முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரே ஒரு நாயும் சிறைபட்டுள்ள கண்ணாடிக்கூண்டும்...

கண்ணாடிக்கூண்டுக்குள் சிறைபட்டுள்ள ஒரு நாயின் சில பரிதாபப் புலம்பல்கள்...

"ஐயையோ! அங்கே ஒரு நாய் என்னைப்பார்த்து குரைக்கிறது!"

"பயமா இருக்கே! என் காதுக்கு அருகில் வந்து தன் கோரப்பற்களை காட்டி இளிக்கிறது!"

"ச்சே! அங்கே ஒரு நாய் கொஞ்சம்கூட லட்ஜையே இல்லாமல் அடிக்கடி தன் பின்புறத்தை தரையில் உரசிசொறிந்து தன் பொச்சரிப்பை தணித்துக்கொள்கிறது!"

"அங்க பார்த்தியா! தேவையானால் நக்கவும், தேவைப்படாத போது எச்சில் உமிழ்வும் பயன்படும் நீண்டு வளந்த என் அழகான நாக்கைப் பார்த்து அந்த நாய்களுக்கு ஒரே பொறாமை"

"தமாசையா தமாசு! அங்க ஒரு நாய் "தனக்குத்தானே திட்டத்தில்" தனக்குத்தானே நக்கிக்கொள்கிறது!"

"ச்சீச்சீ! ஷேம்.. ஷேம்.. பப்பி ஷேம்! எந்த நாய்களுக்கும் விரைகளே இல்லை!"

என்னங்க.. கேட்கவே பரிதாபமாக இருக்கிறதா?

கண்ணாடிக் கூண்டுக்குள் சிறைபட்ட நாய்க்கு சுற்றிச்சுற்றி பார்ப்பதெல்லாம் நாய்களாகவே தெரியாமல் வேறென்ன தெரியும்? தனக்கு காயடிக்கப்பட்டுள்ளதைக் கூட உணராமல் "குரைப்பது" மட்டுமே தொழில் என "சொல்லிக்கொடுத்து" வளர்க்கப்பட்ட நாய்க்கு கண்ணாடிக் கூண்டுகளுக்கு வெளியே மணிதர்கள் என்பவர்களும் இருக்கிறார்கள்... அவர்கள் "பேசுவார்"கள் என்பதையெல்லாம் உணர முடியுமா?! தன்னை சுற்றியுள்ள கண்ணாடிகளில் பிரதிபலிக்கும் தன் பிம்பம் தாண்டி பார்க்கவியலாமல் சிறைபட்டிருக்கும் நாய்க்கு கண்ணாடிகளுக்கு அப்பால் இருப்பவர்களை உணரத்தான் முடியுமா? முகத்தில் எதையோ மாட்டி மாட்டி தன் சுயமுகமே மறந்து பிரதிபலிக்கும் பிம்பங்கள் கூட தனது என உணரவியலாத பரிதாப நிலையிருக்கும் நாய்க்கு மற்றவர்களது உணர்வுகள், கொள்கைகள், நம்பிக்கைகள் என்பதன் மீதான மரியாதையை எதிர்பார்த்தீர்களானால் அது உங்கள் தவறல்லாமல் வேறென்ன?

வாயில் சலைநீர் ஒழுக கண்களில் வெறி மின்ன மற்றவர்களை கடித்துக் குதறுதாக எண்ணி கண்ணாடியில் தன்பிம்பத்தை தானே குரைத்துப் பிராண்டும் நேரம் போக யாருமே இல்லாத தனிமையை போக்க தன் குறியை தானே நக்குவது மட்டுமே உதவும் என்ற பரிதாப நிலையில் இருப்பது...


அந்நாயின் குற்றமல்ல! அது சிறைபட்டிருக்கும் சூழ்நிலையின் குற்றம்!




ஆகவே நண்பர்களே!

தயவு செய்து கோபப்படாதீர்கள்...
கடிக்கும் வெறிநாயை கல்லால்தான் அடிக்கவேண்டும் என முடிவெடுக்காதீர்கள்!

பரிதாபப்படுங்கள்!

தமாசைய்யா தமாசு பகுதி: இதற்கு எதுவும் இன்ஸ்பிரேசனல்ல! சொந்தபுத்தியுடனும், சுயஉணர்வுடனும் எழுதப்பட்ட சொந்த கருத்து!

கருத்துகள்

  1. I didnt comment on your first post about this issue. Though I didnt like it then, I understood that you wanted to make a point and made it very well indeed.

    Do you have to prove that again?

    You have a lot of better things to do, i guess...

    பதிலளிநீக்கு
  2. நம்ம பொழப்பே நாய் பொழப்பா இருக்கு... இதுல அதைய பார்த்து பரிதாபப் படறதாவது???

    பதிலளிநீக்கு
  3. //தமாசைய்யா தமாசு பகுதி: இதற்கு எதுவும் இன்ஸ்பிரேசனல்ல! சொந்தபுத்தியுடனும், சுயஉணர்வுடனும் எழுதப்பட்ட சொந்த கருத்து!//

    நெத்தியடி!!

    பதிலளிநீக்கு
  4. இளவஞ்சி,

    உங்கள் எழுத்தின் ரசிகன் நான். நீங்கள் ஆத்திரப்பட்டு இருக்கிறீர்கள் என தெரிகிறது. நட்சத்திர வாரத்தில் மனதை இளக்கிய பதிவுகள் இட்ட நீங்களா இப்படி?

    உங்களை கோபப்படுத்தியவர்களுக்கு வெற்றிகளை அளிக்க வேண்டாம். முடிந்தால் பதிவுகளை நீக்கிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  5. யார் அது பதிவுகளை நீக்க சொல்வது? நீக்காதீர்கள் இளவஞ்சி.

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி,

    நானும் வேடிக்கை பார்த்திருந்தவன் தான்.இவர்களைப்பற்றி உங்கள் பதிவிலிருந்தே.

    ********
    பொதுவாக இராமதாஸ்-பாமக ஆகட்டும் திருமாவளவன் - விசி ஆகட்டும் ஒரு கேலிக்குரியதான பார்வையாலேயே மேட்டுக்குடி நடைமுறைகளை, பண்பாட்டை, விழுமியங்களை தங்கள் அடையாளங்களாகக் கொண்ட ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணங்களாக இக்கட்சிகளின் போராட்ட முறைகள், தலைவர்களின் நிறம் தொடங்கி, அவர்களது மொழி, உடை, சாதி, பழக்கவழக்கங்கள் இவைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒரு பொதுவான உருவத்தை வெகுஜன ஊடகங்கள் மிக நுட்பமாக உருவாக்கும் வேளையில், தீவிர அரசியல் நோக்கங்கள் கொண்ட மேட்டுக்குடி இன்னொரு வழியாக இவர்களின் அரசியல் பங்குபெறலை எதிர்கொள்கிறது.

    இவர்களிடம் இருக்கும் சில போலித்தனங்கள், பொது அரங்கில் பேசக்கூடாததாக சித்தரிக்கப்படும் மொழியை பேசுவது (politically incorrect useage of language), சுயமுரண்கள், இவைகளை இவர்களுக்கு எதிராக திறம்படத் திருப்புவது அதன்மூலம் இவர்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குவதும் ஒரு உத்தி.


    இதை நான் 'சோ' உத்தி என்றழைப்பேன். இதைப்பற்றிய விரிவாக எனது பொய்மை இகழ் (http://bhaarathi.net/ntmani/?p=91) என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த வகை நக்கலின் மூலம் இவர்களை எதிர்கொள்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது.



    மிக மோசமான இந்த இழிந்த கீழ்நிலைப்படுத்தும் விமர்சனத்தை நீங்கள் சட்ட ரீதியாகவோ, வன்முறையாலோ எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் மூலம் இந்த எதிர்ப்பு சக்திகள் மேலும் பலமும் பயனும் பெறவே அது உதவும்.

    இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இவர்களுக்கு என்று எந்த அரசியல் தளமும் இல்லை.

    பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள்.


    இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.

    இப்படியான ஒரு 'சோ' தனமான அணுகுமுறையே வலைபதிவிலும் பமக-விசி குறித்து வைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை எதிர்கொள்ளும் சில நபர்களும் அந்த சக்திகளை இன்னும் வலுப்படுத்தியும், இன்னும் சில இடங்களில் அவ்வணுகுமுறை இருத்தலுக்கான ஒரே சக்தியாகவும் மாறிப்போயினர்.

    இதையேத்தான் இன்றும் வைக்கிறார்கள்.நாளையும் வைப்பார்கள்.


    இந்த நையாண்டிக்காரர்களின் பலமே அதை எதிர்த்து வாதிடுபவர் களிடமிருந்துதான் பிறக்கிறது. இவர்களோடு வாதிடுவதன் மூலம் அவர்களுக்கென்று ஒரு தரப்பும் (நியாயமும்) இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.


    இப்படிப்பட்ட ஆட்களை உங்களைப் போன்றவர்கள் எடுத்து காட்டுவது தமிழ் இன்டர்நட்டுக்கு நல்லதுதான்.

    இழப்பதற்கென்று எதுவும் இல்லா தவர்கள் இவர்கள்.முகத்தையும் மூடிக்கொண்டவர்கள் என்ன ம** போச்சு? இவர்கள் தமிழை ம** என்பார்கள். தமிழனை மயி*** என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி...என்ன ஆச்சி உங்களுக்கு...எப்படி ஆரம்பித்தது இது...ஏன் அவங்களை வீணா இழுத்தீங்க...உங்கள பத்தி ஏதாவது எழுதினாங்களா ? அப்படின்னா லிங்க் கொடுக்கவும்...

    மற்றபடி இந்த அளவுக்கு நீங்க கோபப்படுறதுக்கு அவங்க எதுவும் செய்து இருப்பாங்கன்னு தோணல..

    இதுக்கு பழைய நினைப்பு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமா எழுதி இருக்கார் ( ஒன்னும் பிரியல சாமி)

    உங்களுடைய கோபம் இல்லாத விளக்கத்தினை எதிர்பார்க்கும் ரவி...

    பதிலளிநீக்கு
  8. //கடிக்கும் வெறிநாயை கல்லால்தான் அடிக்கவேண்டும் என முடிவெடுக்காதீர்கள்!//
    லேட் ஞானோதயம்??!!

    //சொந்தபுத்தியுடனும், சுயஉணர்வுடனும் எழுதப்பட்ட சொந்த கருத்து! //
    சொந்தபுத்தியைப் பார்க்காம மடல் தட்டி விட்டுட்டேன். மன்னிக்கவும் :)..

    சரி சரி விடுங்க, நமக்கெல்லாம் வேலை இருக்கு, க.க தொடருங்க, நாங்க எல்லாரும் போகிற இடத்துக்கெல்லாம் சிலேட்டோட சுத்திகிட்டு இருக்கோம் :)

    பதிலளிநீக்கு
  9. இளவஞ்சி உங்கள் உணர்வுகளும், அறச்சீற்றமும் நியாயமானவையே. உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்கள் பலர் உள்ளனர். உங்கள் பணியைத் தொடருங்கள் :)

    பதிலளிநீக்கு
  10. இளவஞ்சி, காலம் கடந்து தான் நாய் கவிதை படித்தேன்! உங்கள் குரலின் நேர்மையை பாராட்டுகிறேன்! வலைப்பதிவாளர்கள் எல்லாம் நாய்கள் என் நினைத்து தான் தின்னதை தானே கக்கி அதை நக்கித்திரிகிறது ஒன்றின் பதிவில் பின்னூட்டமிட்டு சிலாகிக்கும் கூட்டம் இந்த கவிதையை தவறாக புரிவதன் அரசியல் விளங்கவில்லை!

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி!

    உங்களது இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட நாய்களுக்கு புரிந்தால் சரி....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது

எடின்பரோ கோழி வறுவல்

இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு ! இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! ) தேவையான பொருள்கள்: அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர் வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு நிஜமாகவே தேவையான பொருள்கள்: கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது ) பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு ) தக்காளி - 3 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 10 பற்கள் பட்டை, கிராம்பு -சிறிதளவு சோம்பு - ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை - ஒரு கொத்து கொத்தமல்லி தழை - ஒரு கொத்து பச்சை மிளகாய் - 6 கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1