முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓர் இரவுச்சுயம்வரம்

கூட்டிவந்த விலைமகளை நண்பன் கூடிக்களித்திருக்க எம் முறை வருமென்று நாங்கள் உள்ளிருக்கும் உக்கிரம் தாங்காது, அக்குளிள் உணரும் வியர்வையின் கசகசப்பாய் எங்கள் மனசு "உன்னோடு ஐவரானோம்!" நண்பனின் கூற்றின் இலக்கியத்தரம் உணராது "அப்போமேல ஐநூறு ஆகும்!" என்றதில் வெளிப்படுகிறது அவள் வாழ்வின் விலை "இன்னைக்குநா போடுரபோடுல இனி ஃப்ரீயாவே வருவாபாரு...!" குடையும் புண் எருதுக்கும் இன்பம் என்கிறது ஒரு காக்கை "பாவம்டா இவ... இவபுருசனே கஜாக்கா கிட்ட வித்துட்டானாம்..." உள்ளிருக்கும் காமத்தை கழிவிரக்கத் தோலால் போர்த்தியபடி இன்னொருவனின் இரங்கற்ப்பா வீட்டைக் கரையேற்ற இளமையை விலைகொடுத்த ஆறாறு வயது முதிர்கண்ணனுக்கு ஓயமறுக்கும் தவிப்பை ஆள தேடிவந்த விடமுறிவாய் இவள் அவர்களாவது தேவலாம்! காரியத்தில் கண்ணாய் நானோ அவர்களையிங்கே கடையனாய் காட்டிக் கொடுத்தபடி உணர்ச்சிகளின் வெறியென் உள்ளுணர்வை மிதித்துநசுக்க கையறு நிலையில் கவிதை செய்தபடி மனது விரைத்தவைகள் துவண்டபின்னாவது அவள் கைப்பையிலிருக்கும் ரெஜஸ்ட்ரோன் மாத்திரையும் ஆறாம்வகுப்பு சமூகஅறிவியலும் எதற்கென அறிய முயலுமா எங்கள் பகுத்தறிவு?

காலச்சுழிப்பில் தொலைந்(த்)தவைகள்..

உங்களுக்கு உங்கள் வாழ்க்கைநிரலை எவ்வளவு தூரம் பின்னோக்கி பார்க்க முடியும் என்றால் எங்கே இருந்து தொடங்குவீர்கள்? அம்மாவின் தாலாட்டு? முதல் பிறந்தநாள்? முடியிரக்கும் போது வெகு அருகில் பார்த்த தாய்மாமனின் முகம்? என் மூளையின் ஞாபககுவியலை எவ்வளவுதான் தோண்டினாலும், எனக்கு ஏனோ நான் முதன்முதலில் பள்ளிக்கு சென்ற (அலங்)கோலம் தான் நினைவுக்கு வருகிறது. இதற்கு காரணம், ஒருவேளை அதற்குமுன் ஒரு ஞானகுழந்தையின் முகத்தை புகைப்படம் எடுக்கும் அரிய வாய்ப்பை என்னை தவமிருந்து பெற்றவர்கள் தவறவிட்டதால் இருக்கலாம். அல்லது அன்றையநாள் கவருமெண்ட்டு பள்ளியில் சேர்ந்த நான் அந்த ஒன்னாப்பு வாத்தியாரின் சாம, தான, பேத மற்றும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்த வெற்றித்திருநாள் என்பதாகவும் இருக்கலாம். புத்தம்புது காக்கி நிஜாரும் வெள்ளை சட்டையும் மொடமொடக்க, மரச்சட்ட சிலேட்டும் பலப்பமும் மஞ்சள் பையில் பத்திரமாய் தோளில் தொங்க, நெற்றியில் திருநீரும் கையில் பிஸ்கேட்டுமாய்(இல்லை ஜவ்வு மிட்டாயா..?) என் தாத்தாவின் கையை பிடித்துக்கொண்டு என் மூளையை துளக்கி புடம் போட அந்த அறிவுக்கடலின் கரையை தொட்டதாக நினைவு...! வகுப்பறை வரை

நமக்கு மட்டும் தெரிந்தது...!?

அம்மாவின் புலம்பல் அப்பாவிடம்.. "நம்ம பயலுக்கு கோட்டி புடிச்சிருக்கு போல! தன்னப்போல இளிக்கான்... வெள்ளென பெரண்டு பெரண்டு படுக்கான்... காப்பிதண்ணீல கைய நனைக்கான்... நடுச்சாமத்துல மீசமயித்த ஒதுக்குரான்... வயசுப்பய மாதிரியா திங்கான்? அரை களி உருண்டய நா முச்சூடும் உருட்டறான்... ஒரு எழவும் வெளங்கல! காத்து கருப்பு கீது அடிச்சிருச்சா? நம்ப ஆத்தா கோயிலு கோடாங்கிய கூப்டுவுட்டு ஒத்த ரூவா முடிஞ்சி வச்சி ஒரு தாயத்து கட்டணும் போல...!" பாவம்.. அம்மாவுக்கு தெரியாது... உன் சிரிப்புக்கு முன்னால் கோடாங்கியின் தாயத்து எம்மாத்திரம் என்று...!

எப்போதோ... எங்கேயோ... சுட்டது...!

அம்மா இங்கே வா வா!!

அம்மா இங்கே வா வா! Arrest Warrant தா தா! வேலூர் ஜெயிலில் போட்டு கண்ணுல தண்ணியும் காட்டு! அப்புவும் ரவியும் கூட்டு சின்ன 'சாமி'க்கும் வேட்டு குடுத்தாங்க மாமீங்க பேட்டி சாயம் போச்சுது காவி வேட்டி பெருசுங்க பொருளுங்க குட்தாங்க கூடவே போட்டாவும் புட்ச்சாங்க எதிராளிய குத்தம் சொன்னாங்க மீதிய அமுக்கினு போனாங்க போஸ்டரு நோட்டிசு அடிப்பாங்க கட்டவுடுக்கு பாலும் ஊத்துவாங்க அந்த 'ஸ்டாரோட' குஞ்சு-கல காணோங்க பாலில்ல! ஒருபுள்ள போச்சுதுங்க அபலைங்க சோகமும் பார்த்தாச்சி அனுதாபமும் எரக்கமும் பட்டாச்சி பழய துணிமணி கொடுத்தாச்சி சுனாமி சோகமும் போயாச்சி மிருனாள் சென் -ஆ! யாருங்க? ஜெயலச்சுமி செரினா தெரியுங்க ஐயோ! 'ரவி'-க்கு கை காலு போயிருச்சி அப்புறம் அண்ணாமலையும் தொடங்கிருச்சி பொங்கலு பண்டிகை வந்தாச்சி TV-ல பிகருங்க பேத்தலு ஸ்டார்ட்டாச்சி தலை-ங்க வாழ்த்து கொடுத்தாச்சி வாழ்க்க மாமுலுக்கு திரும்பிடிச்சி சமுதாய சிந்தன போதுங்க ஊட்டுல சீனி கேட்டாங்க முக்கு கடைல ச்சீப்புங்க வாங்கிகினு வெரசா போறனுங்க