முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓட்டைப்பெட்டிக்குள் என் நேற்றைய உலகம்!

ம ழைச்சேறின் கலவை தெறிக்கும் குழம்பிய சகதியில் சடுதியில் திருஷ்டியாகிப்பின் காற்றில் ததும்பிப்பிறந்து ஈர்ப்பின் விசையில் கீழாக ஓசையற்றுப் பயணத்துவங்கி மாசற்ற மாசுகளின் மீட்சியின் விளிம்பில் மரிக்கத்துவங்கும் துகள்களின் தெரிப்பில் ஜீவன் அடக்கும் பொங்கிய குமிழிகளின் ஆயுளின் நீளமாய் வாழ்வைக்கரைக்கும் ஒரு துளி சகதியின் பழுப்பு வர்ணமாய்... அடச்சே... இந்த கோணங்கி புஸ்தகத்த இனி தொடக்கூடாது! சரிங்க.. நேராவே சொல்லிடுறேன்! பழுப்பேறிப்போன ஒரு அட்டைப்பொட்டி வீட்டை சுத்தம் பண்ணும்போது கிடைச்சதுங்க! திறந்து பார்த்தால் ஒரு வீரத்தமிழனின் வாழ்வியல் காவியத்தினை படைக்க உறுதுணையளிக்கும் சான்றுகள் (மறுபடியும் பார்றா...! ) என்னோட கஜானா பொட்டிதாங்க அது! படிக்கற வயசுல ஏதேதோ சேர்த்துவச்சிருக்கேன்! ஒவ்வொன்னையும் எடுத்துப்பார்த்தா ஆனந்தக்கண்ணீரும், திகைப்பும், அதிர்ச்சியும், புன்முறுவலும் மாறிமாறி வருது! (ம்ம்ம்.. சிவாஜிக்கு அப்பறம் நவரசத்தையும் காட்ட நம்பள விட்டா வேறே யாரு இருக்கா? ) மொதமொதல்ல வாங்குன ஃபியூமா ஷூவோட சிம்பலும் சைசும் போட்ட சின்ன அட்டை! ஒரு பெரிய சண்டைக்கு அப்பறம் ரொம்பநாளா

பொட்டிய கட்டறேனுங்க!

ஆஹா! ஒரு வாரம் ஓடிப்போச்சு! உங்களோட உற்சாகமான பின்னூட்டங்களும் கருத்துக்களூம் நெஜமாவே ரெண்டு டம்ளர் ராகிக்கஞ்சிய மோருல கரைச்சு கல்லுப்பு போட்டு வெங்காயத்தை கடிச்சுக்கிட்டு குடிச்சப்புல ஜில்லுன்னுதான் இருக்கு! இந்த வாரம் நாமன்னு ஆனதுக்கப்பறம் நல்ல விசயமா எழுதனுமேன்னு நினைச்சதுல வெளைஞ்ச மலரும் நினைவுகள் தாங்க இதெல்லாம்! சொல்ல வந்த கருத்தும் இதுதாங்க.. நிஜமாவே வாழ்க்கையை பத்தி சொல்லிக்குடுக்கறதுக்கு நம்பளைசுத்தி எப்பவும் ஒரு நாலுபேராவது இருக்காங்க... கடவுள் என்னைக்கும் மனுசங்களை நேரா சந்திக்கறதே இல்லை! அதுக்குபதிலா சகஜீவனுங்களைத்தான் அவரோட தூதுவராகவும் அவங்களிடம் கிடைக்கும் படிப்பினைகளைத்தான் அவரோட நற்செய்திகளாகவும் அனுப்பறாரு! இல்லைன்னா நாமெல்லாம் எந்த பாடசாலைல போய் படிச்சு இதெல்லாம் தெரிஞ்சிக்கறது? ஆனாலும் ஒருவேளை இது என்னைக்கும் இலவசகல்வியா இருக்கறதால நாமதான் சரியா கருத்தா படிக்கறதில்லையோ என்னவோ?! நட்சத்திரவிதிப்படி எல்லா நாளும் எழுதனும்னாலும் வெள்ளிக்கிழமை மட்டும் முடியலைங்க..( மதியக்கா.. மன்னிச்சிருங்க! ) அன்னைக்கு ஆபீசுல ஒரு சர்வரு புட்டுக்கிட்டதுல நம்பளபோட்டு ஃபுல்நைட்டு பெண்டை நிம

எமிலி என்றொரு தோழி

தோ ழி அப்படின்னு ஒருத்தி இல்லாத வாழ்க்கைய ஆம்பளைங்க எல்லாம் கொஞ்சம் கண்ணை மூடிக்கிட்டு மனசுக்குள்ள கற்பனை செஞ்சு பாருங்க! கள்ளிச்செடிகளும், கண்ணுக்கெட்டியவரை மணற்பரப்புமாய் தீச்செடுக்கும் ஒரு வெட்கையான பாலைவனம் மனசுல வருதா? இல்லைன்னா மனசுல ஒரு மூலைல சின்னதா இருக்கற சந்தோச ஊற்றுல ஒரு கார்க்கை வைச்சு அடைச்சாமாதிரி ஒரு வறட்சியான வெறுமை தொண்டைய கவ்வுதா? ஆஹா..அப்படின்னா நீங்க நம்ப கட்சி! தோழிங்கறவங்க யாராவேனா இருக்கல்லாம்! கிளாஸ்மேட்டு, ரயில்சினேகம், பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கற ரெட்டை ஜடை வாலு, ஆபீசுல கூட வேலை செய்யற மாமி... ஏன்? அம்மா, தங்கச்சியா கூட இருக்கலாம். பார்த்தவுடனே மனசுல ஒரு உற்சாகம் வருதா? அன்னைக்கு நடந்தது எல்லாம் ஒன்னு விடாம சொல்லனும்னு தோனுதா? மனசுக்கு வருத்தமா ஏதாவது இருந்தா வெட்கப்படாம நாம் சொல்லவும் சலிச்சுக்காம அவங்க கேப்பாங்கன்ற நம்பிக்கையும் வருதா? உரிமையோட கோவிச்சுக்க முடியுதா? ஆம்பளைங்கற ஈகோவ தூக்கி ஓரமா வச்சிட்டு(ரொம்ப செரமமான வேலையையா இது! ) சகமனுசின்ற உணர்வோட அவங்களோட இருக்க முடியுதா? அப்பன்னா அவங்க தோழிதான்! எனக்கெல்லாம் இப்போதைக்கு இத்தனை நாள்