முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆனந்தவிகடனும் ஒரு விமர்சன எரிச்சலும்இந்த வார விகடனில் (அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) சில எரிச்சலூட்டும் பகுதிகள்.

கவர்ஸ்டோரில ஆரம்பிக்குது உப்புக்காகிதம் வைச்சு மூஞ்சுல தேக்கற மாதிரியான எரிச்சல்! திமுக மகளீர் மாநாடு மூலம் போட்டி கனிமொழிக்கும் கயல்விழிக்குமாம்! ஊருல யாருக்குமே தோணாத பத்தவைக்கற நேக்குல இப்படி ஒரு கட்டுரை. இதை இப்படி எழுத விகடன் எதுக்கய்யா?

பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? என்ன விமர்சனமோ! என்ன அளவுகோலோ!!

அடுத்தது, வலைப்பதிவுகளில் வந்த விமர்சனங்களின் தரத்தில் 25% கூட இல்லாமல் பக்கா சப்பையான ஒரு விமர்சனம் தசாவதாரத்துக்கு. கமல் மட்டும் சூப்பர். மத்தபடி இது நொட்டை.. இது நொள்ளைன்னு... திரைக்கதைல மேஜிக்கும் கதைல லாஜிக்கும் இல்லைன்னு ஒரு குத்தம் கண்டுபுடிச்சிருக்காங்க! இதுபோக கதை பல தளங்களில் பயணிப்பதால் சாதாரண ரசிகன் குழம்பிருவானாம்! ஆமாமாம்! நம்ப ரசிகருங்க இரட்டைவேடத்தில் குழம்பாமல் இருக்க இளையதளபதி மாதிரி ஒரு கொடுமை மூனு நாள் தாடியோடவும், இன்னொரு கொடுமை ரெண்டேமுக்கா நாள் தாடியோடவும்(நன்றி: பெயர் மறந்த சகபதிவர்) வந்தா சரியா இருக்குமா? இதெல்லாம் விட கொடுமை இப்படத்துக்கும் 43 மார்க்காம்! இது எந்த மார்க்கு? குருவிக்கும், பழனிக்கும் போடற அதே மார்க்கு! இந்தப்படத்துக்கும் 43ன்னா வேற எந்தப்படத்துக்குயா நீரு 80 மார்க்கு போடுவீரு? 100க்கு 100 வாங்கற அப்படியாப்பட்ட ஒரு கதையும் திரைக்கதையும் உம்மகிட்ட இருந்தா கோடம்பாக்க மக்களுக்கு கொடுத்து ஒதவறது தானேயா! புண்ணியமாப்போகும்.

இத்தனை நொட்டை சொல்லற? அப்பறம் என்ன மயித்துக்குளே விகடனை வாங்கறன்னா கேக்கறீங்க?! அதுவும் சரிதான். இனிமே அடுத்த வெள்ளிக்கெழமை வரை வாங்கவே மாட்டேன்! :(

P.S: என்னய்யா இது பின்னூட்ட சைசுல பதிவுன்னு திட்டாதிங்க... இன்னைக்கு கோட்டா அவ்ளவ்தான். படம் எதுக்கா? விகடன் மாதிரியே இந்தபதிவும் மொத்தமா மொக்கையாகாம இருக்க! )

கருத்துகள்

 1. எல்லா வாரமும் வெள்ளிக்கிழமை காலையில் வரும் எரிச்சல் மெள்ள மெள்ள செவ்வாய் புதனில் மறைந்து வியாழன் அன்று முழு புத்தகத்தையும் முடிக்கத்தோன்றும் மீண்டும் வெள்ளி காலையில் எரிச்சல் இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா...

  பதிலளிநீக்கு
 2. பள்ளிகூடம் போகயில வீட்டு திண்ணையில உக்காந்து விகடன வெளியில வெச்சி உள்ளாற குமுதம் வெச்சு படிப்போம். இப்போ அது எல்லாம் தேவையில்ல. எல்லா பொஸ்தகமும் ஒரே மாதிரி தான் இருக்கு. ஒண்ணுல நமீதா செவப்பு கலர் சட்ட போட்ட படம் இருந்த இன்னொன்னுல பச்ச கலர் சட்ட. அவ்வளவு தான் வித்தியாசம்.

  பதிலளிநீக்கு
 3. விகடன் மார்க்குக்கு அவர்களின் முதுகில் நீங்க போட்டு இருக்கும் மார்க்கு சூப்பர்.

  100 மார்க் வேண்டுமா ?

  இப்பெல்லாம் பாலசந்தர் டைரக்சனில் படம் எதுவும் வருவதில்லையே.
  :)

  பதிலளிநீக்கு
 4. //(அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! ) //

  :)))

  ஹா ஹா ஹா...

  பதிலளிநீக்கு
 5. சன் டிவிக்கு விற்கப்படாத படங்கள் எல்லாத்துக்குமே விகடன் இப்படித்தான் மார்க் போடும் :-)

  BTW, குருவி படத்துக்கு பின்னால் நடக்கும் சதித்திட்டங்களை தோழர் உடன்பிறப்பு kalaignarkarunanidhi.blogspot.com வலைப்பூவில் வறுத்தெடுத்திருக்கிறார். கண்டு பயனுறவும் :-)

  பதிலளிநீக்கு
 6. haha...

  whole tamil peoples having same feeling… ;)

  but still I’m expecting everyweek, I’m also going to stop this week :)

  But biggest habited for me to read kumudam and vikadan everyweek… :(

  nice post

  பதிலளிநீக்கு
 7. லக்கி மற்றும் கோவி இருவரும் உண்மையை எழுதி இருக்கிறார்கள், ஹலோ நீங்களும் தான்யா

  பதிலளிநீக்கு
 8. //இந்தப்படத்துக்கும் 43ன்னா வேற எந்தப்படத்துக்குயா நீரு 80 மார்க்கு போடுவீரு?//

  :)

  பதிலளிநீக்கு
 9. //100க்கு 100 வாங்கற அப்படியாப்பட்ட ஒரு கதையும் திரைக்கதையும் உம்மகிட்ட இருந்தா கோடம்பாக்க மக்களுக்கு கொடுத்து ஒதவறது தானேயா//

  :-)))) சரியான கேள்வி...

  பதிலளிநீக்கு
 10. ஹேராமுக்கு விகடன் கொடுத்த மார்க்கை எந்தக் கணக்கில் பார்ப்பீர்கள் இளவஞ்சி?

  பதிலளிநீக்கு
 11. \\இதெல்லாம் விட கொடுமை இப்படத்துக்கும் 43 மார்க்காம்! இது எந்த மார்க்கு? குருவிக்கும், பழனிக்கும் போடற அதே மார்க்கு! இந்தப்படத்துக்கும் 43ன்னா வேற எந்தப்படத்துக்குயா நீரு 80 மார்க்கு போடுவீரு? 100க்கு 100 வாங்கற அப்படியாப்பட்ட ஒரு கதையும் திரைக்கதையும் உம்மகிட்ட இருந்தா கோடம்பாக்க மக்களுக்கு கொடுத்து ஒதவறது தானேயா! புண்ணியமாப்போகும். \\

  :)))

  பதிலளிநீக்கு
 12. இந்த படம் பற்றி விமரிசனம் பண்ணக்கூட ஒரு தகுதி வேண்டும்.
  கமலின் உழைப்புக்கே இந்த படத்துக்கு கண்ணை மூடிட்டு மார்க் போடலாம்.
  பத்திரிகை விமரிசனங்களை யாரும் இப்போது நம்புவதில்லை.

  பதிலளிநீக்கு
 13. என்னது இந்த மாசத்திலேயே மூணு போஸ்ட் இதுவரைக்கும்? உடம்பு கிடம்பு சரி இல்லையாங்க இளவஞ்சி?

  பதிலளிநீக்கு
 14. //பருத்திவீரன் படத்துக்கு விமரிசனமாக எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுட்டால் அறிவுசீவி விமர்சனமாக இருக்காதேன்னு சன் டீவி விமர்சன பன்ச் மாதிரி “க்ளைமாக்ஸ் வக்கிரம்”னு ஒரு பிட்டை போட்டது நினைவிருக்கலாம். இப்போ இந்தவாரம் 32 நபர்களால் ஒரு அபலைப்பெண் பலாத்காரப்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் பற்றிய ஒரு கட்டுரை. “உறைய வைக்கும் பூடகமான பலாத்கார காட்சிகளைக் கொண்டது” அப்படின்னு விமர்சனம். ஆனால் இதில் வக்கிரம் என்ற் வார்த்தையே காணோம்! அதென்னய்யா அமீர் எடுத்தால் வக்கிரம்! இன்னொருத்தரு எடுத்தால் சமூக அவலங்களைக் காட்டும் படைப்பா? //
  என்னங்க நீங்க விகடனை இப்படி சொல்லிட்டீங்க. அவங்க எப்பவுமே தன்னை நடுநிலையாளரா காமிக்கணுமுன்னு எந்த பிட்டை போட்டாலும் இப்படி கண்டுபிடுச்சி துப்பு துப்புன்னு துப்பனீங்கன்னா, அப்புறம் அவங்க முக்காடு முழுசும் நெனஞ்சிடுச்சின்னு அதையும் எடுத்திடுவாங்க, ஆமாம்!

  பதிலளிநீக்கு
 15. //(அண்ணாச்சி: அதென்ன இந்தவார விகடன்? அட்டையக் கிழிச்சா வாராவாரம் அதே விகடன் தான் டே! )//
  ஏன்யா இளவஞ்சி, எனக்கு ஜெமோ மாதிரி உமக்கு நான் தான் கிடைச்சேனா? நலல இருங்கடே!! :-)

  பதிலளிநீக்கு
 16. ////இத்தனை நொட்டை சொல்லற? அப்பறம் என்ன மயித்துக்குளே விகடனை வாங்கறன்னா கேக்கறீங்க?! அதுவும் சரிதான். இனிமே அடுத்த வெள்ளிக்கெழமை வரை வாங்கவே மாட்டேன்! :(////

  :-)))))

  பதிலளிநீக்கு
 17. vikatan has any guts to review their prodution venture 'kolangal' serial!

  பதிலளிநீக்கு
 18. கிருத்திகா,

  ம்ம்ம்... அன்னைலேர்ந்து இன்னைக்கு வரைக்கும் குமுதம் குமுதமாத்தான் இருக்கு! ஆனால், இந்த விகடனை படிச்சுப்பழகியவர்களால் தான் “இளமை விகடன்”ன்னு விடற பொருந்தாத அலப்பறைய தாங்கமுடியாம நாமளே பெருசுக மாதிரி பொலம்பறோம்னு நினைக்கறேன்.

  ராசா,

  என்னையப் பத்தி தெரிஞ்சுக்கிட்டும் இப்படி இஙிலீசுல திட்டுனா என்னப்பு அர்த்தம்?

  பிரகாஷ்,

  அதோட, விகடன்ல நடிகைகளை சிலாகிக்கன்னு சில டெம்ப்ளேட் வார்த்தைகள் வைச்சிருக்காங்க.. சிலுசிலு சுனானி, ரகளை ராகினி, பளப்பள பன்னிக்குட்டின்னு.. அதைப்படிக்கறப்ப கிடைக்கற எரிச்சல் இதைவிட அதிகம் :(

  இகொ, கயல்விழி,

  படம் மட்டும்தான் சூப்பரா! ஓகே

  படத்தின்மீது க்ளிக்கி வரும் பெரிய படத்தை டெஸ்க்டாப்பா மாத்திப்பாருங்க.. அப்படியே நம் மனக்கண்ணின் வழியே ஒலகத்தை பார்க்கற மாதிரியே இருக்கும்! :)

  பதிலளிநீக்கு
 19. கோவி,

  // இப்பெல்லாம் பாலசந்தர் டைரக்சனில் படம் எதுவும் வருவதில்லையே.//

  இந்த அதிர்சிய தாங்கமுடியாதுன்னுதான் அவரு படமே எடுக்கறதில்லை போல! :)


  லக்கி,

  // குருவி படத்துக்கு பின்னால் நடக்கும் சதித்திட்டங்களை தோழர் உடன்பிறப்பு kalaignarkarunanidhi.blogspot.com //

  படிச்சேன். ஏன்யா இப்படி? அந்தக்காலத்து தீப்பொறி ஆறுமுகம் மேடைல வைக்கற குற்றச்சாட்டு மாதிரியே இருக்கு! :)


  மஸ்தான், ஜேக்கி, விக்னேஷ், ச்சின்னப்பையன், ரம்யா, காஞ்சனா, ராப், வாத்தி,

  நன்றி! :)


  அண்ணாச்சி,

  // எனக்கு ஜெமோ மாதிரி உமக்கு நான் தான் கிடைச்சேனா? //

  உமக்கும் ஜெமோக்கும் நடுவுல ஏதாச்சும் எலக்கியவியாதிங்க சண்டையா இருக்கும். எனக்கும் உமக்கும் அப்படியா?! :)

  நந்து,

  //உடம்பு கிடம்பு சரி இல்லையாங்க இளவஞ்சி? // நெசமாவே சளி புடிச்சு ஆட்டுதுங்க.. அதனால யாரையாவது புடிச்சு இப்படி மெல்லலாம்னு.. ஹிஹி...

  அரன்,

  // vikatan has any guts to review their prodution venture 'kolangal' serial! //

  விடுங்கப்பு. அதெல்லாம் பிசினெசு. எனக்கு எரிச்சலெல்லாம் இப்படி மொக்கையா மார்க்கு போடறேன்னு விடற அலும்புதான்! :(

  அனானி,

  // ஹேராமுக்கு விகடன் கொடுத்த மார்க்கை எந்தக் கணக்கில் பார்ப்பீர்கள் இளவஞ்சி?//

  அதைத்தான் சராசரி மக்களுக்கு புரியாதுன்னு சொல்லிச்சொல்லியே ஊத்தி மூடிட்டமே!

  ஹேராமின் அருமை பெருமை புரிஞ்சே அவங்க அம்புட்டு மார்க்கு போட்டிருக்கட்டும். இந்த இந்த புதுமுயற்சியானதொரு படத்துக்கு விமர்சனமா சராசரிங்களுக்கு புரியாதுங்கறது என்ன வகையான குறைன்னு புடியலை! ஹேராமுக்கு 63ஆ? சரி.. சராசரிங்களுக்கு புரியற குருவிக்கு 42ஆ.. சரி! இதுக்கும் அதுவேதான்னா எப்படிங்க. நீங்களே சொல்லுங்க? தசாவதாரம் என்ன சாதாரண மசாலாபடத்தோட சேர்த்திங்கறீங்களா? இப்படி ஒரு முதிர்ச்சி அடையாத கமல் ரசிகன் மாதிரி முதல் 10 நிமிசம் மட்டும் சூப்பரு.. மத்ததெல்லாம் ஒரு லெவலுக்கு மேல இல்லைன்னு சொல்லிட்டுப்போறது தான் விமர்சனமா? ஒரு எழவும் புரியலை! கமல் ஒரு வெர்சடைல் ஆக்டரையா... அவரைத்தூக்கி அறிவாளிங்கற தங்கக்கூண்டுல அடைச்சு அடைச்சே அவரோட அறிவுசீவி ரசிகருங்க அவருக்கு சங்கூதறாய்ங்க! :(

  எழுதிவைச்சுக்கங்க.. அடுத்து வரப்போற மகாகாவியம் ‘வில்லு'க்கு மார்க்கு 42தான்!

  பதிலளிநீக்கு
 20. keep it cool, see movie as a movie...no sentiments. All kuthadees getting money and doing their buiness. Why we waste our time in this sort of things. Come on Ilavanji... you have much more potential, write some thing very interesting...best regards...

  பதிலளிநீக்கு
 21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசானே ;))

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு