல்ல வேளை அடுப்பை நிறுத்தச் சொன்னீங்க.. இல்லாட்டா அடுத்த பதிவு வரை அப்படியே எரிஞ்சுகிட்டு இருந்திருக்கும்...

    புதினா பச்சையாத்தான் இருக்கும், ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:))

    பதிலளிநீக்கு
  6. அங்கன உக்காந்திருக்கிற பொம்மை எப்படி செய்றதுன்னு எப்போ சொல்லுவீங்க..?

    பதிலளிநீக்கு
  7. படம் சூப்பர்...!!! ரைஸ் கொஞ்சம் வேவலியோ ??

    பதிலளிநீக்கு
  8. //வணக்கம்,

    என்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...?! //

    ???

    பதிலளிநீக்கு
  9. இந்த முறை மறக்காம எனக்கும் எடுத்து வெச்சிருக்குற உம்ம பெருந்தன்மையா நினைச்சா...

    சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!

    பதிலளிநீக்கு
  10. //(என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா?! )
    //

    அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா!

    பதிலளிநீக்கு
  11. //10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு //

    ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்?

    வாசம் பாத்துட்டு இங்கயே இருந்துடுவோம்னுதானே!

    :(

    பதிலளிநீக்கு
  12. புதினாவுக்கு இயற்கையிலேயே கமகமக்கும் மணம் உண்டு என்று
    குட்டிப்பிசாசுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அடடா! ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! பிரமாதங்க..இப்பிடி கலக்குறீங்க. சூப்பரு.

    பதிலளிநீக்கு
  14. //Anonymous said...
    I am definitely going to try this recipe tomorrow.//
    Rumya//

    எதற்கும் இந்த நண்பர் நலமோடு வந்து சுவை பற்றி உறுதிபடக்கூறினால் செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்.:)

    புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  15. வூட்டுக்கு வந்தன்னைக்கு இப்படியெல்லாம் செஞ்சு போட்டிருந்தா,எங்க பெர்மனெண்டா டேரா போட்டுடுவாங்கன்னு தானே தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...

    ஹூம்...நல்லா இருமைய்யா...

    பதிலளிநீக்கு
  16. இளா ,

    கம கமக்கிறது இருக்கட்டும் சாதம் கசக்காம இருக்கா அத சொல்லுங்க ... நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்!

    பதிலளிநீக்கு
  17. ரம்யா,

    சீரியசாத்தான் சொல்லுதீகளா? :) வருகைக்கு நன்றி!

    குட்டிபிசாசு,

    // கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்!! // கண்டிப்பா வருமைய்யா! சமைக்காமலே கூட வரும்! ஏன்னா இது புதினா! :)

    செல்வு,

    ஏன்யா கொழப்புதீரு! நீர் எப்போ தெரியபடுத்தி நான் எப்போ அப்படி எடுத்துக்கிட்டேன்?! இதுபோக சுயதம்பட்டம் அடிக்க தெரிலன்னா அப்பறம் பதிவுகுல என்னத்த பொழக்கறது? :)

    ராசா,

    // ரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் // அதுசரி! எல்லாம் அங்கன பழகுன வேலைதான். அதனால பிரச்சனையில்லை! :)

    வல்லியம்மா,

    // ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:)) //

    இது ஒரு நல்ல கேள்வி! :)

    சாதம் பார்க்க பச்சையாத்தான் இருந்தது. ஆனால் போட்டோல அப்படி தெரியுது! என்னோட போட்டோகிராபி திறமையத்தான் நீங்க பாராட்டனும்! :)

    பதிலளிநீக்கு
  18. தருமிசார்,

    // அங்கன உக்காந்திருக்கிற பொம்மை // அது பாப்பாவோடதுங்க... மறந்துட்டு போயிட்டாளாம்! மறக்காம எடுத்துக்கிட்டு வர சொல்லியிருக்கா! எதுக்கும் நீங்க அவகிட்ட கேளுங்க :)

    செந்தழல்,

    // ரைஸ் கொஞ்சம் வேவலியோ ?? //

    உதிரிஉதிரியா இருக்கறதுனால உங்களுக்கு அப்படி தெரியுதுபோல! ஒரு விசிலுக்கு மேலவிட்டாலும் கொழைஞ்சுரும்.

    அனானி,

    நம்ப ஸ்டாரு சும்மா தமாசி செய்யாறாப்புல! :) அவரு பதிவுல போயி என்னா சேதின்னு கொடைஞ்செடுங்க! :)

    delphine,

    // this is really good!// ஹிஹி...

