முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை

”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…” ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது. நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாச

காமம் தெளிதல் :- பிரிவுத்தணல்

“ டே ய்… எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்க… ஒரு ஸ்டாப் கிட்ட இப்படித்தான் பேசுவயா? “சார் சும்மா ஜாலிக்கு க்ளாஸ்ல ஜோக்குக்கு சொன்னேன் சார். அதுக்குப்போய் உங்க கிட்ட பிராது செய்யறாங்க… இதெல்லாம் கூட இல்லைன்னா எப்படி சார் எப்பவுமே சீரியசா க்ளாஸ்ல ஒக்கார்ந்திருக்க முடியும்?” என்னா மயிரு எழவெடெடுத்த ஜோக்கு? தராதரம் இல்லாம? லேடிடா அவங்க… ஏதோ நேரம் இங்க வேலைக்குன்னு வர்றாங்க… நீயும் ஒரு வேலைக்கு போகனுன்னுதானே இங்க படிக்கற? சொல்லிக் கொடுக்கறவங்க மேல ஒரு மரியாத வேண்டாமா? லேடிஸ்கிட்ட எப்படி பேசனுங்கறதே தெரிலன்னா நீயெல்லாம் எப்படிடா உனக்குன்னு ஒரு மரியாதைய பின்னாடி தேடிப்ப?” மேட்டர் பெரிசா ஒன்னுமில்லைங்க. மேற்கண்ட இனியது கூறலில் முதலாவது எங்க பேராசிரியர். பதில் சொல்வது நான். எங்களுக்கு பகுதிநேரமாக வகுப்பெடுக்க வந்த அவருடைய சக பேராசிரியர் பொண்ணை லைட்டா கலாய்ச்சதுக்கு அவங்க ஓன்னு அழுதுக்கிட்டு வந்து இவராண்ட புகார் கொடுத்துட்டாங்க. அதுவும் சப்பை கலாய்ச்சல். என்னை விட அஞ்சு வயசுதான் அதிகமா இருக்கும். அவங்களை மேடம்னா கூப்பிட முடியும்? அவங்க வந்த மூனு மாசத்துலயே நாங்க அவங்ககிட்ட கத்துக்கறது