
உங்களுக்கு என் மனம் திறந்த மடல் என்றுதான் ஆரம்பிப்பதாக இருந்தேன். ஆனால் குமுதம், விகடனில் வரும் "மனம்திறந்த" மடல்களை நீங்கள் படித்திருக்கக்கூடும் என்பதால் ஆரம்பமே சிரிப்பாய் போகாமலிருக்க இதை உங்கள் பதிவுகளை அடிக்கடி படிக்கும் ஒரு வாசகனின் கடிதமாகவே ஆரம்பிக்கிறேன். மேலும் தற்போதய கடிதப்பதிவுகளின் ட்ரெண்டாகவும் இருக்க இப்படி...
தருமிசார் அவர்களின் பதிவில் (http://dharumi.weblogs.us/2006/01/30/171) நான் இட்ட பின்னூட்டத்திற்கான இப்பதிலை நேரமின்மையின் காரணமாக தாமதமாக தருவதற்கு மன்னிக்க...
முகமூடி,
சென்றவாரம் இங்கு மிகப்பெரியதாக ஆக்கப்பட்ட ஒரு விதயத்தைப்பற்றிய உங்களுடைய ஆக்கப்பூர்வமான முந்தய பதிவுகளை படித்தவன் நான்! விசயமுள்ள பதிவுகளை படிக்கும்போது அந்த விடயத்தைப்பற்றிய நமது கருத்துக்கள் மாறுவது இயல்புதான்! அதுபோக வலைப்பதியும் பலருக்கும் இந்த விடயத்தை பற்றி இருந்த ஒத்த கருத்தை உங்களது பதிவிலும் இருத்தது கண்டு எனக்கும் மகிழ்ச்சி..
"மற்றவர் வருந்த வேண்டும் என்பதுதான் எதிராளியின் குறிக்கோள் என்றால், எதிராளிக்கு வெற்றியை கொடுக்காதீர்கள். இந்த சம்பவத்தை பற்றி சிறிதும் கண்டுகொள்ளாதீர்கள். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டே தீர வேண்டும்... கவலை விடுங்கள்."
தெளிவான முறையில் இங்கு எழுதப்படும் பதிவுகளை படிக்கும்பொழுது என்போன்ற வாசகர்களுக்கு புதிய கருத்துக்களும் அதைப்பற்றிய எண்ணங்களில் மாறுதல்களும் ஏற்படுகின்றன. இங்கு நல்லமுறையில் வாதம் செய்து யாராலும் யாருடைய கருத்துக்களை மாற்றமுடியாது என்று சொல்லப்படுவது சரியல்ல. வாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு வேண்டுமானால் இதனை ஒத்துக்கொள்வதில் தயக்கமும் ஈகோவும் இருக்கலாம்! படிக்கும் என்னைப் போன்றவர்களுக்கல்ல... குழலி மற்றும் உங்களுடைய பதிவுகளின்மூலம் என்னுடைய எத்தனையோ எண்ணங்கள் மாறியுள்ளன. இப்பொதெல்லாம் "பாமாக"வா அது இப்படித்தான் என்று வாழைமட்டை போன்ற கருத்துக்களை நான் பேசுவதில்லை! அதுபோலவே அதன் வன்முறைகளின் நேரடி சாட்சியங்களை படித்தபின்பு அதை மக்களை உயர்த்தத்துடிக்கும் ஒரு கட்சியாகவும் பார்ப்பதில்லை! பதிவுகளை படிப்பதின் விளைவுகளை சொல்வதற்காக இதனைச்சொல்கிறேன்.
திரு. டோண்டு அவர்களின் பதிவிலும் உங்களுடைய மேற்கூறிய கருத்தைத்தான் பலரும் கூறியிருந்தார்கள். வாதங்களின் போக்கிற்கேற்ப சில வார்த்தை மீறல்களும் அதில் இருந்தது உண்மை. ஆனால் அனைவரும் அங்கே அவருக்கு அழுத்தமாகக்கூறியது மேலேயுள்ள கருத்துதான்! உங்களது சமீபத்திய பதிவான "புனுகு பூசாத நீதிபத்திகள்" பதிவில் அப்டிப்போடு (உங்களது மே மாத பதிவிலிருந்து சொன்னதை எடுத்து இடுகிறார் என்றால் அவரும் உங்களுடைய பதிவுகளை நீண்டநாளாக படிப்பவராகத்தான் இருக்க வேண்டும்! ) இதே கருத்தைதான் பின்னூட்டமாக இட்டிருந்தார். அவருக்கு நீங்கள் உங்கள் கருத்து ஏன் இப்போது மாறியுள்ளது என்பதை சொல்லியிருக்கலாம். "அலுப்பு" என்றீர்! சரி அது உங்கள் விருப்பம். ஆனால் அதன் பின்பு "நீ ஒரு பின்னூட்டத்திற்தே ஓடுனயே! தினமும் அதை பார்க்கும் எங்களுக்கு எப்படி இருக்கும்?" என்றொரு கேள்வி! இதுபோல சொல்லாடலில் சுயஇன்பம் காணும் வாதங்களை எழுதுவதற்கு நீங்கள் தேவையா?! உங்கள் கருத்தினை சரியென நினைத்திருக்கும் என்போன்ற வாசகர்களுக்கு இதனைப்படித்தால் எப்படி இருக்கும்? உங்களது இந்த கருத்தில் இப்போது என்ன மாற்றம் என்பதை நாங்கள் தெரிந்துகொள்ளக்கூடாதா இல்லை நாளாக கருத்தினை மாற்றிக்கொள்வதை வெளியே சொல்வது இழுக்கா? உங்களது கருத்தில் மாற்றமில்லையெனில் அதை அழுத்தமாக டோண்டுவிற்கு சொல்லியிருக்கலாமே? அவருக்கு தன்மையாக "இதைப்பற்றி பேசாமலிருப்பது நல்லது" என சொல்ல முடிந்த உங்களால் ஏன் அதே தன்மையுடன் உங்கள் கருத்தினை சுட்டிக்காட்டிய அப்டிப்போடுவிற்கு சொல்லமுடியவில்லை? உங்கள் பதிவினை படிக்கும் அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் கேள்விகளை கேட்கிறார்கள். வார்த்தைகள் சில மீறியிருக்கலாம். ஆனால் உங்கள் கருத்தில் உங்களுக்கு உறுதியெனில் பதில் சொல்லும்போது ஆளுக்கேற்றவகையில் ஏன் தொனி மாறுகிறது? ஆட்களைப்பொருத்து அலுப்பு மாறும் என்கிறீர்கள்! ஏற்றுக்கொள்கிறேன். ஆட்களைப்பொருத்து கருத்து மாறக்கூடாதல்லவா?
காணாமல்போகும் உங்களுடைய பதிவுகளைப்பற்றிய எனது கருத்தும் இதுதான்! டீவி சீரியல்களில் அடிக்கடி ஆளை மாற்றுகிறார்கள். சண்டையெனில் படத்திற்கு ஒரு மாலை போட்டு அந்த கேரக்டரையே காணாமலடித்துவிடுகிறார்கள். அதுபோலவா இது? உங்களுடைய ஒரு பதிவு திடீரென காணாமல் போகிறதெனில் அதனை நாங்கள் எப்படி எடுத்துக்கொள்வது? உங்கள் கருத்து மாறிவிட்டது என்றா இல்லை அவசரத்தில் எழுதியதை திருத்திக்கொள்கிறீர் என்றா? சீரியல் போல போட்டோவுக்கு மாலை போட்டு முடிக்க வேண்டாம்! இப்போது திருமாவின் பதிவினைப்போல என்போன்ற வாசகர்களுக்கு நீக்கியதற்கான காரணத்தை சொல்லலாமல்லவா? "கக்கூசு கிளினரின் வாக்குமூலத்"தில் அவரது தொழில் கழிவரை சுத்தம் செய்வது இல்லை என்ற என்னுடைய தகவல் தவறாதது எனில் என் மனப்பூர்வ மன்னிப்பை இங்கே கேட்டுக்கொள்கிறேன்! ஆனால் "கக்கூசு கிளினர்" என்ற சொற்களில் தொக்கிநிற்கும் தொனி என்ன என்பதனை படிப்பவர் அனைவரும் உணராமலா இருப்பர்? அந்த பதிவினை நீங்கள் நீக்கியது இந்த காரணத்தினாலா?!
கடைசியாக ஒன்று! உங்களுக்கு என்போன்ற வாசகர்கள் 86 ஓட்டுகள்(தேர்தல் முடிந்து முடிவுகளும் வந்துவிட்ட நிலையில் நான் யாருக்கு ஓட்டுபோட்டேன் என சொல்வதில் எனக்கெந்த தயக்கமும் இல்லை) போட்டிருக்கிறோம் என்றால் அது உங்களது பதிவில் இருக்கும் நம்பகத்தன்மைக்கும் ஒரு கருத்தினை அழுத்தமாக எழுதும் தெளிவிற்காகவும் இருக்கலாம்! ஆனால் கண்டிப்பாக வெட்டியும், ஒட்டியும், வார்த்தை விளையாட்டு வாதத்திற்காகவும் மட்டும் இருக்க முடியாது என்பது என் எண்ணம்! இந்த நம்பகத்தன்மையே என்போன்ற வாசகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கும் என்பதனையும் சொல்லிக்கொள்கிறேன்! தருமி சார் சொன்னதும் உங்களுடைய இந்த உயரிய இடத்தைப் பற்றித்தான்! மற்றபடி எப்படி என்ன எழுதுவது என்பது உங்கள் விருப்பம்!
சின்னவரே!
போட்டுத்தாக்கும் உங்கள் பதிவுகளின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் இந்த கடிதம்! உங்கள் பதிவுகளின் தலைப்பைக் கண்டவுடன் என் மூளை சுறுசுறுப்படையும்(இருக்கா? என கேக்காதீக...) எந்த பதிவிற்கு இவரு வேட்டு வைக்கறாரு என்று யோசித்துக்கொண்டே உங்கள் பதிவினை படிப்பது ஒரு சுகம்! அப்பறம் போட்டுத்தாக்கிய பதிவினை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் ஒருமுறை உங்கள் பதிவினை படிப்பது இன்னொரு சுகம்! போட்டுத்தாக்கறதுல "என்னமா யோசிக்கறான்யா இந்த ஆளு" என முகத்தில் ஒரு புன்முறுவலுடன் உங்கள் பதிவுகளை படித்துத்தான் எனக்கு பழக்கம்! ஆனால் உங்களது தங்கச்சியை நாய் கடித்த பதிவினை அவ்வாறு படிக்க முடியவில்லை! அதிலிருந்த வார்த்தை பிரயோகங்கள் அப்படி! இராமனாதன் கூட இதனை குறிப்பிட்டிருந்தார். நீங்கள் போட்டுத்தாக்கும் பதிவுகள் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்! ஆனால் அதனையே நீங்களும் செய்ய வேண்டுமா என்ன? புன்னகைக்கு மாறாக மனதில் முதலில் எழுந்தது அருவருப்பு! என்ன செய்ய? உங்களுக்கு என்போன்ற வீக்கான மனம் கொண்ட வாசகர்களும் இருக்கிறோம்! மற்றவர் மனதை நோகச்செய்யும் அங்கதம் எழுத ஆட்கள் இருக்கிறார்கள்! அதனை உங்களிடம் இருந்து என் போன்ற வாசகர்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்! அதுபோக போட்டுத்தாக்கும் பதிவுகளையே இவ்வளவு அருமையாக எழுதும் நீங்கள் உங்கள் ஒரிஜினல் பதிவுகளில் எப்படியெல்லாம் கலக்குவீர்கள் என்பதில் சந்தேகத்திற்கே இடமில்லை! என்னுடைய நீண்டநாள் ஆதங்கம் இது! "நீங்கள் யாராக இருந்தாலும்!" :)
டோண்டு சார்,
என்னைப்போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்தாலும் இப்போதெல்லாம் உங்களுக்கு பின்னூட்டமிட பயப்படுவதும், நீங்கள் உங்கள் தர்க்கசாஸ்திரத்தை ஆரம்பித்தீர்கள் என்றால் தலைதெறிக்க ஏன் ஓடுகிறோம் என்பதற்குமான விடை உங்களுடைய இந்த பதிவிலேயே (http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை) உங்களுக்கு கிடைக்கலாம்! உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் இன்னுமொரு ஞாயிருக்காக காத்திருக்கும் உங்கள் வாசகன்!
அம்புட்டுத்தேன்!
கடைசியாக.... வெட்டியும், ஒட்டியும், இப்படியும் அப்படியுமாக ஆயிரம் கேள்விகள் கேட்பதற்கு உங்களுக்கு திறமை இருக்கலாம்! அதற்கான பதிலை உங்களளவுக்கு திறம்படச்சொல்வதில் எங்களுக்கு அதே திறமையில்லாமல் இருக்கலாம்! ஆனால் உங்களது எழுத்தின் நம்பகத்தன்மையினை என்போன்ற வாசகர்களின் மனதில் கேள்விக்குறியாகும் அபாயம் இருப்பதினை நீங்கள் தடுக்கமுடியாதல்லவா? உங்கள் பதிவுகளில் என்ன எப்படி எழுதுவது என்பது உங்கள் விருப்பம்! உங்களுடைய நெடுநாளைய வாசகன் என்றமுறையில் என்னுடைய ஆதங்கத்தினை இங்கே பதிவு செய்யவேண்டுமென்பது என் விருப்பம்!
