முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓய்வு...

Halted , originally uploaded by i L a V A n J i . ச்சும்மா ஒரு டெஸ்ட் போஸ்ட்! Flickr to Blogger :)

மதுரை மீனாட்சி கோவில் - புகைப்படங்கள்

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு ஆசைங்க! அதாவது இந்த வெள்ளைக்காரவுக எல்லாம் நம்ப ஊருக்கு டூரிஸ்ட்டுன்னு வந்துக்கிட்டு கையில ஒரு மேப்பும் முதுகுல ஒரு பையுமாக தம்பாக்குல திரியறாங்களே... அதுமாதிரி ஒரு நாளைக்கு நாமளும் சுத்தனும்னுட்டு. என்ன அவிங்க சரிசமமா சோடிபோட்டு சுத்துவாய்ங்க. ஆனா எங்கூட்டமா நான் கேமரா பையை தூக்கிக்கிட்டு கெளம்புனாலே சந்தோசமாகிருதாங்க. அதுபோக “ம்ம்ம்.. இந்ததடவை எனக்கு சனிபெயர்ச்சி ரெண்டுநாளைக்கா?”ன்னு கேட்டு கன்பார்ம்டு அலும்பு வேற! இதுல எங்கபோயி அவிங்களையும் கூட கூட்டிக்கிட்டு பரதேசிபோல சுத்தறது?! அப்படியே அவிங்க வந்துட்டாலும் பெத்துக ரெண்டும் ”யய்பா... யப்பா..” கொரங்குக்குட்டிக போல தொத்திக்கிட்டா அப்பறம் எங்க? எங்கானா நிழல் பார்த்து கூடாரம் போட்டு செட்டிலாக வேண்டியதுதான்! :) அதனால இந்தமுறை வெவரமா குலசைல தசரா முடிஞ்சதும் நெல்லைல எறங்கி அரைக்கிலோ இருட்டுக்கடை அல்வா வாங்கி தின்னுக்கிட்டே மதுரைக்கு வந்து தனியா எறங்கிட்டேன்! என்னமாதிரி வயசுப்பையன் மதுரலை தனியா சுத்தறது டேஞ்சருன்னாலும் அழகிரி நாட்டுல ஒன்னும் நடந்துறாதுங்கற நம்பிக்கைல துணிஞ்சு என்னோட வலதுகாலை வைச்சாச்சு. அப்

குலசை தசரா 2009 - புகைப்படங்கள்

ம க்கா நீங்க போன வருசம் நான் போயிட்டு வந்து பீத்திக்கின குலசை ட்ரிப்பை மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன். அருமைத்தம்பி ஆதி க்கும் அவிங்க வீட்டாருக்கும் அபார நியாபக மறதி! போன வருசம் நாங்க ஒரு செட்டாப்போயி கொடுத்த ஹிம்சைகளை அப்படியே அழிலப்பரு போட்டு அழிச்சாப்படி மறந்துட்டாய்ங்க. அதோட இல்லாம இந்த வருசமும் 10 பேர ஜமாவோட நாலு நாளைக்கு டிக்கெட்டோட அழைப்பு வைச்சாப்படி ஆதி. விடுவனா?! போட்டோ புடிக்கறமோ இல்லையோ இளவட்டங்களோட ஒரு செட்டா வேளாவேலைக்கு கொட்டிக்கிட்டு கெணத்தடில ஆனந்தக்குளியல் போட்டுக்கிட்டு போரடிச்சா அங்கங்க குத்தவைச்சு பொங்கல் போட்டாப்படி நாலுநாள் எந்த இம்சைகளும் இல்லாம (பார்றா... ஒரு இம்சையே இம்சை என்கிறதே! ஆச்சர்யக்குறி! ) கேமராவும் கையுமா வாழ வைச்சதுக்கே அவருக்கு கொட்டிக் குடுக்கனும். இருந்தாலும் தமிழர் வழக்கப்படி ஒரு தாங்க்ஸ் மட்டும் மனசார சொல்லிக்கிட்டு எஸ்கேப்பாய்கினோம் :) இந்தமுறையும் செல்வபிரகாஷ் , ஜெய்சிங் , நாதன் போன்ற பெரிய புகைப்படக்காரர்களும் வந்திருந்தாங்க. அவங்க கூட ஜமா போட்டு சுத்துன பிஸ்துக யாருன்னா மாப்ள சீவியாரு , வினோத்து , கவுஜர் லக்ஸ் மற்றும் கோகுல் . இவ

காசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு!

அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே... பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க! தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :) 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்

நியதிகளும் வாழ்வும்...

மீண்டும் ஒரு காதல் கதை... அடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்தடியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில்! ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு! அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா? இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா? உங்குடும்பம் வெளங்குமா? நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க! இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.

உதிரிப் (புகைப்)படங்கள்

தலைகீழாகத்தான் இருக்கு உலகம் காதலில் இருக்கையில். மாட்டுக்கும் மனுசனுகும் மவுசும் பவுசும். எதிர்காலம் விற்பனைக்கு நிகழ்காலம் கட்டணம் பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை. மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை! மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி... ஹேங் ஓவர்.. கூழானாலும் குளித்துக் குடி குவாட்டரானாலும் அளவாய் அடி அடையார் இரட்சகர்... ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா? மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்... கட உள்... தனிமையில் தனி மயில்... எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை. ம.செ, மதன் மற்றும் மாருதி... 1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!” ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா? துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்... பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக... அழிவினைப் பற்றிய உருவாக்கம்... நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”! அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு... தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...