ஒவ்வொருமுறை உதைபட்டாலும்
ஜிம்மிதான் கழற்றுமென் காலுறையை
அதில் எனக்கொரு வரம்புமீறலும்
அதற்கொரு ஆத்மதிருப்தியும்
தளைகலற்ற அன்பின்
சிறந்த சான்றை
தெரியாதவைகளாகவே இருக்கின்றன
நாயில்லா வீடுகள்
ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
ரெண்டுரூபாய் எலும்பும்
சரிசம குதூகலம்
எங்களுக்கும் அதற்கும்
உணவிற்கே அது
உண்மையாய் நடப்பினும்
நேர்மையுண்டு அதில்
நாம் அப்படியா என்ன?
சாதம் பற்றாத
கடைசி கல்யாணபந்திபோல
ஒரு குறையாகத்தான் இருக்கிறது
ஜிம்மிக்கொரு நிழற்படம் இல்லாததும்
அன்பு மறுதலிக்கப்பட
எப்பொழுதும் வாய்ப்பில்லை
அம்மாவிடமும் ஜிம்மியிடமும்
டேக் இட் பார் கிரான்டடுகள்
அனைவருக்கும் பார்த்துச்செய்ய
வீட்டுக்கொரு அம்மா
அம்மா மட்டும் பார்த்துக்கொள்ள
வீட்டுக்கொரு ஜிம்மி
அம்மாவும் ஜிம்மியும் ஒரேவகையில்
இருக்கும் வரை உதாசீனப்பட்டும்
போனபிறகு அங்கலாய்ப்பாய்
பேசப்பட்டும்
வண்டியில் மாட்டிய ஜிம்மி
கூழாய் போனபோது
கதறித்தீர்த்தார்...
அக்கா ஓடிப்போனபோது
"ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்"
என்றதோடு நின்ற அப்பா
இப்பொழுதும் போகிறது வாழ்க்கை
ஆளுக்கொரு அறையிலும்
அதில் டிவியும் ஃபோனுமாய்
வெட்கமாகத்தான் இருக்கிறது
ஜிம்மியைபற்றி கவிதையெழுதி
பெயர் வாங்கவும்
iLavanji,
பதிலளிநீக்குSuperb poem.. Keep it up..
ம்ம்ம் எங்க வீட்டிலும் ஒரு ஜிம்மி இருந்தான்.
பதிலளிநீக்குநல்லாருக்கு... தொடருங்கள்.
உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி...
பதிலளிநீக்குஉங்க கவிதை ஒவ்வொண்ணா படிச்சிக்கிட்டே வரேன். இன்னைக்கு தான் உங்க பதிவு படிக்கவே ஆரம்பிச்சுருக்கேன். எல்லாமே அருமையான பதிவுகள். ஜிம்மி கவிதை ரொம்பவே அருமை.
பதிலளிநீக்கு//ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும்
ரெண்டுரூபாய் எலும்பும்
சரிசம குதூகலம்..
எங்களுக்கும் அதற்கும்..//
இந்த வரிகளை ரொம்பவே ரசித்தேன்.
arumai, congrats
பதிலளிநீக்குசூப்பர்.
பதிலளிநீக்குஉங்கூட்டு ஜிம்மி மேரி எங்கூட்லயும் ஒரு மணிப்பய இருந்தான்.
அன்பு காட்டுறதுல சில சமயம் தாயையும் மிஞ்சுவான்.