முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நண்பர்களுக்கு ஒரு செய்தி...




நண்பர்களுக்கு,

எனது கடைசி இரண்டு பதிவுகளுக்கான சுட்டிகள் ஆட்சேபகரமான வார்த்தை பிரயோகங்களுக்காக தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவைகள் அனைத்தும் வலைப்பதிவாளர் என்ற வகையிலான எனது கருத்துக்களே தவிர தமிழ்மணத்தின் இணை-நிர்வாகி என்ற வகையில் எழுதப்பட்டவைகள் அல்ல! எனது கருத்துக்களில் உண்மையிருக்கிறது என நான் நம்புவதாலும், எழுதப்பட்ட வகையில் என் தவறுகளை மறைக்க விரும்பாததாலும் அந்த பதிவுகளை அப்படியே விட்டு வைக்கிறேன்.

எனவே, தமிழ்மணத்தின் உறுப்பினர் என்றவகையில் அதன் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

எனது கருத்துக்களையும், உணர்வுகளையும் புரிந்துகொண்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும், தவறுகளை கடிந்துரைத்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்!

படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)

கருத்துகள்

  1. திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..??

    :) ( ஸமைலியாக்கும்)

    பதிலளிநீக்கு
  2. //படம் கொடுத்து உதவிய குழலிக்கும் என் நன்றிகள்! :)
    //
    ஹி ஹி.... ஒரிஜினலே உங்களுடையது தானே....

    பதிலளிநீக்கு
  3. முந்தைய பின்னூட்டத்தில், ஒரிஜினல் என்பதற்கு பதில் மூலப்படம் என்று தான் எழுதினேன் பிறகு அதை வைத்து ஒரு கடி இருக்குமே என்று ஒரிஜினல் என்றே சொல்லிவிட்டேன்

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. அய்யய்யோ ஸ்மைலியை விட்டுட்டேனே :-))))))

    பதிலளிநீக்கு
  5. இந்த க.க.4வது பாகம்... ?

    ஒன்னும் அவசரமில்லீங்க..

    :)

    பதிலளிநீக்கு
  6. // ராசா (Raasa) said...
    இந்த க.க.4வது பாகம்... ?

    ஒன்னும் அவசரமில்லீங்க..

    :) //

    என்னங்க இவ்வளவு அவசர படறீங்க? உங்க கல்யாணத்துக்குள்ள வெளிவந்துரும், இல்லியா இளா?

    :-)

    பதிலளிநீக்கு
  7. >> திருந்திய சிறுவன் இளவஞ்சி அப்படின்னு ஒரு பதிவு போடலாமா..?? >>

    இதையும் சேர்த்தே Ignore பண்ணுங்க இளவஞ்சி. ;)

    பதிலளிநீக்கு
  8. செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) ( ஸமைலியாக்கும்)

    குழலி,

    படம் நான் சுட்டதுதான்! ஆனால் சரியான இடத்தில் டிக் அடித்தது நீங்கதான்!

    நியோ,

    சரியாச்சொன்னீங்க! :)

    மற்றபடி மக்கள்ஸ்,

    சீக்கிரம் வர்றம்ப்பா! :)

    பதிலளிநீக்கு
  9. அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...

    இப்போதான் நிம்மதி..

    பதிலளிநீக்கு
  10. ///செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்! :) /////

    உங்களுக்குப் பரிந்து பேச வந்தால் இதுவும் சொல்வீர்கள் இதற்கு மேலும் சொல்வீர்கள்.... நீங்களும் தவறு செய்து உள்ளீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவறு செய்தவரை சிறியவர் என்றழைப்பது தவறில்லை

    பதிலளிநீக்கு
  11. //அப்பாடா, ராசா வார்த்தையை நானும் வழி மொழிகிறேன். 2 நாளா சென்செக்ஸை குமிய வச்சு குத்திட்டு இருக்காங்க... அங்கயும் போக முடியாம, இங்க தமிழ்மணத்துல எங்க குத்த போராங்கன்னு தெரியாம ஒரு மாதிரி சுத்திட்டு இருந்தேன்...//

    :-)

    பதிலளிநீக்கு
  12. ////செந்தழல் ரவி,

    உங்கள் வேலையை நீங்கள் திறம்படச் செய்யுங்கள்!////

    உன் வேலைய முதல்ல ஒழுங்காப் பாருய்யான்னு அர்த்தம்....

    ரவி, நமக்கு சம்பந்தமில்லாத இடத்துலே மூக்கை நுழைச்சா இப்படித்தான் மூக்கு சப்பையாப் போவும்.....

    பதிலளிநீக்கு
  13. சரி. இளவஞ்சி. உங்கள் விருப்பம் போல எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. இளவஞ்சி!'எப்போதும்'உங்களுடன்
    'நண்பர்கள்' நாங்கள் இருக்கிறோம்.

    அன்புடன்,
    (துபாய்)ராஜா.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

எடின்பரோ கோழி வறுவல்

இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு ! இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! ) தேவையான பொருள்கள்: அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர் வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு நிஜமாகவே தேவையான பொருள்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது ) பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு ) தக்காளி - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பற்கள் பட்டை, கிராம்பு -சிறிதளவு சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி தழை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1