முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருடன் போலீஸ்


வாழ்க்கையில் பலபன்னுக வாங்குனாலும் அசரப்பிடாதுங்கற வாழ்வியல்பாடத்தை திரையில் செய்துகாட்டியவகையில் நம்பப்பய தினேசு என்பதற்காகவும் செம்மகட்ட ராஜேந்திரியின் அப்பாவி அழகுக்கும் தான் திருடன்போலீசை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் அந்த மூக்குநடிகர் நரேன் ஒரேசீனில் அத்தனைபேரையும் தூக்கி சாப்ட்டுட்டாப்ல!


கான்ஸ்டபிள் வேலையின் அவமான அலைக்கழிப்பில் நொந்துபோய் வேலையை ராஜினாமா செய்யறேன்னு கமிஷனர் நரேன்கிட்டபோய் தினேசு வாங்கிக்கட்டிக்கொள்ளும் சீன். அப்படியே புல்லரிப்புல நெஞ்சுமுடியெல்லாம் நட்டுக்கிச்சு!


அதுவும் அதிகாரம் உள்ளோர் கொள்ளும் நேர்மை ஒரு கவுரவ ஏழ்மை. வறுமையல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் கஷ்டமிராது. ஆனால் சிலதுக்கு தட்டுப்படனும். போலீஸ் ரேஷனில் வரும் அரிசி பருப்புல வண்ட்டெடுத்து காயப்போடவேண்டி வரும். வீட்டுக்கு முன்னாடி ஜீப் இருக்கும். ஆனா சொந்தவண்டி பெட்ரோலுக்கு அளந்தளந்து ஓட்டனும். காய்ச்சவந்தா தனியார் ஆஸ்பத்திரிக்கு காசிருக்காது. இலவச PRS டாக்டரை பார்த்து நாலு கலர்மாத்திரை வாங்கி போட்டுக்கனும். கல்யாணங்காட்சில பிரிச்சுவிட்ட பேண்ட்டு லைனும் கணுக்காலுக்குமேல ஏறிநிக்கறது தெரியாம இருக்க கூட்டத்துல மறைஞ்சு மறைஞ்சு வளையவரனும். தீபாவளிக்கு அண்ணந்தம்பிக எல்லோரும் ஒரே பிட்டுதுணில அடிச்ச ஒரே மாதிரி பேண்ட்டுசட்டை போடனும். பொழைக்கதெரியாதவங்கன்னு பிழைப்புவழி கண்டவங்க சொல்லக்கேட்கையில ப்ச்சுன்னு மொனவிகிட்டு அமைதியாய் தலைகுனிஞ்சுக்கனும். இதெல்லாம் அப்பப்ப சிரமமா இருந்தாலும் செய்யற ஆளுமேல ஒரு பாசமும் பிடிமானமும் இருந்தால் பெருசாதோணாது. ஆனால் அதுக்கு பதின்ம அழுத்தங்களை கடந்துவரவரைக்கும் காத்திருக்கனும்.

டைரக்டர் போலீஸ் காலனில வாழ்ந்திருப்பாரு போல. முடிஞ்சவரை திரைல கொண்டுவந்துட்டாப்ல. குச்சானுக என காவலர்களின் வாழ்க்கையை வெளில எந்தவித சமரத்துக்கும் லஞ்சலாவனியங்களுக்கும் இடம்கொடாத சீரியசிந்தனை காந்திமகான்கள் எவர் ஒருவரும் சிரிப்பாக அவமானகரமாக நக்கலாக உன்னத கருத்துக்களை உதிர்த்துவிட்டு செல்லலாம் தான். ஆனால் நாட்டில் போலீஸ் டாக்டர் வக்கீல் அரசியல்வாதிகள் எல்லோரும் நேர்மைத்திலகங்களாக இருக்கவேண்டும்னு கட்டாயப்படுத்தும் நாம்தான் இவர்கள் எல்லாம் நம்முள் நம்மிடம் இருந்து வருபவர்களே என்பதையும் நம்முடைய சமரச அளவுகோல்கள் அவர்களுக்கும் உண்டு என்பதை உணர்வதில்லை. எப்பொழுதும் உயர்வாக பேசி நெஞ்சை நிமிர்த்திக்கனும்னு சொல்லலை. உள்ளது உள்ளபடிக்கு தெரிஞ்சுக்க என்ன தடை இருக்கமுடியும்?


மூக்கு நரேனின் சீன் யூடூபில் சிக்கலை. கிடைத்தால் பகிர்கிறேன். (மேல ) பகிர்ந்துட்டேன் :) ) அதுவரை "வலையுலக பிலிம்நியூஸ் ஆனந்தன்" முரளிகண்ணனின் காவலர்கள் பற்றிய அருமையான கட்டுரையை ( http://muralikkannan.blogspot.com/2013/04/blog-post.html ) படித்துவைங்க. அடுத்த முறை அவர்களை சுட்டெரிக்கும் வெயிலில் காய்வதை காணும்வேளையில் ஒரு கரும்புஜீஸ் வாங்கிக்கொடுத்து சினேகமாய் குடிங்கசார்னு கேட்டுக்கலைன்னாலும் அவங்க பெருசா ஒன்னும் நினைக்கப்போறதில்லை. ஆனால் நம்மைபோலவே எல்லா வாழ்க்கை அழுத்த மாய்மாலங்களும் கொண்ட சம சகஜீவி ஒருத்தர்னு நினைச்சுக்கறதில் ஒன்னும் பெருசா நமக்கு நட்டமில்லை. :)

நேர்மை என்பது ஒரு உண்மையில் எல்லா உயரிய உணர்வுகளையும் போலவே தோலுரித்துப்பார்த்தால் ஒரு நொய்மை. அவரவர் வரையரைக்குள் அளவும் வீச்சும் மாறும் ஒரு ரிலேட்டிவ் வார்த்தை. கட்டாயம், கவுரவம், மரியாதை, பழக்கவழக்கம் வளர்ப்பு, பிடிவாதம், பிடிமானம், கண்மூடித்தனமான நம்பிக்கை, சுயவருத்திக்கொளல் என எல்லாம் கலந்துகட்டிய ஒரு பிம்பம் அது. இயல்பாய் மூக்குநோண்டி சுண்டிவிடறாப்ல அது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு படு இயல்பான காரியம். இதை இயல்பாக செய்யாட்டித்தான் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாவார்கள். மற்றவர் நினைப்போ கஷ்டமோ வருத்தமோ எதுவும் அவர்கள் இந்த நொய்மையில் இருப்பதை மாற்றாது.



:)

கருத்துகள்

  1. யாருப்பா இந்த ஆளு ... புதுசா இந்தப் பக்கம் வந்திருக்காரு!

    // (மேல ) பகிர்ந்துட்டேன் :)// திறக்கலை

    பதிலளிநீக்கு
  2. நீங்க திட்டுனீங்களேன்னு தான் அங்கன எழுதுனதை இங்கன சேமிக்க வந்தேன் :))

    பதிலளிநீக்கு
  3. //நீங்க திட்டுனீங்களேன்னு தான் ...//

    உடம்புல அந்தப் பயம் எப்போதும் இருக்கட்டும்!

    அந்த காணொளி திறக்கவில்லையே........

    பதிலளிநீக்கு
  4. https://www.youtube.com/watch?v=gvZKrf_0-rI

    இதாங்க யீடியூப் லின்க், ஏன் உங்க ஊர்ல திறக்கலைன்னு தெரிலயே :(

    பதிலளிநீக்கு
  5. the uploader has not made this video available in your country. பாவப்பட்ட நாடுங்க எங்க நாடு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு