முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே?

அப்பாவி: கருத்து சுதந்திரம்னா என்னாண்ணே? அறிவுப்பசி அண்ணாசாமி: சோக்கா கேட்ட அப்பாவி.. பாயிண்டு பாயிண்டா சொல்லறேன் கேட்டுக்க... 1. "அதுவா? எனக்கு பிடிச்ச கருத்தை சொல்லறதுக்கு உனக்கு முழுசுதந்திரம் இருக்குன்னு அர்த்தம்" அப்படின்னு எழுதிவச்சிகிட்டு, F9/11 படம் எடுத்தவரு அது அவரோட சொந்தபடத்துல சொன்ன சொந்த கருத்துக்கள் அப்படிங்கறதை விட்டுட்டு என்னமோ புஷ்சு வீட்டு வரவேற்பறைல கக்கா போயிட்டு சும்மா வந்துட்ட மாதிரி சொல்லறதுதான் கருத்துச்சுதந்திரம்னு நம்பவைக்கறது! நாம நகைச்சுவையா பத்தி பத்தியா எழுதினாலும் அது மத்தவங்களுக்கு நகைச்சுவைதான்னும் அதுக்கு மத்தவங்க யாராவது கருத்து சொன்னா ஒடனே நகைச்சுவை முகத்தை கலைச்சுட்டு சீரியசா அதுபத்தி விவாதிக்கனும்னு நம்பறது. அதையே ஒருத்தரு "இந்த நகைச்சுவை மூன்றாம் தரமா இருக்கு! " அப்படின்னு ஒரு கருத்தை சொன்னா "இதையெல்லாம் நகைச்சுவை இல்லைன்னு சொன்னா உனக்கு மூளைக்கோளாரு! " அப்படின்னு பின்னூட்டம் வந்தாலும் ஒன்னும் சொல்லாம அதை அப்படியே வச்சிருக்கறது! 2. சேரும்போது மட்டும் நாம எழுதறது நாலு பேரு கவனத்துக்கு போகனும்ற &qu

நான் பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை!

பே சுவதே புரியும் பொழுது முகத்திலிருக்கும் இரு பட்டாம்பூச்சிகளுக்கு ஏனிந்த விளக்கவுரை வேலையென கேட்டபோது மனசிலொரு கிறுகிறு விடுமுறையில் தூதாக பட்டாம்பூச்சிகள் வீடுவரைவருமா எனக்கேட்டு அனுப்பிய பட்டாம்பூச்சி வாழ்த்துஅட்டை புடவைகளுக்கடியில் பத்திரமாய் என்னைவிட மாநிறமா எனக்கையோடு கையொற்றி முதன்முதலில் தொட்டபொழுது முன்உணராத பட்டாம்பூச்சிகள் என் அடிவயிற்றில் பிறந்தநாள் பரிசென நீ பிடித்துவந்து நாம் பறக்கவிட்ட விரல்நுனிக்கு வர்ணம்கொடுத்த நீலம்தெளித்த பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சிகளும் இப்படித்தான் கலவிக்கொண்டே பறக்குமென நீ சொன்னதை உணர்ந்ததினம் நம் கலவியின் உச்சகணம் சிலநாட்களே வாழ்ந்துமடியும் பட்டாம்பூச்சிகளுக்குள் பிரிவுத்துயர் இல்லையென விட்டுச்சென்ற கசந்த அந்த கடைசி முத்தம் மன்னிக்கவும், நான் இப்பொழுது பட்டாம்பூச்சிகளை ரசிப்பதில்லை

எதுவரை...

தனித்திருக்கிறேன் விழித்தும் தானிருக்கிறேன் பசித்தும்கூட இருக்கிறேன் நட்பென்ற உறவினை காதலெனும் உணர்வுகளால் அடித்தெழுத இயலவில்லையென சொல்லிச் சென்றவள் நீ உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க என் உணர்வுகளுக்கு நான் தனித்திருக்கிறேன்!

துருப்பிடிக்கற உடம்பு

ஒ ரு நாளைக்கு 10மணிநேரம் நாங்க உழைக்கற கடின உழைப்பை(!?) பாராட்டி ஊக்குவிக்கற(ம்ம்ம்.. இந்த பொழப்புக்கு ஊக்கு விக்கறதே மேல்..) வகையிலும் மனசுக்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி அளிக்கனும்கற நல்லெண்ண அடிப்படையிலும் எங்க ஆபீசுல எங்களையெல்லாம் ஒருநாள் இன்பச்சுற்றுலாவுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க போனவாரம்! ஒரே தமாசுதான் போங்க அன்னைக்கு முழுசும்! வருசம் முழுசும் ஒரே எடத்துல ஆடாம அசங்காம ஒக்கார்ந்து பென்ச்சு தேச்சிட்டு அது எப்படி ஒரே நாள்ள ஒடம்பும் மனசும் சீரான நெலைக்கு வரும்னு யாரும் கோயிஞ்சாமித்தனமா(அப்பாடா! நாமளும் சொல்லியாச்சு..! ) கேக்கப்படாது! HR ஏதாவது குடுத்தா அனுபவிக்கனும். ஆராய்ஞ்சா அப்பறம் வருத்தமாயிரும்! :) நியாயமா பார்க்கப்போனா நாம இங்க தமிழ்மணத்துல ஆபீசு நேரத்துல கொட்டற உழைப்புக்கு காசி அண்ணன்தான் நம்பளை இப்படி எங்கயாச்சும் கூட்டிக்கிட்டுபோகனும். நாம அத்தனைபேரும் ஒன்னுசேர்ந்தா சார் தாங்குவாரான்னு தெரியலை... சரி பொழச்சுப்போறார் விடுங்க. ஆரம்பத்துல சென்னை ECRதான் இதுக்கெல்லாம் சரியான இடம். இங்க பெங்களூருல போய் என்னத்த ரிலாக்ஸ் ஆகறது அப்படின்னு ஒரு சங்கடமாத்தான் கெளம்பு

இருவகை இந்தியா

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும். ஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து! ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா? ம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!

தப்புன்னா திருத்திக்கனும்...

இத்தனைநாள் எழுதற பதிவுகளுக்கு வண்ணமா நல்ல நல்ல படங்களை கூகுளில் இருந்து உருவிப்போட்டபோது ஒன்னும் தெரியலை! ஆனா நேத்து ஆபீசுல Intelectual Property பத்தி ஒரு கூட்டத்துக்குபோன பிறகுதான் செய்யற தவறு புரிஞ்சது. அதனால இனிமேல் பதிவுகளோட போடற படங்களுடன் நன்றி (அ) source எனப்போட்டு கூட சுட்டியைக்கொடுக்கறதுதான் சரியான வழின்னு தெரியுது. இதுக்கும் மேல ஏதாவது விசயம் இருந்தா தெரிஞ்சவங்க சொல்லுங்க. திருத்திக்கலாம்! மன்னிக்கத் தெரிஞ்சவன் மனுசன்... மன்னிப்பு கேக்கத்தெரிஞ்சவன் அதைவிட பெரிய மனுசன்... அதுனாலதான்... ஹிஹி... அது சரி.. இந்த படம் எப்படி இருக்கு? (Picture Source: www.msgr.ca/msgr-humour/penance%2011.htm )