முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்னியனுக்கு எனது வாக்குமூலம்!

அஞ்சு பைசாவ அஞ்சு தடவ அய்யாயிரம் பேரு திருடுனா தப்பா அப்படின்னு கேட்டுட்டு அயோத்தியாகுப்பம் வீரமணி சைசுக்கு ஒருத்தன மசாலா பூசி வறுத்தெடுத்த காட்சிய பார்த்தவுடனே எனக்கெல்லாம் அடிவயிறு பகீருன்னு ஆயிடிச்சுங்க.. நானெல்லாம் பல தப்புகளை பல தடவை பல வருசமா செய்யற ஆளு( நம்ப சைசு வேற தனுசை ஒத்ததுதான்...! ) அன்னியன் கையில மாட்டுனா நம்ப கதையெல்லாம் என்ன ஆகும்னு நெனச்சா ஒடம்பெல்லாம் வெடவெடங்குது... என்னதுக்கு அவருக்கு கஷ்டம் அப்படின்னு நம்ப தப்புகளுக்கு(தவறல்ல...) நாமே தண்டனைகளை எழுதிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்! (கருட புராணம் வேற பழசாகி கிழிஞ்சி கெடக்குது..) இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்துட்டு நானெல்லாம் ஒடனே திருந்தலனா அப்பறம் என்ன மசுருக்கு( பார்த்தீங்களா.. இந்த வார்த்தயை இங்க இப்படி உபயோகப்படுத்துனதுக்கே எனக்கு திராவககொப்புளி தண்டனை குடுக்கனும்.. விளக்கமா பின்னால...) சங்கரு மாதிரி ஒரு சமூகச்சிற்பி இப்படி ஒரு படம் எடுக்கனும்? ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. ஆனா நமக்கு ஆத்திரத்தயும் அடக்க முடியாது.. மூத்திரத்தையும் அடக்க முடியாதுங்க.

வர்றம்ல.. அதான் வந்துட்டம்ல!

என்ன ஒலகமைய்யா இது? ஒரு மனுசன் இதோ வரேன்னு போனானே.. அவன் என்ன ஆனான் எப்படி இருக்கான்னு யாருக்காவது கவலை இருக்கா? ஆளாளுக்கு அவங்கவங்க ஜோலியப்பாத்துக்கிட்டு பதியறது என்ன... அனானிமசுகல திட்டறது என்ன(இனிமேலும் நாய் ஒன்னுக்கு போனமாதிரின்னு திட்டாதிங்க... ஜிம்மிங்க தெருவுல நாலா பக்கமும் மூச்சா போரது அதன் எல்லைகளை மற்ற ஜிம்மிக்களுக்கு உணர்த்த என்பது அறிவியல் ஐதீகம்! ) இந்த பக்கம் ஜன்னலை மூடிட்டு அந்த பக்கமா தொறக்கறது என்ன... வீட்ட காலி செஞ்சி புதுவீட்டுக்கு போறது என்ன... மத்தவங்க பேருல கருத்துக்கள பொழியறது என்ன... பின்னூட்டத்துக்காகவே பதியரது என்ன என ஒரே களேபரமா இருக்கு... 2 மாசத்துக்கு முன்ன எப்படி இருந்ததோ அதவிட 4 மடங்கு அலப்பரையா!!! ஆக மொத்தம் நான் இருந்தாலும் ஒன்னு.. இல்லைனாலும் ஒன்னு!! இது ஒரு பொழப்பாடா இளவஞ்சி ? இந்த சென்னை இருக்கு பாருங்க... ஊரா அது? அடிக்கற வெயிலுலயும் அனல் காத்துலயும் இரும்புச்சட்டில மணல்ல வறுபடற கடலை மாதிரிதான் இருக்கும் நம்ப நெலம.. குளிச்சு(எப்பயாவது..!) முடிச்சு ஒடம்ப தொடைக்கறதுக்குள்ள வேர்க்க ஆரம்பிச்சிடும்... வெள்ளை சட்டய போட்டுகிட்டு அடையாறுல இருந்து பாரிசுக்கு