முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Postcards from "Scotch"land




















கருத்துகள்

  1. நன்றாக இருக்கின்றன்
    சில கமெண்டுகள் ( குறை சொல்லன்னா எப்பிடி ! )

    1. எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா, நீலம் , வெள்ளை, பச்சை எல்லாம் கொஞ்சம்
    சாம்பலடிச்சி இருக்கு !

    2. தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும், உதாரண்திற்கு ( படங்கள் 2460, 1619). சாயக்கூடாது ( படங்கள் 2403,2596)

    பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை!

    பதிலளிநீக்கு
  2. வாத்தி, படம் எல்லாமே அம்சம். ஆமா இதெல்லாம் நீங்க எடுத்ததா? பட்டாம் பூச்சியும், இடிஞ்ச வீடும் சூப்பரோ சூப்பரு

    பதிலளிநீக்கு
  3. அட்ரா சக்கை அட்ரா சக்கை...

    அடுத்தது ஸ்டாம்ப் from அயர்லாண்ட்???

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அருமை!!!

    முக்கியமாக சாய்மனை கொடுத்துவைச்சிருக்கிறது. இடுகையோட தலைப்புக்கு ஓரளவு உதவியிருக்குன்னு நினைக்கிறேன். ;)

    மேலும் எதிர்பார்க்கிறேனாக்கும்.

    -மதி

    பதிலளிநீக்கு
  5. பாபா, இளா,

    நாந்தான்.. நானேதான்.. நம்புங்கப்பு! :)

    தேவ்,

    இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் :)

    உதய்,

    ஸ்டாம்ப் from அயர்லாண்ட்??? போயிட்டு வந்து போட்டுருவோம்! :)

    மதி,

    சாய்மனை கொடுத்துவைச்சிருக்கறது படமெடுக்கவும் தலைப்புக்கும் மட்டுமே உதவியது.. எனக்கு இல்லைன்னு சொன்னா நம்பனும் :)

    வருகைக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. mm...m..

    a n& சொன்ன படங்கள் எது எதுன்னு தெரியலையே!

    பதிலளிநீக்கு
  7. A n& ஜி,

    குருவே சரணம்! அடிக்கடி வரணும்! :)

    // குறை சொல்லன்னா எப்பிடி // குறையா? நீங்க வேற... அடிக்கடி வந்து மண்டைல குட்டி சொல்லிக் குடுங்க...

    // தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும்// Agreed. மண்டைல ஏத்திக்கறேன்...

    // எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா // இங்க ஊரு பேருக்கு ஏத்தாமாதிரி எப்பவும் மப்பும் மந்தாரமாவுமே இருக்கு! :)

    இந்த மாதிரி நேரங்களில் இந்த சாம்பலடிக்கற குறையை போக்க என்ன செய்ய வேண்டும்?

    மிகக் குறைந்த அளவுக்கு ஷட்டரைக் குறைத்து EV0 பாலன்ஸ் செய்வது உதவுமா?

    படம் எடுக்கும்போதே இந்த சாம்பலடிப்பதை கண்டறிய ஏதேனும் வழி உள்ளதா? அல்லது ஹிஸ்டோகிராம் தான் ஒரே வழியா?

    அல்லது வேற வழியில்லாமலும் எடுக்கத்தெரியாமலும் இப்படி எடுத்துத் தொலைத்துவிட்டால் போட்டோஷாப்பில் சரிசெய்ய என்ன செய்யனும்?

    // பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை! // ஊக்கங்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  8. தருமிசார்,

    படங்களின் மீது சுட்டியை வைத்தால் தெரிகிற லிங்க்கின் கடைசியில் நம்பர் வருது பாருங்க.. அதை வைத்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    படங்களுக்கு தனித்தனியா பெயரிட்டுச் சொல்லாமல் விட்ட சிரமத்திற்கு மன்னிக்க! :)

    பதிலளிநீக்கு
  9. சுட்ஜி,

    எட்டிப்பார்த்தமைக்கு நன்றி!

    pinony,

    அது ஒரு அந்தக்கால பாய்ண்ட் அண்ட் ஷூட்டுங்க :) Sony DSC H1

    பதிலளிநீக்கு
  10. ஸ்காடச்லாந்து போயும் ஸ்காட்ச் அடிக்காமல் கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை வன்மையாக கண்டிக்கின்ற வேளையிலே, படங்கள் அருமையென்று சொல்லிக்கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி, சாம்பலடிப்பதை/வெளிறிப் போவதை குறைக்க சில வழிகள்
    1. சிறிய அபெர்ச்சர் ( F11, F16 , F22 )
    2.Under expose, பிறகு photoshop பார்த்துக் கொள்ளலாம்
    3. வானதிற்கு ஒருப்படம், நிலத்துக்கு ஒருப் படம், பிறகு இரண்டையும் இணைக்கலாம்.
    4. யோடா சொலவதுப் போல
    Histogram use, you must !!!

    போட்டாஷாப்பில் கொஞ்சம் ஒப்பேற்றலாம். எனது ஒரு அவசர முயற்சி
    முன்

    பின்


    ( உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும். )
    You get the idea right ?

    பதிலளிநீக்கு
  12. ஒளி ஓவியர் இளவஞ்சி வாழ்க. ஒளிக்கொல்லர் இளவஞ்சி வாழ்க. ஓளியாஜலிஸ்ட் இளவஞ்சி வாழ்க. ஒளியாளி இளவஞ்சி வாழ்க. ஒளிப்பேராளி இளவஞ்சி வாழ்க.

    பதிலளிநீக்கு
  13. ராம்ஸ்,

    // கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை // இப்பவெல்லாம் இதுக்கும் கொடுப்பினை இல்லை அய்யா! அந்த சோகக்கதையை கேக்காதீரும்! :(

    A n&,

    டிப்சுகளுக்கு நன்றி! மனசுல ஏத்திக்கறேன்.

    // உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும் // அட ஏங்க நீங்க வேற! :)

    அடுத்தமுறை வர்ணங்களுக்கு முக்கியத்துவம் வருமாறு முயற்சிக்கிறேன். கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அளவா ஒரு கோட்டர் மட்டும் அடிச்சிட்டு எடுத்து இருப்பீங்க போல இருக்கு...எல்லா படமும் சூப்பர்...:-)

    பதிலளிநீக்கு
  15. little angel கையிலே பட்டம்பூச்சி.. அட்டகாசம்.. poetic ஆ இருக்கு

    பதிலளிநீக்கு
  16. இன்றைய கிஸ்கிஸ்:
    போட்டிக்கான பங்களிப்பெல்லாம் அற்புதமாக இருப்பினும் அவற்றைச் சுட்டது சுப்புவா ருக்குவா என்னும் சந்தேகம் சில துப்பிறியும் ஜிங்கங்களுக்கு வந்திருக்கிறதாம்.ருக்கு பிடித்த படங்களைத் தான் எடுத்ததாய் அடிக்கடி படம் காட்டிவரும் சுப்புவின் வண்டவாளங்கள் விரைவில் தண்டவாளம் ஏறுமாமே???

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!

" மா ப்ள.. வீட்டுல பொண்னு பாக்கறோம்னு ஒரே தொல்லைடா... மனசே சரியில்லை! ஒரு தம் போட்டுட்டு வருவமா?" "மாம்ஸ்.. இந்த பொண்னு பார்க்கற மேட்டரைப்பத்தி என்ன நினைக்கற?! ஒரே கொழப்பமா இருக்கு.." "டேய் மக்கா.. கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீக! அப்பறம் என்ன மாதிரி குத்துதே குடையுதேன்னு பொலம்பாதீக.. சொல்லிட்டேன்" "வீட்டுல நிம்மதியா ஒரு 5 நிமிசம் இருக்க முடியலைடா! இம்சை தாங்கலை! இவளை கட்டிவைச்ச எங்க அப்பன் மட்டும் இப்ப கைல கெடைச்சா.." "டேய்.. என்னடா இது.. ஆறு மாசம்கூட ஆகலை.. அதுக்குள்ள டைவர்சு கீவர்சுன்னு பெரிய வார்த்தையெல்லாம் விடற? கிறுக்கா புடிச்சிருக்கு?!" மக்கா! இதெல்லாம் கூட்டாளிக கூட பொங்க போடறப்ப அடிக்கடி கேக்கறமாதிரி இருக்கா? இந்தக் காலத்துல வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கூட கல்யாணம் நடந்து அதை ஒலகமே சேர்ந்து கூடிக் கும்மியடிச்சு கொண்டாடுது! ஆனா பயபுள்ளைங்க நாம கல்யாணம் கட்டறதுன்னா மட்டும் எத்தனை கொழப்பம்? எத்தனை சிக்கல்! ஏண்டாப்பா இப்படி? கை நெறைய சம்பாதிக்க தெம்பிருக்கு! ஆபீசு அரசியல்ல பிண்ணிப் பிணைஞ்சு போராடி மேல வர