முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வர்றம்ல.. அதான் வந்துட்டம்ல!

Image hosted by Photobucket.com

என்ன ஒலகமைய்யா இது? ஒரு மனுசன் இதோ வரேன்னு போனானே.. அவன் என்ன ஆனான் எப்படி இருக்கான்னு யாருக்காவது கவலை இருக்கா? ஆளாளுக்கு அவங்கவங்க ஜோலியப்பாத்துக்கிட்டு பதியறது என்ன... அனானிமசுகல திட்டறது என்ன(இனிமேலும் நாய் ஒன்னுக்கு போனமாதிரின்னு திட்டாதிங்க... ஜிம்மிங்க தெருவுல நாலா பக்கமும் மூச்சா போரது அதன் எல்லைகளை மற்ற ஜிம்மிக்களுக்கு உணர்த்த என்பது அறிவியல் ஐதீகம்! ) இந்த பக்கம் ஜன்னலை மூடிட்டு அந்த பக்கமா தொறக்கறது என்ன... வீட்ட காலி செஞ்சி புதுவீட்டுக்கு போறது என்ன... மத்தவங்க பேருல கருத்துக்கள பொழியறது என்ன... பின்னூட்டத்துக்காகவே பதியரது என்ன என ஒரே களேபரமா இருக்கு... 2 மாசத்துக்கு முன்ன எப்படி இருந்ததோ அதவிட 4 மடங்கு அலப்பரையா!!! ஆக மொத்தம் நான் இருந்தாலும் ஒன்னு.. இல்லைனாலும் ஒன்னு!! இது ஒரு பொழப்பாடா இளவஞ்சி ?

இந்த சென்னை இருக்கு பாருங்க... ஊரா அது? அடிக்கற வெயிலுலயும் அனல் காத்துலயும் இரும்புச்சட்டில மணல்ல வறுபடற கடலை மாதிரிதான் இருக்கும் நம்ப நெலம.. குளிச்சு(எப்பயாவது..!) முடிச்சு ஒடம்ப தொடைக்கறதுக்குள்ள வேர்க்க ஆரம்பிச்சிடும்... வெள்ளை சட்டய போட்டுகிட்டு அடையாறுல இருந்து பாரிசுக்கு பைக்குல போய் சேந்திங்கன்னா அது பல வண்ணங்கள்ள டிசைனர் சட்டையாகிடும்... ஆட்டோ மீட்டருல சூடு... வாடகை வீட்டுல டபுள் மீட்டரு... ஒன்னும் வெளங்கல!

தொலைஞ்சது சனியன்னு பெங்களூருக்கு வந்தா புடிச்சு கட்டுன மச்சினிச்சிக்கு வந்து வாச்ச பொண்டாட்டியே தேவலாம்ற மாதிரி அவ்வளவு அநியாயம் நடக்குது இங்க.. அங்க வீட்டு வாடகை 4000னா இங்க ஒரு ரூம் வாடகை 5000மாம்.. அதுக்கு அட்வான்சு 50,000ரமாம்!! ஆபிசுக்கு நடந்து போனா 15 நிமிசம் ஆகும்னா அதே பஸ்ஸ¤ல போனா ஒன்னரை மணி ஆகுது... ரோடு புல்லா வண்டிங்க... சும்மா வீங்கி கெடக்குதுங்க இந்த ஊரு.. என்னைக்கு வெடிக்க போகுதோ..? அட நிம்மதியா சாப்பிட முடியுதா? மசால் தோசை கேட்டா அதுக்குள்ள ஒரு செவப்பு பெயிண்ட அடிச்சு தராங்க.. அதயும் கூம்பு மாதிரி சுத்தி... அதை எடுத்து மேல் முனைய மட்டும் சின்னதா பிச்சிட்டு வாயில வச்சி "ராமசாமிக்கு குடுத்த பணம் ஊஊஊஊ....."ன்னு ஊதலாம்.. சாப்பிடதான் முடியாது...


ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்க... என்னா க்ளைமேட்டு... என்னா தண்ணீ...அப்படியே தெருமுக்கு பேக்கரில ஒரு டீய போட்டமா... 4 மணி நேரம் பசங்களோட ஒக்கார்ந்து சிலுக்கு ஏன் செத்தாங்கன்றதுல தொடங்கி செந்திலுக்கு டவுசரு ரெடிமேடா இல்லை தெக்கறதான்னு ஆராந்து அப்துல் கலாம் அறிவ பத்தி புல்லரிஞ்சு முடிச்சுட்டு அப்பறம் அப்படியே கெளம்பி காந்திபுரம் கிராஸ்கட் ரோட 3 தடவை அளந்துட்டு நைட்டுக்கு அம்மா மெஸ்ஸ¤ல பூண்டு தோசையும் ராகி அடையும் முட்டை தோசையும் 4 சட்னியும் 2 சாம்பாரும் வச்சி தின்னுட்டு அன்றய தினத்தை இனிதே முடிக்கற சொகம் இனி எப்ப கெடைக்குமோ?

சொல்ல வந்த விசயம் வேற ஒன்னும் இல்லைங்க.. அது கோவையோ, திருச்சியோ இல்ல நெல்லையோ... சொர்க்கமே என்றாலும் அது நம்ப சொந்த ஊர போல வருமாங்கறதுதான்!! அதுவும் பாருங்க.. பேச்சிலரா பல நாடுகளுக்கு(IT Field-ல நம்ப வாழ்க்கையே கோபால் பல்பொடி மாதிரி தாங்க.. சரக்கு விக்குதோ இல்லையோ.. பல நாடுகளுக்கு போகலாம்..! ) போனப்ப இல்லாத சிரமம் சம்சாரியா இங்கன இருக்கற சென்னைல இருந்து பெங்களூருக்கு மாறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு..


எப்படியோ.. பார்ப்போம்.. வாழ்க்கை சக்கரம் எப்படி இங்க உருளுதுன்னு...

நிற்க: ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க.. இங்க கண்ணுக்கு குளிர்ச்சியா நெறய விசயங்க இருக்குது.. :)

கருத்துகள்

 1. தலைவா!

  தங்கள் வரவு நல்வரவாகுக!

  Back in full- Form!

  னீங்க வலைப் பதியாத சோகத்திலே நான் நாலு நாள் சாப்பிடலேன்னு சொன்னா நம்பவா போறீங்க?

  பதிலளிநீக்கு
 2. >>>>ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்க


  Ithu Correct!

  .:dYNo:.

  பதிலளிநீக்கு
 3. அட வந்திட்டீங்களோ?

  இனியென்ன எழுத வேண்டியதுதானே?

  சச்சினுக்குப் பிறகும் சில படங்கள் வந்திருக்காமே?

  பதிலளிநீக்கு
 4. //நிற்க: ஆனா சும்மா சொல்ல கூடாதுங்க.. இங்க கண்ணுக்கு குளிர்ச்சியா நெறய விசயங்க இருக்குது.. :)//

  பெண்களூராச்சே, இருக்காதா பின்னே?

  பதிலளிநீக்கு
 5. நீங்களும் இங்கே வந்தாச்சா???

  கோயம்தூரு,சென்னப்பட்னத்தில குப்பயக் கொட்டினவங்களுக்கு பெங்ளூர் புடி பட கொஞ்ச நாள் ஆகுமாம்.ஹூம் ரெண்டு வருசமா இந்த டயலாக்கக் கேட்டுட்டுத் தான் இருக்கேன்.எனக்கு இன்னும் புடி பட்ட மாதிரித் தெரியலை.

  //ஊருன்னா அது கோயமுத்தூரு தாங்க//
  திருவாசகமய்யா...
  இங்கன ஒரு விசிட் அடிச்சிப் பாருங்க.கோயம்தூரப் பத்தி ஒரு குவிசு...
  http://konjamkonjam.blogspot.com/2005/07/blog-post_112046127138433708.html

  சூனா கோனா

  பதிலளிநீக்கு
 6. //அதயும் கூம்பு மாதிரி சுத்தி... அதை எடுத்து மேல் முனைய மட்டும் சின்னதா பிச்சிட்டு வாயில வச்சி "ராமசாமிக்கு குடுத்த பணம் ஊஊஊஊ....."ன்னு ஊதலாம்.. சாப்பிடதான் முடியாது...//

  நல்ல ஒப்பீடு...கலக்குறீங்க !!!

  பதிலளிநீக்கு
 7. சுரேஷ், நான் எழுதாதத இப்படி கூட கொண்டாடலாமா? எதுக்கோ வேண்டுதலுக்கு விரதம் இருந்துட்டு இப்படி சைக்கிள் கேப்புல நம்மல இழுத்தா எப்படி?

  துளசி கோபால், நான் கண்ணுக்கு குளிர்ச்சின்னு சொன்னது இங்க இருக்கற பசுமையான மரம் செடி கொடிங்கன்னா நம்பவா போறீங்க? ( நன்றி சுரேஷ் :) )

  வசந்தன், அதுக்கென்ன எழுதிருவோம்.. காசா.. பணமா?

  சுதர்சன், நீங்க ரெண்டு வருசமா இதை அனுபவிக்கறீங்களா? அப்போ நானெல்லாம் இப்போ வந்து மாட்டுன ஜிஜிபியா?

  மற்றபடி, உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 8. >>>>ஆபிசுக்கு நடந்து போனா 15 நிமிசம் ஆகும்னா அதே பஸ்ஸ¤ல போனா ஒன்னரை மணி ஆகுது... ரோடு புல்லா வண்டிங்க..

  >>>>>>>>

  இது..!

  'மழை பெஞ்சா ஊரெல்லாம் தண்ணி' அதப்பத்தியும் எழுதுங்க..

  - அலெக்ஸ்

  பதிலளிநீக்கு
 9. aama unga thalaippula niraya vaigai puyaloda punch dialoguela irundhu kalavadina maadhiri irukku -avarukkum ungalukkum irukkira uruva ottrumai kaaranama? copy adichhalum poruthama use panni per vaangidreenga namma Thenisai thendral Deva kudumbathinar maadhiri. hmmm Nadakkattum nadakkattum

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு