முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு காங்கிரஸ் கோஷ்டியின் அலப்பரை போஸ்டர் !

இது உள்குத்து போஸ்டரா? இல்லை கும்மாங்குத்து போஸ்டரா?!

ஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டியும்

போனவாரம் எங்க கிராமத்துப்பக்கம் என் பையனுக்கும் என் கசின்பிரதரு பசங்களுக்கும் முடியிறக்கி காதுகுத்து வைச்சிருந்தோம். கிராமம் எங்க இருக்குன்னு சொல்லறதுன்னு அம்புட்டு சுலபமா? மாக்கா உங்க நேட்டிவ் எதுங்கன்னு கேக்கறப்ப வழக்கமாச் சொல்லற கொழப்ப பதிலேத்தான் உங்களுக்கும்! (இதுக்கு பயந்தே நான் 20 வருசமா இருக்கற கோவைய சொல்லிக்கறது :) ) தருமபுரிங்க... அது மாவட்டம்ப்பா! தருமபுரில எங்க? அங்கன இருந்து 15 மைலுங்க.. பாலக்கோடு! பாலக்காடா? கோடா? சரி...பாலக்கோட்டுல?! பக்கந்தான்.. அங்க இருந்து 5 மைலு... மாரண்டஹள்ளி... அடப்பாவி! அங்க இருந்து?! வடக்கால 3 மைலு நடந்தா.. ஏழுகுண்டூர்! எங்க பாட்டனுக்கு முப்பாட்டனுல இருந்து நாங்க வரைக்கும் இங்கதான் பசங்களுக்கு முடியிறக்கி காது குத்தறது. முனியப்பன் சாமி சிலையெல்லாம் இந்த தலைமுறை வைச்சது. அதுக்கு முன்னாடியெல்லாம் நடுகல் தான் சாமி. மலையின் அடிவாரத்துல இருந்து மேலவரைக்கும் ஏழு குண்டுப்பாறைகள் இருப்பதால் ஏழுகுண்டு முனியப்பன்! :) சாமிக்கு படையாலா கெடா வெட்டி சேவல் அறுத்து பன்னி குத்துவோம். பன்னிய இப்பெல்லாம் சமைக்கறதில்லை.. சாராயமும் படைக்கறதில்லை (சொல்லப்போனா கெடைக்