முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆடுகளும் அவைதம் வாழ்க்கையும்...

ப்புதாங்க...

அவசரப்பட்டு கலைஞர், ஜெயா, ராஜ், விஜய் டிவிக்களை போன மாசம் திட்டிட்டேன். கெட்டது ஒன்னு இருந்தா அதுல நல்லதுன்னு ஒன்னு கட்டாயம் இருக்கும்னு யாகவாமுனிவரின் சித்தப்பா பையன் ஒரு முறை காக்கா மொழியில அருள்வாக்காக சொன்னதை மறந்துட்டு பொலம்புனது எந்தப்புத்தேன் போல! வம்படி டான்சு புரோகிராமெல்லாம் முடிஞ்சு, ”DMKகாரங்க எங்கள கிள்ளிவைச்சுட்டதால தமிழகம் இருளில் தவிக்குது... ADMKகாரங்க எங்க பொஸ்தகத்தை கிழிச்சுட்டதாலதால் வெலவாசியெல்லாம் ஏறிப்போச்சு ...”ங்கற செய்தியெல்லாம் முடிஞ்சு, அப்பறமா மத்தியானத்துல ஆரம்பிச்ச வாழ்க்கை, தாலி, பிறப்பு, வாக்கு, மயிரு, மட்டைங்கற எல்லா சீரியல்களும் முடிஞ்சு வீட்டு பொம்பளையாளுங்க எல்லாம் ஏறக்கட்டுன பிறகு 10..30 மணிக்கா ஆரம்பிச்சி 12வரைக்கும் இந்த எல்லா தமிழ் சேனல்களிலும் என்னத்த போடுறாய்ங்கன்னா முழுநீள படக்காமெடிகள்!

முழுநீளம்னா ஒரு படத்துல இருக்கற மொத்த காமெடி சீன்களும் கண்டினயுசா... அற்புதம்தான். வீட்டாளுங்க, வெளியாளுங்க, வெளம்பரங்கன்னு எந்தத் தொல்லையும் இல்லாமலும், ஆபிசு அழிச்சாட்டியங்களையெல்லாம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு ஆம்பளையா லச்சணமா அரையிருட்டுல தனியாளா ஒக்கார்ந்து வெடிச்சிரிப்பை வாயில் அடக்கி கண்ணுல தண்ணிவர சிரிச்சபாடுல பார்க்கற சொகமே சொகம். பல விவேக்கின் டெம்ப்ளேட்டு மொக்கைகளாக இருந்தாலும்( இதுக்கா ஒருகாலத்துல பெரண்டு பெரண்டு சிரிச்சோம்...?! ) சில வடுவேலுவின் ஸ்டீரியோடைப்பு காமெடியா இருந்தாலும் பிரச்சனையில்லை. அஞ்சாரு சேனல்ல பிடிச்ச காமெடி வர்றவரைக்கும் மாத்திக்கினே இருக்கலாம். பிடிச்ச காமெடி எதுவா? நம்ப கவுண்டபெல் தான்... மனுசன் பம்புசெட்டை கழட்டறதென்ன? மச்சினிச்சியை மடக்கறதென்ன? வெட்டியானாக பெருசுகளைத் தொறத்தறதென்ன? அழுக்குச்சட்டைகளை கழுதைகளோடு வெளுக்கறதென்ன? மாடர்ன் ட்ரசுல பிகருங்களை ரவுசுவதென்ன? குருவி சுடும் துப்பாக்கியோடு புலி வேட்டைக்கு போவதென்ன? "நான் டெர்ரரிஸ்ட்”ங்கற செந்தில் கிட்ட ”என்னது? சரச்சிட்டு வந்தியா?”ங்கற வாய்க்கொழுப்பென்ன? அடடா! இளயராசா பாட்டு என்னைக்கும் இனிக்குங்கற மாதிரி கவுண்டரு காமெடி என்னென்னைக்கும் தமாசுதான்...

ராத்திரி 10:30 to 12:00 வரை அனைத்து தமிழ் சேனல்களும் வாழ்க... வாழ்க! :)

*****

ன்னய்யா படம் இது? முழுநீள த்ராபை - ஆமாங்க... ரெண்டரை மணிநேரம் ஒக்கார்றது கஸ்டந்தாங்க..

பொண்டாட்டிய ஊரோட ஜன்னலு வழியா சைட்டடிக்கறதுகு பேரு காமெடியாயா? கருமம்.. கருமம்... - கருமமா? கசுமாலக் கன்றாவிக்காட்சிதாங்க...

உங்க ஆளு ஒகேனக்கல்லு பிரச்சனைல இப்படியா அந்தர்பல்டி அடிக்கறது?! - தப்புதாங்க.. அவருக்கு “நாதாரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யனும்”னு தெரில... இடம் பொருள் ஏவல் தெரியாம வழக்கம் போல உண்மையா பேசி மாட்டிக்கினாருதான். ஆனா அந்தர்பல்டி அடிச்சுட்டாருன்னு இவரை கேக்கறதை விட ”எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நடத்தியே தீருவோ”முன்னும் அப்பறமா ”அடுத்த கவருமெண்டு வர்றவரைக்கும் தள்ளி வைக்கறோமு”ன்னும் சொல்லிட்டு இப்ப இதைப்பத்தி மூச்சுகூட விடாம இருக்கற முதல்வர் கலைஞரைப் பார்த்து இக்கேள்விய கேக்கறதுதானுங்களே கரெக்கிட்டா இருக்கும்?!

கெஸ்ட் ரோல்ல நடிச்ச ஒரு படத்துக்கு 60கோடி ரூவா வியாபாரங்கறதெல்லாம் பிராடுத்தனம் இல்லையா?! - இருக்கலாங்க... லாபம் வரும்னு நம்பி வாங்கறாங்க.. நட்டம் வந்தா வயித்துல அடிச்சிக்கறாங்க. கார்ப்பரேட்டு, வினியோகிஸ்தருங்க, தியேடரு லீசுன்னு பல வியாபாரிங்க உலவற எடத்துல அவரும் சரக்கு விக்குது. கேட்ட விலை கிடைக்குதுன்னு ஒரு வியாபாரியாத்தான் இருக்காரு. இருந்தாலும் சரக்கு மதிப்புக்கு மேல விலைவைச்சு விக்கறது தப்புத்தாங்க...

விகடன், ரிப்போர்ட்டர், ஞாநின்னு கருத்துக்கணிப்பு திணிப்புன்னு பட்டய கெளப்பறாங்களேயய்யா?! - அதெல்லாம் உண்மையா இருந்தா வருத்தம்தான். பொய்யா இருந்தா சந்தோசம் :)

ஒரு கன்னட ஆளு இங்க வந்து இப்படி தமிழர்களோட உணர்வுகளோட வெளையாடறாருன்னு உனக்கெல்லாம் சொரணையே இல்லையா?! - அப்படியா? அவரு கன்னடத்துலயே வருத்தம் தெரிவிச்சிருந்தாலும் நான் அவரை அப்படியெல்லாம் பிரிச்சு நினைச்சதே இல்லைங்க... இது என்னோட விக்னெசுதாங்க.. என்ன செய்ய?

ஒரு சினிமாக்காரனுக்கு எதுக்கய்யா நாட்டுல இத்தனை முக்கியத்துவம்?! - அதேதாங்க எனக்கும் புரியல. அவரு சினிமாக்காரருதான். அவருக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவம்?

இத்தனைநாள் பஞ்ச் டயலாக்குல அப்பாவி ரசிகர்களை தூண்டிவிட்டுட்டு இப்பத்திக்கு அது ஜஸ்ட் டைரக்டரு வைச்ச வசனம்னு ஜகா வாங்கறது அசிங்கமா இல்லை?! - அசிங்கமாத்தாங்க இருக்கு. அவரே சொல்லறது மாதிரி அவரு நல்லதும் கெட்டதும் செய்யற ஜஸ்ட் ஒரு மனுசருந்தாங்க. இப்படி ஊர் நிலவரம் தெரியாம வசனம் பேசுனது தப்புத்தாங்க.

சிரஞ்சீவில இருந்து இத்துப்போன கார்த்திக் வரைக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்க... உங்க ஆளு என்னடான்னா... - விடுங்க.. அவருக்கு அது சரியா வரலை. சறுக்குதுன்னு தெரிஞ்சப்பறமும் அவருகிட்ட நான் அதை எதிர்பார்க்கறதில்லை...

இதெல்லாம் இப்ப எதுக்குடா இப்ப நீட்டி வாக்குமூலம் மாதிரி முழக்கறன்னா கேக்கறீங்க? நாலு நாளைக்கு முன்னாடி குசேலன் குடும்பத்தோட பார்த்தனுங்க.. படம் பப்படம் தான். நயந்தாரா சீனு கேவலந்தான். வடிவேலு சகிக்கலதான். பசுபதிக்கான கதைல அவரை பின்னால தள்ளுனது அலும்புதான். திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா! வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

சந்தோசம் எதுக்கா? இத்தனை களேபரங்களுக்கு அப்பறமும் நான் மாறிவிடவில்லை. மனதில் ஒரு குழப்பமும் இல்லை. இன்னமும் நான் ரஜினி ரசிகன் தான். நெஞ்சு நிமிர்த்தி சொல்லறேன்.

