முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க