முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிவாஜி The BOSS - Coooooooooooool ! :)

நானெல்லாம் இன்னும் பாபா, சந்திரமுகி பார்க்காத அளவுக்கு ரஜினியின் அதிதீவிர ரசிகன்! அதுபோக நான் ஏன் ரஜினி படங்களை ரசிக்கறேன்னும் ஏற்கனவே கொசுவத்தி சுத்தியிருக்கறேன். அதனால இந்த பதிவை இவனும் மண்சோறு திங்கற கும்பல்ல இருப்பானோங்கற சந்தேகக் கண்ணோட பார்க்காம இதுவும் இன்னொரு சாதாரண ரசிகக் கண்மணியோடதே அப்படின்னாச்சும் நினைச்சுக்கிட்டு சும்மா ஜாலியா படிங்க! :) படம் சும்மா சொல்லக் கூடாதுங்க! அடி! அதிரடி!! கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ரெண்டாம் வரிசை நாயகர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு அடிச்சுக்கிட்டது நினைவுல இருக்குங்களா?! அவங்களுக்கு எல்லாம் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் அழுத்தமான சேதி என்னன்னா... இன்னும் அடுத்த 10 வருசங்களுக்கு சூப்பர்ஸ்டாராக கனவுலகூட நெனைக்காதீங்கப்பேய்! :) அஞ்சுக்கப்பறம் ஆறு! சிவாஜிக்கப்பறம் யாரு?! உண்மைதானுங்... ரஜினி மொத சீன்ல "மக்களுக்கு நல்லது செஞ்சேன்!"ங்கறதால ஜெயிலுக்கு உள்ளே வந்தேங்கறதுல இருந்து கடைசிசீன்ல மொட்டைத்தலைல தபேலா வாசிக்கறது வரைக்கும் நான்ஸ்டாப் அசத்தலுங்க. மனுசன் மனசை சும்மா அள்ளிக்கிட்டு போறாரு! அந்த துறுதுறு

வென்றுவாடி என் மகளே!

இ ன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா! அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை! என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்! நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன்! அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா! ஹிம்! காலம் போற வேகத்துல... இந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா? தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா? சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை! :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்! போய்வாடி என் மகளே! நம்வாழ்வை மொக்கையாக்க மெக்காலே வடிவமைத்த போர்க்களம் வென்றுவாடி என் மகளே! கூட இருக்கத்தான் ஆசப்பட்டோ

"ஸ்காட்ச்"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2

Images processed as HDR using Adobe Photoshop CS3. Originals at http://picasaweb.google.com/ilavanji/ScotlandPics