முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மணப்பாறையும் என் ஒளிப்படப் பொட்டியும்

போன வாரம் எங்கூட்டம்மாவோட தாத்தா ஊரான மணப்பாறை பக்கத்துல இருக்கற குரும்பட்டில விசேசங்க! 27 வருசம் கழிச்சு ஊர்ப்பண்டிகை கொண்டாடுனாங்க. இத்தனை வருசமா ஊருக்குள்ள யாராச்சும் டிக்கெட்டு வாங்கிட்டா அந்த வருசம் பண்டிகை கேன்சல் ஆகிருமாம்! இப்படியே போனா பண்டிகையே நடத்தமுடியாதுன்னு வருத்தமாகி பெருசுங்க எல்லாம் குறிகேட்டதுல "இந்த வருசம் நடத்துங்கப்பு"ன்னு சாமி வாக்கு கொடுத்தாப்புல. இதுக்குத்தான் என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தாங்க. யாருங்க அங்க புர்ர்ருன்னு சிரிக்கறது? சும்மா மாப்ளை கெத்து காட்டலாம்னா நம்பமாட்டீங்களே?!

மக்கா பண்டிகைய 5 நாளு கோலாகலமா நடத்தி கலக்கிட்டாங்க. தெனம் நைட்டு சினிமா, கூத்து, ஆடல் பாடல்னு அசத்தல்தான். அங்க நான் எடுத்த படங்கள்ல நல்லதா நாலு இங்க போடலாம்னு எண்ணம். கடைசி வரைக்கும் போராடியும் ப்ளாகருசாமி படங்களை ஏத்த அருள் பாலிக்கலை! எனவே, பிடிச்ச படங்களை லோக்கலா சேமிச்சி இன்னும் தெளிவா பெருசா பாருங்கப்பு!!


கேமரா Sony DSC-H1. மத்தபடி ஏதாவது அதிகப்படி தகவலா ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? ஃபில்டரு போட்டயான்னு யாராவது கேட்டிங்கன்னா... ஹிஹி...


1. 250 வருச பழமையான வீடுங்க. பண்டிகைக்கு சும்மா மேலாக்க வெள்ள காட்டியிருக்காங்க. 40 வருசமா வாடகைக்குத்தான் விட்டிருக்காங்க. குடியிருக்கற ஆளுங்க ராத்தங்கறதே இல்லை. பகல்லயாச்சும் கேக்கலாம்னு போனா நூத்துக்கணக்கா தலைகீழா தொங்கறானுங்களே தவிர வாடகையப் பத்தி மூச்சு விடமாட்டேங்கறானுங்க!

Photobucket - Video and Image Hosting2. அல்ப ஆசைக்கு ஒரே ஒரு இயற்கைக்காட்சி!

Photobucket - Video and Image Hosting3. விடிய விடியக் கூத்து! கரகாட்டம், ஒயிலாட்டம்னுதான் சொன்னாய்ங்க. நேரமாக ஆக எல்லாம் மாறிடிச்சு. டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. முறுக்குக்கம்பி, தேங்காமூடி, ஓட்டைவடை, பஞ்சருன்னு டைரக்டு அட்டாக்குத்தான். காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!

Photobucket - Video and Image Hosting4. "மணப்பாறை மடோனா" தஞ்சை உஷா...

Photobucket - Video and Image Hosting5. சாமிக்கெணத்தடில கட்டுன தேரு ஊரைச்சுத்தி கோவிலுக்கு வர்றதுக்கு முன்னாடி 20,000 ரூவாய்க்கு நாட்டு வேட்டு போட்டதுல காதுரெண்டும் கொய்ங்ங்...

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting6. பூக்களால் மட்டுமே அலங்கரிக்கப்பட்ட மாரியாத்தா...

Photobucket - Video and Image Hosting7. திருவிழாக்குன்னு மொளைச்சதுல இந்த வளையக்கடையும் ஒன்னு!

Photobucket - Video and Image Hosting8. திராவிட ராஸ்கோலுங்க அணிவகுப்பு! ( ஹிஹி... கோச்சுக்காதீங்க! படம் எடுக்கறப்ப உங்களைத்தான் நெனைச்சேன்! )

Photobucket - Video and Image Hosting9. அமெச்சூரு காமெராமேனா இருந்துக்கிட்டு உள்ளூரு கெழவிய படம் புடிக்கலைன்னா எப்படி? ஆகவே, எங்கூரு முருகாத்தா!

Photobucket - Video and Image Hosting10. மாமன் பொண்னுமேல மஞ்சத்தண்ணி ஊத்தயில... சிறுசுங்க படம் பெருசுங்களைவிட அம்சமா இல்ல?

Photobucket - Video and Image Hosting11. மொறைப்பொண்னு வருவதெப்போ? மஞ்சத்தண்ணீ உத்துவதெப்போ? இந்த வருசமாச்சும் நெனைச்சதுல ஒன்னு செட்டாவுமா?

Photobucket - Video and Image Hosting12. சாமிவந்த பூசாரி... ஓங்குன அருவா...தெரியுதா?! குலுக்குன ஆட்டை வெட்டுன போட்டோ இங்க வேணாங்...

Photobucket - Video and Image Hosting13. குலவைச் சத்தத்தோடு கூடிக் கும்மியடிக்கும் உள்ளூரு மயிலுங்க...

Photobucket - Video and Image Hosting14. எங்கூரு ரொனால்டோ! கோல்லெல்லாம் போடலைங்க... மஞ்சத்தண்ணி வெளையாட்டு!

Photobucket - Video and Image Hosting15. அஞ்சாநாளு... சாமிய கெணத்துல எறக்கியாச்சு! பண்டிக சந்தோசம் முடிஞ்சாச்சு! அடுத்த பண்டிக வாரவரைக்கும் நடந்ததை மனசுல ஊறவைச்சி அப்பப்ப பிழிஞ்சுக்கனும்...

Photobucket - Video and Image Hosting

கருத்துகள்

 1. பாதி போட்டோஸ் லோட் ஆக மாட்டேங்குது.. :(

  பதிலளிநீக்கு
 2. Photos are superb, enjoyed them very much. Brought back old day (??) memories. Thanks for sharing.

  பதிலளிநீக்கு
 3. வாடகைக்கு விட்ட வீடும், திராவிட ராஸ்கல்ஸ் அணிவகுப்பும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.

  ஆமாம், பேசாம அந்த வீட்டுக்கு நாமெலாம் போயிரலாமா?

  பதிலளிநீக்கு
 4. இளவஞ்சி!

  //நூத்துக்கணக்கா தலைகீழா தொங்கறானுங்களே தவிர வாடகையப் பத்தி மூச்சு விடமாட்டேங்கறானுங்க!//

  எல்லாம் நம்ம பங்காளிங்க தான் உங்கள போல வீட்ட
  விட்டுட்டு வெளியூர் போறவங்க வீடு தான் எங்களைப் போன்ற தலைகீழா தொங்குறவங்களுக்கு வீடு ,இல்லைனா பனமரத்துல தான் தொங்கனும்.புகைப்படம் எல்லாம் நல்லா இருக்கு ரெக்கார்டு டான்ஸ் படம் எதும் இல்லையா :-))

  பதிலளிநீக்கு
 5. ஒண்ணுஞ்சொல்ல முடியலை...ஊர் பக்கம் மின்னலாப் போயிட்டு வாந்தாப்புடி., நல்லாருக்கு!... பதிவும் உங்க ஒளிப்பெட்டி படங்களும்.

  பதிலளிநீக்கு
 6. ஊர் திருவிழாவை கண்முன் கொண்டுவது நிறுத்திட்டீங்க.எங்க ஊரிலும் இதே மாதிரி தான் திருவிழா நடக்கும்.ஆனா வெடி எல்லாம் இப்படி போட மாட்டோம்.தீ மிதிப்போம்.(நான் அதுக்கு மட்டும் எஸ்கேப்)

  எல்லா வயசு பொண்ணுகளும் தீ மிதிக்கும்.அப்ப மனசு என்ன பாடுபடும் தெரியுமா?

  என் மனதை வேண்டுமானால்
  மிதி என் மலரே
  தீயை மிதிக்காதே

  பதிலளிநீக்கு
 7. எங்கட ஊர்ப்பக்கம் இந்த மஞ்சள்தண்ணி ஊத்துறது எல்லாம் இல்லை. சின்ன மேளம் அது இதெண்டு கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா, எங்கட ஊர்ப்பக்கம் பாத்ததில்ல. மற்றபடிக்கு புங்குடுதீவுக்குத் திருவிழாவுக்குப் போயிற்று வந்தமாதிரி இருக்கு.

  -0-

  திராவிட ராஸ்கல்கள் புகைப்படம் சூப்பர். :)

  -0-

  மணப்பாறை மாடு ஒன்றைக்கூட படம் பிடிக்க முடியலையா? ;)

  பதிலளிநீக்கு
 8. //இதுக்குத்தான் என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சிருந்தாங்க. யாருங்க அங்க புர்ர்ருன்னு சிரிக்கறது?சும்மா மாப்ளை கெத்து காட்டலாம்னா நம்பமாட்டீங்களே?!//

  இது வேறையா???

  வீடு,முருகாத்தா,மடோனா,ரொனால்டோ
  எனக்குப் புட்ச்ச லிஸ்ட்.

  பதிலளிநீக்கு
 9. எங்க: டீச்சர் துளசியை வழிமொழிகிறேன்.

  :)

  பதிலளிநீக்கு
 10. கிராமத்துத் திருவிழாவை நன்றாகவே
  பதிவு செய்து உள்ளீர்கள்
  ஆணாலும் மாடில்லாமல் மனப்பாரயா?

  பதிலளிநீக்கு
 11. அருமையான படங்களும், உங்க வர்ணனையும், அப்படியே கிராமத்திற்கு மீண்டும் அழைத்து சென்றுவிட்டீங்க.

  கேமராவுக்கு நல்லாவே வேலை கொடுத்திருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 12. நல்ல ஒளிப்படங்கள்! சோனிக்கு நன்றி!!
  கிராமவிழாவில் எங்களையும் பங்கு கொள்ள அழைத்த இளவஞ்சியாருக்கும் நன்றி!!
  மனதில் எண்ணங்கள் எங்கெங்கோ ......
  நன்றி!!!

  பதிலளிநீக்கு
 13. //டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!//

  ஹிஹி இதப்பத்தி தனிப்பதிவு எதுவும் உண்டா?

  பதிலளிநீக்கு
 14. //திராவிட ராஸ்கோலுங்க அணிவகுப்பு! ( ஹிஹி... கோச்சுக்காதீங்க! படம் எடுக்கறப்ப உங்களைத்தான் நெனைச்சேன்! )
  //

  இந்த புகைப்படத்திற்கு திராவிட ராஸ்கோல்கள் சார்பாக நன்றிகள்.


  இளவஞ்சி.அருமையான புகைப்படங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ம்ம்ம்...அப்படியே எங்க ஊர்த் திருவிழாவுக்கு இழுத்துட்டுப் போயிட்டீங்க போங்க....

  அங்ஙன காதல் சோடி ஒன்னும் சிக்கலையா??? :)

  அன்புடன்,
  அருள்.

  பதிலளிநீக்கு
 16. பொன்ஸ்,

  படங்க கொஞ்சம் வெயிட்டு அதிகம்! மெதுவாத்தான் எறங்கும்! எதுக்கும் நெட்வொர்க் கேபிளை மிதிச்சுக்கிட்டு இருக்கற உங்க கால கொஞ்சம் நகர்த்திட்டு ட்ரை பண்ணுங்க! :)

  ****
  அனானி,

  பாராட்டுகளுக்கு நன்றி!

  ****
  துளசியக்கா,

  // பேசாம அந்த வீட்டுக்கு நாமெலாம் போயிரலாமா? // வலைப்பதிவர்களை இப்படி நாடிபிடிச்சுப் பார்க்கக்கூடாது! :) இங்கன வலைப்பதியறதுக்கு எங்கயாவது தலைகீழா தொங்கறது மேலுங்கறீங்க! சரிசரி... :)))

  ****
  வவ்வால்,

  உம்ம கூட்டமேதான்! :)

  // ரெக்கார்டு டான்ஸ் படம் எதும் இல்லையா :-)) // ஊட்டம்மாவுக்கு தெரியாம தஞ்சை உஷாவை எடுக்கறதுக்க நான் பட்ட பாடு இருக்கே!!! இதுல ரெக்கார்டு டான்சு எடுத்திருந்தா...

  ****
  அப்டிப்போடு,

  ஊக்கங்களுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. $ல்வன்,

  // என் மனதை வேண்டுமானால்
  மிதி என் மலரே
  தீயை மிதிக்காதே // அடடா! அடடா!! ரூட்டு க்ளியரான்னு மட்டும் சொல்லுங்க! மிச்சத்தை உங்கூருக்கு போய் நான் பேசறேன்! :)))

  ****
  மதி,

  // மணப்பாறை மாடு ஒன்றைக்கூட படம் பிடிக்க முடியலையா? ;) //

  உள்ளூரு மயிலுங்க பின்னாடி சுத்துனதுல மாட்டை மறந்துட்டேன் போல! :)

  ****
  சுதர்சன், சிறில், இகோ, sivagnanamji, பரஞ்சோதி, மணியன்,

  ஊக்கங்களுக்கு நன்றி! அடுத்தமுறை மாடு ஸ்பெசல்தான்! சொல்லிட்டேன்! :)

  ****
  சுவாமிஜீ,

  // ஹிஹி இதப்பத்தி தனிப்பதிவு எதுவும் உண்டா?!//

  போடலாம்தான்! ஆனா அதுல கவர்ச்சி சமாச்சாரங்களை விட சோகம்தான் அதிகம் இருக்கும்னு நினைக்கறேன்! :(

  ****
  முத்து, அருட்பெருங்கோ,

  ஊக்கங்க்களுக்கு என் நன்றிகள்!

  // அங்ஙன காதல் சோடி ஒன்னும் சிக்கலையா??? :) //

  இருந்தாய்ங்க! நாந்தான் காதலர்களை டிஸ்டர்ப்பு செஞ்ச பாவம் கூடாதுன்னு அந்தப்பக்கமே போகலை! ஹிஹி... ஆம்பளையாளும் பொம்பளையாளும் போட்டி போட்டுக்கிட்டு மஞ்சத்தண்ணீ ஊத்துன அழகு இருக்கே!!! ம்ம்ம் எத்தன செட்டாச்சோ?! விடுங்க... அது ஒரு பொகையான சமாச்சாரமுங்க!

  பதிலளிநீக்கு
 18. இந்த வீடும்,ஆச்சியும் முதுமையிலும் கம்பீரமும்,அழகும் இருக்குதென்பதற்கு எடுத்துக்காட்டு!;குலவைக்குயில்கள் அம்சமா இருக்காங்க ;பூவில் மாரியாத்தாவுந்தான்!
  வெகு ஜோர்
  யோகன் பாரிஸ்

  பதிலளிநீக்கு
 19. இளவஞ்சி

  போட்டோவெல்லாம் உங்களோட பதிவுகள் போலவே ரொம்ப யதார்த்தம் - முருகாத்தா சூபர்ப்

  சரி, இவற்றையெல்லாம் தேவையானபோது நிலாச்சாரலில் பயன்படுத்துக்கொள்ளலாமா? (உங்கள் பெயரோடுதான்)

  பதிலளிநீக்கு
 20. //எதுக்கும் நெட்வொர்க் கேபிளை மிதிச்சுக்கிட்டு இருக்கற உங்க கால கொஞ்சம் நகர்த்திட்டு ட்ரை பண்ணுங்க! :)//

  ஆமாமாம்.. காலை எடுத்துட்டு பார்த்தா நல்லா வந்து இருக்கு.. :))

  எல்லாப் படமும் ரொம்ப நல்ல quality-aa வந்திருக்கு. முருகாத்தா, தி.ராஸ்கோலு, ரொனால்டோ சூப்பர்.

  உள்ளூர் மயிலெல்லாம் வூட்டம்மாவுக்குத் தெரியாம பிடிச்சிட்டீங்க போலிருக்கு.. அந்த காத்திட்டிருந்த பசங்களுக்குத் தெரியாம எப்படிப் பிடிச்சீங்க?! :))

  பதிலளிநீக்கு
 21. எங்க கிராமத்து திருவிழா நினைவுல மூழ்கிட்டேன் இளவஞ்சி. நினைக்க நினைக்கத் தெவிட்டாத நாட்கள் அவை. அதுவும் முறைப்பொண்ணுங்க மஞ்ச தண்ணி ஊத்தற அழகு இருக்கே... அடடா...

  இப்பல்லாம் எங்க ஊர் திருவிழாவுல கூத்து, அரிச்சந்திரன் நாடகமெல்லாம் இல்லீங்க... பல வருஷமா TV ல படம் போடற பழக்கத்த ஆரம்பிச்சிட்டாங்க :(

  சின்ன வயசுல எங்க செட்டு பசங்களோட விடிய விடிய சகடை
  இழுத்ததெல்லாம் நினைவுக்கு வருது!

  பதிலளிநீக்கு
 22. படத்தொகுப்பு நன்றாகவுள்ளது

  -/.

  பதிலளிநீக்கு
 23. "ஷட்டரு ஸ்பீடு என்னா வைச்ச? அபெர்ச்சரு எவ்வளவு? "


  இதெல்லாம் நீங்க சொல்லலீன்னா எங்களுக்கு கண்டுபிடிக்கத் தெரியாதாக்கும்..

  படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 24. அசத்திட்டீங்க. அப்படியே பக்கத்துல இருக்குற நல்லாண்டவர் கோயிலுக்கு ரொம்ப நாளா போகணும்னு எனக்கு ஆசை. மணப்பாறையிலிருந்து ரொம்ப தூரமோ? கொஞ்சம் கேட்டுச்சொல்ல முடியுமா?

  பதிலளிநீக்கு
 25. அட்டகாசமான புகைப்படங்கள்!

  நம்ம ஊரு வெட்டிக்காடு பக்கம் போயி இரண்டரை ஆண்டுகளாகிடுச்சி, ஊருக்குப் போகணும்னு ஏங்க வச்சுட்டியே மக்கா!

  //விடிய விடியக் கூத்து! கரகாட்டம், ஒயிலாட்டம்னுதான் சொன்னாய்ங்க. நேரமாக ஆக எல்லாம் மாறிடிச்சு. டபுள் மீனிங் எல்லாம் கிடையாது. முறுக்குக்கம்பி, தேங்காமூடி, ஓட்டைவடை, பஞ்சருன்னு டைரக்டு அட்டாக்குத்தான். காலத்தின் கோலம்! இந்த ஐட்டங்க எல்லாம் இல்லைன்னா யாரும் கூப்பிடறது இல்லையாம்!//

  உண்மைதான். 2004 பொங்கல் பண்டிகை சமயத்தில் இந்தியா சென்றபோது எங்க வீட்டம்மா ஊர் திருவிழாவில் 12 வருடங்களுக்குப்பிறகு அரிச்சந்திரா தெருக்கூத்து நாடகம் பார்த்ததபோது பபூன், டான்ஸ் பகுதியில் பேசப்பட்ட staright Attack வசனங்களைக் கேட்டு ஆடிப்போயிட்டேன்.

  -ரவிச்சந்திரன்

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு. தி.ரா, ரொணால்டோ,முருகாத்தா, வூடு, இவை கவர்ந்தவை.

  பதிலளிநீக்கு
 27. யோகன்,

  ஊக்கங்களுக்கு நன்றி!

  ****
  நிலா,

  // இவற்றையெல்லாம் தேவையானபோது நிலாச்சாரலில் பயன்படுத்துக்கொள்ளலாமா? (உங்கள் பெயரோடுதான்) //

  தாராளமா!!! இவ்வளவுநாள் நான் கூகிள்ல சுட்டதுக்கு பிராயச்சித்தமா இருக்கட்டும்! :)))

  ****
  பொன்ஸ்,

  // அந்த காத்திட்டிருந்த பசங்களுக்குத் தெரியாம எப்படிப் பிடிச்சீங்க?! :)) //

  அது வந்து.. நாங்க எல்லாம் சின்ன வயசுல இருந்தே...ஹிஹி...

  ****
  அருள்குமார்,

  // இப்பல்லாம் எங்க ஊர் திருவிழாவுல கூத்து, அரிச்சந்திரன் நாடகமெல்லாம் இல்லீங்க... //

  நீங்க சொல்லறது சரி! முன்னயெல்லாம் விடிய விடிய 10 நாள் மகாபாரதம் நடக்கும்! :(

  பதிலளிநீக்கு
 28. அனானி,

  பாராட்டுகளுக்கு நன்றி!

  ****
  A n& said...

  // படங்கள் அருமை. // அடேடே! தல... உங்களுக்கும் பிடிச்சிருக்கா! சந்தோசமா இருக்கு! :)))

  ****
  'ரஜினி' ராம்கி,

  // பக்கத்துல இருக்குற நல்லாண்டவர் கோயிலுக்கு ரொம்ப நாளா போகணும்னு எனக்கு ஆசை. //

  நல்லாண்டவர் கோவில் மணப்பாறை-திருச்சி ரோட்டில், மணப்பாறையில் இருந்து 3KM தூரத்தில் இருக்கிறது. கல்யாணம்காட்சிங்க அடிக்கடி நடக்கற ஃபேமசான இடமாம்! அதுபோக ஜோசியம் பார்க்கறதுலயும் பேருவாங்குன எடமாம்!!!

  புரியுது! புடியுது!!! சீக்கிரம் போயிட்டு வாங்க! :)))

  ****
  babble,

  // இன்னொரு பதிவுல போட்டிருக்கீங்களே, அந்த படம் //

  அந்த படம் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருந்ததா! அதான் அங்க போட்டுட்டேன்! :)

  பதிலளிநீக்கு
 29. ரவிச்சந்திரன்,

  // பபூன், டான்ஸ் பகுதியில் பேசப்பட்ட staright Attack வசனங்களைக் கேட்டு //

  இதெல்லாம் காலம்காலமாய் இருக்கறதுதான்! பபூன் மட்டும் பேசுவாரு! இப்போ நடக்கறது மொத்தமுமே அதுதான்! விஞ்ஞான வளர்ச்சியின் வேகத்தில் அழிந்துவிடாமல் இருக்க இதை விட்டா அவங்களுக்கு வேற வழியும் இல்லைன்னு நினைக்கறேன்! :(

  ****
  பாலாஜி-பாரி,

  நன்றி!

  பதிலளிநீக்கு
 30. படங்கள் எல்லாம் அருமை. அப்படியே என்னோட ஊருக்கு போய் வந்த மாதிரி இருக்கு. இந்த மாதிரி படம் எடுக்க நான் ரோம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 31. ஒரு நிமிஷம்... இந்த படங்கள் நல்லா இருக்கு.. உங்க அனுமதியோட என்னோட பதிவுல போடலாமா?

  பதிலளிநீக்கு
 32. Sridhar,

  வருகைக்கு நன்றி!

  // இந்த படங்கள் நல்லா இருக்கு.. உங்க அனுமதியோட என்னோட பதிவுல போடலாமா? //

  தாராளமாக! :)

  பதிலளிநீக்கு
 33. இங்கே பாக்க முடியாது வாத்தியாரே.. அத்த.. நேரம் கெடைக்கும்போது.. kolkataprince at gmail dot com க்கு அனுப்பமுடியுமா ?

  பதிலளிநீக்கு
 34. மணப்பாறை ராதா இப்போ Miss. MANAPPARAI ஆகிட்டாங்களேப்பு. அதுதான் அவங்க படம் எடுக்க முடியவில்லையா?

  பதிலளிநீக்கு
 35. அசத்தல் .

  முன்பும் இந்தப் பதிவுக்கு வந்திருந்தேன் பின்னூட்டமிட முடியவில்லை.இப்போ மீண்டும் சுந்தரவடிவேல் திருவிழா பதிவுமூலம் ஆஜர்.

  படங்களும் ஊரும் அருமை.

  பதிலளிநீக்கு
 36. இப்பத்தான் பார்க்கிறேன், இளவஞ்சி.
  National Geographic level-க்கு இருக்கு.. நெஜமாத்தான் அப்படி ஒரு calrity, அழகு subjects.

  what a nativity.........

  பதிலளிநீக்கு
 37. ஒவ்வொரு படமா சொல்லாம்னு தோணுது .. வளையல்கடை, அந்த வீடு ((நெஜமா 1250-ஆ..).. கூரையின் ஒவ்வொரு ஓட்டையும் எண்ணிடலாம் போலும் ..

  இன்னொருத்தரை நம்பர் ஒண்ணா வச்சிருந்தேன். இப்ப rank மாத்தணும்னு ஆய்ரிச்சி...

  உங்ககிட்ட இன்னும் என்ன திறமையெல்லாம் மண்டிக் கிடக்குதுப்பா ...??

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு