முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2006 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்பு

ஜீலை' 06 மாத போட்டிக்கான தலைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய தேன்கூடு - தமிழோவியத்திற்கு என் நன்றிகள். போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூலை 20, 2006 ஜூலை 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஜூலை 26 அறிவிக்கப்படும். - - = = 0 0 O 0 0 = = - - தேன்கூடு - தமிழோவியம் July 2006 போட்டியின் தலைப்பு மரணம்! இந்த உலகத்தில் இருப்பவருக்கு இதுதான் முற்றுப்புள்ளி. அடுத்து என்னவென்று எவரும் அறிந்ததில்லை. அறிந்தவர் இருப்பதில்லை. மரணம் ஏற்படுத்தும் விளைவுகள் அலாதியானவை. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் செய்கிறது. எவ்வளவு கெட்டவனாக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவன் இறப்பில் சில நல்லவைகளை பேசத்தான் செய்கிறோம். அருகாமை மரணங்கள் சில மணித்துளிகளுக்காவது நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவத்தான் செய்கின்றன. சுயநலக் கணக்குகள் அழுத முகங்களின் ஊடே அவரவர் அடிமனதில் ஓடத்தான் செய்கிறது. சற்றே துணிந்த மனமிருப்பின்

முதன்முதலாய் முதல் பரிசு! :)

ம க்களே! ரெண்டரைக்கழுத வயசுல என்னைக்கும் எதுலயும் எனக்கு முதலிடம் கெடைச்சதே கிடையாது! ஒன்னாப்புல இருந்து அஞ்சாப்பு வரைக்கும் சசிகலாவும், சுமதியும் மொத ரெண்டு ரேங்க்கு எடுத்ததால எனக்கு எப்பவும் மூணாவது இடம்தான்! ( அன்னைக்கும் பொம்பளையாளுங்க தான் நமக்குப் போட்டி! :) )அதுக்கப்பறம் வாழ்க்கைல கொஞ்சம் வெவரமாயிட்டதால கடைசி மூணு ரேங்க்குக்கு போட்டிக்குப் போயிட்டேன்! வெளையாட்டுலக்கூட மொதலிடத்துக்கு என்னைக்கும் முயற்சி செஞ்சது கிடையாது. கிரிக்கெட்டுன்னா பேட்ஸ்மேன் மூஞ்சிக்கு நேரா ரெண்டு பவுண்சரு போட்டுட்டா திருப்தியாகிருவேன். டிடி, ஷட்டில்ல கூட பளிச்சுன்னு ஒரு ஸ்மேஷ் அடிச்சிட்டா கோப்பை வாங்குன திருப்த்தி வந்துரும். கல்லூரி கூத்துக் கட்டறதுலக்கூட நமக்கு நடுவுல கலாய்க்கற போஸ்ட்டுத்தான் ரொம்பப் பிடிக்கும்! ஸ்டேஜ் ஏறி வாங்குன துப்புக்களை விட கீழ நின்னு விட்ட சலம்பல்களுக்கு கிடைச்ச விழுப்புண்கள்தான் அதிகம்! :) இதைவிட மகிழ்ச்சி மொத ஆளாய் நிக்கறப்ப கெடைக்குங்கறது இன்னைக்கு தெரியுது. நான் ஒரு Short term heppiness disorder person :) ப்ரகாஷ் பதிவுல மதி நான்கூட எழுதலாம்னு சொன்னப்ப அக்கா வெளையாட்டுக்குச் சொ

மணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்

போ ன வாரம் எங்கூட்டம்மாவோட தாத்தா ஊரான மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில விசேசங்க! 27 வருசம் கழிச்சு ஊர்ப்பண்டிகை கொண்டாடுனாங்க. இத்தனை வருசமா ஊருக்குள்ள யாராச்சும் டிக்கெட்டு வாங்கிட்டா அந்த வருசம் பண்டிகை கேன்சல் ஆகிருமாம்! இப்படியே போனா பண்டிகையே நடத்தமுடியாதுன்னு வருத்தமாகி பெருசுங்க எல்லாம் குறிகேட்டதுல "இந்த வருசம் நடத்துங்கப்பு"ன்னு சாமி வாக்கு கொடுத்தாப்புல. இதுக்குத்தான் என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தாங்க. யாருங்க அங்க புர்ர்ருன்னு சிரிக்கறது? சும்மா மாப்ளை கெத்து காட்டலாம்னா நம்பமாட்டீங்களே?! மக்கா பண்டிகைய 5 நாளு கோலாகலமா நடத்தி கலக்கிட்டாங்க. தெனம் நைட்டு சினிமா, கூத்து, ஆடல் பாடல்னு அசத்தல்தான். அங்க நான் எடுத்த படங்கள்ல நல்லதா நாலு இங்க போடலாம்னு எண்ணம். கடைசி வரைக்கும் போராடியும் ப்ளாகருசாமி படங்களை ஏத்த அருள் பாலிக்கலை! எனவே, பிடிச்ச படங்களை லோக்கலா சேமிச்சி இன்னும் தெளிவா பெருசா பாருங்கப்பு!! கேமரா Sony DSC-H1. மத்தபடி ஏதாவது அதிகப்படி தகவலா ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? ஃபில்டரு போட்டயான்னு யாராவது கேட்டிங்கன்னா... ஹிஹி... 1.

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

க.க: 6 - கல்யாணந்தான் கட்டிக்கிட்டு வாழப்போலாமா...?

எ ன்னது? ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப்பா பாடறனா? கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது? சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான்! கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு! ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது! ஆகவே, சிறப்பான இந்த பொருட்குற்றத்தோடு இன்னைக்கு பொங்கலை ஆரம்பிக்கலாம். கல்யாணங்கறது நெசமாவே ஒரு திருவிழாதாங்க! பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும்! ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக! அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்