முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா

கும்பல்ல கலாய்க்கறதுக்கு ஒரு பிட்டு இங்க! சிலுசிலுக்குற சிலுக்கு ஜிப்பா பளபளன்னு மின்னுதப்பா! வெள்ளைவெளேர் விஃக்சு டப்பா குபுகுபுன்னு பொகையுதப்பா! கருகருன்னு எம்ஜியார் டோப்பா காத்தடிச்சா பறக்குதப்பா! துருதுருன்னு சின்னபாப்பா கலகலன்னு சிரிக்கிறாப்பா S8ட்டு ஃபிகருங்கப்பா சென்னைல டாப்புங்கப்பா! அதுல நாளு அட்டுங்கப்பா அது நம்ம ஏரியா பொண்ணுங்கப்பா! ஒவ்வொரு வரிக்கும் நடுவுல கோரசு "ஊஊஊஆஆஆ... ஊஊஊஆஆஆ..."ன்னு வரணும். கடைசி பாராவுல உங்க ஏரியாவுக்கு தக்கபடி மாத்திக்கங்க... எங்கயாவது கும்பலா கலாய்க்கறப்ப இந்த பாட்ட(கானான்னு சொல்ல முடியாதுன்னு நினைக்கறேன்!) எடுத்து விடுங்க... உங்க ஜாலிக்கு நான் கேரண்ட்டி! (யாருப்பா அது "அப்போ கண்டிப்பா ஊத்தி மூடிரும்னு மொனங்கறது? ) இதுபோக வயசு வந்த பசங்களுக்கு மட்டும்னு "லோக்கலோக்க லோக்கோ"ன்னு ஒரு சரக்கு இருக்குதுங்க. அதை எழுதுனா அப்பறம் காசிக்கும் உங்களுக்கும் சண்டை வந்துரும்! (என்னை எப்படி இங்க எழுதவிட்டீங்கன்னு அவர பிலுபிலுக்க மாட்டீங்களா என்ன? :)

எனக்கு வராத காதல் கடிதம்

உங்களுக்கு ரெட்டைஜடை குமுதாவை தெரியுமா? என்னது தெரியாதா? அதானே! அதெப்படி உங்களுக்கு தெரிந்திருக்கமுடியும்? அவதான் என்னோடு +1 படிச்சவளாச்சே! (நறநறப்பவர்களுக்கு, எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியாததால இப்படி.. ஹிஹி ). ஒல்லியா, முகம் மட்டும் பூசின்னாப்படி, கொஞ்சம் மாநிறத்துக்கும் மேல, நடுவகிடு எடுத்து எப்பவும் ரெட்டை ஜடையோடவும், அதோட முனைல சிவப்புலயோ பச்சைலயோ ஒரு ரிப்பனோடவும், ஒரு சைடுல இருந்து பார்த்தா கோபிகா சாயல்ல இருப்பான்னு வச்சிக்கங்களேன்! இப்படி இல்லைனா நான் ஏன் இவளை பார்த்திருக்கபோறேன்?! எங்க 11C தமிழ்மீடியம் வகுப்புலயே இவதான் கொஞ்சம் பாக்கறமாதிரி இருப்பா! அவபேரு R.குமுதான்னாலும் நாங்க அவளை ரெட்டைஜடை குமுதான்னுதான் சொல்லுவோம். அந்த காலத்துல சைட் அடிக்கறதுன்னா ஒரு பொண்ணைபார்த்து ஓரு கண்ணைமட்டும் மூடிக்காட்டறதுன்னு நம்பிய அரைவேக்காட்டுப்பய நான். அதுனால இதுக்குமேல அவளை வர்ணிக்கற அளவுக்கு அன்றைக்கு அவளை கலைநோக்கோடு பார்த்ததில்லை. ஆனா ஒரு ஈர்ப்பான கவர்ச்சி அவமேல இருந்ததுங்க. இந்த வயசுல பொண்ணுங்க ஒரு மாதிரி தினுசா புரிந்தும் புரியாத அழகோடத்தான் இருப்பாங்க போல. பருவம் வந்தா பன்னிகுட்ட

வெறுமை

பொசுக்கும் வெயிலில் ஆளரவமற்ற தெருவில் பொங்கும் வியர்வையுடன் மெல்ல கூவியபடிசெல்லும் பழைய பேப்பர்காரனின் குரலில் சாலையோர நெரிசலில் கடந்துசெல்லும் வாகனங்களை சலனமின்றிப் பார்க்கும் குருட்டுப் பிச்சைக்காரனின் முகத்தில் இருசக்கர வாகனத்தில் கணவனை பிடித்தபடி குழந்தையை அணைத்தபடி எங்கோ வெறிக்கும் இளம் மனைவியின் பார்வையில் பாதாளச் சாக்கடையில் மனசை இரும்பாக்கி உடம்பையே கருவியாக்கி அடைப்பை நீக்குபவன் அசைவுகளில் கையில் மஞ்சள்பையுடன் நெற்றியில் யோசனையுடன் முன்பதிவு வரிசையில் களைத்த முதியவரின் முகத்தில் உணர்வுகள் செத்துப்போய் பேச்சையே உணர்வாக்கி எப்போது முடிப்பானென படுத்துக்கிடக்கும் விலைமகளின் தேகத்தில் வெறுமைகளால் என்றும் வெறுமைகளைமட்டுமே உணர்த்தமுடிவதில்லை

சில ஆண்குறிகள்!

****************************************************************** ****************************************************************** ****************************************************************** ****************************************************************** ****************************************************************** ****************************************************************** The Hindu ல வாசகர் வட்டத்தை அதிகரிப்பதற்காக ஒரு வெள்ளைக்காரதுரைய வச்சி ஆராய்ச்சி செய்து Font, Headings, Colourனு நிறைய மாற்றங்கள் கொண்டுவந்திருக்காங்க! ஒரு தமிழனா இருந்து இதைப்பார்த்து எனக்கு ஒரே பேஜாராப்போச்சுங்க! நம்பநாள இதைசாதிக்கமுடியாதாங்கற ஆதங்கத்துல என்னோட ஆராய்சிக்கு Heading a மட்டும் எடுத்துகிட்டேங்க! நீங்களே சொல்லுங்க? பலன் இருக்கா இல்லையா? ஹலோ! எனக்கு அடியப்போடறதுன்னு நீங்க முடிவுபண்ணி தேடறது தெரியுது. இதோ இப்பவே நான் ஜூட்டு! :)

ரஜினி அங்க்கிள்! நாங்க இங்க இருக்கோம்!

"எங்க ரஜினி ஒரே நேரத்துல 5 பேர ஒரே கைல அடிச்சிடுவாரு!" "போடா! எங்க கமலு 20 பேர ஒரே ஒதைல சாகடிச்சுடுவாரு!" "போடா புழுகு! எங்க ரஜினி ஒரு ஒதை உட்டாருன்னா ஒரு செவுரே இடிஞ்சி உழுந்துடும்.." "அய்ங்க்க்... எங்க கமலு கையவச்சி ஒரு தள்ளு தள்ளுனா இந்த பில்டிங்கே தூள் தூள் ஆகிடும்!" இப்படியாகத்தான் எங்கள் 2ஆவதோ 3ஆவதோ படிக்கும் வயதில் எங்களது சினிமா ரசனை குழுமனப்பான்மையாக உருவெடுத்ததாக ஞாபகம். தெருவில் இருக்கும் எல்லா பசங்களும் கொதிக்கும் வெயிலில் மசபந்து, கில்லி, பம்பரம், கோலி ஆடிய நேரம்போக ஓய்ந்துபோய் எவன் வீட்டு வாயிற்படியிலாவது இடம் கிடைத்தால் உட்கார்ந்துகொண்டு ரஜினியும் கமலும் செய்ய இயலாத, செய்ய விரும்பாத, எங்கள் கற்பனைக்கு எட்டிய எல்லா பிரதாபங்களையும் செய்வார்கள் என நம்பிக்கொண்டு சண்டைபோட்டுக்கொள்வோம். (என்னது? இப்ப இருக்கற ரசிகர் மன்றகுஞ்சுகளும் இப்படித்தான் இருக்கறாங்களா? :) ). அப்பொழுதுகூட நான் கமல் கட்சிதான். ஒருவேளை என் க்ளோஸ் ஃபிரண்ட் மணி கமல் கட்சியாக இருந்ததால் இருக்கலாம். அல்லது எனது அண்ணன் ரஜினிபோல நடித்துக்காண்பிக்

அவனும் அவளும் பின்னெ நானும்!!

என் முதல் சிறுகதை முயற்சி இது. நான் முன்பே இட்ட பதிவு தான் என்றாலும் ஏனோ தமிழ்மணத்தில் list ஆகமாட்டேன் என்கிறது. இலக்கிய உலகம் ஒரு உன்னதமான படைப்பை கவனிக்காமல் தவறவிட்ட பாவம் வரக்கூடாது என்பதற்காக மறுபடி இங்கே.. ஹிஹி.. (இப்படி காதை கொடுங்க... கைல வேற சரக்கு இல்லை !) ------------------------------------------------------------ அவன்: "எனக்கு தெரியுண்டி.. நீ இந்த பஸ்ஸில தான் ஏறி இருப்பன்னு.. ராத்திரி 11 மணிக்கு வீட்ட விட்டுட்டு இப்பிடி ஓடறியே.. நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா?" அவள்: "அய்யோ.. கடவுளே.. என்ன வுட்டுடு... இதுக்கு மேலயும் உன் கொடுமைய தாங்க முடியாது,,, இதுக்கு மெல எனக்கு சாவு தான் நிம்மதி... என்ன வுட்டுடு... நான் எங்கயோ போறேன்... இங்கயும் கத்தி மானத்த வாங்காத" நான்: "ஆஹா... நைட்டு பஸ்சுல ஏதாவது பிகரு மடியும்னு பார்த்தா... இப்பிடி ஊட்டு சண்டைய இங்க வந்து போடறாங்க..!!.. இவளும் நல்ல ஆன்ட்டி தான்... ஆன ரொம்ப முத்தலு!" அவன்: "யாரு? நானாடி கொடுமை பன்னறேன்? எச்சகல நாயே.. இப்பொ என்ன மசுருக்கு நீ சேலம் போற? உன் பழய லவ்வர பாக்க தானே?" அவள்: "ஏன்யா