இதுக்கு மேலும் நான் ரஜினி ரசிகன் தான்! :)

*****

சில காலங்களாக மறுபடியும் என் அலும்பு ஆரம்பித்திருந்தது. எலக்கியத்தை கலையை பரிச்சயம் செய்துக்கொண்டு சாரசரி உலகைப்பார்ப்பதில் நாம் ஒருபடி மேலே இருப்பதாக நெனைப்பு வருவது உவப்பாக இருப்பதால் அதில் இனிமேலும் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கலாம்னு கஜினிமுகம்மது கணக்காக மீண்டும் முடிவெடுத்து, ஹிக்கின் புக் லேண்ட் எல்லாம் போய் புத்தகங்களாக அள்ளிட்டு வந்தும், பாரிஸ் கார்னரில் இத்துபோன திருட்டு டிவிடிக்களாக வாங்கிக்குவித்தும் ஒரே அலப்பரை. நைட்டானா... லீசுநாளானா போதும்... மெத்தைலை சாஞ்சுக்கினே நொறுக்ஸ்சோடு புத்தகத்துக்கு 10 பக்கங்களாக மாத்திமாத்தி படிப்பதென்ன? ஹெட்போனை மாட்டிக்கிட்டு லேப்டப்புல அவார்டு படமா பார்த்து தள்ளறதென்ன?

டெய்லர் கடை வரைக்கும் போகனும்? போலாமாங்க?

சாரிடா.. ஐயாம் டேக்கிங் சிவியர் ரெஸ்ட் அண்ட் பிஜி இன் ரீடிங்....

யப்பா.. க்ரையான்சுக்கு ஏம்பா க்ரையான்சுன்னு பேரு?

போய் அந்தண்ட வெள்ளாடு பாப்பா... அப்பா ஆபிஸ் வேலையா படம் பார்த்துக்கிட்டு இருக்கறேன்...

கதிர் வெளையாடறான் பாருங்க. கொஞ்ச நேரம் கூட இருங்க..

அடடா.. ரெண்டு நாளு எனக்குப்பிடிச்சதை செய்ய விடறயா? எப்பப்பாரு டிஸ்டர்ப் செஞ்சுக்கிட்டு..

அப்படியா சேதி? அப்ப அய்யா எப்ப ஃப்ரி ஆவிங்க?

ம்? கதவுல எழுதிப்போடறேன். தெரிஞ்சுக்கினு உள்ள வாங்க...

கவலையே படாதீங்க.. அதை நானே செஞ்சுடறேன்.

எங்கூட்டம்மாவும் எம்புள்ளையும் என்ன செஞ்சாங்களா? இதைத்தான்!நல்லவேளை! மண்டைல இடம் இல்லாததால “மொட்டை”க்கு இடம் இல்லை. ”பாஸ் இன்” கூட ஓகே! ஆனா ”பாஸ் அவுட்” கீழாக இருக்கற சிரிப்பல்லுகளை பார்த்தாத்தான் கிலி கெளம்புது.

ராசா வேசம் கலையறதுக்குள்ள கலைச்சிற வேண்டியது தான்....

*****

மனசுக்கு நேர்மையாய் கூரான் செத்துப்போய் சில மாதங்களாகிறது. மற்றவர் வடிவமைத்ததே வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கும் எம்போன்றவர் மத்தியில் உனக்கு பிடித்தபடி நினைத்தபடி சில தினங்களேனும் நீ வாழ்ந்திருக்கக்கூடும். எங்களுக்குக் கிடைக்காத அந்த திருப்தியோடு... போய் வா நண்பா! :)

சறுக்குமிடம் காமம் எனில் நண்பன் சிறைக்காலம் முடிந்து விடுதலையாகி சில மாதங்களாகிறது. 5 வருட சிறை அனுபவத்தில் அவன் பெற்றது பல புதிய ஆய்வுக்கட்டுரைகளும் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்பீட்டு உரிமைகளும் என கேள்விப்பட்டேன். வாழ்வில் சில கறைகள் அழிவதில்லை என்றாலும் வாழ்வையே அழித்து விடுவதில்லை போல. வளமாய் வாழ வாழ்த்துக்கள் நண்பா! :)

*****

விகடன் விமர்சனம், குமுதம் பேட்டி, வலைப்பதிவுகள்னு சரமாரியாக நடிகர் ஜே.கே. ரித்தீஸ் அவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் அவலநிலையை நாம் இப்போதெல்லாம் காணவேண்டியிருக்கிறது. ஆனால் பாட்டு, நடனம், வசனம்னு அனைத்து துறைகளிலும் அவரை களத்தில் வீழ்த்திய சாம் ஆண்டர்சன் அவர்களது “யாருக்கு யாரோ?” (Step Nee) என்ற திரைக்காவியத்தினைப்பற்றி எந்தவொரு விமர்சனமும், பேட்டிகளும் வராத நிலையை அண்ணன் சாம் அவர்களை இருட்டடிப்பு செய்யும் ஒரு தீய முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. இருந்தாலும் இதனை எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி சாம் அவர்களது திறமைகளை எடுத்தியம்புவதை ஒரு கடமையாகவே கொள்கிறேன்.

மொக்கைப்பட போட்டியில் குசேலனையே விஞ்சி நிற்கும் யாருக்கு யாரோ என்ற படத்தின் ஆங்கில காப்ஷனான STEP NEE என்பதன் அர்த்தத்தை கீழ்கானும் படத்துண்டில் கிளைமேக்ஸ் காட்சியாக அவர் வைத்திருந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.


எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அவருடைய மற்ற திறமைகளையும் இங்கே கண்டு களிக்கலாம். அதனையும் மீறி முழுப்படமும் வேண்டுவோருக்கு தேடினாலும் கிடைக்காத திருட்டு விசிடியாக என்னிடமிருந்து பெறலாம். அண்ணன் சாம் அடுத்தப்படத்தினை முழுநீள ஆக்‌ஷன் படமாக எடுத்து அந்தத்திறனிலும் JKR அவர்களை களத்தில் வீழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன். (கோடம்பக்க அண்டங்காக்காவின் அதிரடி கிசுகிசு: அண்ணன் சாம் ஆண்டர்சன் இந்த பெயரை வைத்துக் கொண்டுள்ளதே நாளப்பின்ன ஆஸ்கர் அவார்டு வாங்கும்பொழுது அவர்களுக்கு பெயரைச்சொல்லி கூப்பிட சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! )

*****

விடுதலையான டேவிட் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? செத்துப்போன நாவரசுசின் வீட்டினர் இப்பொழுது எப்படி இருக்கின்றனர்?

மூன்று பிள்ளைகள் பொண்டாட்டியோடு தற்கொலை செய்துகொண்ட ஸ்டாலினின் சென்னை நண்பரது வழக்கு என்ன ஆனது?

சங்கராச்சாரியுடன் வழக்கில் மாட்டிய அப்பு எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்?

சிலுக்கின் தாடிக்கார நண்பர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?

கும்பகோணம் தீவிபத்து பள்ளியின் தாளாளர் தற்போது வருமானத்துக்கு என்ன செய்கிறார்?

பணமுடையில் பாதியில் நின்ற கோழிகூவுது விஜியின் தந்தை கட்டிக்கொண்டிருந்த கல்யாண மண்டபம் கட்டிமுடிந்து விட்டதா?

அயோத்திகுப்பம் வீரமணியின் இரு மனைவிகளுக்கு இடையே இருந்த சொத்துப்பிரச்சனை தீர்ந்து விட்டதா?

நாட்டு ரகசியங்களை ஜெராக்ஸ் போட்டு விற்ற திடீரென காணாமல் போன ரா உயரதிகாரி உயிருடன் இருக்கிறாரா? கொல்லப்பட்டு விட்டாரா?

ரபி பெர்னார்டு இப்பொழுது எங்கே இருக்கிறார்?

'ஙே' ராஜேந்திரக்குமார் என்ன ஆனார்?

லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் முதல் கணவர் போதையின் பிடியில் இருந்து மீண்டுவிட்டாரா?

சீவலப்பேரி பாண்டியை சுட்ட போலிஸ் அதிகாரி இன்னும் இருக்கின்றாரா?

உதவி இயக்குனரான நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மீண்டும் ஏன் லைம்லைட்டில் காணவில்லை?

மீனா தன் முதல் ஜோடியான மனோரமாவின் மகனிடம் நட்பு முறையிலாவது பேசுவார்களா?

தமிழ்க்குடிமகனின் அன்றாட அலுவல்கள் என்னென்ன?

பிரிந்து சென்ற கலைஞரின் முன்னாள் கார் டிரைவர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?

ஆட்டோ சங்கர் வழக்கில் அப்ரூவர் ஆனவர் இப்பொழுது பிழைப்புக்கு என்ன செய்கிறார்?


ஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் வாங்குவதை நிறுத்திவிடலாம் தான்! அப்பறம் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு யார் பதில் சொல்லுவது?!


*****

பாவிகளே... உங்கள் பயத்தினின்று விடுதலை அடைய உங்களை.. உங்களை மட்டுமே நம்புங்கள்! - சரி ஆண்டவரே! நான் எங்கே இருக்கிறேன்? - வேறெங்கே? இருட்டினில்தான்! ஹாஹ்ஹா...

I am a man who walks alone
And when Im walking a dark road
At night or strolling through the park
....
....
....
....
Fear of the dark, fear of the dark
I have a constant fear that someones always near
Fear of the dark, fear of the dark
I have a phobia that someones allways there- Iron Maiden - Fear Of The Dark

எனக்கான வாடகையை என் சமூகமே செலுத்தும்படி நான் பெரிய மனது கொண்டு அனுமதித்திருக்கிறேன்... நீங்கள்?

You dress me up, I'm your puppet
You buy me things, I love it
You bring me food, I need it
You give me love, I feed it

And look at the two of us in sympathy
With everything we see
I never want anything, it's easy
You buy whatever I need

But look at my hopes, look at my dreams
The currency we've spent
(Ooooh) I love you, oh, you pay my rent- Pet Shop Boys - RENT

*****

ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.