    ஏழையின் சிரிப்பில்,

    // சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது! // சாப்பிட்டுப்பாரும்வே! மூச்சே நின்னுரும்! :)

    நன்றி சொல்பவன்,

    // அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா! // அதானே! இதுக்குமேல நன்றி சொல்லுவீங்க?! :)

    ஆவி அம்மணி,

    // ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்? // பேஷா செய்யலாமே!ஆனா அப்பறம் உங்ககூடத்தான் நாங்களும் ஆவியா திரியனும்! :)

    பதிலளிநீக்கு
  19. நானானி, சரியாச்சொன்னீரு!

    ஜீரா,

    // இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! // Always Welcome! :)

    தீவு,

    // புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன். // அது சரி! நீங்க எதுக்கும் ரம்யா வந்து சொல்லறவரைக்கும் வெயிட் பண்ணுங்க! :)

    சுதர்சன்.கோபால்,

    // தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...// அதானே! உங்க ஞாபகசக்திடாம் புகழ்பெற்றதாச்சே! இல்ல.. 'சுயநினைவோட' இருக்கறப்ப சாப்பிட்டதைமட்டும் சொல்லறீரா?! :)))

    வவ்வால்,

    // நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்! // அதுக்குத்தான் அரைச்சுவிட்டதை நல்லா பச்சைவாசம் போகறவரைக்கும் வதக்கனுங்கறது. இதுபோக கொத்தமல்லி தழையும் சேர்க்கறதால புதினாவோட அதீத வாசமும் கசப்பும் இருக்காது.

    வேற ஏதாச்சும் வழிமுறையிருந்தாலும் சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  20. அண்ணாச்சி கள கட்டுது போங்க..என்னடா அஙக்ன வந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்ன்னு இருந்தேன்...தோ ஓடிப் போயி டிக்கெட் எடுத்துடறேன் :)

    பதிலளிநீக்கு
  21. டுபுக்ஸ்,

    உமக்கு இல்லாததா?! சீக்கிரம் வாங்க! வீட்டு பக்கத்துலயே டெஸ்கோவும் இருக்கு! :)))

    பதிலளிநீக்கு
  22. Hey!

    I Learned To Write in Tamil Through You Site. HaHaHa!

    கமகமன்னு பெதினா சாத வாசம் ஆளைத் தூக்குதே!

    நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான அத்தனை தகுதிகளும் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  23. யம்மா தாயே லிண்டா,

    // நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான //

    ஒரு புள்ள குட்டிக்காரன் கிட்ட பேசற பேச்சா இது?! அப்ப்ப்பிடியே வேற பக்கமா போயி தேடு தாயே!!!

    போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல! :)

    பதிலளிநீக்கு
  24. //
    போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல//

    You are always Welcome!

    We Are eagerly waiting To Learn To Cook many Food Items Including Kali!

    பதிலளிநீக்கு
  25. maapu vaikaporangaya aapu!

    etho pona poguthey nu samayal solli thantha, jail kali kinda aal illa nu jailor koopidararu

    etho oru sathi valai unga valai pathivai suthi irukku nu theriuthu

    saakrathai ila ..vanchika poranga :)

    பதிலளிநீக்கு
  26. பொறவு என்ன வெத்தல பாக்க வச்சா ஒங்கள அழைக்கிறது பதிவ படிக்க வாங்கன்னு.. அதான் அப்படிச் சொன்னேன். உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது

    பதிலளிநீக்கு
  27. செல்வு,

    // உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது //

    நெசமாவா சொல்லுதீக?! பச்சைவாசம் போக வதக்கச்சொன்னேனே! செஞ்சீரா? இல்லை அரிசிக்கு சரிசமமா புதினாவை அள்ளி விட்டுட்டீரா? சமைச்சு சாப்பிட்ட நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தான் இருக்கேன்! அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கறேன்! :)

    பதிலளிநீக்கு
  28. I tried this mint rice. We all loved it. Thank you again for this post.

    Rumya

    பதிலளிநீக்கு
  29. Rumya,

    என் வயித்துல பாலை வார்த்தீங்க! மக்கா கசக்குதுன்னு சொன்னபோது நாம சொல்லறது நமக்கு மட்டும்தான் நல்லா வருமான்னு கொழம்பிட்டேன்.

    உங்க ஒருத்தரோட ஸ்டேட்மெண்ட் போதும். இத வைச்சே டெல்லி வரைக்கும் பேசுவேன்! :)))

    நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர