முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஓடிப்போனவளின் வீடு

அனிச்சையாய் திரும்பும் தலைகளின் கீழ்வெட்டுப்பார்வைகள் சிதறிக்கிடக்கின்றன அவ்வீட்டின் முற்றத்தில் தெருவையடைத்து அவள் போட்டுச்சென்ற கோலம் மிதிபட்டு சிதைந்து வெறும் வண்ணத்தீற்றலாய் பறிக்கப்படாத ஜாதிமல்லி தரையில் உதிர்ந்து இன்னும் மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது இதுவரை இருந்த உறவுகள் மறந்து தராதரங்கள் அலசப்படுகின்றன தெருமுழுதும் இரவில் கேட்கும் கேவல்கள் சோகத்தை மீறிய அவமானத்தை விழுங்க முயன்ற தோல்விகளை ரகசியமாய் அறிவிக்கின்றன எதிரியின் இழவுக்கும் துக்கம் கேட்கலாம் வெறிச்சிடும் வீட்டில் பசித்த ஜிம்மியின் ஊளைச்சத்தம் மட்டுமே அவள் விட்டுச்சென்ற புடவைகளும் பாட புத்தகங்களும் அங்கு எதை உணர்த்தும் இனி? நம்பத்தான் மறுக்கிறது மனது எவனோ ஒரு பொறம்போக்கு அந்த அழகுதேவதையை இன்னேரம் அனுபவித்துக்கொண்டிருப்பான் என்பதை

சோமபானமும் ஒரு வாலிப விருந்தும்!

ஓசியில் சரக்கடிக்ககூட நேரத்திற்கு போகாத ஒரு பனானா சோம்பேறியை நீங்கள் பார்த்ததுண்டா? அது இந்த உலகத்திலேயே நான் ஒருத்தனாய்தான் இருப்பேன். சரியாய் 8 மணிக்கு ராமு மெஸ்சுக்கு வரச்சொன்ன மக்களின் பேச்சை மறந்தது என் தப்புதான். ஆனால் அதற்கு ஒரு சரியான காரணம் இருந்தது. உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சொல்லுங்கள். ஒரு டாப் கிளாஸ் ஃபிகரிடம் 2 மணி நேரம் கடலை போட சான்சு கிடைத்தால் நீங்களும் இதைதானே செய்வீர்கள்? அதுவும் எந்தமாதிரி ஃபிகர்? ஸ்டெப்பி கிராப்பு, சானியா மிஸ்ரா, நயன்தாரா(ஹிஹி...அடிக்கடி இப்போ கனவுல வந்து "ஒரு வார்த்த பேச காத்திருந்தேன்"னு டார்ச்சர் பண்ணறாங்க!) ராய், ஜெனிபர் லோபஸ்(என்னது யாரா? வழவழான்னு இருக்கற இடுப்பை தையல் மெசினுல ஊசி போய்வர வேகத்துல ஆட்டிகிட்டு லபோதிபோன்னு பாடிக்கிட்டு(அது யாருக்கு வேணும்?!) ஆடுவாங்களே!!) இவங்க எல்லாத்தையும் புடிச்சி ஒரு மிக்ஸில போட்டு ஒரு நிமிசம் அடிச்சி எடுத்த கலவையா ஒரு பிகர் இருந்தா எப்படி இருக்குமோ அப்பிடி!! மனசுல ஏதாவது உருவம் தோணியிருக்கனுமே! பாட்டு கூட வருமே... "கட்டுனா இவள கட்டனுண்டா.. இல்ல கட்டுனவன் ......... ........ ..

மீண்டும் தினமலர்! - ஒரு நெருடல்

இன்றய(23-03-05) தினமலரில்(www.dinamalar.com) "இது உங்கள் இடம்" பகுதியில் சி.ராதாகிருஷ்ணன் என்பவர் "தமிழை ஏன் அசிங்கப்படுத்த வேண்டும்?" என்ற தலைப்பில் எழுதியதில் ஒரு பகுதி. "சலூன் கடை என்பதை சவரக்கடை என்று மாற்றினாலும், உள்ளே முடிவெட்டுதலும் முகமழித்தலும்தான் நடைபெறும்.அதே போல தமிழ் சினிமாக்கள் பெயரில் மட்டும் தமிழாக மாறினாலும், உள்ளே கற்பழிப்பு, ஆடை அவிழ்ப்பு, ஆபாசம், வன்முறை, விரசம் என்று கதைக்கு பதிலாக சதை தான் வீறு நடை போடும்." முகச்சவரமும் கற்பழிப்பும் ஒன்றா? ஒப்பிட்டு எழுத வேறு உதாரணமே இல்லையா? இதில் நான் சாதியை இழுக்கவில்லை. ஆனால் ஒரு தொழிலை இப்படியா கேவலப்படுத்துவது? இது ஒரு வாசகர் கடிதமாக இருந்தாலும் பிறர்மனதை புண்படுத்தும் என்றால் அதை பத்திரிக்கை ஆசிரியர் அனுமதிக்கலாமா?

அப்பாவின் சட்டை

கை சற்றே நீளமாயிருப்பினும் எனக்கு சரியாகத்தான் இருக்கிறது மொடமொடப்பான மடிப்புகள் விரைத்த அப்பாவின் கதர்சட்டை படியவாரிய ஈரத்தலையுடன் கற்பூரம் கண்ணிலொற்றி வெண்ணிற பட்டையிட்டு ஒருமுறை முகர்ந்து மெதுவாய் உதறி தலைவழியே அணிவார் இதை நிறைவாகத்தானிருக்கும் பார்க்க சாமிபடத்துக்கு சட்டமிட்டதைப்போல கழுத்துப்பட்டை சற்றே பழுப்பேறி தையல் பிரிந்திருந்தாலும் வானத்தின் வெளுப்பாய் லேசான நீலத்தில் பாக்கெட்டின் மைகசிவு துவைத்தும் போகாமல் அவரின் பின்குறிப்பாய் நாப்தலின் மணத்தையும் கடந்து மெல்லியதாக பரவுகிறது பெட்டி போட்ட வாசம் உணரமுடிகிறது இருப்பை ஏனென்று புரியவில்லை முதலில் நன்றாயிருக்கிறதென்ற அம்மா பிறகு விசித்து அழுதது

சுயமழிந்த பொழுதுகள்

மாட்டிக்கொள்ளாத கள்ளத்தனத்தின் ஒவ்வொரு முடிவிலும் அவன் என் காதருகே சிக்கிய நிலைகளில் அவனை அருகில் அண்டவிட்டதே இல்லை காப்பாற்ற இருக்கிறதென் நாக்கு அமைதியின் வெண்மையில் அவன் யுகங்களின் அழுக்குகளும் கறைகளும் என் உடல்முழுவதும் திட்டுதிட்டாய் அசிங்கங்களே அணிகலன்கள் என் கூட்டத்தில் பாவம் அவன் பரிதாபமாய் அங்கே ஒருவரையொருவர் சகித்தநிலையில் மறைத்தவைகளையே ஆதாரங்களாய் அமையுமென் உறவுகள் என் உள்ளறிந்தும் அவன் என்றுமே அன்னியமாய் அடுத்தவர் அழுக்கையும் புழுநெளியும் புண்களையும் நோண்டி முகர்கையில் அனைவரும் ஆவரென் சத்ருகள் அவனுடன் இருக்கையில் இதுவொரு பிரச்சனை அவனே நானென அவனே நானென ஓயாது பறையடிக்க நம்பத்தொடங்கியது என் கூட்டம் கூடவே நானும் மெல்ல மெல்ல அவனை அடித்து அமர்த்தி அழுக்குகள் பூசி புரட்டுகள் துதித்து நரகல் படைத்து நானே அவனென சொன்னபோது அவமானம் தாங்காமல் செத்துப்போனான் நிம்மதியாய் வாழத்தொடங்கினேன் நான்