கருத்துகள்

 1. Concentrate to the things that could give information to the people.

  பதிலளிநீக்கு
 2. //நல்லவேளை! மண்டைல இடம் இல்லாததால “மொட்டை”க்கு இடம் இல்லை. ”பாஸ் இன்” கூட ஓகே! ஆனா ”பாஸ் அவுட்” கீழாக இருக்கற சிரிப்பல்லுகளை பார்த்தாத்தான் கிலி கெளம்புது
  ///

  :))))))))))))))))))

  பதிலளிநீக்கு
 3. மறந்து போன கேள்விகள்

  சூப்பரூ!


  எல்லாத்துக்கும் விடை சொல்லறதை பார்க்கறதுக்கு வெயிட்டீங்க் :)

  பதிலளிநீக்கு
 4. //

  சங்கராச்சாரியுடன் வழக்கில் மாட்டிய அப்பு எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்?
  //

  He is out in bail. Slowly making appearance to outside world.

  //
  சிலுக்கின் தாடிக்கார நண்பர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?
  //

  He is dead.

  //
  நாட்டு ரகசியங்களை ஜெராக்ஸ் போட்டு விற்ற திடீரென காணாமல் போன ரா உயரதிகாரி உயிருடன் இருக்கிறாரா? கொல்லப்பட்டு விட்டாரா?

  //

  He is alleged to be hiding in US.

  //
  ரபி பெர்னார்டு இப்பொழுது எங்கே இருக்கிறார்?
  //

  Don't you watch Jaya TV?

  //
  'ஙே' ராஜேந்திரக்குமார் என்ன ஆனார்?

  //

  He is dead.

  //
  சீவலப்பேரி பாண்டியை சுட்ட போலிஸ் அதிகாரி இன்னும் இருக்கின்றாரா?

  //

  SP Premkumar?
  He was accused in some violence case against a former army man. Was suspended or dismissed from service.

  //

  தமிழ்க்குடிமகனின் அன்றாட அலுவல்கள் என்னென்ன?

  //

  He is dead.

  பதிலளிநீக்கு
 5. ண்ணா... எண்ணங்ண்ணா இது.. வழக்கமா ஸ்நாக்ஸ் மட்டும்தான அள்ளுவீங்க.. எதும் சதிவேல நடந்திருச்சா :)

  பதிலளிநீக்கு
 6. //ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன//
  உண்மையிலேயே சூப்பர் சார்.
  அந்த ஆட்டுமந்தையிலே மனிதனாக வாழ்வது மிகவும் கடினம் சார் .!

  பதிலளிநீக்கு
 7. யோவ் இளவஞ்சி

  யாருய்யா அது சாம் ஆண்டர்சன்? முடியை எடுத்துட்டா உம்மை மாதிரியே இருபபாரு போல :-)
  (மவனே, அவருக்கா வெளம்பரம் போடுற நீ?)

  ப்சங்க எல்லாம் புத்திசாலியாத்தான் இருக்காங்க - உம்ம மாதிரி இல்லாம :-)

  நல்லா இருங்கடே!

  பதிலளிநீக்கு
 8. தினத்துக்கு ஒண்ணுன்னு ஒரு வாரத்துக்குப் பட்டைய கிளப்பியிருக்க வேண்டியத, ஒரே படையாலாப் போட்ட்டுட்டீரே... நீங்கல்லாம் என்னதான் மூத்த வளைப்பதிவாலரோ போங்க ...

  *****

  கூரான் இப்பதான் படிச்சேன்... என்ன சொல்றதுன்னே புரியலை...

  பதிலளிநீக்கு
 9. philippine lottery,

  எனக்கு இந்த அறிவுரை தேவைதான். மக்களுக்கு இன்பர்மேசன் குடுக்கற அளவுக்கு அறிவிருந்தா செய்யமாட்டமா? அது கிடக்கட்டும். யாருங்கன்னே நீங்க?!

  செந்தில், ஆயில்யன்,

  டான்ங்ஸ் :)

  அனானி,

  He is dead.
  He is dead.
  He is dead.

  ஆ! இப்படியா நான் ஜெனெரல்நாலெட்ஜை அப்டேட் செஞ்சுக்காம வெள்ளந்தியா இருப்பேன்?! தகவல்களுக்கு நன்றி! ஆமா.. நீங்க எம்புட்டு காலமா பத்திரிக்கைங்க படிக்கறீங்க?! :)

  முரளிகண்ணன்,

  நன்றி! :)

  பதிலளிநீக்கு
 10. ராசா,

  ஹிஹி... எங்க பயக எனக்கெல்லாம் சதிவேலை செஞ்சு சரக்கை வேஸ்ட் செய்யறதில்லை. தேறாத கேசுன்னு கழட்டிவிட்டுட்டானுவ :)

  பாஸ்கர்,

  // அந்த ஆட்டுமந்தையிலே மனிதனாக வாழ்வது மிகவும் கடினம் சார் .! // சரிதான். ஆனா நான் எந்த லெவல்னு கண்டுபுடிச்சதை சொல்லறதுக்குதான் இந்த பதிவு! :)

  அண்ணாச்சி,

  // யாருய்யா அது சாம் ஆண்டர்சன் //

  சாம் யாரா?! ச்சும்மா உமக்கு தமிழ்ப்படங்களை கிழிக்கத்தான் தெரியும். யுடியூப் சுட்டில போய் அவரது நவரசங்களை பாருமைய்யா. அப்பத்தான் உமக்கு விசய். ராசேந்தர், விஷால் அருமையெல்லாம் புரியும். :)

  பிரகாசரே,

  நன்றி! :)

  என்ன செய்ய? எல்லாம் திரும்பவும் எப்ப எயித மூடு வருமோங்கற பயந்தான். அதான் எல்லாத்தையும் கபால்லு கொட்டிற்றது. ஹிஹி..

