
அஞ்சு பைசாவ அஞ்சு தடவ அய்யாயிரம் பேரு திருடுனா தப்பா அப்படின்னு கேட்டுட்டு அயோத்தியாகுப்பம் வீரமணி சைசுக்கு ஒருத்தன மசாலா பூசி வறுத்தெடுத்த காட்சிய பார்த்தவுடனே எனக்கெல்லாம் அடிவயிறு பகீருன்னு ஆயிடிச்சுங்க.. நானெல்லாம் பல தப்புகளை பல தடவை பல வருசமா செய்யற ஆளு( நம்ப சைசு வேற தனுசை ஒத்ததுதான்...! ) அன்னியன் கையில மாட்டுனா நம்ப கதையெல்லாம் என்ன ஆகும்னு நெனச்சா ஒடம்பெல்லாம் வெடவெடங்குது... என்னதுக்கு அவருக்கு கஷ்டம் அப்படின்னு நம்ப தப்புகளுக்கு(தவறல்ல...) நாமே தண்டனைகளை எழுதிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்! (கருட புராணம் வேற பழசாகி கிழிஞ்சி கெடக்குது..) இந்த மாதிரி ஒரு படத்தை பார்த்துட்டு நானெல்லாம் ஒடனே திருந்தலனா அப்பறம் என்ன மசுருக்கு( பார்த்தீங்களா.. இந்த வார்த்தயை இங்க இப்படி உபயோகப்படுத்துனதுக்கே எனக்கு திராவககொப்புளி தண்டனை குடுக்கனும்.. விளக்கமா பின்னால...) சங்கரு மாதிரி ஒரு சமூகச்சிற்பி இப்படி ஒரு படம் எடுக்கனும்?
ஆத்திரத்த அடக்குனாலும் மூத்திரத்த அடக்க முடியாதுன்னு சொல்லுவாங்க.. ஆனா நமக்கு ஆத்திரத்தயும் அடக்க முடியாது.. மூத்திரத்தையும் அடக்க முடியாதுங்க... அங்கங்கயே கொட்டிடனும்! நாமெல்லாம் ஒலகத்துல எந்த மூலைல விட்டாலும் அஞ்சே நிமிசத்துல மூச்சா போறதுக்கு ஒரு முக்கையோ இல்லை கரண்டு கம்பம் பின்னாடியோ இல்லை நிறுத்தி வச்சிருக்கற காருக்கு சைடுலயோ போயி கோலம் போட இடம் கண்டுபுடிக்கறதுல கெட்டி! நியுயார்க், ஜோபர்க், மஸ்கட்லயே பொது எடத்துல இடம் கண்டுபுடிச்சி காரியம் முடிச்சவனுங்க நானு. சின்ன வயசுல ஸ்கூல்ல ஒவ்வொரு பீரியடுக்கும் நடுவுல ரீசஸ் போயி பழகி பழகி அது காலேஜ்சுலயும் தொடர்ந்து இன்னைக்கு வரைக்கும் விடமாட்டேங்குது. என் ஜீன்ல ஒரு மரபுப்பண்பவே பதிஞ்சிடிச்சுன்னு நினைக்கறேன். இதுக்கு என்ன பண்ணமுடியும் சொல்லுங்க? இதுக்கு காக்காபோஜனம் தண்டனை தான் ஒரே வழி! 'அதை' வெட்டி காக்காய்க்கு போடனும்.. ஆனா பாருங்க...பலநேரம் காக்கா என்மேல குறிபார்த்து கக்கா போயிருக்கு! அப்போ காக்காவோடதை வெட்டி யாருக்கு போடறது?
நம்ப ஊருல ட்ராபிக் சிக்னல் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு..? என்னைப்பொருத்தவரை அது இப்படிதான்...
சிவப்பு - 10 செகண்டு கழித்து நில்!
பச்சை - செல்!!
மஞ்சள் - அதிவேகமாக செல்!!!
நானெல்லாம் மஞ்சளை பார்த்து நிறுத்துனதே கிடையாது. ஒரே அமுத்துதான். அப்பறம் இவ்வளவு பக்கமா சிக்னல் கிட்டவந்துட்டு வெயிட் பண்ணறதுக்கு நான் என்ன கேனயனா? இதுக்கு பல்லவநசுக்கி தாங்க சரியான தண்டனை. என்ன மாதிரி ஆளுங்களை சிக்னல் முன்னாடி படுக்கவச்சி 200 பல்லவன் பஸ்களை தொடர்ச்சியா மேல ஏத்தி ரோடோட ரோடா நசுக்கனும்! ஆனா பாருங்க... சாலை விதிகளை மதிச்சி நான்மட்டும் மஞ்சள் சிக்னல் பார்த்து வண்டிய நிறுத்துனனுன்னு வைங்க.. பின்னாடி வர பல்லவன் என்னை ஒரே தூக்கா தூக்கிருவான்! அப்போ பல்லவனுக்கு என்ன தண்டனை கொடுக்கறது?
வார்த்தை பேசறதுலயும் நமக்கு ஒரு கண்ட்ரோலே கிடையாதுங்க... ரோட்டுல வண்டி ஓட்டும்போது எவனால எப்போ கடுப்பானாலும் வாயில வர முதல் வார்த்தை அம்மாவை பத்தினதுதான்... அதுக்குமேலயும் போச்சுன்னா அப்பறம் அவனோட அக்கா, ஆத்தான்னு கலந்துகட்டி அடிக்கறதுதான்... அர்த்தத்தோட சொல்லறனோ இல்லையோ கோவத்தை வெளிப்படுத்தற ஒரு குறியீடாவே அந்த வார்த்தைகள் ஆகிடுச்சு... என்னத்த சொல்ல? இதுக்கெல்லாம் திராவககொப்புளி தான் சரியான வழி. எப்பெப்ப எல்லாம் வார்த்தை வருதோ அப்பப்ப எல்லாம் ஒரு லிட்டர் ஆசிட வாயில ஊத்தி கொப்பளிக்க வைக்கனும்! ஆனா பாருங்க... இங்க யாரு மொதல்ல சொல்லறதுன்னுதான் போட்டி! ஒரு செகண்டு லேட்டானாக்கூட அதே வார்த்தைகள் அடுத்தவன் வாயில இருந்து வந்துரும்... அதுக்கு அவனுங்களுக்கும் இதேதண்டனைனா நம்ப ஊருல அத்தனைபேரும் தீஞ்சிபோன வாயோடதான் திரியனும்!
திரைச்சித்ரா, மருதம், ஜெயமணி, சரோஜாதேவி... இந்தபேரெல்லாம் உங்களுக்கு தெரியும்னா இப்போ உங்களுக்கு வயசு கண்டிப்பா 30துல இருந்து 40துக்குள்ள இருக்கும். விடலைல காமத்தீல வெந்தப்ப எரியற நெருப்புக்கு எண்ணைமாதிரி இந்த சரக்கு புத்தகங்கள்! ஸ்கூல் புத்தகத்துக்குள்ள ஒளிச்சு வச்சி வாத்தியாருக்கு தெரியாம கிரவுண்டுல கோல்போஸ்ட் கீழயும், மரத்தடிலயும் படிச்சு மண்டை கிறுகிறுத்து பாக்கற பெண்களையெல்லாம் மனசுல வரிச்சி கைல ரேகை அழியற அளவுக்கு கைவேலை(அப்போதய பிரபல பழமொழி - கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.. கவலை இல்லை ஒத்துக்குக்கொள்..! ) பார்த்து அப்பறம் பழனி சித்தவைத்திய விளம்பரங்களை பார்த்துபோய் பயந்துதிரிந்த காலமது. இப்ப அந்த புத்தகங்க வருதா இல்லையான்னு தெரியலை(சிற்றிலக்கிய இதழ்கள்ள சில கட்டுரைகள் இதே ரேஞ்சுல வருது..! ) இப்ப மட்டும் என்னா வாழுது? அப்போ ஒளிஞ்சு ஒளிச்சு படிச்சேன். இப்போ படத்தோட நெட்டுல படிக்கறேன்! இதுக்கெல்லாம் தண்டனை புள்ளிப்பதியம் தாங்க! மனசுல நெனச்ச ஒவ்வொரு பெண் சார்பாகவும் ஒரு ஜோடி கரும்புள்ளி செம்புள்ளி குத்தனும்.. (இப்படி ஆனவனுக்கு பேருதான் புள்ளிராஜாவா!?) ஆனா பாருங்க... இப்படியெல்லாம் மனசுல நினைக்கவைக்கறதுக்கு காரணமான ஹார்மோன உடம்புல வச்ச ஆண்டவனுக்கு எங்க புள்ளி குத்தறது?
நம்ப பொழப்பே நாறிக்கெடக்கும்க. அதுல அடுத்தவன் விசயத்தை அரைகுரையா கேட்டுட்டு எனக்கு தெரிஞ்ச நீதிநியாயங்களை அதுல ஏத்தி மத்தவங்ககிட்ட நான் எப்படி இந்த விசயத்துல யோக்கியம் அப்படின்னு சொல்லற மாதிரி பரப்புவேன் பாருங்க... சம்பந்தப்பட்டவன் கேட்டான்னா ஒன்னு வெட்டுகொலை... இல்லைனா தொங்கல்தான்! பக்கத்து வீட்டுல நடக்கறது தொடங்கி, தெருவுல நாட்டுல நடக்கறது வரைக்கும் ஏதாவது பரபரப்பா கேட்டுகிட்டே இருக்கனும்... சுகன்யா இப்போ யாரோட? MJacson நிஜமாவே அப்படியா? ராமதாசு ஏன் மரம் நடறாரு? காஞ்சில மாமிங்களுக்கு நடந்தது என்ன?.... இப்படி காது ரெண்டும் இருக்கறதே பொரளிகேக்கதான்னு ஆகிப்போச்சுங்க. இதுக்கெல்லாம் செவிச்சொருகி தாங்க தண்டனையா இருக்க முடியும்! அத்தன பரபரப்புகளையும் ஒரு நீளமான பேப்பருல எழுதி அதை சுருட்டி இந்த காதுல விட்டு அந்தகாதுல வரமாதிரி சொருகணும்... ஆனாபாருங்....
அடப்போங்கையா... இவனை திருத்தறேன்..அவனை திருத்தறேன்னு சொல்லி படம் எடுத்து கடைசில தமிழ் கலாச்சாரத்தையே அழிச்சுபுடாதிங்க..
நிற்க: ஆமா... 'சி' ல தொடங்கி 'கா' ல முடியற மூனெழுத்து நடிகை போன வாரம் ரெய்டுலா மாட்டுன்னாங்களே? உண்மையா???
நானும் ஏதோ "அன்னியன்" பற்றிச் சொல்றீங்களெண்டு ஓடியந்தேன். இதைப்பற்றித்தானா சங்கர் சொன்னார் "எங்கள் எல்லோருக்குள்ளும் ஒவ்வொரு அன்னியன் இருக்கிறான்" என்று.
பதிலளிநீக்குசந்தடி சாக்கில உங்கட சுயபுராணத்தை எடுத்துவிட்டிட்டியளே.
மிக நன்றாக நகைச்சுவையாக எழுதுகிறீர்கள். படித்து முடிக்கும் வரையில் சிரித்துக்கொண்டே இருந்தேன். என்னுடன் வேலை பார்ப்பவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே இருந்தனர்.
பதிலளிநீக்குதொடருங்கள்
கருடபுராண தண்டனைகள விட இந்தத் திருடபுராண தண்டனைகள் நல்லாவே இருக்கு. ஹா ஹா! (ஒங்கள திருடன்னு சொன்னதுக்குக் கோவிச்சுக்கிறாதீங்க)
பதிலளிநீக்குஇத்தனை தவறுகள் செய்த உங்களுக்கு புருடா புராணத்தின் படி ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையாக அன்னியன் படத்தை மூச்சா போகாமல் முழுவதும் பார்க்க கடவது
பதிலளிநீக்கு;) ;)
பதிலளிநீக்குAnother excellent piece from you!!!
பதிலளிநீக்குவசந்தன், இத்தனை பேரு அன்னியன கிழிச்சு காயப்போட்டிருக்கீங்க.. போதாதா?
பதிலளிநீக்குராகவன், ஒரு உண்மைவிளம்பிய திருடன் சொன்னதுக்கு உங்களுக்கு திராவககொப்புளி தான் :)
குழலி, நீங்க வேற ஏதாவது பெரிய தண்டனையா குடுங்க... நம்பனால இது முடியவேமுடியாது...
மற்றபடி, உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...
இளவஞ்சி வழக்கம் போலவே அசத்தல்...
பதிலளிநீக்கு//ஆமா, 'சி' ல ...ரெய்டுலா மாட்டுன்னாங்களே? உண்மையா???//
பதிலளிநீக்குஇளவஞ்சிக்கு ஒரு செவிச்சொருகீ ..ய்! ;O)
Kaakka Bojanam is simply amazing!! kalakareenga Ilavanji!!
பதிலளிநீக்குUngalukku kalaignar kitta solli udanadiya oru pattam kudukka sollanum...!! Keep it up.
// ஸ்கூல் புத்தகத்துக்குள்ள ஒளிச்சு வச்சி வாத்தியாருக்கு தெரியாம கிரவுண்டுல கோல்போஸ்ட் கீழயும், மரத்தடிலயும் படிச்சு மண்டை கிறுகிறுத்து பாக்கற பெண்களையெல்லாம் மனசுல வரிச்சி கைல ரேகை அழியற அளவுக்கு கைவேலை(அப்போதய பிரபல பழமொழி - கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்.. கவலை இல்லை ஒத்துக்குக்கொள்..! )//
பதிலளிநீக்குY blood
same blood
அருமை :-))