முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேன்கூடு-தமிழோவியம் போட்டி: ஜீலை' 06 தலைப்பு

ஜீலை' 06 மாத போட்டிக்கான தலைப்பினை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை வழங்கிய தேன்கூடு - தமிழோவியத்திற்கு என் நன்றிகள்.

போட்டி பற்றிய தகவல்கள் - http://www.thenkoodu.com/contest.php

படைப்புகளை அளிக்கவேண்டிய இடம் - http://www.thenkoodu.com/contestants.php

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - ஜூலை 20, 2006

ஜூலை 21 - 25 வாக்கெடுப்புகள் நடைபெற்று, முடிவுகள் ஜூலை 26 அறிவிக்கப்படும்.

- - = = 0 0 O 0 0 = = - -


தேன்கூடு - தமிழோவியம் July 2006 போட்டியின் தலைப்பு
மரணம்!

Source: http://www.tropicalisland.de/travel_varanasi_benares.html



இந்த உலகத்தில் இருப்பவருக்கு இதுதான் முற்றுப்புள்ளி. அடுத்து என்னவென்று எவரும் அறிந்ததில்லை. அறிந்தவர் இருப்பதில்லை.

மரணம் ஏற்படுத்தும் விளைவுகள் அலாதியானவை. நெருங்கிய சொந்தங்களின் இழப்பு வாழ்க்கையை புரட்டிப் போடத்தான் செய்கிறது. எவ்வளவு கெட்டவனாக சமூகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும் அவன் இறப்பில் சில நல்லவைகளை பேசத்தான் செய்கிறோம். அருகாமை மரணங்கள் சில மணித்துளிகளுக்காவது நம்மை நாமே எடைபோட்டுப் பார்க்க உதவத்தான் செய்கின்றன. சுயநலக் கணக்குகள் அழுத முகங்களின் ஊடே அவரவர் அடிமனதில் ஓடத்தான் செய்கிறது. சற்றே துணிந்த மனமிருப்பின் அப்பழுக்கில்லா அங்கதங்கள் காணக்கிடைக்கும் அற்புதச் சுரங்கம் இழவு வீடுகள்.

மரணம் அறிதல் ஒரு விசித்திர உணர்வு! நூற்றுக்கணக்கில் மக்கள் செத்த துயரமிருப்பினும் "சுனாமி மட்டும் இன்னும் ஒரு கிலோமீட்டரு உள்ள வந்திருந்தா இன்னும் எத்தன பேரு செத்திருப்பாங்க?!" என நினைத்து அது தரும் த்ரிலுக்கு மயங்கும் மனம். அமெரிக்கா 9/11? "நல்லா வேணும்... வலின்னா என்னன்னு தெரியனும் அவனுங்களுக்கு!", இலங்கையில் வெடிகுண்டால 100 பேரு சாவா? "நமது அரசியல் நிலைப்பாட்டின் படி இது..." எனும் அவரவர் கற்பிதங்கள் மற்றும் நியாயங்கள். அன்னிய மரணங்கள் பல நேரங்களில் நமக்கு பொதுஅறிவுத் தகவல்கள். நம் நாட்டு வீரர்கள் அடைவது வீரமரணம். எதிர்த்துப் போரிட்டவர் சாவு எண்ணிக்கை வெற்றிக்கான அளவுகோள். மரணச்சேதிகளில் குறிப்பிடுவதுபோல ஈடு செய்ய முடியாத இழப்பு என்ற ஒன்று இருக்கிறதா? நிஜமாகவே ஒவ்வொரு மரணமும் ஒரு செய்தியை விட்டுச் செல்கிறதா? உடலில் இருந்து நின்றுபோகும் மூச்சுக்குத்தான் இடம், பொருள், ஏவல் பொறுத்து எத்தனை எத்தனை அர்த்தங்கள்!

ஆனாலும், இதுதான் நிரந்தரம் என்கிற உண்மை அனைவருக்கும் தெரிந்தே இருப்பினும்... எப்பொழுதும் அதையே நினைத்துக் கொண்டிராத மறதி இருப்பதால்தான் வெற்றி, அன்பு, காதல், செல்வம், புகழ், கல்வி, நட்பு, குடும்பம் போன்றவைகள் செத்தவனுக்கு அர்த்தமிழந்து போனாலும் நமக்கு அதே மையப்புள்ளையை நோக்கி ஓட கிரியாஊக்கிகளாக இருக்கின்றன.

மரணம் உண்டாக்கும் இழப்புகளையும், மாற்றங்களையும், சிக்கல்களையும், விளைவுகளையும், உணர்த்தும் செய்திகளையும் இந்த மாதம் அலசிப் பார்ப்போமா? நவரசம் கொண்ட மரணத்தின் முழூவீச்சை கண்டறிய முயல்வோமா?

அவ்வளவுதான் மேட்டரு! புகுந்து வெளையாடுங்கப்பு!! :)

கருத்துகள்

  1. தலைப்பை விளக்குறதுக்கே இத்தனை ஜோரா எழுதினா, நாங்க எல்லாம் எப்படி எழுதி... எப்படி முடிச்சு... ம்ம்ம்ம் :)

    பதிலளிநீக்கு
  2. அட ரொம்ப நாள் எழுத நினைத்திருந்ததை இன்னைக்கு தான் ஒரு பதிவா போட்டேன். இங்கே வந்தால் போட்டிக்கு அதே போல ஒரு தலைப்பு. :-)

    பதிலளிநீக்கு
  3. கண்ணம்மா பேட்ட , கிருஷ்ணாம் பேட்ட ஆளுங்களெல்லாம் ஓடியா ஓடியா, நாஷ்டா துன்ன துட்டு கிடெக்கிதாம். கான ஒலக நாதன இட்டுனு வந்து ஆட்டத்தை போடு !

    பதிலளிநீக்கு
  4. "முற்றுப்புள்ளி" க்கு எவ்வளவு சுவையான முன்னோட்டம்!
    ஓ...நாம் பூஜ்ஜியத்தைத்[0] தந்தவர்கள் அல்லவா?

    பதிலளிநீக்கு
  5. எழுத நிறைய வாய்ப்பு தருகிற தலைப்பு. நல்லா இருக்குங்க. உங்க முன்னுரையிலிருந்தே பல மேட்டர் எடுக்கலாம் :)

    பதிலளிநீக்கு
  6. Ahaa..... Mudhal muraiya indha maasam pottila kalandhukkalamannu yosichuttu irundhen. Thalaippu bayangarama irukke...neraiya yosikkanum. Very good topic. :-)

    பதிலளிநீக்கு
  7. மரணம் பற்றி 'ஏதேன் சீதனம்' என்று முன்பு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.
    'மரணம்' என்று விகாரமான சொந்தப்பெயரில் சொல்லாமல் அதன் ஏதாவது ஒரு புனைப்பெயரில் சொல்லியிருக்கலாம்.
    அதுசரி,வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? 'மரணத்தில்' வென்றவர் என்றா?

    பதிலளிநீக்கு
  8. பொன்ஸ்,

    // நாங்க எல்லாம் எப்படி எழுதி... எப்படி முடிச்சு // ஆனாலும் இப்படி அநியாயத்துக்கு தன்னடக்கமா இருந்தா அப்பறம் உங்க அலப்பறை சங்கத்துல இருந்து தூக்கிடப்போறாங்க! :)))

    ****
    சோழநாடன்,

    பதிவு கண்டேன். விரும்பினால் போட்டிக்கு அனுப்பிருங்க! :)

    ****
    சிறில்,

    // கொன்னுட்டீங்க..//

    சபாஷ்! சரியான பின்னூட்டம்!!! :)))

    ****
    கோவி.கண்ணன்,

    // ஆட்டத்தை போடு ! // ஆட்டத்தோட ஆட்டமா ஒரு பதிவையும் எழுதி தேன்கூட்டுல போடுங்கப்பு! :)

    பதிலளிநீக்கு
  9. sivagnanamji,

    வருகைக்கு நன்றி!

    ****
    அருள் குமார், Nihtya

    அப்பறமென்ன?! கலக்குங்க! :)

    ****
    இப்னு ஹம்துன்,

    உங்கள் கவிதை படித்தேன். தகவலுக்கு நன்றி.

    // 'மரணம்' என்று விகாரமான சொந்தப்பெயரில் சொல்லாமல் //

    அடடே! இதுலயே ஒரு விசயம் இருக்கே! மரணத்தை அதன் சொந்தப்பெயரில் அனுகுவதில் நமக்கேன் தயக்கம்?

    // வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? // ஜீலை மாத போட்டியில் வென்றவர் என்றுதான்! மரணத்தை வெல்ல முடியுமா என்ன?! :)))

    பதிலளிநீக்கு
  10. இம்முறை முதல் படைப்பு நம்மளது.

    http://manamumninavum.blogspot.com/2006/07/21.html

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி
    நேற்று இறந்தபின் ஒவ்வொரு மதங்களில் நடைபெறும் சடங்குகள் பற்றி ஒரு SOP எழுத வேண்டீருந்தது. அதனை ஒட்டி மரணம் பற்றியே சிந்தனை, அதுவும் ஒரு தற்கொலை முயற்சி பற்றிய செய்தியும் இன்னும் சிந்தனையை அதிகரிக்க சிலர் முடிக்க வேண்டும் என்றூ முடிப்பதும் உண்டு என்ற பாடல் வரிகளும் நினைவுக்கு வந்தன. பிறகு தமிழ்மணத்தில் உங்கள் தலைப்பு. What a coincidence? உங்கள் விட்டில் பூச்சிகள் சிறுகதையை சென்றவாரம் படித்தேன். நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. அம்மாவை அடக்கம் செய்துவிட்டு வருகையில் தான் தெரிந்தது
    என் வீட்டிலிருந்தும் சுடுகாட்டிற்கு பாதை உண்டு என்பது.

    எங்கோ படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  13. இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். எதோ இளவஞ்சி என்ன சொல்றார்னு பாத்துட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான் அட்டெண்டன்ஸ் போட்டாச்சு...வர்ட்டா...

    பதிலளிநீக்கு
  14. மரணம் முடிப்பது இல்லை. தொடங்குகிறது
    இறந்தவரின்
    நினைவுகளை,
    இருப்பவரிடத்தில்.

    பதிலளிநீக்கு
  15. இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள். இருந்தாலும் மரணத்தைத் தொட்டுட்டு வந்தவன் அப்டிங்கிற முறையில ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  16. இளவஞ்சி, சென்றமாத தேன்கூடு போட்டியில் வென்றதற்கு என் மனமார்ந்த பாரட்டுகள். தாமதமாக பாராட்டு தெரிவிப்பதற்கு மன்னிக்கவும். அருமையான ஒரு தலைப்பைக் கொடுத்திருக்கிறீர்கள்.

    நிறைய மரணப் படைப்புகள் பிறக்க வழி செய்துவிட்டீர்கள்

    மரணமே நித்திய வாழ்க்கையைப் பெற்றது. மரணத்திற்கு மரணமில்லை.

    பதிலளிநீக்கு
  17. சிபியாரே,

    பதிவு பார்த்து பின்னூட்டமும் போட்டுட்டேன்! :)

    ****
    தேன் துளி,

    பாராட்டுகளுக்கு நன்றி!

    // What a coincidence? // நிறையபேர் சொல்லிவிட்டார்கள்! ஒருவேளை நாம் மரணம் பற்றி அதிகம் சிந்திக்கிறோமா?! :)))

    ****
    manasu, மானு,

    வருகைக்கும் அர்த்தம் பொதிந்த அருமையான வரிகளுக்கும் நன்றி!

    ****
    தருமிசார்,

    // இதெல்லாம் நமக்குத் தொடர்பில்லாத போட்டிகள் //

    சரிசரி! முதல் பரிசு வாங்கறது பிடிக்காதுங்கறீங்க! :)

    சுட்டிக்கு நன்றி! புதியவர்கள் படிக்க வசதியாக இருக்கும்!

    ****
    ஓகை,

    // மரணப் படைப்புகள் //

    நகைமுரன்?! :) இதுக்கு இங்கிலீசுல என்னவோ சொல்லுவாங்களே?!

    பதிலளிநீக்கு
  18. ////வென்ற பின் எப்படி அழைப்பீர்கள்? 'மரணத்தில்' வென்றவர் என்றா? ////

    ////ஜீலை மாத போட்டியில் வென்றவர் என்றுதான்! மரணத்தை வெல்ல முடியுமா என்ன?! :))) /////

    :)))

    பதிலளிநீக்கு
  19. நீங்கள் குறிப்பிடும் நகைமுரன் ஆங்கிலத்தில் oxymoran.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு