முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு

பின்னூட்டநாயகியின் பெங்களூரு விஜயம்!

வாலிப வயோதிக வலைப்பதிவர்களுக்கு... அகில உலக ப்லாகர்ஸ் அங்கீகாரம் பெற்ற தமிழ்ப்பதிவுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஒரே ஸ்தாபனமான 'துளசிதளம்' வலைப்பதிவர் வைத்தியசாலையின் முதன்மை பதிவரான பின்னூட்ட பிதாமகள் திருமதி. துளசி கோபால் அவர்கள் 14-02-2006 அன்று பெங்களூரு விஜயம்! (சாம்ராட் ஹோட்டல், நடராஜா தியேட்டர் எதிரில்) வைத்தியர் குழு: பின்னூட்டக்கலையை இந்த உலகிற்கு முதன்முதலில் தோற்றுவித்து பெரும்பான்மை வலைப்பதிவர்களுக்கு வாழ்வளித்த முதன்மை மருத்துவர் துளசியக்கா பொறுமையின் சிகரம் விருந்தோம்பல் நாயகர் கோபால் அண்ணா! முதன்மை கம்பவுண்டர் நாட்டியசிகிச்சை ஸ்பெசலிஸ்ட் யானையார் புன்சிரிப்பு சித்தர் மருத்துவமாமணி பூனைக்குட்டியார் உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் பெருக! வாசகர் வருகையை அதிகரிக்க!! 15 நாட்களில் வித்தியாசம் தெரிய!!! தரமான ஆழமான பதிவுகளை போடவேண்டியதில்லை. படம் போட்டே பதிவுகளை நிரப்பவேண்டியதில்லை. அங்க இங்க அப்படி இப்படி சொன்னதென விளக்கப்பதிவுகள் தேவையில்லை. சுடச்சுட செய்தியென நியூஸ்பேப்பரை cut/paste செய்யவேண்டியதில்லை. "குஷ்புவின் கூந்தலும் எங்கள் வீட்டு ஷாம்புவும்"

ஹிஹி...

வாசகர் கடிதம் - முகமூடி, சின்னவன் மற்றும் டோண்டுவுக்கு...

உங்களுக்கு என் மனம் திறந்த மடல் என்றுதான் ஆரம்பிப்பதாக இருந்தேன். ஆனால் குமுதம், விகடனில் வரும் "மனம்திறந்த" மடல்களை நீங்கள் படித்திருக்கக்கூடும் என்பதால் ஆரம்பமே சிரிப்பாய் போகாமலிருக்க இதை உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கும் ஒரு வாசகனின் கடிதமாகவே ஆரம்பிக்கிறேன். மேலும் தற்போதய கடிதப்பதிவுகளின் ட்ரெண்டாகவும் இருக்க இப்படி... தருமிசார் அவர்களின் பதிவில் ( http://dharumi.weblogs.us/2006/01/30/171 ) நான் இட்ட பின்னூட்டத்திற்கான இப்பதிலை நேரமின்மையின் காரணமாக தாமதமாக தருவதற்கு மன்னிக்க... முகமூடி, சென்றவாரம் இங்கு மிகப்பெரியதாக ஆக்கப்பட்ட ஒரு விதயத்தைப்பற்றிய உங்களுடைய ஆக்கப்பூர்வமான முந்தய பதிவுகளை படித்தவன் நான்! விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான்! அதுபோக வலைப்பதியும் பலருக்கும் இந்த விடயத்தை பற்றி இருந்த ஒத்த கருத்தை உங்களது பதிவிலும் இருத்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி.. "மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ள