முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதுவரை...

Source: http://www.dlindamood.com/images/ToPublish/LateX/Fractures_T.jpg

தனித்திருக்கிறேன்
விழித்தும் தானிருக்கிறேன்
பசித்தும்கூட இருக்கிறேன்

நட்பென்ற உறவினை
காதலெனும் உணர்வுகளால்
அடித்தெழுத இயலவில்லையென
சொல்லிச் சென்றவள் நீ

உன் உறவுகளுக்கு நீ நேர்மையாயிருக்க
என் உணர்வுகளுக்கு நான்

தனித்திருக்கிறேன்!

கருத்துகள்

  1. its muthu,

    first of all your kavithai is good..i like your daughter name kathambari its also good..

    பதிலளிநீக்கு
  2. கல்யாணத்துக்கு முந்தி எழுதியதா இளவஞ்சி? திடீர்னு ஏதோ ஒரு கணத்துல இன்னிக்கு நெனப்பு வந்துருச்சா?

    ***

    முத்து, உங்களது பின்னூட்டத்தின் பிற்பாதி உங்கள் நண்பர் அந்தரங்கமாக வைத்திருக்க எண்ணியிருக்கும் விஷயமாக இருக்கலாம். அதை இந்த இடத்தில் இல்லாமல் தனிமடலாக கொடுத்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

    பதிலளிநீக்கு
  3. மக்களே! கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி!

    முகமூடி, நண்பனோட கதையைகேட்டு எழுதியது இது! எங்க வீட்டு கரண்டிக்கு வேலை வைக்காம விடமாட்டீங்க போல! :)

    Thank you for your concern! But no problem! நான்தான் முத்துவின் பதிவில் அதனை பின்னூட்டமிட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  4. வீ.எம்,

    என்னது போட்டோ தெரியலையா? படத்துல மேல வச்சா சுட்டியாவது தெரியுதா? அப்ப அங்க போய் பார்த்துக்க வேண்டியதுதான் :)

    ஊக்கங்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!

எ ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...! ஆக ம