முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கர்நாடகா பயணமும் என் புகைப்படப் பெட்டியும்...

போனவாரம் சில புகைப்பட ஆர்வலர்களுடன் கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டே, திபெத்தியர்களின் வாழ்விடமான குஷால்நகரில் உள்ள கோல்டன் டெம்ப்பிள் (இரண்டாம் முறை) சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. நாதன், PeeVee, ஆதி போன்ற போட்டோகிராபி பிஸ்த்துகளுடன் நம்ப பின்னவீனக் கவிஜர் லக்குவனர், எலக்கியவாதி மோகன் தாஸு, லக்குவனாரின் நண்பர் வினோத் மற்றும் சில நண்பர்களுடன் பயணம். வெள்ளி இரவு சென்ட்ரலில் ஆரம்பித்த அலப்பரை மீண்டும் திங்கள் அன்று சென்னை வந்து சேரும்வரை ஓயவில்லை :) நீண்ட நாட்கள் கழித்து ஒரு மனநிறைவான பயணம். என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )

மாண்டியா வரை மைசூர் எக்ஸ்பிரசில் பயணம். பிறகு அங்கிருந்து இரண்டு நாளைக்கு ஒரு டாடா சூமோ பேசிக்கொண்டு அங்கிருந்து தென்னூரு ஏரி.. அங்கிருந்து மேல்கோட்டா... அப்படியே மைசூர் வழியாக குஷால்நகரில் ராத்தங்கல். காலையில் தங்கக்கோவிலில் நடந்த விழாவில் சிறப்பழைப்பாளார்களாக பங்கேற்பு(ஹிஹி... ) மதியமாக கிளம்பி மைசூரை ச்சும்மா பேருக்குத்தொட்டுவிட்டு சென்னை ரிட்டர்ன். இதுதான் பயண திட்டம். இந்த ட்ரிப்பை படுபயங்கரமா அனுபவிச்சது வண்டியோட்டுனர்தான். அவரை ஓட்ட விட்டாத்தானே? இடையிடையே தனிமரம், விவசாயி, மலை, கோணைக்கல்லு, எருமைமாடுன்னு எதுகிடைச்சாலும் வண்டியை நிறுத்தி டேரா போட்டு படமெடுக்கறதுன்னு படுரகளையா நேரம் போனதுன்னாலும் படமெடுக்கறதுல பலவிடயங்கள் கற்றுக்கொள்ள முடிந்ததென்பது உண்மை. அப்பறம்... தென்னூரு ஏரிக்கரை காவாயில் ஒரு அற்புதக்குளியல்! அடடா.. சென்னையின் காக்கா குளியலுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம்! :)

படமெடுப்பதை விட இனிமையான அனுபவம் பயணம் முழுவதும் நடந்த ஆழ்ந்த தமிழ் இலக்கிய விவாதங்கள்தான்! அட அதாங்க... பொரளி பேசறது! ஜெஜெ சில குறிப்பு நாவல்தானா? ராமசேஷன் எழுதிய ஆதவன் இன்னைக்கு வரைக்கும் இருந்திருந்தா எப்படி இருக்கும்? ஜெமோவின் சமீபத்திய ஜகா வாங்கல், (1000வது முறையாக ) பின்நவீனத்துவம் என்றால் என்ன? இது போன்ற மற்ற நாடுகளின் வரலாற்றின் போக்கிலாக உருவாகும் கலையம்சங்கள் நமது நாட்டின் வரலாறுக்கும் வாழ்வுக்கும் தொடர்பின்றி ஒரு திணித்தலாக நமக்கு நெஜமாகவே தேவையா? இப்படி.. இதுபோக லோக்கல் பொங்கலாக... லச்சுமணரின் கவிதைகள் மீதான இலக்கியத்திறனாய்வு, போலி கம்யூனிஸ்ட்டான மோகந்தாஸுக்கு ஏணிந்த ஆணாதிக்க வெறி, அமீரக அண்ணாச்சியின் சமீபகால மொக்கைகளின் காரணம், CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம், அய்யனாரின் படைப்புகளில் மிஸ்ஸாவது என்ன? இளவஞ்சியின் ஒருரூபாய் ஈகையின் பின்னான சுயநலம், நிர்வாண புகைப்படக்கலை ( டிரைவரு ஒரு லுக்கு விட்டாரு பாருங்க! நாக்க புடிங்கிக்கனும்! :) ) போன்ற தமிழ் பதிவுலகம் அறிந்தே ஆகவேண்டிய மேட்டருகள்! :)

சரிவிடுங்க.. அங்க எடுத்த படங்களில் சில இங்கே.. படங்களை பலவிதமா நகாசுவேலை செஞ்சும் இம்புட்டுத்தான் நல்ல வந்ததான்னு திட்டாதீங்க. அதுக்கெல்லாம் மேல சொன்ன பிஸ்த்துகளின் லிங்கை தட்டிப்பாருங்கப்பு! :)

வழக்கம் போலவே, கூகிள் பேஜஸ் புட்டுக்கினு படங்கள் லோட் ஆகலைன்னா பிக்காசவெப்ல பாருங்கப்பு.




தழலும் தணலும்...



கர்நாடக கிராமப்புறம் எப்படி இருக்குன்னு ஒரு திரொபதிக்குன்று பாறையிலிருந்து ஒரு பார்வை...



அதேபாறையில் கொரங்குத்தனம் பழகும் ஒரு தொரை!



தென்னூரு ஏரிக்கரையில் ஒர் சிலை! ஐடியா திருட்டு from ஆதி! :)



ஆயாவின் கண்களில் தெரிவது கோவமா? இல்லை.. ”பொழப்பத்த பயலுவ..” அப்படிங்கற அலுப்பா! :)



உஞ்சோட்டாளிங்கற மொறையில நான் என்ன சொல்லுதன்னா...



மேல்கோட்டே குளமும் கோவிலும்.. ( இங்கனதான் தளபதி எடுத்தாங்கலாம்.. என்ன பாட்டு சொல்லுங்க? )



மகுடிக்கு மயங்கிய நாகமும் சிலையின் வடிவில் மயங்கும் நாமும்...



மொட்டை போட்டாச்சு.. நாமம் இட்டாச்சு... காரியம் செஞ்சாச்சு... மறுவுலகிற்கு தகவல் சொல்லுறது யாரு?



ராயர்கோவில்



கட்டிமுடிக்கப்படாத ராயர்கோவில் தூண்களில் ஒன்று...



மேல்கோட்டே கோவில்.. ராயர்கோவிலில் இருந்து...



ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)



அடுத்தது எங்க என் புகைப்படப்பொட்டியை திறந்தேன்னா... கோல்டன் டெம்ப்பிள்.


கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!



அங்கன கோவில்ல 5 மணிநேரமா சளைக்காம ஸ்லோமோஷன்ல என்னத்த ஆடுனாய்ங்கன்னா...



ஆட்டத்த படமெடுக்க வாகா இடம் அமையாததால ஆளுங்களை எடுக்க திரும்பிட்டேன்... அதுல சில...

In safer Hands! :)



8 to 80 and a Bunch of Kaduvans! :)



தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?



ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!



நம்ப மதுரை ஜில்லா ஒளிஓவிய புலியைப் பார்த்து போட்டுக்கின ஒரு சூடு! :)



நளினமே.... உந்தன் பேர் பெண்மையோ?!



மொக்கைத்தத்துவம் 234234234: ஆம்பளையாளுக்கு எதெல்லாம் தமாசுன்னு பொம்பளையாளுக்கும், பொம்பளையாளுக மவுனத்தின் பின்னான ரகசியமும் ஒருத்தருக்கொருத்தரு புரிஞ்சுக்கிட்டதா சரித்திரமே இல்லை! ஹிஹி...



கடைசியாக.... வயலும் வாழ்வும்...




அம்புட்டுத்தேன் மேட்டரு! :)

கருத்துகள்

  1. ///அமீரக அண்ணாச்சியின் சமீபகால மொக்கைகளின் காரணம்,///

    ஆனாலும் நீரு ரொம்ப நல்லவருய்யா...
    சமீப காலமாத்தான் மொக்கை போடுதாரு அவருங்குற் மாதிரி சொன்னதை நெனச்சு.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. முடியலை.. நல்லா இருங்கடே!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான படங்கள். இவற்றைப் பார்த்தவுடன், நாமும் இங்கு செல்ல வேண்டுமென உணர்வை ஏற்படுத்தி விட்டன. :-)

    பதிலளிநீக்கு
  3. //போலி கம்யூனிஸ்ட்டான மோகந்தாஸுக்கு ஏணிந்த ஆணாதிக்க வெறி, //

    அய்யோ அய்யோ, உங்கக்கிட்ட எத்தனை தடவை சொல்லி அனுப்பிச்சேன். திரும்பவும் தப்பா சொல்றீங்களே.

    நான் மார்க்ஸிஸ்டு, மார்க்ஸிஸ்டு, மார்க்ஸிஸ்டு.

    அந்த ஊரில் கண்ட பூஞ்சிரிப்பு, பிரம்மாதம். இன்னும் அந்த நேரம் நினைவிருக்கிறது, எவ்வளவு அழகான வெட்கம், எவ்வளவு அழகான நளினம். இந்தக் காலத்துப் பெண்கள் கிட்ட இதையெல்லாம் பார்க்கிறப்ப எவ்வளவு சந்தோஷமா இருந்தது. :))))))))

    நான் எடுத்த அந்தப் பெண்ணுடைய ஃபோட்டோ முழுக்க ஷேக் ஆகிவிட்டது. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதற்கென்ன நீங்கள் தான் அருமையா எடுத்திருக்கீங்களே!

    பதிலளிநீக்கு
  4. //
    குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?
    //

    touching :)

    பதிலளிநீக்கு
  5. //
    குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?
    //

    touching :)

    பதிலளிநீக்கு
  6. போட்டோக்களும் அதற்கான கமெண்ட்ஸும் அருமை.

    பதிலளிநீக்கு
  7. Kalakkureenga Ilavanji, blogs'um fotos'um. (I presonally like Bylakuppe snaps more than Melkote).

    Sari... Santhadi saakkula Naathan, PV pakkathula en perai pottu yenya maanathai vaangureeru? Avanga fotos'ai paakkuravanga, thirumbi vanthu ennoadathai paatha kaari thuppa maattaanga?

    பதிலளிநீக்கு
  8. பூஞ்சிரிப்பு பொண்ணு எக்ஸலண்ட். பாத்துட்டே இருக்கணும் போல ஒரு சிரிப்பு. கலக்கிட்டிங்க.

    பதிலளிநீக்கு
  9. அட்டகாசம் ஆசானே ;)

    \\என்ன... கற்றறிந்த சான்றோர்கள் கூட இருந்ததால் பால்ய நண்பர்களுடனான பயணங்களில் பேச்சுவாக்கில் கெட்டவார்த்தைகளை அள்ளியிறைப்பதில் கிடைக்கும் சந்தோசம் மட்டுமே அன்றைக்கு இல்லை.. :) )
    \\

    ;))))

    \\ஊரினுள் கண்ட ஒரு புத்தம்புதிய பூஞ்சிரிப்பு! :)

    ஓட்டைப்பல்லின் வழியே சிதறும் ஒரு மதுரச்சிரிப்பு!

    In safer Hands! :)

    தீனி கிடைத்த/கிடைக்காத பொடுசு... குழந்தைத்தன்மையை அடக்கியாளும் சக்தி காவிக்குண்டா என்ன?\\


    அழகு...கலக்கிட்டிங்க ;))

    பதிலளிநீக்கு
  10. Vaaarthaigalum, Pugaipadangalum ondrukku ondru potti podugirathu..I really missed taking a portrait of that girl..Kalakals.
    -nathan

    பதிலளிநீக்கு
  11. ராயல், பிரகாஸ், வீரசுந்தர், ரவிசங்கர், ஜேகே, அனானி, மனதின் ஓசை, தம்பி, கோபி...

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி! :)

    அண்ணாச்சி,

    // ஆனாலும் நீரு ரொம்ப நல்லவருய்யா...//

    ஆஹா! நீராவது சொன்னீரே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே! :)

    // சமீப காலமாத்தான் மொக்கை போடுதாரு //இதுமட்டுமா? நீரு மொக்கைக்காக தமிழ்மண சந்திப்பில் ஒரு உரிமைப்போராட்டம் நடத்தியபோதே எனக்கு டவுட்டு ஓய்! :)

    பதிலளிநீக்கு
  12. தாஸு,

    // நான் மார்க்ஸிஸ்டு //

    அதைத்தான்யா நானும் சொல்லிருக்கேன், நீர் சொல்லிக்குடுத்த மாதிரியே!!! ;)

    ஆதி,

    சும்மாருங்கப்பு.. உங்க ரேஞ்சு என்னன்னு எங்களுக்குத் தெரியும்! :)

    நாதன்,

    குருவே வரணும். ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  13. எல்லா படங்களும் ரொம்ப அருமையாக இருக்கு :))

    சில குறிப்பிட்ட படங்களாக பாப்பாவின் புன்சிரிப்பு!

    குளத்தின் கரையோரத்து ஆசிர்வதிக்கும் பெரியவர்!

    அந்த திபெத்திய பொடிசு!

    கலக்கல்ஸ் :))))

    பதிலளிநீக்கு
  14. லக்கி, ஆயில்யன், ஓசையார்,

    டாங்ஸ்... :)

    பதிலளிநீக்கு
  15. நகைச்சுவையும் கண்ணீரும் கலந்து பதிவுகள் பல தரும் வலையுலகக் காமதேனுவே.... மீண்டும் உங்களது பதிவுகளைக் கண்டு சொல்லொனா மகிழ்வை மனம் எய்துகிறது.

    பதிவுகளில் எழுத்துகள் மட்டுமல்ல புகைப்படங்களும் கவிபாடும் என்று காட்டிய கற்பகதருவே! இன்னும் எத்தனை புகைப்படங்கள் தருவே? :D அட நெறையக் குடுங்கன்னு சொன்னேன். :)

    பதிலளிநீக்கு
  16. //CVRன் சமூகத்தவறுகளின் மீதான கோவம்//

    அட! இது வேறயா???
    நம்ம க்ரைம் ரேட்டு கூடிக்கிட்டே போகுதே!!!:P
    அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :D

    பதிலளிநீக்கு
  17. அருமையா இருக்கு ...
    கமென்ட்சும் !!! :) ...
    முதல் பரிசு, பாட்டி தாத்தாவுக்கு (போட்டோவும், கமென்ட்டும்),
    இரண்டாவது, ஏரிக்கரை சிற்பத்திற்கு :) ...
    மூணாவது அந்த தெப்பக்குளம் மொட்டை மற்றும் சில ... கதை சொல்லும் முகங்களுக்கு ... (இரண்டாவது "டை"ன்னு வச்சுக்கலாம்!)

    ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :)

    பதிலளிநீக்கு
  18. படங்களும், கமெண்ட்ஸுகளும் கலக்கல்!

    பதிலளிநீக்கு
  19. //கோவிலில் கொம்பூதும் திபெத்திய பிட்சுகள்.. ஊதுங்கய்யா! ஊதுங்க! சீனாவரைக்கும் கேக்கனும்!//

    இதைப் படிக்கும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டதென்னமோ உண்மை.

    பதிலளிநீக்கு
  20. பாபா, சதீஷ், தங்கமணி, வேளராசி, விங்ஸ்,

    ஊக்கங்களுக்கு நன்றி! :)

    ஜீரா, வாய்யா! இப்பவாச்சும் வாக்கு குடும்வே! உம்ம கல்யாணத்துக்கு நாந்தேன் போட்டாகிராபருன்னு! :)

    சிவிஆர்,

    // அப்படி என்ன பொடலங்கா சமூகத்தவறு செஞ்சிட்டேன்னு எப்பயாச்சும் சொல்லுங்க அண்ணாச்சி!! :D//

    அடடா! அதை இப்படி படிக்கனும்...

    “சமூகத்தவறுகளின் மீதான CVRன் கோவம்”

    தப்புக்கு மாப்பு! :)

    மதுரா,

    // ஆமா ... காப்பி ரைட்டெல்லாம் இல்லையா? :) திருடிக்கலாமா? :) //

    யாம் பெற்ற இன்பம்.. :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர