முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Edinburgh Festival Cavalcade 2007 & என் புகைப்படப் பொட்டி

எடின்பரோ நகரத்தின் கோடைக்கால விழா ஆரம்ப நிகழ்சியான காவல்கேட்' 07 இன்றைய ஞாயிறு மதியம் நடந்தேறியது. கலைகளின் நாடு பாரீஸ் தான்! அங்க வருசம் 365 நாளும் விழாதான். அவிங்க ஊரை அடிச்சுக்க முடியாது. இருந்தாலும் The Festival City என அழைக்கப்படும் எடின்பரோவில் கோடைக்காலம் 3 மாதங்களும் விழா நாட்கள் தான். ஊருல தெனைக்கும் ஏதாச்சும் ஆட்டம், பாட்டம், நாடகம், கண்காட்சின்னு பல சங்கதிங்க நடந்துக்கிட்டே இருக்கும். இதுக்குன்னே 3 மாசத்துக்கு மட்டும் வெளியாளுங்க இங்கன டேரா போடுறாய்ங்க. கடைசிநாளு வாணவேடிக்கை. எடின்பரோ நகரத்து கோட்டை முழுசும் வெடிகளா வைச்சு இசைக்கற இசைக்கேற்ப அவைகளை கலர் கலரா வெடிக்க வைச்சு பட்டைய கெளப்பிருவாய்ங்க! இசைக்கேற்ப நடனமாடும் நீர்காட்சியதான் பார்த்திருந்தேன். போன வருசம் இசைக்கேற்ப நடக்கும் வாணவேடிக்கைய வாயைப் பொளந்துக்கிட்டு தான் பார்த்தேன். ஊருல எங்க பார்த்தாலும் கலைக்கூத்தா நடக்குது. சின்ன வயசுல எப்படியாவது பிற்காலத்துல கூத்தாடியாதான் வரணும்னு குறிக்கோளெல்லாம் இருந்தது. "ஆசை இருக்குது தாசில் செய்ய... அதிர்ஷ்டம் இருக்குது கழுத மேய்க்க.."ங்கற மாதிரி பொட்டி தட்டற வேலைதா