மீண்டும் அவ்வளவே!
நன்றி இளவஞ்சி,
பதிலளிநீக்குஇனி அந்த மாதிரி வராமல் பார்த்துக் கொள்கிறேன்.
//"நீங்கள் யாராக இருந்தாலும்!" //
:-)
இளவஞ்சி, வார இறுதியில் (அல்லது அதற்கும் முன்பே) இப்பதிவில் நீங்கள் எனக்கு கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன். அதற்கு முன், சில சுட்டிகளை தேடி எடுத்து அனுப்பி வைக்கிறேன், அப்பதிவுகளை படித்து வைக்கவும்.
பதிலளிநீக்குஇளவஞ்சி., எங்கள் ஆதங்கத்தை நாங்கள் காட்டு காத்து கத்துவதைவிட., உங்களைப் போன்றோர்கள் சொன்னால் நல்லதுதான். நான் டோண்டு அவர்கள் மீது சில விதயங்களில் முரண்பாடுகள் கொண்டாலும்., பொதுவாக இது வரை நான் அவர் பதிவில் அவ்வளவாக பின்னூட்டம் இட்டதில்லை. பொய்யை உண்மைபோல் சித்தரிக்கும் போது எழும் கோபத்தை /ஆதங்கத்தை (பலரது பதிவுகளில்) காட்டிவிட்டு செல்லுவதுண்டு. ஒரே பதிவில் நாம் ஆதங்கத்தை எடுத்து வைத்தால்., அவர் நம்மை எதிரி போல் பாவித்து உணர்ச்சி வசப்படுவதும்., அவர்களுக்கு அவன் மேல் என்ன அக்கரை என கேணத்தனமாக கேட்டு எரிச்சல் மூட்டுதலும்., விளம்பரத்திற்காக கேள்வி (இதுல என்னய்யா விளம்பரம் இருக்கு., டோண்டு பதிவ என்ன அமெரிக்க ஜனாதிபதியா படிக்கிறாரு?) அங்கிட்டு ரவுசு திரிப்பதும்.,மதி சொல்லித்தான் நான் கேட்டேன் என்பதுபோல பேசுவதும்., முகமூடி எங்களுக்குச் சொல்லித்தர யாருமில்லையே என அங்கலாய்ப்பதும் (புனுகு நீதிபத்தியில்). ஞானபீடத்தின் பதிவில் (சர்க்கஸ்., அதற்கு நான் அளித்த பதிலி இன்னும் மட்டுறுத்தலில் இருக்கிறது போல!!) நான் மற்றொரு பதிவில் எழுதுவது வேறு பெயரில் போலத் திரிப்பதும். பெண்ணான எனக்கே இவ்வளவு எரிச்சல் வருகிறதே? என் நிலையில் ஒரு ஆண் இருந்தால்... யோசித்துப் பாருங்கள். எவ்வளவு நேரம் இவர்களது திரித்தலுக்கும்., கெக்கேபிக்கே கேலிகளுக்கும் பதிலளிப்பார்?.
பதிலளிநீக்குயார் சொல்லித்தர வேண்டும்?. ஏன் எங்களுக்கெல்லாம் குறைந்த பட்ச அறிவு கூட இல்லாமலா வலைபதிய வந்திருப்போம் அல்லது என்னத்தையாவது மூன்றாம் தரமாக கேலிக்குட்படுத்தி புத்திசாலி போல் வேடங் கட்ட எழுத வந்திருக்கிறோமா?. ஆயிரம் விதயங்கள் இருக்கிறது எழுத., அடுத்தவனை உத்துப் பார்த்துக் கேலி செய்வதை விட எங்களுக்கு.
நான் என் ஐ.பி எண்ணைத் தர தயார். ஒரு பதிவை வைத்து உண்மையாக என் மன உணர்வுகளை எழுதி வருகிறேன். எங்கும் ஆனானியாக நல்ல கருத்துக்களைக்கூட இதுவரை பின்னூட்டமிட்டதில்லை. சேற்றை வாரி இறைக்கும் முகமூடி உங்களால் உங்கள் ஐபி எண்ணைக் கொடுக்கமுடியுமா?. அந்தப் போலி வலை உலகம் அறிந்த போலி. நாட்டாமை, அன்னியன், திருப்பதி, மோடி மஸ்தான், லோக்கல் அன்னியன் இவர்களெல்லாம் யார்?. உங்களின் அவதாரங்களா?. ஜெயலலிதாவைக் கூட அப்படிப்போடு அல்லது மரம் என்ற பெயரில் விமர்சிக்கும் எனக்கு., உங்களிடம் கேள்வி கேட்க என்ன தயக்கம்?. 'மூடிட்டு போவாய்ங்களா?' (முகமூடி., புனுகு நீதிபத்தியில், நான் கேட்பதைப் போல!!) ஒரு கேள்விக்கே அதும் நியமான கேள்விக்கு இப்படி துடித்து வரம்புமீறி எழுத முடியுமென்றால்., நீங்கள் செய்வதையெல்லாம் வாய்மூடிகிட்டு நாங்கள் பாதிக்கப் பட்டால்கூட வேடிக்கை பார்க்க வேண்டுமா அப்பனே? பாதிக்கப்பட்டால் யுத்தம் செய்யும் உரிமை உங்கள் கூட்டத்திற்கு மட்டும்தான் உண்டா?. நான் யுத்தமெல்லாம் செய்யவில்லை., தோன்றியதைக் கேட்டேன் அவ்வளவுதான். உங்கள் பதிவில் கேள்வி கேட்டோமா அங்கு எதிர்ப்பை பதிவு செய்த யாராவது?. டோண்டு அவர்களைக் கேட்டால்., முகமூடிக்கும் (தனிப் பதிவு போடும் அளவிற்கு).,, ரவுசு, நாட்டமைக்கும் ஏன் தாங்கமுடியவில்லை?., மோடி பெயரில் மோடித்தனமாக வந்து என்னை வாழைபழம் சாப்பிடச் சொல்கிறது ஒரு அறிவுஜீவி. சம்பந்தப்பட்ட பதிவரோ அப்படியே அந்த விதயத்தை திசை திருப்பி., மூடி வச்சிட்டார் !!!. என்ன நடந்ததென்று படித்துப் பாருங்கள்., நீங்கள்., என்று குதிப்பது., படித்து மேற்கோள் காட்டினால்., இதை பொறுமையாக தேடிப் போயிருக்கிறீர்கள் என நக்கல் செய்வது. காலம் கலி காலம்.
இளவஞ்சி இந்தப் பதிவிற்கு என் மனப்பூர்வமான நன்றி.
பதிலளிநீக்குமுகமூடி, உங்களிடம் இளவஞ்சி அவர்கள் கேட்டது எனக்கு நீங்கள் அளித்த மறுமொழியின் தொனி பற்றி. எனவே., நீங்கள் இளவஞ்சியிடம் தனி மடலில் பகிர்ந்துகொள்ளும் எதுவும் என்னைப் பற்றியதாயின்., தயவுசெய்து இங்கு பொதுவிலும் அதைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇளவஞ்சி, அப்டிப்போடு,
பதிலளிநீக்குஎன்னமோ போங்க...நீங்க எழுதின விஷயங்களில் பலது எனக்கு context-யே தெரியவில்லை. நிறைய தலை சுத்தல்தான் மிச்சம். ஆனாலும் கோபங்களும், முக்கியமாக தாபங்களும்நன்கு புரிகின்றன. பதிவர்கள் நாம் செல்ல வேண்டிய தூரமும், உயரவேண்டிய எல்லையும் இன்னும் மிக அதிகம்.
கலக்கல் பதிவு.
பதிலளிநீக்கு//பதிவர்கள் நாம் செல்ல வேண்டிய தூரமும், உயரவேண்டிய எல்லையும் இன்னும் மிக அதிகம்.//
பதிலளிநீக்குவேண்டவே வேண்டாம் தருமி சார். என்னத்தா கத்துக்கிட்டு என்னத்த சாதிக்கப் போகிறோம். மனுஷ தன்மன்னு ஒண்ணு உண்டு,
அது இல்லாம வாய்க்கு வந்தத பேசிக்கிட்டு,... போதுங்க இந்த வெட்டி வீராப்பு, அட்ட கத்தி வீரம்.
கடிதத்திற்கு நன்றி. சுருக்கமாகவே பதிலளிக்க விரும்புகிறேன். பிரச்சினை வெறும் ஆபாசப் பின்னூட்டங்கள் மட்டுமல்ல. என்னுடைய அடையாளத்தைத் திருடி என்னுடையதைப் போலவே வலைப்பூ தயார் செய்து மற்றவர்களை அவர்கள் பதிவிலேயே ஆபாசமாக அர்ச்சித்தவன் போலி டோண்டு என்ற இழிபிறவி. அவனை நான் எனக்கு தெரிந்த முறையில் கையாண்டேன், இப்போது மொத்தமாகவே மட்டுறுத்தல் வந்திருக்கிறது. அது வந்ததிலிருந்து ஏதேனும் அசிங்கப் பின்னூட்டங்களும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் பலருக்கு நான் செய்தது பிடிக்கவில்லை. அவர்களுக்கு மட்டுறுத்தல் தங்கள் பதிவுகளில் செய்ய சோம்பேறித்தனம் என்பதைத் தவிர வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
பதிலளிநீக்குஇப்போது வந்து நான் என்னவெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று அக்கறையாகக் கூற முற்படுகின்றனர். அதாவது நான் இக்னோர் செய்திருக்க வேண்டுமாம். தங்களுக்கு இம்மாதிரி கஷ்டம் வராதபோது இம்மாதிரியெல்லாம் உத்தமமாக உபதேசம் செய்வது எளிதே. அது அது தனக்கு வந்தால் தெரியும். இன்னொரு பதிவாளர் கூறுகிறார், அவர் வலைப்பதிவதையே விட்டுப் போயிருப்பாராம். என்ன செய்வது, நான் அவரில்லையே.
நான் தனிப்பதிவு போட்டு ஏன் அதில் நான் மற்றப் பதிவுகளில் இட்டப் பின்னூட்டங்களை அதில் நகலிட்டு வந்தேன் என்பதற்கு பல முறை விளக்கம் அளித்தாகி விட்டது. இருப்பினும் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அதனால் போலி டோண்டு அதிகக் கோபமடைந்தான் என்று சொன்னதையே கூறிக் கொண்டிருந்தால் நானும் விளக்கத்தை திரும்பத் திரும்பத்தான் கூற வேண்டியிருக்கும். என் பெயரில் பல போலி பின்னூட்டங்கள் வருவதால் இதை நான் செய்ய வேண்டியதாயிற்று.
நான் ப்ளாக்கர் பின்னூட்டங்கள்தான் இடுவேன். அதர் மற்றும் அனானி ஆப்ஷன்களை கனவிலும் உபயோகிக்க மாட்டேன். ஆகவே எலிக்குட்டி சோதனையில் சரியான ப்ளாக்கர் எண் வர வேண்டும், மற்றும் போட்டோ எனேபிள் செய்யப்பட்டிருந்தால் என் போட்டோவும் வரவேண்டும் என்றெல்லாம் எத்தனை முறை கரடியாகக் கூறியிருப்பேன். அதே சமயம் ப்ளாக்கர் இல்லாத வேறுவகை பதிவுகளில் இந்த சோதனைகள் பிரயோசனப்படாததால் மூன்றாவது சோதனையாக என் தனிப்பதிவில் அம்மாதிரிப் பின்னூட்டங்களை மறுபடியும் நகலிடுவது என்றும் செயல்பட்டு வருகிறேன்.
வேறு முறை? உண்டு. நான் வேறு எங்குமே பின்னூட்டமிடக்கூடாது. ஆரோக்கியம் அவர்கள் அவ்வாறுதான் செய்தார். அவரைத் தவிர வேறு பலரும் அவ்வாறே செய்தனர். போலி டோண்டுவும் அதைத்தான் எதிர்ப்பார்த்தான். அம்முறை காரியத்துக்காகாது. அது என் சுதந்திரத்தை நானே கட்டுப்படுத்திக் கொள்வதற்கு சமமாகும்.
என் பதிவுகளை பல காலமாக படித்து வருபவர்களே செய்ய வேண்டிய எளிதான சோதனைகளை செய்யாமல் என்னைப் பற்றி தவறான புரிதல் வருவது போல செய்தபோது, I cannot be too careful.
இப்பின்னூட்டமும் என்னுடைய இப்பதிவில் பின்னூட்டமாக இடப்படும். அங்கு வருகிறதா என்பதைப் பார்த்தே இப்பின்னூட்டத்தை மட்டுறுத்தி ஏற்றுக் கொள்ளவும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Ilavanji,
பதிலளிநீக்குMy 2 cents.
- Not sure whether you can ignore him when he does identity theft. We should take action against him. But saying things like "poli dondu is the real dondu" is three much.
-Also have you seen "gang-up" attitude of the bloggers recently?(either way). This too has to stop.
All in all, in my opinion what mugamoodi did was correct (in respect of the neethipatthigal post).
Also moderngal needs condemnation too.
Cheers
உஷா,
பதிலளிநீக்குநான் சொல்லவந்ததும் அதே மனுஷத் தன்மையைத்தான் - அறிவைப் பற்றிச் சொல்லலை; மனசத்தான் சொல்ல வந்தேன். ஓர் அடிப்படை 'வெளி'நாகரீகத்தையாவது நாம் கடைப்பிடிக்கவேண்டுமல்லவா - அதுதான் நான் குறித்த போகவேண்டிய தூரமும், ஏற வேண்டிய உயரமும்.
இளவஞ்சி,
பதிலளிநீக்குமுகமூடியைப் பற்றிய பிம்பங்களோடு அணுகியவர்கள் இப்பொழுது அவரது சுயரூபங்களை இனம் கண்டு கொள்ளத் தொடங்கி இருப்பது நல்லது. அவருடைய பிறரை அறியாமலே கருத்து சொல்லும் சுதந்திரத்தைக் கண்டித்து ஒரு பதிவே போட்டுவிட்டேன். நீங்கள் அதை கவனிக்கவில்லை போலிருக்கிறது. அல்லது அது ஏதோ தனிப்பட்ட சண்டை போல் என்று நினைத்துக் கொண்டீர்கள். நையாண்டி நக்கல் செய்வதைக் கூட நாகரீகமாக செய்ய இயலும் - பிறர் ரசிக்கும் வண்ணம். அதற்கு மனம் சுத்தமாக இருக்க வேண்டும். நேர் கொண்ட நெஞ்சம் வேண்டும்.
முகமூடி என்று பெயர் வைத்துக் கொண்டு, ஒரு அநாநிக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று பறை சாற்றும் அவரிடம் எந்தவித தர்க்க நேர்மையை எதிர்பார்த்தீர்கள்? ராமச்சந்திரன் உஷாவின் பதிவில் எனக்குப் பதில் அளிக்கையில் அவர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார் - ' பெயரளவில் வலைப்பூக்கள் வைத்திருப்பதற்கும், அநாநிகளுக்கும் என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்று தானே' என்றார். ஆமாம் - இதுதான் முகமூடிக்குப் பொருத்தமான விளக்கம். ஒரு அநாநிக்கும் அவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. அது போல அவருடைய அடிபொடிகளும் அவரும் இணைந்து நடத்தும் 'சாட்டிங்' தர்பார்களும் தனிமனித துவேஷங்களின் உச்சத்தைத் தொட்டவை தான்.
ஒரு பதிவு போடுவதும், எதிர்ப்பு வந்ததும் அதை நீக்குவது அல்லது திருத்துவது - கடைந்தெடுத்த அயோக்கியத் தனம். நேர்மையற்ற எழுத்துகளைப் பிறப்பிக்கும் இழிந்த மனிதர்கள். இதற்கு முன்னர் இவ்வாறு செய்தவர்களைக் கண்டித்திருக்கிறேன். இனியும் கண்டிப்பேன். பிறரை தாக்குவதும் பின்னர் நல்லவனாக வேடமிட்டு திருத்துவதும் - எந்த தர்மத்தைச் சார்ந்தது? முன்னர் எழுதிய எழுத்துகளை அப்படியே வைத்து விட்டு, மன்னிப்பு கேட்பது தான் தர்மம் ஆகும். ஆனால், எல்லா இடத்திலும் வேடமிடுவது ஒன்றே தொழிலாகக் கொண்டு திரியும் இந்த நண்பர்களை புறக்கணித்து விட்டு - (முக)மூடிக் கொண்டு போ - என்று அறிவுறுத்தி விட்டு, நம் வேலைகளைப் பார்ப்பது தான் - நமக்கு நன்மை பயக்கும்.
என்று இவர்களால் தங்களை முழுமையாக வெளிகாட்டி நேர்மையாக இயங்க முடிகிறதோ - அன்றைக்குத் தான் இவர்கள் மீது நம்பிக்கை வைக்க முடியும். அதுவரையிலும் இவர்கள் வெறும் வெத்து வேட்டுகள் தான்.
விட்டுத் தள்ளுங்கள்.
அன்புடன்
நண்பன்
இளவஞ்சி,
பதிலளிநீக்கும்..என்னத்த சொல்றது? பார்த்து பண்ணுங்க
Dondu Sir vilakkam surukkama than erunthathu
பதிலளிநீக்குகருத்தை விட்டு, சொன்ன ஆள் யார், எப்படி இருப்பார், அவர் சாதி என்ன, மதம் என்ன, எந்த தேசத்தில் வசிக்கிறார் போன்றவற்றை ஏன் சொல்ல வேண்டும் என்று புரியவில்லை.
பதிலளிநீக்குஇது போன்ற கோரிக்கைகள் ஒரு கலர்-கண்ணாடி அணிந்தே பார்க்க/படிக்க வைக்கும். தன்னை வெளிக்காட்டி கொள்வதும் கொள்ளாததும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும்.
அதே போல, ஒருவர் தான் தவறு செய்தால், அதை திருத்திக்கொள்ள அவருக்கு ஏன் உரிமை இல்லை என்று புரியவில்லை. எல்லோரும் முதல் முறையே எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும் என்பது என்ன ஞயாயம். தான் தவறில்லை என்று நினைத்தது இன்னொருவர் தவறென்று சுட்டி காட்டிய பின் அதை உணர்ந்து திருத்திகொள்வது இழிந்த செயலா? தவறை அழிக்காமல் வைத்து மன்னிப்பு கேட்பதால் அதை படித்து வேறு ஒருவர் மன வருத்த படுவதை தடுக்க முடியாது.
இதை நான் முகமூடி-க்கு சாதகமாக சொல்லவில்லை, இங்கே இருக்கும் பொதுவான சர்ச்சை பற்றியே சொல்கிறேன்.
இங்கே முன்னே ஒருவர் சொன்னபடி "gang-up" நல்லது அல்ல. அடுத்தவர் சுதந்திரம், அவருக்கு இருக்க கூடிய இடர் போன்றவற்றையும் சற்று நினைத்து பார்க்க வேண்டும். எல்லோரும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதும் ஒரு வகை பாசிசமே.
வார இறுதியில் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதற்கு முன் பல கருத்துக்கள்.
பதிலளிநீக்குஅப்டிபோடுவின் கருத்துக்கள் நான் எதிர்பார்க்காத கோணத்தில், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. misunderstanding. என் விளக்கததை open mind எதிர்கொள்வார் என்று நம்புகிறேன்.
அரை வேக்காட்டுத்தனமாக உளறிய நண்பனுடன் மேற்கொண்டு பேச விருப்பம் இல்லை என்று சொன்ன பிறகும் இங்கே வந்து நண்பன் ஊளையிடுவது ஆச்சர்யம் அளிக்கிறது. சரி நண்பனுக்கு என் மேல் என்ன அக்கரை என்றும் விளக்குகிறேன்.
அனைவருக்கும் :: மரண தண்டனை விதிக்கும் முன் கொஞ்சம் பொறுங்கள். please reserve ur judgements till I come with my facts. weekend programs சில உள்ளன. ஆகவே இரண்டொரு நாள் தாமதித்தால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்று நம்புகிறேன்..
///////என்னைப்போன்ற உங்கள் வாசகர்கள் உங்கள் பதிவுகளை தவறாமல் படித்தாலும் இப்போதெல்லாம் உங்களுக்கு பின்னூட்டமிட பயப்படுவதும், நீங்கள் உங்கள் தர்க்கசாஸ்திரத்தை ஆரம்பித்தீர்கள் என்றால் தலைதெறிக்க ஏன் ஓடுகிறோம் என்பதற்குமான விடை உங்களுடைய இந்த பதிவிலேயே (http://dondu.blogspot.com/2005/12/blog-post_04.html என்னைப் புரட்டிப்போட்ட அந்த ஞாயிற்றுக் கிழமை) உங்களுக்கு கிடைக்கலாம்! உங்களுடைய வாழ்க்கையை புரட்டிப்போடும் இன்னுமொரு ஞாயிருக்காக காத்திருக்கும் உங்கள் வாசகன்!
பதிலளிநீக்கு//////////////////
டோண்டு ஐயா,
இளவஞ்சி உங்களுக்கு வைத்த கேள்வி மேலே உள்ளது தான். நானும் உங்களிடம் முன்பு சொன்னது இதைத்தான். ஆனால் வழக்கம் போல் இதை முழுவதுமாக புறக்கணித்துவிட்டு சம்பந்தமில்லா உங்கள் பழைய பல்லவியை இங்கே பாடியுள்ளீர்கள். இதைத்தான் நாங்கள் போலியை வத்து நீங்கள் சீப் பப்ளிசிட்டி தேடிக்கொள்வதாக சொல்கிறோம். இவ்விதம் நீங்கள் சீப்பப்ளிசிட்டிக்கு ஆசைப்படுவதால் தான் போலி பிரச்சனை பெரிதாக வளர்ந்தது என்றும் குற்றம் சாட்டுகிறோம்.
ஆனால் அதற்குள் இவ்விதம் பேசுபவர் அனைவரும் போலியை ஆதரிப்பதாக ஏகப்பட்ட திரிப்புகள் உங்களாலும் உங்கள் அடிபொடிகளாலும் செய்யப்படுகின்றன.
மிகவும் யோசித்து கிட்டதட்ட முழு அரைநாள் என்னோடு வைத்திருந்து கவனமாக மாற்றங்கள் செய்து இட்ட பின்னூட்டத்திற்கும் இவ்விததிரிப்புகள் செய்த போது உண்டாகிய கோபத்தில்தான் உங்கள் பதிவில் காட்டமான பதில் இட்டேன்.
ஜாலியாக இடும் பின்னூட்டங்களை தவிர மற்றவற்றை மிக கவனத்தோடு இடும் நானும் அப்படி காட்டமான
ஒன்றை இட்டேன். இவ்விதமான செயல்களின் மூலம் நீங்கள் தான் போலியின் தோன்றலை நியாயப்படுத்துகின்ரீர்.
(ஹ¤ம் எவ்வளவு சொல்லியும் என்ன. சீப்பப்ளிசிட்டி என்ற ஒற்றை சொல்லை பிடித்துக்கொண்டு தொங்கப்போரீங்க.)
இளவஞ்சி முகமூடி மற்றும் சின்னவன் பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் தெளிவான செய்திகளை சொல்லும் வலைப்பதிவுகளை படிப்பதால் ஏற்படும் மனமாற்றங்களைப் பற்றிய கருத்துகளோடும் நானும் ஒத்துப்போகின்றேன்.
சின்னவரே உங்கள்
பின்னூட்டத்திற்கு என் வணக்கங்கள்
...
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குநண்பன் அவர்களே,
பதிலளிநீக்குபதிவொலோ அல்லது பின்னுட்டத்திலோ சொல்லப்படுகின்ற விஷயங்களை மட்டுமே நான் பார்க்கிறேன் எழுதுபவர்கள் யார் என்று
நான் ஆராய முற்படுவதும் இல்லை. முகமூடியோ அல்லது அப்படிப்போடு என்பவரோ யார் என்று இன்றுவரை எனக்கு தெரியாது. அன்றைய பதிவு எனக்கு பிடித்திருந்தால் ஒரு கருத்து சொல்வது. திருமாவின் பட்டை குறித்த முகமூடியின் பதிவில் எனக்கு ஒப்புதல் இல்லை, ஆக பின்னுட்டம் எதுவும் இடவில்லை, ஆனால் எரிக்கப்பட்ட மூன்று பெண்களைக் குறித்த பதிவுக்கு நாம் ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.
மற்றப்படி யாராவது எதையாவது சொல்லிக் கொண்டுத்தான் இருப்பார்கள், அதை எல்லாம் சட்டை செய்வதில்லை.
எனக்கு இதுநாள் வரை கிடைத்த நேர்மையாளனி பட்டத்தை வைத்துக் கொண்டு, நல்லவளாக பாவலா காட்டிக் கொண்டு, நானே நாளை புதிய
பெயரில் பதிவு ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாமே! இதுதானே வலையுலகில் காலக்காலமாய் நடக்கிறது?
//நாளை புதிய பெயரில் பதிவு ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாமே!//
பதிலளிநீக்குஎன்னாபா ரெடியா? எப்போ?
//முகமூடியோ அல்லது அப்படிப்போடு என்பவரோ யார் //
பதிலளிநீக்குஹலோ மேடம்., உங்கள் இ-மெயிலில் என் புகைப்படம் என் குடும்பப் படம் அனுப்பட்டுமா?., நான் மரம் என புனைப் பெயர் கொண்டிருக்கிறேன். அப்படிப் போடு என்பது என் பதிவின் பெயர். தெளிவாக நான் நான் வசித்த இடம், வளர்ந்த இடமெல்லாம் என வலைப் பதிவில் சொல்லியிருக்கிறேன். (ஏன் என் பாட்டன்., முப்பாட்டன் கதையைக் கூட!!!) இத்தனைய எழுதிவிட்டு ஏன் மரம்ங்கிற பேர்ல எழுதனும்னு என்னை நானே கேட்டுக் கொண்டதுண்டு. என்னுடைய ஈமெயில் சென்ற நண்பர்கள்., தோழிகள் அனைவருக்கும் என் பெயர் தெரிந்திருக்கும். கருத்துக்களில் நான் புரிந்து கொண்ட உஷாவே என் கண்முன் தெரிகிறாரே அன்றி., புகைப்படத்தில் இருக்கும் உஷா அல்ல.., நீங்கள் கொடுத்த கடந்த மூன்று பின்னூட்டங்களில் நீங்கள் என் மீது தவறான புரிதலை வைத்திருக்கிறீர்கள் என என் ஊள்ளுணர்வு சொல்கிறது., இத்தப் புரிதல் டோண்டு , முகமூடியிடம் இருந்தால்., பேசாமல் இருந்திருப்பேன். ஆனால் நடுநிலை வகிக்கும் உங்களிடம் இருப்பதால் விளக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள் உஷா., நான் டோண்டுவை கேட்ட கேள்விகளில் இருக்கும் நியாயம் திரிக்கப் படக்கூடாது., இதற்காகவே பதில் கூறுவேன்.
இளவஞ்சி., நீங்கள் குறிப்பிட்டு இருந்த சின்னவன் பதிவிற்கு சென்று பார்த்தேன்., அங்கிருந்து மார்டன் கேர்ள் என்ற பதிவின் சுட்டி கிடைத்தது. அப்போதுதான் எல்லாமே விளங்கியது. அவரின் பதிவுகளைப் படித்துவிட்டு அவருக்கு பின்னூட்டமும் இட்டேன். நான் இடும்போது இங்கு இரவு 1 மணி அளவில் இருக்கும் இப்போது 12 மணியாகப்போகிறது அவர் இன்னும் என் பின்னூட்டத்தை மட்டுறுத்தலில் அனுமதிக்கவில்லை போல., இனியும் அனுமதிப்பார் என தோன்றவில்லை., எனவே எனக்காக அதை இங்கு வெளியிடுங்கள்., உஷா . உங்கள் பின்னூட்டத்திலிருந்த மறைமுக ஆதங்கமும் இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். வேறு என்றாலும் சொல்லுங்கள்., நாம் சற்றும் சிந்திக்காத கோணத்திலெல்லாம் பிரச்சனை வருகிரதப்பா..!
பதிலளிநீக்கு************
அம்மா மார்டன்., போலி புண்ணியத்துல தங்களைக் கண்டடைந்ததுதான் தாயே மிச்சம். சும்மா சொல்லக்கூடாது இப்பிடி விளையாடுறிங்க. நிச்சயம் நீங்கள் ஒரு பொண்ணாக இருக்க முடியாது என்பது என் அவதானம் (இதுக்கு எதையாவது கேவலமா சொலிராதிங்க தாயே).அந்தக் கூட்டத்தையே மிஞ்சிருவிங்க போல?., நேர மாற்றமோ? என்னமோ? நீங்கள் இதுவரை கண்ணில் பட்டதில்லை. சிலவற்றைப் படித்துவிட்டு (இன்று முழுவதும் இதுதான் வேலை!! )வியந்து போனேன் என்பது உண்மை.,
//மாடர்னுக்கு யோசிச்ச வரையில், படைப்பிலே புனைவு, புனைவுக்குள்ளே கற்பனை , அந்த கற்பனை மீது எதிரொளிக்கும் வாசகனின் படிமங்களால் உருவாக்கி விரிந்தெழும் சமூகப்பர்வை அத்தனையும் கணக்கில்கொள்ளப்படவேண்டும். இருந்தாலும் பெரும்பாலான மதிப்பு படைப்பாளியைத்தான் சாரும் என்று இவ நினைக்குறா//
//அரங்கேற்றம் என்ற அமைப்பு இந்தத் தரமதிப்பீட்டு முறைக்கு உரியதாக பலநூறுவருடம் நம் பண்பாட்டில் இருந்துள்ளது. சங்கப்பலகை என்ற கவித்துவமான இருட்டடிப்பு இலக்கியப்பொய் எந்த அளவு கூர்மையாக மதிப்பிடப்பட்டது என்பதற்கு உதாரணம்..//
//கவிஞனில் இருந்து வருவது அவனுடைய சொந்தக் கருத்து என நாம் எப்போதுமே எண்ணியது இல்லை, அவன் வழியாக அவனை மீறிய அவனைவிட மகத்தான ஒன்று நம்மிடம் பேசுகிறது என்று நம்பினோம். பலநூறு வாய்மொழிக்கதைகள் இதையே மீண்டும் மீண்டும் சொல்கின்றன.//
//இந்த அளவுகோலை வைத்துப் பார்த்ததனால்தான் இளங்கோ முன்னகர்ந்தார், சீத்தலை சாத்தனார் பின்னகர்ந்தார். கம்பன் முதன்மைபெற்றான், சேக்கிழார் மதத்துக்குள் நின்றார். இன்று எழுதும் ஒரு படைப்பாளியை இந்த அளவுகோலால் இயல்பாக அளவிடுகிறோம். இதுவே நியாயம். நாம் வந்தடைந்த இடத்திலிருந்து முன்னகர வேண்டும். பின்னால்போவது மனித இயல்பே அல்ல//.
இவ்வளவு அறிவுடைய நீங்கள் உங்கள் எழுத்தையும்., உழைப்பையும் ஏன் சில அற்பவிதயங்களுக்குப் (உங்கள் பெண்ணிய (தீவிர)வாதத்தை இங்கு குறிப்பிடவில்லை)பயன்படுத்த வேண்டும்?.
//இருந்தாலும் பெரும்பாலான மதிப்பு படைப்பாளியைத்தான் சாரும்//
உங்கள் படைப்புகளின் மதிப்பும் அவ்வாறுதானே சகோதரி?. (நீங்கள் பெண்ணாக இருந்தால்!).
தீர்க்கமான முடிவுகள்., படிக்கும் எப்பெண்ணின் மனத்தையும் அசைத்துப் பார்க்கும் அலட்சியம் (எழுத்தில்)., சமூகம் கொண்டுள்ள(பெண் மீது மட்டுமல்ல... ஒரு நல்ல மனிதன் என்றால் அவன் மீதும்தான்)நம்பிக்கைகளை கேலிக்குள்ளாக்கும் விதம்., எதைச் சிந்தித்தாலும்., கண்ட உருவகங்களை அதன் மீதேற்றி உங்களை நீங்களே கரை படுத்திக்கொள்ளும் (உங்கள் வரை அது உரிமை!!!., அடுத்தவனை அவமானப் படுத்தியா அந்த உரிமையைச் சொல்லவேண்டும்?) துணிவு என நிறைய வியக்க வைத்தீர்கள்.
சில முரண்களும் என் கண்களுக்குப் படாமலில்லை. (சில ஆபாசத்தையும், அதிரடிகளையும் தவிர்த்து)., ஏன் இப்பதிவிலேயே., 1983 ஆம் வருடம் பிறந்தேன் எனக் கூறிய நீங்கள்., 1981 உங்கள் தோழிக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்.
வரம்பு மீறிய எழுத்துக்களை பொதுத் தளத்தில் வைப்பது மட்டுமே பெண்ணுரிமை என நிறுவிவரும் உங்களைப் போன்றவர்கள் எதை சாதிக்கமுனைகிறீர்கள் சகோதரி?., எந்த எதிர்ப்பையும் காட்ட சரியான வழிமுறைகள் உள்ளன. கடந்த நாட்களில் படிந்திருக்கும் சேற்றின் மீது நீங்கள் மீண்டும் எத்தகைய சேற்றை ஏறிந்தாலும் சரி., உங்கள் அறிவை ஆக்கப்பூர்வமான வேலைகளுக்குத் திருப்புங்கள்.
//அப்படி ஒரு 'உதாரண நாவல்' நம் மனதில் இருக்கையில் அதனுடன் ஒப்பிட்டே ஒவ்வொரு நாவலையும் நாம் மதிப்பிடுகிறோம். இது சுமார், இது நல்ல நாவல், இது மிகச்சிறந்தது என. எல்லா இலக்கியத்திறனாய்வும் ஒப்பிட்டே இலக்கிய புண்ணாக்குகளை உருவாக்குகிறது. எல்லா அக ஏமாற்றல்கல்ளும் இப்படித்தான் நம் மனதில் ஓர் உதாரண உச்ச வடிவில் உள்ளன. நியாயம் நீதி எல்லாம் அப்படித்தான். அதனுடன் ஒப்பிட்டே நாம் அன்றாட நியாயத்தையும் நீதியையும் மதிப்பிடுகிறோம்.//
இப்படிச் சிந்திக்கும் மூளை மூன்றாம் தர விமர்சனங்களுக்கு உள்ளாகும் வகையில் சிந்திக்குமா?. வியப்பே!!!!. இந்தப் பின்னூட்டத்தை வேறு எங்கோ., உங்கள் பதிவில்தான் போட்டுவிட்டேன் போலும்., தூக்கக்கலக்கம்.
*************
வேறு ஒருவருக்கான பின்னூட்டத்தை இங்கு இடுதற்கு பொறுத்துக் கொள்ளுங்கள்., எனக்கு வேறு வழி தெரியவில்லை., தனிப் பதிவிடலாம்., என் பதிவிற்கு எத்தனை பேர் வருவர்?
அப்படிப்போடு, உங்கள் பெயரையும் முகமூடியின் பெயரையும் குறிப்பிட்டதற்கு காரணம், பெயரைப்பார்த்து பதிவுக்கு மறுமொழி
பதிலளிநீக்குபோடுவதில்லை என்பதை சொல்ல முற்பட்டேன். என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை மட்டுமே பார்க்கிறேன். அவர்களின் பின்புலங்களை ஆராயவோ அல்லது முன்பு என்ன என்ன எழுதினார் என்பதையும் நினைவு வைத்துக் கொள்ளுவதில்லை என்பதையும் இன்னொரு முறை சொல்லிக் கொள்கிறேன்.
மூன்று பின்னுட்டங்களில் தவறாய் புரிந்துக் கொண்டேன் என்று சொல்வது எதை எதை? வருத்தமாய் இருக்கிறது. பொதுவாய்
என்னை விமர்சித்து வருவதைக் கூட நான் பெரியதாய் எடுத்துக் கொள்வதில்லை. அப்படி இருக்க, உங்களை ஏன் நான்
தவறாய் புரிந்துக் கொள்ள வேண்டும்? உங்க ஈ மெயில் ஐடி தாங்களேன். மெயில் அனுப்புகிறேன்.
"dondu(#4800161) hat gesagt…
பதிலளிநீக்குவிவாதம் கொஞ்சம் சூடாத்தான் இருக்கு. எட்டி நின்னு வேடிக்கை பாக்கலாம்.
12:30 PM, February 04, 2006"
அதர் ஆப்ஷனை உபயோகித்து மேலே போலி டோண்டு என் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கிறான். நீங்களும் அதை அனுமதித்துள்ளீர்கள். என்னுடையப் பின்னூட்டங்களில் போட்டோ மற்றும் ப்ளாக்கர் என் இரண்டும் சரியாக வர வேண்டும் என்று நான் எத்தனை முறை கூறினாலும் உங்களுக்கு அது ஏறவில்லையே. சோழனாடனும் இதை பார்க்கட்டும். இப்போதாவது என் பெயரில் வந்தப் போலிப் பின்னூட்டத்தை நீங்கள் நீக்குவீர்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.
3ஆம் தேதி மாலையிலிருந்து இன்று காலை 9 மணி வரை நான் ஆஸ்பத்திரியில் இருந்தேன். ஹெர்னியா அறுவை சிகிச்சை. ஆகவே இந்தப் போலிப் பின்னூட்டத்தைப் பார்ப்பதில் தாமதம். இந்த அழகில் நான் சீப் பப்ளிசிடி செய்கிறேன் என்று வேறு வருத்தப்படுகிறீர்கள். அடித்துக் கொள்ள ஆயிரம் கைகள் வேண்டும் ஐயா.
தலை வலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பதுதான் உண்மை.
இப்பின்னூட்டம் என்னுடைய இந்தப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/blog-post_21.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்பதிவோடு தொடர்புடைய, முகமூடியின் விளக்கங்கள் அடங்கிய பத்ம வியூகம் என்ற பதிவையும் அவசியம் படிக்கவும். இது விளம்பரம் அல்ல.
பதிலளிநீக்குமுகமூடி,
பதிலளிநீக்குஉங்களது கருத்துக்களுக்கு என் நன்றிகள்!
மீண்டும் ஒருமுறை நான் இப்படி சொன்னேன், நீங்கள் அப்படி எழுதினீர்கள், அன்றைக்கு சொன்னதற்கு இந்த அர்த்தம், இன்றைக்கு எழுதுவது இதனால் என்று நான் இதனை தொடர விரும்பவில்லை! அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை!
ஆனால், ஒரு வாசகனாக எனக்கிருக்கும் ஆதங்கத்தைவிட முக்கியமானது என ஒரு பதிவராக உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இடர்களையும் புரிந்துகொள்கிறேன்!
சின்னவன்! உங்களது பின்னூட்டத்திற்கு என் வந்தனங்கள்! நான் சொல்லிய முறையில் உங்களுக்கு ஏதேனும் வருத்தம் இருப்பின் என்னை மன்னிக்க!
டோண்டு சார்! போலிப்பின்னூட்டம் நீக்கப்பட்டது. தவறுதலுக்கு மன்னிக்க. ஆனால் இங்கே நான் உங்கள் பதிவுகளைப்பற்றி குறிப்பிட்டது போலிகளின் பின்னூட்ட பிரச்சனையை மட்டும் அல்ல!
பின்னூட்டமிற்ற மற்றவர்களுக்கு,
உங்களது கருத்துக்களுக்கு நன்றி!
ஒரு சில தன்மனிததாக்குதல்களைதவிர நான் வேறு எதையும் இங்கே மட்டுறுத்தவில்லை! மட்டுறுத்தப்பட்டவர்கள் மன்னிக்க!
அனைவருக்கும் என நன்றிகள்!