  ஆமா மூத்த வலைப்பதிவரா?! மக்கள்ஸ் அடியப்போட்டுருவாய்ங்க.. நானெல்லாம் ஹர்ட்-ரிடையர்டு பதிவர் ஓய்! :)

  பதிலளிநீக்கு
 11. ஹூம்..கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சு போல...

  பதிலளிநீக்கு
 12. ஹூம்..கொஞ்சம் சாஸ்தியாயிடுச்சு போல...

  பதிலளிநீக்கு
 13. இளவஞ்சி..அந்த உரையாடலை நிப்பாட்ட காரணமா இருந்தது ஒண்ணு என்னோட சோம்பேறித்தனம் ரெண்டு இதுவா கூட இருக்கலாம் /மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன./
  எங்க குற்ற உணர்வு இல்லையோ அங்க குழப்பமும் இல்ல :)

  பதிலளிநீக்கு
 14. //நானெல்லாம் ஹர்ட்-ரிடையர்டு பதிவர் ஓய்! :)//


  இப்படியெல்லாம் சொன்னா உட்ருவோமா, என்ன?

  பதிலளிநீக்கு
 15. //திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா! வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.//

  வாத்தி,

  எனக்கு அப்பிடிதான் இருந்துச்சு.... ஆனா என்னை பொறுத்தவரைக்கும் முழுதாள் முழுக்க கிறுக்குகிறுக்குன்னு கிறுக்கி வைச்சிட்டு ரொம்ப அழகா சுபம்'னு எழுதி வைச்சிட்டா அதை எல்லாம் படிக்கமுடியுமா?????

  சுபம்'கிறது யாரு கொண்டு வரப்போறாரோ அவரு மேலே இருக்கிற கிறுக்கல்களை எல்லாம் சரி பண்ணிருக்கனும்... :)) (Without Interrupting)

  நானும் ரஜினி ரசிகன்தான்.... :)

  பதிலளிநீக்கு
 16. உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிடுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  கவுண்டர் காமெடியே தனிங்க. அதுலயும் அவரு குண்டக்கமண்டக்க அலப்பர விடுறப்ப...அப்பாவியாட்டம் ஒருத்தர் கூடயே இருந்து கேணமானையா மாட்டி விடுவாரே. ஹா ஹா ஹா. உண்மையிலேயே நல்ல கூட்டணிங்க அது. அதுலயும் ஜெய்ஹிந்த் படத்துல அவர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது இருக்கே..அடேங்கப்பா...தூக்கத்துலயே கதவைத் தெறந்து விடுறதென்ன...மாடீல இருந்து குதிக்கிறதென்ன...

  சரி. அடுத்து ரஜினிக்கு வருவோம். ரஜினி கவுந்தடிச்சி குப்புற விழுந்ததுக்கும் கருணாநிதி விழுந்ததுக்கும் வித்யாசம் இல்ல. எல்லாம் ஒன்னுதான். ஆனா இவரு தமிழினத் தலைவராயிட்டதால அவர ஒன்னும் சொல்லக் கூடாது. அப்படி எதுவும் சொன்னா தமிழ் விரோதியாயிருவாங்க.

  கீழ நெறைய கேள்விக கேட்டிருக்கீங்க. அதுல எதுக்குமே பதில் தெரியலையேய்யா!

  பதிலளிநீக்கு
 17. பதிவு ரொம்ப நீளமா இருக்கு. உண்மைத்தமிழனுக்கு போட்டியா!!!:)
  அது சரி அதென்ன எல்லாம் செத்துப்போனவங்களா பாத்து கவலைப்படறீங்க.

  பதிலளிநீக்கு
 18. இப்ப எதுக்கு ஆட்டை இழுக்குறீங்க.

  நாங்களே ஆளுக்கு 14ன்னு வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கோம்.

  கவலை இல்லாத வாழ்க்கை அதுக்கு மட்டும் இருக்கா என்ன? :-)))))

  பதிலளிநீக்கு
 19. சுட்ஜீ,

  சாஸ்தியானது உமக்கு ஓய்! பீட்டர் பேன் ஆனதுல இருந்து தமிழ்ல எழுதமாட்டேங்கற உமது அழிச்சாட்டியம் சாஸ்தி இல்லையா பின்ன?

  அய்யனார்,

  :)

  நண்பருங்க எப்ப எவ்வளவு பேசுனா என்னங்க? ஒன்னும் பழுதில்லை.

  மனம் மயக்கும் உங்கள் எழுத்து நடைக்கு நானும் ஒரு ரசிகன். ஆனால் நண்பனென்ற முறையில் எதிர்கருத்துக்களை பகிர்வதில் எனக்கு தயக்கமிருப்பதில்லை! என்ன? அன்னைக்கு என்னோட ராவல் கொஞ்சம் ஓவருதான். தாங்குனதுக்கு நன்றி.. :)

  // எங்க குற்ற உணர்வு இல்லையோ அங்க குழப்பமும் இல்ல //

  ஆடுகளின் வாழ்வில் குழம்பித்தவிப்பதும் இயல்புதான்! ஆகவேதான் எனக்கு குற்றவுணர்வில்லை :)

  அடுத்த முறை ஊருக்கு வர்றப்ப சொல்லுங்க.. உங்களுப் பிடித்த மது(!?)வுடனும் எனக்குப்பிடித்த நொறுக்ஸ்சுடனும் அமர்ந்து நிறையப் பேசுவோம்! :)

  நாதஸ், பொங்கல் கொஞ்சம் அதிகந்தான். அடுத்தமுறை அளவோட முடியுதான்னு பார்க்கறேன் :)

  தருமி சார்,

  எப்படி இருக்கீங்க? :) உங்களோடு போட்டோ ட்ரிப் போகனும்னு ரொம்பநாளா ஆசை.. சீக்கிரம் ஒர்கவுட் ஆகுதா பார்ப்போம்...

  பதிலளிநீக்கு
 20. ராயல்,

  இது ஆக்சுவலா குசேலன் நல்லா இருக்கா இல்லையாங்கறதில்லை. நான் ரஜினி ரசிகனாங்கற கேள்விக்கான பதில் தான்.

  // எனக்கு அப்பிடிதான் இருந்துச்சு.... ஆனா என்னை பொறுத்தவரைக்கும் முழுதாள் முழுக்க கிறுக்குகிறுக்குன்னு கிறுக்கி வைச்சிட்டு ரொம்ப அழகா சுபம்'னு எழுதி வைச்சிட்டா அதை எல்லாம் படிக்கமுடியுமா????? //

  சரிதான். டிவி 3 மணிநேர மொக்கைக்கு நடுவால மனசுக்குப்பிடிச்ச ஒரு வெளம்பரம் கிடைக்கறதில்லயா? அதுமாதிரி மனசத்தேத்திக்கறது தான். :)

  ஜீரா,

  // உங்களைப் போல பழம் பெறும் பதிவர் திரும்பவும் பதிவிடுவது //

  உமக்கே அடுக்குமா? உமக்கு நானா போட்டி? என்னை ஏன் ரிடையர்டாக்கி பதிவுலகில் ஜகா வாங்க வைக்க இப்படியெல்லாம் செய்யறீங்கப்பு?!

  அந்தக்காலத்துல பெங்களூருல கொமரிப்பொண்டுகள ஒத்தையாளா கம்பு சுத்தி நீர் சமாளிச்சப்பக்கூட நான் போட்டிக்கி வரலயேயய்யா.. என்னைப்போய் இப்படி.. ஹிம்...

  நீரும் கவுண்டர் கூட்டணி ரசிகரா?! வாழ்க வளமுடன் :)

  அம்மிணி,

  அதான் பாருங்களேன். என் செனெரல் நாலெட்ஜி எம்புட்டு வீக்கா இருக்குன்னு?! :(

  துளசியக்கா,

  கோபாலண்ணா சுகந்தன்னே?! :)

  // நாங்களே ஆளுக்கு 14ன்னு வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கோம். //

  பூணையார்களுக்கு கூட்டாளிகளா இதுவேற வளர்தறீங்களா?!

  // கவலை இல்லாத வாழ்க்கை அதுக்கு மட்டும் இருக்கா என்ன? :-))))) //

  அதானே.. அததுக்கு அதது... :)

  பதிலளிநீக்கு
 21. இதுல ஹைலைட்டே பாஸ் இன் பாஸ் அவுட் தான் :))

  பதிலளிநீக்கு
 22. எம்புட்டு நாள் ஆச்சு அசான் பதிவை பார்த்து..;)

  உங்க புண்ணியத்துல எனக்கும் சில தகவல்கள் (He is dead) தெரிஞ்சிக்கிட்டேன்.

  IN & OUT சூப்பரு ;)

  கூரான் ;(

  நண்பருக்கு வாழ்த்துக்கள் ;)

  பதிலளிநீக்கு
 23. காசியண்ணே, ரம்யா, கோபிநாத்,

  ஊக்கங்களுக்கு டாங்ஸ்! :)

  பதிலளிநீக்கு
 24. welcome back.ஒரு நல்ல செய்தி.காமெடி க்கு என்று தனி சேனல் வர போகுது. சன் டி.வி மூலமாக.

  பதிலளிநீக்கு
 25. சாம் ஆண்டர்சன் எங்க ஜே.கே.ஆரை ஜெயிப்பது இருக்கட்டும். நீங்க பதிவு சைஸுலே எங்க உண்மையாரை ஓரங்கட்டிடுவீங்க போலிருக்கே? :-)

  உண்மையார் சைஸில் எழுதியிருந்தாலும் நிஜமாகவே சுவாரஸ்யமாக இருந்தது!!!

  பதிலளிநீக்கு
 26. //ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.//

  பாவம் ஆத்மாநாம். :)

  பதிலளிநீக்கு
 27. பாபு,

  தகவலுக்கு நன்றி! முழுநேரம் பார்த்தா ரசிக்கக்கூடியதா இருக்குமான்னு தெரியல. பொறுத்திருந்து பார்ப்போம்.

  லக்கி,

  // நீங்க பதிவு சைஸுலே எங்க உண்மையாரை ஓரங்கட்டிடுவீங்க போலிருக்கே? :-) //

  ஹிஹி... அது ச்சும்மா மாயைங்க.. நடுவால எத்தன கேப் விட்டுருக்கேன் பாருங்க?! உண்மையார் பதிவுல சிங்கிள் ஸ்பேஸ் கூட இருக்காதுல்லா? :)

  வாய்யா தாஸு,

  // பாவம் ஆத்மாநாம். :) //

  அடப்பாவமே! அது கலீல் கிப்ரான் இல்லையா? :)

  பதிலளிநீக்கு
 28. வாப்பா மோகனா, எழவெடுத்த நெண்டு எளக்கிய புலிக பேற பாத்தவுடனே பாய்ச்சுகிட்டு வந்துடுவியே,போலி கம்யூனிஷ்ட், போலி மெசுர் மோகந்தாஷ் ஒழிப்போம்

  பதிலளிநீக்கு
 29. கன்ப்யூஸ் ஆய்ட்டேன்!

  கலீல் ஜிப்ரான் தான்! பாவம் கலீல் ஜிப்ரான் :)

  பதிலளிநீக்கு
 30. அய்யன்மீர் அனானி,

  தாஸை ஒழிப்போமா? ஏய்யா இந்த கொலவெறி? பேரச்சொன்னா பாவமா?

  உங்க எலக்கிய சண்டைக்கு நடுவால எந்தலைய உருட்டாதீகப்பேய்! :)

  பதிலளிநீக்கு
 31. யாருகிட்ட வந்து என்னா பேச்சு பேச்சு பேசுறாரு அந்த போலிகம்யூணிஷ்ட், கலில் ஜிப்ரானோ, காத்தவரயனோ, பெரியவுகள சொல்லும் போது ஒரு மட்டு மரியாத வேணாம், அதென்ன நாக்கு மேல பல்லு போட்டு பேசுறது,நீங்க சும்மா இருங்கண்ணே, நாங்க பாத்துக்கிறோம்,

  பேரா, பெயரில்லாத பெருமாள்ண்ணே

  பதிலளிநீக்கு
 32. தன்னை ஆடாக நினைக்கிறவன் மனுசன்,
  மக்களை ஆடாக நினைக்கிறவன் பெரிய மனுசன்.

  பதிலளிநீக்கு
 33. //போலி மெசுர் //

  இது புரியலையே தல. மயிர்-ஆ!

  ஒருத்தன் எலக்கியவாதியா ஆவறதை தடுக்கிறது எத்தனை பேர்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமா இருக்கு!

  அந்த ஆடு பற்றிய 'quote'ஐ நான் அதிகம் உபயோகிப்பவன் என்ற முறையில் சொல்லவந்தேன். தவறா நினைச்சிக்காதீங்க அனானி அண்ணாச்சி, அதுக்குப் போய் ஒழிப்போம்னெல்லாம் பேசிக்கிட்டு.

  நான் பச்சப்புள்ள பயந்துடுவேன்.

  பதிலளிநீக்கு
 34. அருமை அண்ணண் ஆசிப்மீரான் அழைக்கிறார்
  போலிகளை ஒழிப்போம்

  பதிலளிநீக்கு
 35. இயக்கத்தளபதி இளவஞ்சி இனிதே நடத்தப்போகும் போலி கம்யூனிஷ்ட் ஒழிப்பு மாநாடு. அணிதிரள், அகிலம் காழ்.

  பதிலளிநீக்கு
 36. போலிகளை ஒழிப்போம், கோழிகளை காப்போம். - மோகனாவுக்கு கோழி 65 பிடிக்கும் என்பதறிக.

  பதிலளிநீக்கு
 37. போலிகம்யூனிஷ்ட் வளர்றது உண்மையான கம்யூனிஷ்ட்காரய்ங்க வளர்ற மாறி ஆபத்தானது. போலிகம்யூனிஷ்ட்களை ஒழிப்போம், இந்தியாவை வல்லரசாக்வோம்.

  அண்ணன் பழகிரி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு