முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காத்தவராயரின் கசுமாலக் காதல் க(வி)தைகள்

அன்பே! என் குளிர்கால குமுட்டி அடுப்பே! சுகமாகத்தான் இருக்கிறது ஒரு பொட்டலம் சுண்டலில் விரல்கள் துழாவி பஞ்சப்பனாதியாய் பகிர்ந்துண்னுவதும் சகிக்கத்தான் முடிவதில்லை சுண்டலுக்கு காசு கொடுக்கும் அற்ப(புத) தருணங்களில் மட்டும் நீ வெட்கம் மேலிட கடற்கரை மணலில் முகம் புதைக்கும் மர்மம் கற்றுக்கொண்டது காதலில் செலவினம் அதிகம் பெருமைதான் எனக்கும் பொட்டலத்தின் அடிநுனியில் மாட்டிய கடைசி சுண்டலுக்கான அடிதடியில் உன் வெற்றி அதையும் மீறிய வலிகள் என் கையில் விழுந்த உன் கடைவாய்ப் பற்களின் கடிதடங்கள் கற்றுக்கொண்டது காதலென்றால் வலிகள் தாங்கனும் ரோஸ்கலர் பிடிக்குமென்றே நம்பினேன் நீ ஒன்றுக்கு இரண்டாய் பஞ்சுமிட்டாய் கேட்டபோது அதிர்ந்துதான் போனேன் பஞ்சுமிட்டாய் குச்சிகளை நீ மட்டுமே சாயம் போக சப்பிய போது கற்றுக்கொண்டது காதலில் விட்டுக் கொடுக்கனும் சிலிர்க்கத்தான் செய்கிறது விரலோடு விரல் கோர்த்து முகமோடு முகம் வைத்து வாயோடு உறவாட உடலோடு விளையாட குமட்டலே மிச்சம்! சிக்கெடுக்காத தலையில் விரல்கள் சிக்க விளக்காத வாயின் கப்பு தாக்க கம்மாங்கூட்டின் வீச்சம் தூக்க கற்றுக்கொண்டது காதலில் காமமும் இருக்கனும் பதவிசாகத்தான் இருக