முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...

சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன். ---------+++++---------- வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :) // அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் // எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா? so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறி

அன்னயும் ரசூலும்

உ ங்களுடைய சொந்த ஊர் ஏன் உங்களுக்கு பிடித்திருக்கிறது? திருச்சி மலைக்கோட்டை கோவிலின் உச்சியில் படிகளில் அமர்ந்து திருச்சியை பார்க்குமிடம் உங்களுடன் ரகசியமாய் கைகோர்த்து வந்தவரால் பிடித்திருக்கக்கூடும். கோவை கிராஸ்கட் ரோடு சேட்டுக்கடை பானிபூரியின் சுவை ஜமா சேர்ந்த நண்பர்களால் சிறப்புற்றிருக்க கூடும். ஸ்ரீரங்கம் கூட வாத்தியாரும் நீங்களும் பிறந்த ஊர் என்பதற்காகவே ஒட்டிப்போக வாய்ப்புண்டு. ரசூலுகுக்கு கொச்சின் ஏன் பிடிக்கும் என்பதற்கு நட்பு தவிர வேறு காரணியில்லை என்றுதான் தோன்றுகிறது. வேறு வழியும் இருந்திருக்காது போல. இரண்டாம் திருமணம் முடித்த அப்பா பெண்டு பிள்ளைகளோடு வேறு ஊரில் ஜாகையாயிருக்க கொச்சினில் ரசூலும் அவன் அண்ணனும் மட்டுமே திரைச்சீலைகள் பிரிக்கும் ஒரே அறை வீட்டில் பொங்கித்தின்று வாழும் வாழ்க்கை. வயதுக்கு வந்த பிரமச்சாரி அண்ணன் தம்பிகள் இரண்டுபேர் ஒரே வீட்டில் இருக்கையில் பழகும் முறையை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் நீர்முட்டி வலியினை சொல்லிக்கொள்ள வேண்டியதில்லை. சந்தோசமாக இருக்கும் பொழுதில் கட்டிப்பிடித்து உச்சிமுகர தேவையில்லை. பிரச்சனைகளை மணிக்கணக்கில் பேசிப்பேசி மாய வேண

ப்ரே பண்ணுவேன்! நானும் ப்ரே பண்ணுவேன்!!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவின் ப்ரேயர் சாங் கேட்டேன்! லவ் பண்ணி விட்டுட்டு போன பெண்ணை வாழ்த்தி ப்ரே பண்ணனுமாம்ல ப்ரே! ஆண்களின் காதல் தோல்வியின் வலி அவ்வளவு எளிதில் கடந்துவரக் கூடியதா என்ன? அப்பறம் இவ்வளவு நாள் வசந்தமாளிகை சிவாஜி ரத்தம் கக்கியதற்கும், நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் உயிரையே விட்டதுக்கும், வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்த் கோவில் மண்டபத்துல ஊமையாகி குடியேறியதற்கும், மூன்றாம் பிறை கமல் அடிவாங்கி ப்ளாட்பாரம் முழுக்க உருண்டத்துக்கும், மைக் மோகன் படத்துக்கு படம் பன்னு சாங்ஸ்சா பாடித் தள்ளினதுக்கும், காதலிக்கு கல்யாணமே செய்துவைக்கும் பூவே உனக்காக விஜய்யின் தியாகத்துக்கும், சுப்ரமணியபுரம் ஜெய் குத்து வாங்கி செத்ததுக்கும் அர்த்தமே இல்லையா என்ன?! உண்மையில் சொல்லப்போனால் இப்படி தன்னையும் வருத்திக்கொண்டு வாழ்வையும் கெடுத்துக்கிட்டு எல்லோரையும் சிரமப்படுத்தறதுக்கு பதிலா இப்படி வெகு இலகுவாக இந்த வலியை கடந்து வருவது சாலச்சிறந்ததுன்னு தோணுது. எப்படியும் பின்னாடி எவளையாவது கண்ணாலம் கட்டி புள்ள குட்டியோட சந்தோசமாத்தான் இருக்கப் போறோம். இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பின்னாடி நமக்க

ஜீவனே... ஜீவனே...

கானா பிரபா அவர்களின் மிகவும் டச்சிங்கான ” இளையராஜா எனக்கு இன்னொரு தாய் ” என்ற பதிவினை படிக்க நேர்ந்தது. இளையராஜாவை பொறுத்தவரை மற்றவருக்கு தாயாகவும் தந்தையாகவும் தோழனாகவும் வழிகாட்டியாகவும் தெய்வமாகவும் பலபேருக்கு இருப்பது பெரிய விடயமல்ல. ஆனால் அந்த உணர்வினை பெற்றவருக்கே அது வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிடிப்பையும் மாற்றத்தினையும் ஏற்படுத்துகிறது என்பது தெரியும். வலிகளை ராஜாவின் கரம்கொண்டு கடந்து வந்த கானா பிரபாவும் பொறாமைப்பட வைக்கும் ஒரு அதிர்ஷ்டசாலிதான்! இசை என்பது எனக்கு இங்கிலீசு மீடியம் படிக்கும் மேட்டுக்குடி மக்களால் அறிமுகப்பட்டது. இதையுங்கூடி ஒருமுறை எழுதியிருக்கிறேன்! ( பீட்டர் சாங்ஸ்சும் ஒரு தமிழ்மீடிய பையனும்... ) பேயடி அடிக்கும் ட்ரம்ஸ்சும், கதறக்கதற இழுக்கப்படும் லீட் கிட்டாரும் தான் பிடித்த வாத்தியங்கள். மெட்டாலிகா போலவோ மெகாடெத் போலவோ நீளமாய் முடி வளர்த்திக்கொண்டு வெறுங்கையில் கிடாரை காது கேக்கறதுக்கு தோதாக இழுத்தபடியே தலையை பரப்பிவிட்ட படி மாரியாத்தா ஆடவேண்டுமென்பது ஒரு அடையாளத்தேடல். ஆனால் அன்றைக்கு எனக்கிருந்த கம்பிமுடிக்கு வைத்த ப்ஃங்க் ஸ்